வவுனியாவில் அமைதியான வாக்களிப்பு

election000.jpgவவுனியா நகரசபைக்கான வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெறுவதாகவும், நண்பகல் வரையில் 35 வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றதாகவும் வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

காலை முதல் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு சீராக நடைபெற்றதாகவும் அசம்பாவிதங்கள் எதுவும் வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 எனினும், பட்டாணிச்சூர், புளியங்குளம், தாண்டிக்குளம், கற்குழி உட்பட்ட சில பகுதிகளில் மாற்றுக் கட்சிகளின் ஆதரவாளர்கள், கட்சி உறுப்பினர்களிடையே சிறுசிறு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், சில கைகலப்பு சம்பவங்களும் இடம்பெற்றதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான சம்பவம் ஒன்றில் தமது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சிறு காயத்திற்கு உள்ளாகியதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் ரீ.சித்தார்த்தன் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • R:V.விஷ்ணு
    R:V.விஷ்ணு

    என்னங்க இப்படி ஆகிவிட்டது யாழ்ப்பாண மாநகரசபை தேர்தல் யாழில் வெறும் 25% வீத வாக்குகள்தான் பதிவாகியிருக்காம். எம் யாழில் இத்தனை ……………………… வாக்குரிமை இருந்தும் வாக்களிக்காமல் இருப்பது எமது சமூகத்துக்கு சகயமானதாகவிட்டது இருந்தாலும் சற்று கூடுதலாக வாக்களித்து தங்களுக்கு ஓரளவுக்கேனும், எதாச்சும் செய்வார் என்பவருக்கு வாக்களித்திருக்கலாம் என்ன பண்றது தமிழன் எப்பத்தான் திருந்தப்போறானோ?! வாக்களிக்கக்கூடிய மனோநிலையில் இல்லை, சோகம், விருப்பமின்மை, வீராப்பு, முட்டாள்தனம், திருந்தமுடியாத விதண்டாவாதிகள், இப்படி ஏகப்பட்ட காரணமும் காரணவதிகலுமே தேர்தல்களை புறக்கணித்து தவறானவர்களை பதவியில் அமர்த்தி சுய வெறுப்பு விருப்புக்காய் முழு சமூகத்தையே பாதிக்க வைக்கிறார்கள் இந்த வாக்களிக்காதவர்கள். தமிழ் சமூகத்தில் மாற்றம் வேண்டும் அதைவிட ஒற்றுமை வேண்டும். இலங்கைத் தமிழ் சமூகத்துக்கு இன்னும் கொஞ்ச காலம் தேவை திருந்துவதற்கு அல்லது திருத்தப்படுவதற்கு. இது தனிப்பட்ட கருத்து மாத்திரமே.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    விஷ்ணு,
    மக்களைக் குறை கூறுவதில் பிரயோசனமில்லை. நாம் வெளியிலிருந்து கொண்டு பார்க்கும் பார்வைக்கும், அங்கு மக்கள் நிஜத்தில் வாழும் வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகளுண்டு. அந்த மக்களில் பெரும்பாலானவர்கள் சுயமாக தேர்தலை புறக்கணித்துள்ளார்கள் என்றால், அதில் ஏதோ நியாயமில்லாமலில்லை. தமது அதிருப்தியை அரசிற்கு தெரியப்படுத்த இச்சந்தர்ப்பத்தை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். எனி அரசு தான் அந்த மக்களின் அதிருப்தியைப் போக்கி, ஒரு சுமூகமான நிலைமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Reply
  • மாயா
    மாயா

    புலிகளின் அழிவின் பின்னர் நடக்கும் ஒரு தேர்தல் அமைதியாக நடந்திருப்பது மகிழ்வைத் தருகிறது. இருந்தாலும் அரசு இக் காலத்தில் வன்னி மக்களை தமது இடங்களில் மீள் குடியமர்த்த முனைந்திருக்க வேண்டும். அதை விடுத்து நடத்திய கூத்தை சாதாரண மக்கள் நிராகரித்ததில் நியாயம் இருக்கிறது.

    வவுனியாவில் தற்போதைய அரசோடு கூட்டு சேர்ந்து தேர்தலில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி, ஸ்ரீரெலோ, ஈரோஸ், றிசாத் பதியூதின் போன்றவர்கள் வவுனியா முகாம்களில் உள்ள மக்களது நிவாரணப் பொருட்களை வாக்காள மக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்துள்ள கேவலமான செயல் காறித் துப்பும் அளவுக்கு வெளியே தெரிய வந்துள்ளது. நீங்கள் எல்லாம் மக்களுக்கு எதையும் நேர்மையாக செய்யப் போவதில்லை என்பதை அனைவருக்கும் தெரிய வைத்துள்ளீர்கள். தமிழர்களே இவர்களை நம்புவதை விட அடுத்த முறை தேர்தலிலாவது முக்கிய கட்சிகளோடு இணைந்து பணியாற்றி இவர்களை துரத்த முயலுங்கள். அதற்காக உங்களை தயார் படுத்துங்கள்.

    Reply
  • R:V.விஷ்ணு
    R:V.விஷ்ணு

    நீங்கள் கூறுவது சரிதான். நிச்சயமாக மக்களுக்கு அதிர்ப்தி இருக்கின்றது வலியும் இருக்கின்றது. ஆனால் தற்பொழுது வந்திருக்கின்ற முடிவுகளையும் வாக்கு வித்தியாசங்களையும் வைத்து பார்க்கும்பொழுது வெட்கமாக இருக்கிறது. குறைந்தது 40- 60 வீதமாவது வாக்களித்திருந்தால் ஓரளவுக்கேனும் யாழ் மக்களின் மனோநிலை தெரியவந்திருக்கும். வந்திருக்கும் முடிவுகளின்படி அரசாங்கத்தின் மீதான அதிர்ப்தியைவிட அரசு தன் வெற்றியை உலக்குக்கு பிரச்சாரப்படுத்தப்போகிறது .

    அதுசரி ஆனந்தசங்கரி ஐயா, ஸ்ரீதரன் போன்றோரின் நிலை என்னவாம்? ஊவா மாகாணத்தில் ஐக்கியதேசியக்கட்சி, ஜே.வி.பி போன்றோரின் நிலைபோல் ஆகிவிட்டது இவர்கள் நிலைமை. இவர்கள் தங்களை சுய விமர்சனம் செய்ய வேண்டும் அத்தோடு விட்டுக்கொடுப்புகளுக்கும் தயாராகவேண்டும் வெறும் விமர்சனக்களால் மட்டும் எதையும் சாதித்துவிட முடியாது. யாழ் தேர்தல் முடிவு மொத்த வாக்குகள் அண்ணளவாக 104000 இல்; ஐக்கியமக்கள சுதந்திர முன்னணி 10062, (13 ஆசனம்)- தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 8008 (8ஆசனம்), சுயேச்சைக்குழு 1175 (1ஆசனம்), தமிழர் விடுதலைக்கூட்டணி 1007, (1ஆசனம்) எங்கு இருக்கின்றது அரசியல். எமது அவா தமிழ் கட்சிகள் நியாயமான திட்டங்களுடன் விட்டுக்கொடுப்புகளுடன் ஒன்றிணையவேண்டும் வெளிப்படையாக. எதோ ஒரு தனியார் நிறுவனத்தின் ஏற்பாட்டின் பேரில் தமிழ் கட்சிகள் அனைவரும் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டனர் அச்செய்தியைப்பார்த்து ஒரு நல்ல சமிட்சை என சந்தோஷப்பட்டோம் அனால் இவர்கள் கட்சிவாதங்களை விடுக்கொடுக்க தயாரில்லை, இவர்கள் திருந்தி ஒருமைப்படவேண்டும். அது த .தே .கூ உடனாக இருந்தாலும் சரி இல்லை தனித்துவாமான கூடமைப்பாக இருந்தாலும் சரி இல்லை தேசிய ரீதியாக கூட்டாக இருந்தாலும் சரி புதிய ஒரு இலங்கையை காண்போமே
    (எப்போ ???).

    கடந்தகால பிழைகளை மட்டும் விமர்சித்துக்கொண்டு தமிழரை பாதாளத்துக்குள் தள்ளாமளிருக்கவேண்டும் இந்த அரசியல் வாதிகள் இல்லையென்றால் அரசியலில் இருந்து விலகவேண்டும் நிச்சயமாக இத்தேர்தல் பலருக்கு பாடம் கட்பித்திருக்கிறது. இதைத்தான் சொன்னேன் தமிழ் மக்கள் திருந்த காலம் வேண்டுமென்று அது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.குறைந்தபட்சம் நியானமாக நடந்திருக்கு இத்தேர்தல் ஒரு நல்ல வரவேட்க கூடிய அம்சம் . இத்ர்தலில் படுதோல்வி அடைந்தவர்கள் வைக்கப்போரார்கள் விமர்சனக்கள் பாருங்களேன்! அனைத்து மக்களும் வாகளித்திருந்தால் தாங்கள்தான் வென்றிருப்போம் என்பது மாதிரி…. முதல் புலம்பெயர் வானொலி, இணையத்தள விமர்சனதாரிகள் திருந்தவேண்டும். (முதலில் நானும் திருந்தவேணடுமா? அடுத்த தேர்தலில் புலம்பெயர் ,தாயக அரசியல் வாதிகள் விமசகர்கள், முக்கியமாக வாக்காளர்கள் திருந்துவார்களா?

    Reply
  • bandulla
    bandulla

    Rigged election which was forced by UPFA. Only 20% showed up… Where is the remaining 80% of the people. Those 80% are TNA supporters and they are scared to come out to vote due to the White Van and killer group of EPDP.

    This gives us a clear understanding of three things 1).People in North are fed up with southern political parties 2).They think whatever TNA brings for them is better than anybody else. 3).Tradiitonal Tamil parties like TULF/EPDP have lost the confidence of Tamils

    Reply