உலக ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியின் (வாடா) புதிய விதிமுறையை ஏற்க இந்திய கிரிக்கெட் வீரர்கள் முன்வர வேண்டும் என டென்னிஸ் நட்சத்திரங்களான சானியா மிர்ஸாவும், மகேஷ் பூபதியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாடா அமைப்பின் புதிய விதிமுறைக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர்கள் மறுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியமும், வீர்ரகளுக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், ஐசிசிக்கும் இடையே மோதல் மூளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சானியாவும், மகேஷ் பூபதியும், இந்திய வீரர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில், வாடா அமைப்பின் நடவடிக்கையால், விளையாட்டுத் துறையிலிருந்து ஊக்க மருந்து பிரச்சினை அறவே ஒழிக்கப்படும் நிலை உருவாகும்.
ஊக்க மருந்து இல்லாத விளையாட்டு உலகை உருவாக்க வேண்டியது விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் கடமையாகும்.
இந்த ஆண்டு முழுவதும் நான் (பூபதி) எங்கே இருக்கிறேன் என்பதை தொடர்ந்து வாடா அமைப்புக்கு தெரிவித்தவண்ணம் உள்ளேன். இந்த முறையால், தவறுகள் செய்வோரின் எண்ணிக்கை அறவே குறையும்.
பல டென்னிஸ் பிரபலங்களுக்கு இந்த வாடா விதிமுறை அவுசகரியமாக இருந்தாலும் கூட விளையாட்டு உலகின் நன்மையைக் கருத்தில் கொண்டு இதை ஏற்றுள்ளனர்.
அதேபோல நமது கிரிக்கெட் வீரர்களும் இந்த விதிமுறைக்குப் பயப்படாமல், தயங்காமல் அதை ஏற்றுக் கையெழுத்திட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பல்லி
நல்ல விடயமாச்சே எதுக்காக அடம் பிடிக்கின்றனர்;