சீதுவையில் ஆபாச இறுவட்டுகளை விற்பனை செய்து வந்த வியாபாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சினிமா படங்களின் பெயரில் இவற்றை இவர் பாடசாலை பிள்ளைகளுக்கு விற்பனை செய்து வந்தார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. வீட்டில் வைத்து கணினியில் ஆபாசப்படங்களை இறுவட்டுகளில் பதிவு செய்து வந்தார் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவரிடமிருந்து 500 ஆபாச இறுவட்டுகள், கணினி என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சீதுவை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவரின் விற்பனை நிலையத்தில் மாணவன் ஒருவன் மூலம் ஒரு இறுவட்டை வாங்கி அதனை கணினியின் மூலம் பார்த்த போது இவரது வியாபார நடவடிக்கை தெரியவந்தது.