உலகம் முழுவதும் 168 நாடுகளில் பன்றிக் காய்ச்சல் பரவி இருப்பதாகவும், இந்த காய்ச்சலுக்கு இதுவரை 1154 பேர் பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தனது இணையதளத்தில் வெளியிட்ட தகவலில் தெரிவித்து உள்ளது.
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு 1008 பேர் உயிர் இழந்து இருப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு பரிசோதனைக் கூட ஆய்வின் மூலம் மட்டும் உலகம் முழுவதும் 1 இலட்சத்து 62 ஆயிரத்து 380 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்து இருப்பதாகவும் கூறி உள்ளது.
வட கிழக்கு ஆசியாவில் 65 பேரும், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 39 பேரும், ஐரோப்பாவில் 41 பேரும் பன்றி காய்ச் சலால் உயிர் இழந்து இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.