இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படவிருந்தமை தொடர்பாக விடுதலைப்புலிகளின் தற்போது கைது செய்யப்பட்டுள்ள தலைவர் செல்வராஜா பத்மநாதனுக்கு முன்கூட்டியே தெரியும் எனவும் விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் ஏற்படுத்திய புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இந்திய தலைமைத்துவத்தை விரைவில் இலக்கு வைப்பார்கள் என 1990 நவம்பரில் செல்வராஜா பத்மநாதன் அல்லது கே.பி. தமிழ் நாட்டிலுள்ள இலங்கைத் தமிழர் ஒருவருக்குத் தெரிவித்ததாகவும் ராஜீவ்காந்தியின் பெயரை அவர் குறிப்பிட்டிருக்கவில்லை எனவும் “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது.
1991 மே 21 இல் சென்னைக்கருகே தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது புலிகளின் பெண் தற்கொலைக் குண்டுதாரியால் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டிருந்தார். அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பேயே வெளிநாட்டிலிருந்து தொலைபேசியூடாக இந்தத் தகவலை கே.பி. தெரிவித்திருந்ததாக எம்.ஆர்.நாராயண் சுவாமி “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் எழுதியுள்ளார்.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கே.பி. மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. அத்துடன், அந்தக் கொலையில் அவர் நேரடியாக தொடர்புபட்டிருக்கவில்லை. காந்தி படுகொலை தொடர்பான பாரிய சதியை தற்போதும் விசாரணை செய்து கொண்டு வரும் பல் ஒழுங்கமைப்பு கண்காணிப்பு அதிகார சபையின் கண்களுக்கு இவர் ஒரு சந்தேக நபராக மட்டுமேயுள்ளார்.
படுகொலை தொடர்பாக முன்கூட்டியே கே.பி. அறிந்திருந்தமை குறித்து இந்திய பாதுகாப்பு முகவரமைப்புகள் கவனம் செலுத்தியிருந்தன. காந்தியின் படுகொலை தொடர்பாக ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு கே.பி.க்குத் தெரியவந்தது என்பது பற்றிய கேள்விகள் எழுந்திருந்தன.
விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுதக் கொள்வனவின் முக்கியஸ்தராக கே.பி.யிருந்ததால் அவரில் புலிகள் முழுமையாக தங்கியிருக்க வேண்டியதாக இருந்தது என்று ஒரு தர்க்க ரீதியான விளக்கம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த மேயில் மரணமடைந்ததையடுத்து புலிகளின் தலைவராக பத்மநாதன் அறிவிக்கப்பட்டிருந்தார். ராஜீவ்காந்தியின் கொலையால் சர்வதேச ரீதயிலான ஆயுதக் கொள்வனவு மற்றும் சர்வதேச வலைப்பின்னல் அமைப்பிற்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கருதி முன்கூட்டியே கே.பி. அந்த விடயம் குறித்து அறிந்திருக்கக் கூடிய தேவையிருப்பதாக புலிகள் கருதியிருக்கக் கூடும்.
ராஜீவ்காந்தியின் படுகொலை தொடர்பாக முன் கூட்டியே அறிந்திருந்த புலிகளின் மற்றொரு சிரேஷ்ட உறுப்பினர் திருச்சி சாந்தனாகும். அவர் 1990 1991 காலப்பகுதியில் தமிழ் நாட்டில் புலிகளின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தவர்.
படுகொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள், ஆயுதங்கள், சிங்கப்பூர் கிரனேற் என்பவை தொடர்பாக கே.பி.யை விசாரணை செய்வதன் மூலம் இந்தியாவிற்கு அதிகளவு பயனுள்ள தகவல்கள் கிடைக்கக் கூடும். எவ்வாறாயினும் கே.பி.யை விசாரணை செய்வது தொடர்பாக தனது பாதுகாப்பு முகவர் அமைப்புகளிடம் கேட்பதற்கு இந்தியா முடிவு செய்யுமானால் அந்த இலக்கிற்குத் தேர்ந்தெடுப்பவர்கள் விடுதலைப் புலிகளின் விவகாரம் பற்றி நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் தாழ்ந்த மட்டத்திலான அதிகாரிகள் குழுவொன்று உள்ளது. அக்குழு சேவையாற்றிக் கொண்டும் இருக்கிறது. ஓய்வு பெற்றும் உள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகள் தொடர்பாக பல தசாப்த காலம் தொடர்பாக பல விடயங்களை அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், கடந்த காலத்தில் தகுதிவாய்ந்த பலர் அடிக்கடி ஓரங்கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. 1983 இலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை கட்டியெழுப்புவதற்கு கே.பி. ஆற்றிய பங்களிப்பின் சிறிய பகுதியாகவே காந்தி கொலை தொடர்பாக அவரின் தொடர்பு காணப்படுகின்றது.
பிரபாகரன் இல்லாமல் விடுதலைப் புலிகள் இல்லை. கே.பி. ஒருபோதும் இராணுவ பயிற்சி பெற்றவர் அல்ல. அவர் இந்தியாவிலிருந்த போது 1984 இல் புலிகள் மட்டத்தில் யுத்த உபகரணங்களை உலகளாவிய ரீதியில் பெற்று அவற்றைக் கொண்டு செல்வதற்கு இரகசியக் குழுவொன்றை உருவாக்க பிரபாகரன் தீர்மானித்திருந்தார். அந்த வேலைக்கு கே.பி. தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அந்தத் தருணத்தில் கே.பி. வளர்ச்சியடைந்தார். மோசடி மற்றும் மறைவாகச் செயற்படுதல் என்பனவற்றில் இயல்பாகவே ஆற்றலுள்ளவராக இருந்த இந்த மனிதர் விரைவில் பல்தரப்பு அடையாளத்துவங்கள் கொண்டவராக தன்னை ஏற்படுத்திக் கொண்டார். கடவுச் சீட்டுகளையும் (இந்தியா உட்பட) பெற்றுக் கொண்டிருந்தார். பின்னர் படிப்படியாக புலிகளின் ஆயுதக் கொள்வனவு பிரிவைக் கட்டியெழுப்பினார். பல கம்பனிகளை உருவாக்கினார். (எஜமானன் அவரே) பல நாடுகளில் கம்பனிகள் உருவாக்கப்பட்டிருந்தன.
தங்கம், போதைவஸ்து, கடத்தல் நடவடிக்கைகளுக்காக இந்தக் கம்பனிகள் உருவாக்கப்பட்டிருந்தன. அந்தப் பணத்தைக் கொண்டு யுத்த உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு அவர் பயன்படுத்தினார். 1980 களில் இந்தியாவில் தமிழ் நாட்டில் பாற்பண்ணை ஒன்றை இரகசியமான முறையில் நடத்தி வந்தார். அத்துடன், விடுதலைப் புலிகளுக்காக இரகசிய கப்பல் போக்குவரத்துக் கட்டமைப்பையும் அவர் உருவாக்கியிருந்தார்.
அதன் மூலம் ஆயுதம் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன. முற்றிலும் இரகசியமான முறையில் அவர் இயங்கி வந்தார். பிரபாகரனுக்கு மட்டுமே விடயங்களைத் தெரிவித்து வந்தார். கே.பி.யின் மூலம் விடுதலைப் புலிகள் ஆயிரணக்கணக்கான தொன்கள் ஆயுதங்களைப் பெற்றது, நவீன பாதுகாப்பு நிலைமைகள், தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், சினைப்பர் துப்பாக்கிகள், மோட்டார்கள், ஆர்.பி.ஜி.க்கள், இரவில் பார்ப்பதற்கான உபகரணங்கள், கண்டு பிடிப்புக் கருவிகள், கண்ணாடி விலைப் படகுகள், நவீன வானொலி, கம்பியில்லா தொலைத் தொடர்புகள் போன்ற பல முன்னேற்றகரமான பாதுகாப்பு முறைமைகளும் இவற்றில் உள்ளடங்கும்.
கடந்த சில வருடங்களாக மலேசியாவிலே இவர் அறியப்பட்டவராக இருந்தார். 19801990 களில் இவர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். பல்வேறு அடையாளங்களுடன் இவர் லெபனான், தாய்லாந்து கம்போடியா கம்போடியா எல்லை, பிரான்ஸ், பிரிட்டன், சுவீடன், கிறீஸ், சைப்பிரஸ், கொங்கொங், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், மியன்மார், மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
2006 இல் விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பிரிட்டனில் மரணமடைந்த போது, கே.பி. அங்கிருந்தார். விடுதலைப்புலிகள் தமது முதலாவது சிறிய ரக விமானத்தைப் பெற்றுக் கொண்டமை கே.பி.யின் மூலமேயாகும். எவ்வாறாயினும் கே.பி.யின் படிப்படியான வளர்ச்சி புலிகளுக்குள் பொறாமையை ஏற்படுத்தியது.
2003 தொடக்கம் பிரபாகரன் அவரை ஓரங்கட்டியிருந்தார். அவரின் இடத்திற்கு தனது மற்றொரு விசுவாசியான காஸ்ட்ரோவை கொண்டு வந்தார். ஆனால், கே.பி.க்குள்ள இயற்கையான ஆற்றல்களுக்கு அவர் பொருத்தமற்றவராக இருக்கவில்லை. ஆயினும் புலிகள் வீழ்ச்சியடைய ஆரம்பித்ததையடுத்து பிரபாகரன் நிலைமையை உணர்ந்து கே.பி.யை மீள பணிகளில் ஈடுபடுத்தினார். காலம் மிகவும் கடந்து விட்டதாக அமைந்தது.
கே.பி.யின் சிறகுகள் 6 வருடங்களுக்கு முன்னர் வெட்டப்படாதிருந்திருக்குமானால் பிரபாகரன் இப்போதும் இருந்திருக்கக் கூடும் என்று புலிகளின் அவதானிகள் பலர் நம்புகின்றனர்.
Appu Hammy
If this KP is not thyere, there will be many more other KP’s to come.
DEMOCRACY
கே.பி. அவர்களை காட்டிக் கொடுத்தது, “கேஸ்ட்ரோ” அவர்களின்? கையாள்கள்தான் என்று கூற வருகிறீர்களா??, இப்படியும் ஒரு “வரட்டு ஜோக்கா”?.
இந்தியாவை தன் அச்சில் நகரும் ராட்சச இயந்திரமாகக் கொண்டால், 1987 ல் இலங்கை கடற்படை சிப்பாய் ராஜீவ் காந்தியை துப்பாக்கி மட்டையால் அடித்ததும், பின்னால் இலங்கைத் தமிழர்கள் அவரை கொன்றதும் ஒரு “எறும்புக் கடி மாதிரி”. வட இந்தியா, தென் இந்தியா என்று நாம் “காலனித்துவ கோணத்தில்” பிரித்தாலும், இலங்கை மக்கள் இந்தக் கோணத்தில் தாங்களாகவே ஆப்பு வைத்துக் கொண்டது, தெளிவாகிக் கொண்டிருக்கிறது.
இராஜீவ் காந்தி கொலையால் இந்தியா “தமிழர்களை பூண்டோடு” அழித்துக் கொண்டிருக்கவில்லை!, இந்திய இயந்திரத்தின் நகர்வு தமிழர்களையும், சிங்களவர்களையும் மேல் குறிப்பிட்டபடி எதிர்க்க வைத்திருக்கும் போது, இந்தியா சிங்கள இனவாத?, சுயநல அரசியல்வாதிகளை மட்டும் ஆதரித்துள்ளது முட்டாள்தனமானது. இது தமிழினத்தின் இனப்பிரச்சனை அல்ல. “திராவிட நாடு” கொள்கையை கைவிட்டபோது, அதற்கான காரணங்கள் அப்படியே இருந்தபோது, அறிஞர் அண்ணா அவர்கள், இப்படிதான் திரு, திருவென்று முழித்துக் கொண்டிருந்தார். “இணக்கம்” ஏற்ப்படாமல் ஒத்துப் போவது, அடிமை சாசனம் என்பது “அரசியல் தெளிவு” தமிழகத்தை தவிர மற்ற திராவிட? மாநிலங்கள் “மட்டக்களப்பைப் போல” கை விட்டு விட்ட “கையறு நிலை”!, அந்தோ தோன்றினார் “கலைஞர் கருணாநிதி!”. “மாமா வேலைப் பார்ப்பதற்கு” எல்லோருக்குமே அப்போது ஒரு ஆள் தேவைப்பட்டது. ராஜாஜியின் துணையுடன் அதை கச்சிதமாக செய்தார் தலைவர்.
“ஒத்துப் போவதை விட”, கலைஞர் தான் புதிதாக கட்டிய வீட்டுக்கு அரசாங்கம் மின்சார இணைப்புக்கான அனுமதி தரவில்லை என்றால், “தமிழகம் பஞ்சாபாக மாறும்” என்று “இனிப்பாக” கூறியது, “திராவிட நாடு, முட்டாள் தியாகிகளுக்கு” “புளங்காகிதத்தை ஏற்படுத்தியது”!- இங்கேதான் “இலங்கைத் தமிழர்களும் கலைஞர் கருணாநிதியும் ஒற்றுமை படுகிறார்கள்!”. ஒத்துப் போவது என்று முடிவெடுத்தவர்கள் எம்.ஜி.ஆர். பின்னால் சென்றார்கள், விடுவாரா கலைஞர், 1980 களில் பறையர்களின் சம்பந்தி என்று, பரையர்களின் நாயகனாக மாறினார். இதில் மயங்கி, பின்னாளில் அவஸ்த்தைப் பட்டவர் அப்போதைய சென்னை மாவட்ட தி.மு.கா. செயலாளாலராக இருந்த ஆர்.டி.சீதாபதி அவர்கள். இதை முறியடிக்க,எம்.ஜி.ஆர். இடஒதுக்கீட்டை “அதிகரித்தார்”. இதுவும் ராஜாஜி- மேனன் ஐடியாதான்!. இதனால் தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் ஒரு “அரிஸ்டோகிராட் குழு!?” உருவாகியது. தாங்கள் அனுபவித்த அரசாங்க சலுகைகளை,”தங்களின் சொந்தக் காரர்கள் கூட” அனுபவிக்க அனுமதிக்கவில்லை இவர்கள் (இலங்கைத் தமிழர்களைப் போல)!. ஆனால் கலைஞரின் குடும்பத்திற்கு மட்டும் இந்த முறை மிகவும்பிடித்திருந்தது. மனம் இணக்கமில்லாமல் ஒத்து போனவர்களின் “மெல்லிய தோலைக் கண்டு” எள்ளி நகையாடினார்கள், தங்களின் “தடித்த தோலை எண்ணி,எண்ணி” பெருமிதம் கொண்டார்கள்!. ஆனால்,இந்தியாவுடன் ஒத்துப் போனவர்கள், ஒரு “கலாச்சார இணக்கத்துடனேயே” அவ்வாறு செய்தார்கள் என்பது இந்த “காமட்டிப் புரோ” கலாச்சாரத்திற்கு புலப்படவில்லை…..
poor tamulu
LR — which is to be taken from a local court — is a legal route which allows one country to take help from the other in investigation into cases which have some link in a foreign land.
Even Sri Lanka reportedly expressed the need to first conclude its own preliminary investigations before considering the option of extraditing KP, who is currently in the custody of the Sri Lankan defence authorities, as per international treaties and conventions.
There is no public out cry among Tamil diaspora for the arrest of KP. People don’t care. Must not take anything seriosly what we read in Tamil websites.
He is just a One Man. If KP get killed, there will be 100s of KPs are ready in Jaffna and even outside of Sri Lanka. We all know that LTTE leadership ( soosai, pottuamman and Prabakaran) are alive. Now, the truth is coming out that the fake body with the WAX on the face was NOT the true Prabakaran.