இலங்கை யில் இருந்து முதன் முறையாக அமெரிக்காவுக்கு அகதியாகச் சென்று குடியேறிய ராஜா ரட்ணம், தமது 75ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை காலமானதாக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.
ராஜா ரட்ணம், கடந்த 1953ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமது 19ஆவது வயதில், இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாகச் சென்று குடியேறினார். அமெரிக்காவில் வெளியாகிய முதலாவது இலங்கை செய்தித் தாளையும் கலிபோர்னியா மாநிலத்தில் வைத்து இவர் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.