கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகனை துரிதமாக விடுதலை செய்வதற்கான சகல பொருத்தமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் தலைவரும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமுமான பி.விஜயரட்ணவிடம் இச்சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கே.தெய்வேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக யாழ்.மாவட்ட செயலகத்தின் நெக்டெப் பிரிவின் விலாசமிடப்பட்ட கடிதமொன்றை தெய்வேந்திரன் திங்கட்கிழமை விஜயரட்ணவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; வவுனியாவில் 30-07-2009 இல் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரும் எமது சகாக்களில் ஒருவருமான என்.வேதநாயகன் சிஐடி அதிகாரியால் கைது செய்யப்பட்டிருப்பதைக் கேள்வியுற்று நாம் மிகவும் கவலையடைந்திருக்கிறோம். அவருடைய விடுதலை தொடர்பாக உங்களின் அனுதாபமான பரிசீலனைக்காக கீழ் வரும் விடயங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
வேதநாயகன் 20 வருடங்களுக்கும் மேலாக அரச அதிபராக சேவையாற்றி வருகிறார். இலங்கை நிர்வாக சேவையில் 18 வருடங்களாக சேவையாற்றியுள்ளார். மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக பதவியேற்ற அவர் வறிய மக்களின் மேம்பாட்டுக்காக அற்புதமான சேவைகளை வழங்கியுள்ளதுடன் பிரஜைகளின் நலன்களுக்காக சேவையாற்றியிருக்கிறார்.
கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் கட்டுப்பாடற்ற பகுதிக்கும் இடையில் தனது சேவைக்காலத்தில் இணைப்புப் பாலமாக செயற்பட்டவராகும். பொலிஸாரோ, இராணுவமோ சட்டம்,ஒழுங்கை அமுல்படுத்தியிராத கட்டுப்பாடற்ற பகுதியில் இந்த மாவட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இவர் சேவையாற்றி வந்தார். அரச அதிபராக பணியாற்றிய காலத்தில் நிர்வாக சேவைக்கு இடையூறு இல்லாமல் அவர் செயலாற்ற வேண்டியிருந்தது. ஆயினும் அவர் தந்திரோபாயமாக அவற்றை சமாளித்து செயற்பட்டவராகும். எப்போதுமே எளிமையான சுபாவத்தைக் கொண்ட அவர் மக்களுக்குச் சேவையாற்றுவதில் எப்போதுமே சாதகமான மனப்பாங்கைக் கொண்டிருந்தவராகும்.
தனது சொந்த நலனுக்கான வசதிகள் இருந்தபோதும் கூட அவர் கிளிநொச்சியில் தங்கியிருந்து நெருக்கடியான சூழ்நிலைகளின் போது மக்களுக்குத் திறமையுடன் சேவையாற்றியிருந்தார். நம்பிக்கைக்குரிய நேர்மையான அதிகாரியான அவர் மிகவும் மதிப்புக்குரிய நன்கு கல்வி கற்ற குடும்பத்தைச் சேர்ந்தவராகும். கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக அவரை அரசாங்கம் நியமித்தபோது எந்தவித ஆட்சேபனையும் இன்றி அவர் அதனை ஏற்றுக்கொண்டு யுத்த சூழ்நிலையிலும் கிளிநொச்சி மக்களின் நலனுக்காகத் திறமையான பணிகளைச் செய்திருந்தார்.
கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அவர் இடம்பெயர்ந்த போது வவுனியாவுக்குச் செல்லுமாறு அரசாங்கம் அவருக்குப் பணித்திருந்தது. வவுனியாவில் அவருக்கு உப அலுவலகம் வழங்கப்பட்டது. கிளிநொச்சி அரச அதிபராக அவர் தனது கடமையை மேற்கொள்ள உப அலுவலகம் வவுனியாவில் வழங்கப்பட்டிருந்தது. வவுனியாவுக்கு அவர் சென்ற பொழுது சம்பந்தப்பட்ட அரச ஆவணங்கள் சகலவற்றையும் அவர் கொண்டு செல்வதற்கு ஒருபோதும் தவறிவிடவில்லை. அத்துடன், தமது உதவியாளர்களின் தனிப்பட்ட கோவைகளையும் அவர் கொண்டு செல்லத் தவறவில்லை.
குடும்பத்தினர் முழுமையாக வேதநாயகனிலேயே தங்கியுள்ளனர். அவருக்குப் பாடசாலை செல்லும் இரு பிள்ளைகள் உள்ளனர். கைது செய்யப்பட்ட பின்னர் அவர்கள் எதிர்காலம் குறித்து எந்தவொரு நம்பிக்கையும் இல்லாமல் துன்பப்படுகின்றனர். ஆதலால் சாத்தியமான அளவுக்கு அவரின் விடுதலைக்கு வேண்டிய சகல பொருத்தமான வழி முறைகளையும் எடுக்குமாறு நாங்கள் தங்களை விநயமாக வேண்டுகிறோம்.
itam
சாத்தியமான அளவுக்கு அவரின் விடுதலைக்கு வேண்டிய சகல பொருத்தமான வழி முறைகளையும் எடுக்குமாறு நாங்கள் தங்களை விநயமாக வேண்டுகிறோம்.
பார்த்திபன்
அன்றைய வன்னி நிலைமைகளில், பொறுப்பில் இருந்த வைத்தியர்கள் ஆகட்டும், அரச அதிபர்களாகட்டும் புலிகளுக்கு உதவ வேண்டிய நிலையிலேயே இருந்தனர். எனவே அவர்களிடம் அன்றைய காலகட்டம் பற்றிய விபரங்களை விசாரணைகள் மூலம் வாக்குமூலமாக வாங்கிக் கொண்டு, அவர்களை விடுதலை செய்வதே அரசு செய்ய வேண்டிய முறையான நடவடிக்கை.