ஈழம் தேசிய ஜனநாயக முன்னணித் (ஈஎன்டிஎல்எப்) தலைவர் ஞா ஞானசேகரன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை ஓகஸ்ட் 7ல் சந்தித்தார். இந்தச் சந்திப்பினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்இ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற செயலருமான இரா. அன்பரசு ஏற்பாடு செய்திருந்தார். அன்பரசு இச்சந்திப்பிலும் கலந்துகொண்டார்.
‘இலங்கை அரசு தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள வரை குடியமர்த்தும் பணியினை மிக வேகமாக செய்து வருகிறது. தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை பகிரங்கமாகவே அமைத்து வருகிறது. திருகோணமலை நகர் பகுதியில் தமிழர்களின் கோவிலான கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் மிகப்பெரிய பௌத்த விகாரையை கட்டி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தவோஇ சுட்டிக்காட்டவோ யாராலும் முடியவில்லை. எனவேதான் இந்தியா நேரடியாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட்டு உரிமைகளை மீட்டுத்தர வேண்டும்” என்று ஈஎன்டிஎல்எப் தலைவர் ஞா ஞானசேகரன் இந்தியப் பிரதமரிடம் கோரி உள்ளார்.
இச் சந்திப்பின் போது பின்வரும் கோரிக்கைகளை ஈஎன்டிஎல்எப் முன்வைத்தது.
(01) ‘இந்திய – இலங்கை’ ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
(02) இலங்கை அரசு ‘இந்திய-இலங்கை’ ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்த மாட்டார்கள் என்பதை அனுபவரீதியாக நாங்கள் கண்டுள்ளோம். எனவே இந்தியா அமைதிப் படையை அனுப்புவதன் மூலமாகத்தான் ஒப்பந்தத்தினை நிறைவேற்ற முடியும். இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளாதப்பட்சத்தில் இந்தியா ஐ.நா.வின் அமைதிப்படையை அனுப்பும்படி ஐ.நா.வை வற்புறுத்த வேண்டும்.
(03) இலங்கை அரசு தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்களவரை குடியமர்த்தும் பணியினை மிக வேகமாக செய்து வருகிறது. தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை பகிரங்கமாகவே அமைத்து வருகிறது. திருகோணமலை நகர் பகுதியில் தமிழர்களின் கோவிலான கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் மிகப்பெரிய பௌத்த விகாரையை கட்டி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தவோஇ சுட்டிக்காட்டவோ யாராலும் முடியவில்லை. எனவேதான் இந்தியா நேரடியாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட்டு உரிமைகளை மீட்டுத்தர வேண்டும் என்று கோருகிறோம்.
(04) வடக்கு மாகாணத்தில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற மூன்றரை லட்சம் தமிழர்களை நிபந்தனை எதுவும் இல்லாமல் விடுவிக்க வேண்டும். அவர்கள் விரும்பும் தங்களது பகுதியில் குடியமர இந்தியா அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.
(05) தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக போதிய கல்வி அறிவு இல்லாமலும்;இ தொழிற்பயிற்சி பெறாமலும் முகாம்களில் முடக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கல்வியும்இ தொழில்; வாய்ப்புப் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.
(06) புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்தியாவில் ஒரு மகாநாடு நடத்துவதற்கு இந்திய அரசும்இ தமிழக அரசும் அனுமதி வழங்கவேண்டும்.
இதற்க்கு பதிலித்த இந்தியா பிரதமர் ‘வடக்குக் கிழக்கில் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றங்களை நாங்கள் (இந்தியா) அவதானித்து வருகிறோம். அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என உறுதி அளித்தாக ஈஎன்டிஎல் தெரிவித்துள்ளது.
ஓகஸட் 7; நடைபெற்ற சந்திப்பின் போது இந்தியப் பிரதமர்இ ஈ.என்.டி.எல்.எப் க்கு கீழ்கண்டவாறு உறுதிமொழியழித்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்து உள்ளது.
* இந்திய-இலங்கை ஒப்பந்தம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.
* வடக்குக் கிழக்கில் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றங்களை நாங்கள் (இந்தியா) அவதானித்து வருகிறோம். அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* அகதிகளாக்கப்பட்ட தமிழர்களை மீளக் குடியமர்த்துவதற்காக நாங்கள் 500 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். மேலும் அதற்கான உதவித் தொகைகளை கொடுப்போம். மீளக்குடியேற்றங்களையும் நேரடியாக அவதானித்து வருகிறோம்.
* தமிழகத்தில் உள்ள அகதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கான கல்வியும்இ தொழிற்பயிற்சியும் அளிக்கப்படும்.
* நிச்சயமாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரமான ஒரு நல்லத் தீர்வினை இந்தியா ஏற்படுத்திக் கொடுக்கும்.
* புலம்பெயர்ந்த தமிழர்களை ஒன்றிணைப்பதற்கான மாநாட்டிற்கு இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் திரு. எம்.கே. நாராயணன் அவர்களிடம் கலந்து பேசி அதற்கான ஆவணம் செய்யப்படும்
என்ற உறுதிமொழிகளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஈஎன்டிஎல்எப் தலைவர் ஞா ஞானசேகரக்கு வழங்கி உள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.
ganesan
சங்கரிக்கு 1000 சிறீரெலோவுக்கு 300 வாக்குகள் இவர்கள் தங்களை ஜனநாயக நீரோட்டத்தில் ஈடுபடுத்திய பிறகு இந்த நிலை இதுவரை எந்த ஜனநாயக நிகழ்வையும் இலங்கையில் ஏற்ப்படுத்தாமல் இந்தியாவில் குடியிருந்து கொண்டு இந்த ஈஎன்டிஎல்எப் என்ன செய்யமுடியும் – புலிகளின் அழிவின் பின்னர் ஏன் இன்னமும் இந்தியாவில் இருக்க வேண்டும் குறைந்த பட்சம் உங்கள் எதிர்காலத் திட்டங்களை முன்வையுங்கள் கூட்டுமுன்னணி சம்பந்தமாக உங்கள் அபிப்பிராயம் தேர்தல்களை சந்தியுங்கள் மக்களின் சம்மதத்ததை பெறுங்கள் இல்லாவிட்டால் மக்கள் அமைப்பு என்று சொல்வதில் உள்ள அர்த்தம் என்ன என்று வெளியிடுங்கள்.
katham
உங்களுக்கு யார் ஜனநாயக உரிமைகள் தந்தது இப்படியான சந்திப்புக்களை மேற்கொள்ள தயவு செய்து விளங்கப்படுத்த முடியுமா?
அல்லது நீங்களும் புலிகள் பொல நீங்களாகவே பெற்றுக் கொண்ட உரிமைகளா?
மாயா
இவர்கள் இந்தியாவின் ஆட்கள். அவர்களது மூட்டைகளை சுமக்க தயாராகிறார்கள்.
chandran.raja
தமிழனுக்கு முடுக்கும் அவசரமும் எப்பவும் மற்றைய சமூகத்கத்தை விட மிகவும் கூடுதலாகவே இருக்கிறது. இதையே ஈஎன்டிஎல்ப் வும் பிரதிபலிக்கிறது. மே பத்தொன்பதாம் திகதிக்கு ஓர்யிரு சம்பவங்களை விட அமைதியாகவே இருக்கிறது. புலிக்காலம் முடிவடைந்து விட்டது. யாரும் அரசியல் வேலைசெய்வதற்கு எந்த பயமும் தேவையில்லை. இந்தியாவில் தங்கியிருந்து இலங்கை மக்களுக்கு அரசியல் சேவை செய்யவேண்டிய அவசியம் இல்லை. அப்படி தடங்கல்லிருந்தால் என்ன தடங்கல் எப்படியென்பதை மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும்.
மக்களில் நம்பிக்கை இல்லாதவனும் அரசியலை மேற்கொண்டு நடத்தவழி தெரியாதவன்னுமே அமைதிப்படையை அனுப்பு! ஐ. நாடு தலையிடு!! கோருவதாகும். இது இறுதிக்காலத்தில் புலி போட்ட கோஷங்களுக்கு ஒப்பானதாகும்
தமிழ்-அரசியல்வாதிகள் இணக்கப்போக்கையும் விட்டுக்கொடுப்பையும் “நாம்இலங்கையர்” என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இனப்பெருமையும் இனத்தைச்சொல்லி அரசியல் நடத்துவது இலங்கை அரசியலுக்கு எந்தவித பயனும் தரப்போதில்லை. இந்தியாவோ இல்லை ஐநாவோ சிங்களமக்களை புரிந்ததைவிட நாமோ கூடுதலான புரிந்துணர்வை வளர்த்து வைத்திருக்கிறோம். தமிழரை விட சிங்களமக்கள் எப்பவும் ஒருபடி உயர்வானவர்களே! இதைத்தான் ஈஎன்டிஎல்ப் அவசர அவசரமாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
je
யாரும் அரசியல் வேலைசெய்வதற்கு எந்த பயமும் தேவையில்லை. ”
என்ன பகிடியா விடுகிறீர்கள்? ஒரு மாநகர தேர்தலிலேயே தனித்தனியே போட்டியிட டக்ளஸ் போன்றவர்களால் முடியவில்லை. ஜனநாயக தன்மையை வழங்கவில்லை. எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்?
இனப்பெருமையும் இனத்தைச்சொல்லி அரசியல் நடத்துவது இலங்கை அரசியலுக்கு எந்தவித பயனும் தரப்போதில்லை”
இதுவரை காலமும் இனத்தை சொல்லி இனவாதத்தைக் கக்கிதான் சிங்கள அரசுகள் அரசியல் செய்து வருகின்றன. இதை அவர்களுக்கு சொல்லுங்கள்.
chandran.raja
என்ன? ஜெ புது கதை விடுகிறீர்கள்.புலிக்கே சவால் விட்ட டக்கிளஸ்சுக்கு முடியவில்லையா? நான்தான் உங்களை திருப்பி கேட்க வேண்டும். நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்?என்னதை நினைத்து எதை இடிக்கிறீர்கள்?.
சாந்தன்
“….தமிழ்-அரசியல்வாதிகள் இணக்கப்போக்கையும் விட்டுக்கொடுப்பையும் “நாம்இலங்கையர்” என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். ”/chandren-raja
ஸ்ரீலங்கா ஒரு பெளத்த நாடு, பெளத்த மதத்தையும் சாசனத்தையும் போற்றிப்பாதுகாக்கும் கடமை அரசுக்கு உண்டு, என சொல்லப்பட்டிருக்கும் அரசியலமைப்பைக் கொண்ட நாட்டில் “நாம் இலங்கையர்” !
“..இனப்பெருமையும் இனத்தைச்சொல்லி அரசியல் நடத்துவது இலங்கை அரசியலுக்கு எந்தவித பயனும் தரப்போதில்லை..”
மதத்தைச் சொல்லி நடத்தினால் பரவாயில்லைப்போல் இருகிறது.
அரசியல் வாதிகளை விடுங்கள். ஜனநாயகக்கோசம் போட்ட கட்சிகளுக்கு முடிந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில ஆப்பு ! மனிதாமிமானத்துக்கு யுனெஸ்கோ அவோட் வாங்கினன் எண்டு நிமிசத்துக்கு இரண்டு தரம் சொல்லுற சங்கரிக்கு விருப்பு வாக்குகள் – 424! எல்லாம் வேசம் போட்டுக்கொண்டு கோசம் போடுவதற்குத்தான் உதவும்.”…
என்ன? ஜெ புது கதை விடுகிறீர்கள்..”
புதுக்கதையல்ல, யுனெஸ்கோ அவாட் வின்னிங் சங்கரியின் கதை….
chandran.raja
கொலை லஞ்சம் ஊழல் காலையில் வகுத்த கொள்கைகளை மாலை விற்று கட்சிமாறி கூட்டணி வகுத்து கூட்டுமாறி பயணிக்கிற அரசியலைத் தான் மூன்றாம் உலகநாடுகள் பழக்கப்பட்டு ஏதோ ஒரு எதிர்பார்பில் எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்… இதில் இலங்கையோ இந்தியாவோ விதி விலக்கில்லை. கடந்த வந்த மரணகாலங்களை வீட்டுக்குவீடு மரணஓலங்களையும் தமிழ்மக்களுக்கு இன்னும் பலமடங்கு புதிய அனுபவங்களை கொடுத்திருக்கிறது.
சாந்தன்! ஈஎன்டிஎல்ப் யை ஆனந்தசங்கரியோடு ஒப்பிட்ட அரசியலை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். யுனஸ்கோ- ஆனந்தசங்கரியின் அரசியலையும் தாண்டிச்செல்லக் கூடிய அரசியல் கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள் அதை ஏற்றுக்கொள்ள பலர் இருப்பார்கள்…பயன் உள்ளதாகவும் இருக்கும்.
raja
சந்திரன் ராஜாவிற்கு!
19ம் திகதி நடைபெற்ற ஒரு இரு சம்பவங்களை விட அமைதியாக இருக்கிறது என குறிப்பிட்டு உள்ளீர்கள் நீங்கள் மனிதநேயம் உள்ளவரா என்பதை தனியாகயிருந்து உங்கள் மனச்சாட்சியை கேட்டுப் பாருங்கள்.
இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அல்லது உங்கள் மொழியில் புலிகள் கொல்லப்பட்டு உள்ளார்கள். மூன்று லட்சத்திற்க்கு மேற்பட்ட உடன்பிறப்புகள் முகாமிலே அடைக்கப்பட்டு உள்ளார்கள். இவைற்றையெல்லாம் ஜனநாயகம் பேசுகின்ற அரசு மூடிமறைக்கின்ற முயற்சியிலே உங்களை போன்று ஜனநாயகம் பேசுகின்றவர்களின் உதவியுடன் ஈடுபட்டிருக்கின்றது.
ஆயுதப்போரட்டம் ஆரம்பிக்கப்பட்டது தமிழ்பேசும் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசுகள் அங்கிகரிக்கபடாமை என்பதை உங்களைப் போன்ற ஜனநாயகவாதிகள் அறிந்திருக்கமாட்டீர்கள்.
எமது முதுபெரும் தலைவர்கள் ஆட்சியாளர்களுடன் சமரசம் பேசி தீர்வை நோக்கி செல்வதைபேல ஆட்சியாளார்கள் தேர்தலை நோக்கி செல்வார்கள். அதேபோல இலங்கை இந்தியா ஒப்பந்தம் அல்லது சமஸ்டி என்று அல்லது சர்வகட்சிமாநாடு ஊடாக ஒரு தீர்வு என்று எல்லாம் நாடகம் காட்டிய மகிந்த சகோதாரர்கள் மே 19ம் திகதி பிரச்சனையே இல்லை என்று புதிய நாடகம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றனர்.
இதில் நடிகர்களாக உதயன் பிரபா நிமோ இவர்கள் மூவர் ஆட்கள்கடத்தும் முகவர்கள். இவருடன் லண்டன் கீரன் பிரான்ஸ் ஸ்டாலின் கருணா பேன்றவர்களும் நடிக்கிறார்கள். இப்படியானவர்களுடன் இலங்கையில் இருந்து அரசியல் செய்யவேண்டுமா.
சந்திரன் ராஜா
ஈஎன்டிஎல்ப் அரசியல் செய்ய விரும்பவில்லை அது தமிழ் மக்களின் பிரச்சனை பற்றி சிந்திக்கின்றது.
கோமாளிகளுடன் சேர்ந்து கூத்தாடி மக்களை வதைக்கும் நேரம் இது அல்ல
இதை எல்லாம் புரிந்துகொண்ட இந்திய அரசு ஈஎன்டிஎல்ப் அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளது. இதை மிக தெளிவாக முன்னாள் இந்திரா காங்கிரஸ் நாடளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
உங்களுக்கு புரிகிறதோ இல்லையோ மகிந்தாவிற்கு புரிந்துள்ளது. மகிந்தா ஈஎன்டிஎல்ப் உடன் தொடர்பு கொள்ள முயற்சியாம்.
ராஜா
vanan
ஹலோ!
எல்லோரும் இன்னொன்றையும் மறந்து விட்டீர்களா? சுகு எனப்படும் ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் நாயகம் தி. சிறீதரன் கூட வீதி வீதியாக அலைந்து வாக்கு கேட்டும் எடுத்த வாக்குகள் ஒன்றும் சங்கரியை விட கூடாமல் பார்த்துக்கொண்டு தமது¨கூட்டு விசுவாசத்தை காப்பாற்றினார். அதாவது அவர் எடுத்த வாக்குகள் எண்ணிக்கை கவனிக்கப்படவில்லையா? அறிந்து கொள்ளுங்கள் இதோ எண்ணிக்கை 126 மட்டுமே. இதற்கு மேலும் விளக்கம் பல தேவையா?பல விடயங்களுக்கு!
raja
வேனனன்
நீங்கள் கூறுவது சரி சுகு தோழர்க்கு 126 வாக்குகள் மட்டுமே கிடைத்தது ஆனால் 126 வாக்கு பெற்றார் என்பதற்க்காக சமூகமோ அல்லது சமூதாயமோ அவரை தூக்கி எறியவில்லை
அவர் இத்தேர்தலை மக்களை சந்தித்து மக்களின் உணர்வுகளை அறிந்து கொள்ளுவதற்க்காக பயன்படுத்தி கொண்டார்
அவர் வெற்றி தோல்வியை பற்றி கவவை கொள்ளவில்லை மனிதர்கள் மனம் திறந்துபேசவேண்டும் என்ற மிக பெரிய சிந்தனையாளர் அவரை பேன்ற சமூக சிந்தனையாளர்களை கொச்சைபடுத்தி சமூகத்தை சீர்குலைக்காதீர்கள்
ராஜா
je
புலிக்கே சவால் விட்ட டக்கிளஸ்சுக்கு முடியவில்லையா? நான்தான் உங்களை திருப்பி கேட்க வேண்டும்”
டக்ளஸ் புலிக்கு சவால் விட்டிருக்கலாம். அப்போது அரசோடு ஒட்டியிருந்தார். ஆனாலும் பல தோழர்களை புலிக்கு பலி கொடுத்து தனது அரசியலைக் காப்பாற்றினார். பலியெடுத்த புலியை சிங்கம் விழுங்கிக் கொண்டு கஸ்டப்பட்டு மக்கள் மத்தியில் சேர்த்த செல்வாக்கு அனைத்தையும் தனக்கு வரும்படி கூட்டுத் தேர்தலுக்கு அழைத்து டக்ளசை மக்கள் மத்தியில் பலவீனமாக்கி விட்டது. குறித்துக் கொள்ளுங்கள் யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதி தேர்தல்களின் போது அரசுடன் கூட்டு வைத்தால் டக்ளஸ் கட்டுப்பணத்தையும் இழப்பது உறுதி. அனேகமாக கூட்டு வைக்கமாட்டார் எனவே எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டை விட்டு வந்த உங்களால் மக்களை புரிந்து கொள்ள முடியாது.
ஏன் இலங்கை அரசு இத்தனை அவலத்திற்கு பிறகும் உருப்படியான தீர்வை வைக்கவில்லை? கொஞ்சம் மக்களுக்காக விட்டுக் கொடுத்தால் என்ன? தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை எனறு சொல்லுகிறீர்களா?
இன்னொன்றையும் இங்கு குறிப்பிடலாம் மகிந்த அரசு தலை கால் புரியாமல் குதியாட்டம் போடுகிறது. சில வருடங்களில் இருந்த இடம் தெரியாமல் போவது உறுதி. இந்த அரசு என்ன புரடசியையா நடத்தி முடித்துள்ளது? அல்லது குறைந்த பட்சம் இநத அரசியல்வாதிகள் ஜென்டில்மன்களா?
KAMALAKANNAN.
sun is shining,weather is sweat,just relax.they can make a complain but decision is always theirs.if i were you am not going to bother about it but their concerns is red flag.
if srilanka want to become like singapore they should respect everyone culture and secure their life but in srilanka its different.
srilanka think tank always a threat.when we can see new vision and new way of thinking.its up to singala and tamil politicians.certainly ENDF NOT THE WRIGHT ONE.
Kusumbo
ஈஎன்டிஎல்எவ் உம் அரசியல் செய்ய ஆசைப்படுகிறது. இளைஞர் பேரவையில் ஆரம்பித்த பரந்தன் ராஜன் பின் முகாம் வைத்தே புளொட்டில் தம்மை நம்பி வந்த இளைஞர்களைக் கொன்று குவித்துவிட்டு றோவுடன் கைகுலுக்கிக் கொண்டு இன்று மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். வேடிக்கைதான். எதற்கோ ஆசைப்படுகிறார்கள். ஆனால் அனியாய ஆசையாக இருக்கக்கூடாது பாருங்கோ. கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இந்தியா யாருக்குத்தான் உறுதியழிக்கவில்லை. இந்தியா சொந்த நலனைத்தவிர யாருடைய நலனையும் பார்க்காது.
சாந்தன்
‘….புலிக்கே சவால் விட்ட டக்கிளஸ்சுக்கு முடியவில்லையா? நான்தான் உங்களை திருப்பி கேட்க வேண்டும்”…’
இந்தத் தேர்தல்களில் தமது கட்சி வெற்றியீட்டியதாக கருதப்பட முடியாது என சமூக சேவைகள் அமைச்சரும், ஈ.பி.பி.டியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
-EPDP இணையத்தளம்
சாந்தன்
‘…தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு விழுந்த வாக்குகள் அதாவது, இந்த தமிழ்ப் பகுதிகளில் நிச்சயமாக வவுனியாவில் மாத்திரமல்ல வடகிழக்கில் இருக்கின்ற அனைத்துத் தமிழ்ப் பகுதிகளிலும் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு அனுதாபமும் ஆதரவும் இருக்கிறதென்பதை என்னால் நிச்சயமாக உணரக்கூடியதாக இருந்தது. நான் வீடுவீடாகக் சென்று மக்களைச் சந்தித்துத் கதைத்தபோது அவர்களிடம் இன்றும் புலிகள்மீது அனுதாபமும் ஆதரவும் இருக்கிறதென்பது எனக்குத் தெரிந்தது….’
-தேர்தலில் த.தே.கூ ஏன் வெற்றி வெற்றது என தெரிவிக்கையில் புளொட் சித்தார்த்தன். (புளொட் இனையத்தளம்)
je
நான் வீடுவீடாகக் சென்று மக்களைச் சந்தித்துத் கதைத்தபோது அவர்களிடம் இன்றும் புலிகள்மீது அனுதாபமும் ஆதரவும் இருக்கிறதென்பது எனக்குத் தெரிந்தது….’”
பேரினவாதிகள் கொடுத்த வலி அப்படியானது. அவர்கள்தான் திருந்த வேண்டும்.
raja
குசும்புக்கு …………
ஈஎன்டிஎல்எப் அரசியல் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை தூரநேக்கு பார்வையுடன் ஏற்றுக் கொண்டு வடகிழக்கு மாகாணசபையில் ஈப்பிஆர்எல்எப்டன் இணைந்து ஆட்சி அமைத்தது.
ஆனால் அந்தநேரத்தில் கூட ராஜன் தமது கட்சிக்கு கிடைத்த அமைச்சர் பதவியைக் கூட கட்சியில் அங்கத்தவர் இல்லாத ஒருவருக்கு வழங்கி தமிழ் கட்சிகளுக்கிடையே ஒரு வித்தியாசமான அணுகுமுறையினை கடைப்பிடித்ததை உங்களைப் போன்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை தான்.
நீங்கள் குறிப்பிட்ட எந்த விடயத்திலும் ஒரு துளி கூட உண்மையில்லை. ஆனால் நீங்கள் ஈஎன்டிஎல்எப்ன் தலைமை மீது பழி சுமத்தவேண்டும் என்பதற்க்காக எழுதியுள்ளீர்கள்.
இப்படித்தான் 1987 ஆண்டுப் பகுதிகளில் புலிகள் கொள்ளையடித்து விட்டு ஈஎன்டிஎல்எப் கொள்ளையடித்ததாக பிரச்சாரம் செய்ததை நான் அறிவேன் இதுவும் அது போலவே உங்களின் கூற்றாக உள்ளது.
புளோட்டில் இருந்து வந்த இளைஞர்களை ஒரு போதும் ராஜன் கொலை செய்ததாக நான் அறியவில்லை. ஆனால் புளோட்டில் உட்கொலைகள் பல நடந்தன.
அதனைத் தொடர்ந்தே ராஜன் போன்றவர்கள் வெளியேறவேண்டிய தேவை ஏற்பட்டதாக நான் அறிந்து உள்ளேன். அண்மையில் தேசம் இணையத்தளம் லண்டனில் புளோட்டில் ஒரு காலத்தில் முக்கிய பங்காற்றிய காந்தனை அழைத்து ஒரு கலந்துரையாடல் நடத்தியது.
அவரைப் போன்றோரிடம் ராஜன் புளோட்; கொலையில் சம்பந்தபட்டாரா எனக் கேட்டால் தெரியும்.புலிகளின் தலைவர் பிரபாகரன் – ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் – ரொலே தலைவர் சிறிசபாரத்தினம்- ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபா புளோட் தலைவர் உமாமகேஸ்வரன் ஆகியோர்களுடன் இணைந்து ஒரேகாலத்தில் போரட்டத்தில் ஈடுபட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா?
பாராளுமன்றக் கதிரை அமைச்சர் பதவி அல்லது மாநகரசபை நகரசபை பதவிகளை எதிர்பார்த்து ராஜன் அரசியல் செய்வது கிடையாது. அது உங்களைப் போன்றவர்களுக்கு சரி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட எந்த அமைப்புப் செய்யாத ஒரு விடயத்தை ஈஎன்டிஎல்எப் செய்து உள்ளது. அதுதான் கடந்த இருபது வருடங்களாக பெங்களுரில் இந்திரா காந்தி சர்வதேச பாடசாலை ஒன்றை அமைத்து போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளின் குழந்தைகள் இந்திய முகாமில் உள்ள தமிழ் குழந்தைகள் என ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு கல்வியை ஊட்டியுள்ளார்கள்.
அதன் ஊடாக பலர் பல்கலை கழகத்தில் இடம் கிடைத்துள்ளதையும் நீங்கள் அறிவதற்கு வாய்ப்பு இல்லை தேவையானால் ஆதாரங்களும் உள்ளது.
எனவே எழுதும் போது எதை எழுதவேண்டும் என்று சிந்தித்து எழுதுவது எமது சமூகத்திற்கு ஆரோக்கியமாக இருக்கும்
ராஜா
மாயா
பரந்தன் ராஜன் , புளொட்டை விட்டு தப்பி ஓடிய ஒரு இளைஞரை தேடிப் போய் , அந்த இளைஞருக்கு அடைக்கலம் கொடுத்த பண்ணையாரை சுட்டுக் கொன்றார் என்பது ராஜாவுக்கு தெரியுமா?
நல்ல காலம் , உமா MGR யை பிடித்து பிரச்சனை பெரிதாகாமல் அடக்கிவிட்டார். இல்லையென்றால் ………….?
vanthiyadevan
wheather endlf or douglas all are in the same boat,
as chandran raja says there is no ltte still theese epdp or endlf couldnt stand alone
still behind the goverments
everyone must understand one
tamils in srilanka still have the same problems
none of any of these groups or “jananayaga ” leaders going to solve
only the srilankan tamil people can solve & they will do it.
raja
மாயா
நீங்கள் கூறிய சம்பவம் ஒன்று நடைப்பெற்று உள்ளது அதன் உண்மை சம்பவத்தை இச் சம்பவம் நடைப்பெற்ற போது அருகில் இருந்த கனடாவில்யிருக்கும் நண்பர் ஒருவர் கூறியதாவது:
விச்சுஸ்வரன் என்பவர் பிரபாகரன் – குட்டிமணி தொடர்பாக பல தகவல்களை இலங்கை அரசுக்கு வழங்கிவிட்ட புளொட அமைப்பில் இணைந்து கொண்டாதாகவும் இது தொடர்பாக விசாரணைக்காக முகாமில் தடுத்துவைக்கபட்டிருந்த வேளை முகாம்மை விட்டு தப்பியோடிய விச்சுஸ்வரனை பண்ணையார் பாதுகாத்து வைத்திருந்ததை அறிந்த கிராமமக்கள் ராஜன்க்கு தகவல் தெரிவித்ததை தொடரந்து ராஜன் கேட்டு சென்ற போது விச்சுஸ்வரனை ஒப்படைத்த பண்ணையார் ராஜன் உடன் சென்றவர்களை பண்ணையார் சுட முயற்சித்தவேளையிலே அச் சம்பவம் நடைபெற்றதாகவும் கேள்விப்பட்டுள்ளேன்
ராஜா
பல்லி
மாயா தாங்கள் கழகத்தில் ஆரம்பகால உறுப்பினர்என சொல்வதால் பரந்தன் ராசன் அரசியல் எப்படி என்பது தெரிந்திருக்குமே, ராஜ் சொல்வதை பார்த்தால் ராசனை உத்தமனாக்குவது போல் உள்ளது; இருப்பினும் பழய புயல் புதிய கோணத்தில் ஈழத்தை நோக்கி பயணம்; இதில் டக்கிளஸுக்கு சிறிது தடங்கள் ஏற்படலாம்; ராஜனும் டக்கிளசும் நண்பனாய் இருந்து மட்டகளப்பு சிறையில் எதிரியானவர்கள்; ஆக பரந்தனின் வெள்ளோட்டம் தோழருக்கு ஒரு பயத்தை உருவாக்கலாம்; காரணம் பரந்தன் இந்தியாவின் செல்லபிள்ளை என சில காலத்துக்கு முன்பு எங்கோ படித்த நினைவு; இருப்பினும் இவர்களும் மக்கள் பற்றி கவலைபட இல்லை; ஆடி தள்ளுபடியில் அரசியல் செய்ய புறப்பட்ட புது மணமகன் தான்,
Raja
பல்லி
நான் யாரையும் உத்தமானக்கும் தேவையில்லை ஏன்னில் உத்தமர்கள் உத்தமர்களாகவே இருப்பார்கள்
ராஜான் இந்தியாவின் செல்லப்பிள்ளை என உங்களை போன்றவர்கள் கூறி கூறி காலத்தையையும் நேரத்தையும் வீணடிக்காமால்
ராஜான் இந்தியாவில் கடந்த இருபது வருடகாலமாக எவ்வளவே சிரமத்திற்க்கு மத்தியில் ஒரு பாடசாலையை நடாத்தி வருகினறார் அதன் ஊடாக எமது சமூகம் பெற்றுள்ள நன்மையை வெகு விரைவில் அறிந்துகொள்வீர்கள்
இலங்கை அரசின் காலில் விழுந்து அரசியல் செய்யும் அளவிற்கு ஈஎன்டிப் இல்லை என்றே நினைக்கின்றேன்
ராஜா
chandran.raja
அன்பின் ராஜா! உங்கள் கண்னியமான பின்னோட்டங்களுக்கு நன்றிகள். பெங்களுரில் கல்லூரி அமைத்து எமது ஈழமக்கள் பயன் அடைந்து வருவது ஒன்றும் அறியாதவர்கள் அல்லநாங்கள். அதை நீண்டகாலமாகவே கேள்விப்பட்டு வந்திருக்கிறோம். கல்லூரியையும் கல்லூரி நிர்வாகத்தை பற்றியும் நல்ல மாதிரியான எண்ணங்களே எம்மில் மேல்லோங்கியுள்ளது.
இதற்கான மூலதனம் எங்கிருந்து வந்தது என கேள்வி கேட்க மாட்டோம். காரணம் விடுதலையென்ற பெயரில் தாய்மண்னில் புலிகள் கல்வியை சீரழித்துக்கொண்டிருக்க வேறு ஒருமண்னில் கால்லூன்றி அகதிகளுக்கும் கஷ்ரபட்ட மக்களுக்கும் கல்வி அளிப்பது ஒரு சாதாரணமாக கருத முடியாது. இது யாரிடம்தான் அடிமைப்பட்டு நடத்தி கொண்டிருந்தால் என்ன? பாராட்டவேண்டியது தானே.
இதற்காண நன்றிஉணர்வுகள் வீண்போக கூடியவையல்ல. நிற்க…
குற்றம்செய்யாத கொலை செய்யாத இயக்கம்மென்று எதுவுமே இலங்கையில் இல்லை. அப்படியான சூழ்நிலைகளை புலிகள் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இந்த வகையில் தான் ஈஎன்டிஎல்ப் யையும் வைத்து கணிக்கவேண்டியுள்ளது. கொலை செய்யாதவரை தேடிப்புறப்பட்டால் ஒருவரையுமே கண்டுகொள்ள முடியாது. ஆனந்தசங்கரி கொலைசெய்யவில்லை. கொலைசெய்ய அரசியல் பாதையை வகுத்து கொடுத்திருக்கிறார் என்பதைத்தான் நடந்துவந்த அரசியல் தடையங்கள் கூறுகின்றன.
அடுத்து..ஈஎன்டிஎல்ப் அரசியல் செய்ய விரும்பவில்லை அது தமிழ்மக்களின் பிரச்சனை பற்றி சிந்திக்கிறது என கூறுகிறீர்கள். தவறான அரசியல் தானே இவ்வளவு காலஅவலங்களுக்கும் காரணமாக இருந்தது. அரசியல் இல்லாமல் எப்படி உங்களால் சிந்திக்க முடிகிறது?. அரசியல் அறிவில்லாதவர்களாக தொடர்ந்தும் தமிழ்மக்கள் இருக்கவேண்டுமென கருதுகிறீர்களா? தமிழ்மக்கள் மட்டுமல்ல முழுஇலங்கையுமே இந்தியாவுக்கு பகையுணர்வை ஏற்படுத்தக்கூடாது என்ற அரசியலை என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் நாம்நாமான அரசியல் ஆளுமை பெற்றவர்களாக மாறவேண்டும். தமிழ்மக்களின் எதிர்காலத்திற்கும் அரசியலுக்கும் இந்தியாவில் தங்கிநிற்பது படுமுட்டாள்தனமானது அல்லாமல் பிற்போக்கானதும் ஆகும். இன்று தமிழ்மக்கள் மத்தியில் உள்ளது புலிகள் அல்ல. உங்கள் வசதிக்கேற்ப தெரிந்த தலைமைகளுடன் கலந்துரையாடல்களை நடத்துங்கள். ஒருதலைமையை உருவாக்க பாடுபடுங்கள். ஏன்? தகுதியிருந்தால் ஞானசேகரம்கூட தலைவராக வருவதில் நல்லெண்ணம் கொண்டவர்களுக்கு அபிப்பிராய பேதம் இருக்க முடியாது. சிங்களஅரசை உங்களால் முடிந்தவரைக்கும் விமர்சியுங்கள். தவறான முடிவுகளுக்கு வந்து சிங்களமக்களை தமிழ்மக்ககளுக்கு கெதிராக நிறுத்தாதீர்கள். அவர்களும் எம்மைப்போல் இந்தியாவின் குழந்தைகளே.
பல்லி
ராஜா நாம் எமது நேரத்தையும் எழுத்தையும் வீண்செய்கிறோம் என்பதில் எனக்கும் உடன்பாடுதான், இந்த போலி அரசியல்வாதிகள் பற்றி 30 ஆண்டுக்கு மேலாக தளம் மாறி தலைப்பு மாறி எழுதியும் எந்த பலனும் இல்லை என்பதால், அடுத்து பல்லி பரந்தன் ராசனை தவறாக சொல்லவில்லை (இப்போது)அவரை தாங்கள் நியாய படுத்துவதால்(யாரோ கனடா நண்பன் சொல்லி) அவருடன் செயல்பட்ட மாயாவிடம் சில தகவல்களை கேட்டேன்;
இதில் சிலர் இந்தியாவை முன்வைத்து ராசன் அரசியல் செய்வது தவறென சொல்லுவது சரியா என்பதை அவர்களது எதிர்கால அரசியல் முன்னேற்றம்தான் பதில்சொல்ல வேண்டும், ஆனால் புலியை அழிக்க அரசுக்கே இந்தியாவின் உதவி(பல சர்வதேசம் உதவியும்) தேவைபடும் போது ராசன் இந்தியாவை எதிர்பார்ப்பது தவறா?? இலங்கை அரசின் கொதடிமைகளாக இருப்பதைவிட இந்திய அரசின் உதவியுடன் அரசியல் செய்வது தவறா? ஆனாலும் ஈஎன்டிஎன்எவ் அமைப்பு தமது அரசியலை எங்கே இருந்து தொடங்க போகிறது, இந்தியாவை எம்மின மக்களின் அவல நிலையை கவனிக்கவோ அல்லது இலங்கை அரசின் தான் தோன்றிதனத்துக்கு ஒரு தடைகல்லாக இந்தியா செயல்படுமா? அல்லது தமக்கும் ஈழ பிரச்சனையில் ஒரு பங்கு கேக்க போகிறதா? சரி அப்படி கேப்பதானால் இவர்கள் யாருடன் இனைய முடியும்; பலமுனை போட்டியில் இவர்களால் தனித்து நிக்க முடியுமா? அல்லது உருத்திர குமார் போல் இந்தியாவில்(ஒரிஸாவில்) தமிழ் ஈழமா?
நாம் பல அடிகளை வாங்கி அனுபவப்பட்டு புண்பட்டு போனவன் வந்தவன் எல்லாம் குட்டி அடிமையாய் அனாதையாய் அவதிபட்டு வந்தவர்கள், அதனால் யார் எம்மக்கள் மீது அரசியலோ அல்லது கடையோ போட நினைத்தால் விமர்சிப்போம் அவர்களது கொடும் செயல்களை மட்டுமல்ல நல்லதையும் பகை பார்க்காமல் விமர்சிப்போம்; இதில் ஒரு இலங்கையரை பகிரஙமாக இந்திய பிரதமர் சந்திப்பதை நாம் குறைத்து எடை போட கூடாது; ஆனால் அதுவே தம்பி பிரபாகரன் சுதுமலையில் இந்திய விமானத்தில் ஏறியதுபோல் முட்டாள் தனமாக இருக்கவும் கூடாது;
Calistus Jayatilleke
Sri Lanka was and still is capable of becoming a prosperous country like Singapore or Switzerland in the Indian ocean without any help from others. China and India competing with each other to help us to build bridges and oil facilities is not at all giving us any good signs. This is going to be more serious than the civil war. I don’t think we are actually solving the problems but preparing a platform for a future war between India and China in our land. We have many strategic thinkers, think tanks and great intellactuls in our country but we don’t respect them instead we let the country to run by people who only have short term goals. Tamils, Sinhala and Muslims in this country should unite together to build this nation completely independent of some of these superpowers and emerging superpowers. We can be friendly with everybody without selling our land to third parties piece by piece. If India can have different religons and cultures living together as one country, we can also implement similar solutions without dividing the country. We should be open to suggestions. Let the Tamils live in the Sinhala areas and Sinhala live in the Tamil araes but we should have some kind of state system just like they have in India, United Kingdom and Canada. Let Tamils and Sinhala intermarry. Let us both learn each others languages. Let us enjoy each others cultures. Let the Tamil and Sinhala Diaspora become Sri Lankan Diaspora. Let us give imporatnce to the English language and get our children to become fluent in the language of commerce. Powerful Sri Lanka Diaspora is is more capable of building our country than these selfish giants who are using our place for their own agendas
raja
சந்திரன் ராஜாவுக்கு
பாடசாலை தொடர்பாகவும் அதன் பணிகள் தொடர்பாகவும் தங்குளடைய எண்ணத்துக்கு நன்றிகள்.
ஈ.என்.டி.எல். எவ் யாருடனும் அடிமைப்பட்டோ அல்லது யாருக்கும் சேவகம் செய்யவோ பாடசாலை நடத்தவில்லை. அதை அங்கு படிக்கும் அல்லது படித்து வெளியேறியிருக்கும் மாணவர்களைக் கேட்டால் தெரியும்.
கடந்த கால தவறுகளை வைத்து ஈ.என்.டி.எல்.எவ் ஜ பார்ப்பதாக கூறியுள்ளீர்கள். கடந்த காலத் தவறுகளுக்கான அடிப்படைக் காரணங்களை பார்ப்போமானால் உங்கள் விரல்கள் தமிழ் தலைமைகளையே நோக்கிச் செல்லும். ஆனால் எம்மைப் பொறுத்தமட்டில் தமிழ் தலைமைகளையும் மீறி ஆட்சிக்கு வந்த அதிகார வர்க்கங்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை அணுகி இருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
தங்களின் ஆட்சிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழ் தலைமைகளை பயன்படுத்திய ஆட்சியாளர்கள் தங்களின் அதிகார வர்க்கத்தை பாதுகாத்துக் கொண்டனர். ஆனால் இப்பொழுது அதையும் தாண்டி மகிந்த குடும்பத்தினர் ஏட்டிக்கு போட்டியாக தமிழ் மக்களுக்கு என தமக்கேற்ற தலைவர்களை உருவாக்கி அவர்களுக்கு அமைச்சர் பதவி அல்லது கட்சியின் உயர் பதவி வழங்குவதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்று எதிர்பாக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் அனுபவங்களாக கொண்டுதான் ஈ.என்.டி.எல். எவ் இந்தியாவின் ஆதரவையும் அணுசரனையையும் பெற்று தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என செயல்படுகிறது.
சொல்லெண்ணா வேதனைகளையும் துன்பத்தையும் துயரத்தையும் நெஞ்சிலே சுமந்து எல்லவற்றையும் இழந்து உயிருக்காக வாழ்ந்து கொண்டு இருக்கும் எம் உடன்பிறப்புக்கள் மத்தியில் பலவந்தமாக தேர்தலைத் திணித்து ஆட்சியாளர்கள் சர்வதேச சமூகத்துக்கு ஜனநாயகத்தைக் காட்டி பாடம் நடத்துகிறார்கள். இந்த கோமாழிகளின் கூத்தாடி அரசியலைத் தான் ஈ.என்.டி.எல். எவ் ஏற்றுக் கொள்ளவில்லை.
மிகவும் நிதானமாக தூர நோக்குடன் எதிர்கால சந்ததியின் வாழ்க்கையை கவனத்தில் கொண்டு ஈ.என்.டி.எல். எவ் செயற்படுகிறது.
நீங்கள் நினைப்பது போன்று பாராளுமன்ற தேர்தல் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினையை ஆளும் வர்க்கம் தீர்க்கும் என எதிர்பார்ப்பீர்களானால் நிச்சயமாக நாம் மீண்டும் ஒரு வரலாற்றுத்தவறை நோக்கி செல்கின்றோம் என் எண்ணத் தோன்றுகிறது.
தேர்தல்களை எமது எதிர்ப்பை காட்டுவதற்கு பயன்படுத்தலாமே ஒழிய பிரச்சினையை தீர்ப்பதற்கு அல்ல.ஏன் எனில் அந்தப் பெரும் மனதுடன் செயற்படும் அரசியல் தலைவர்கள் இலங்கையில் இல்லை என்பதே எனது கருத்து. ஈ.என்.டி.எல். எவ் ன் அரசியல் என்பது மற்றவர்களுக்கு சோரம் போய் தமது அரசியல் உரிமையை விட்டுக்கொடுப்பது அல்ல. மாறாக வீரியத்துடன் அதை வென்றெடுப்பதே நோக்கமாகக் கொண்டுள்ளது.
இருக்கின்ற தலைமையில் ஞானசேகரனும் ஒரு நாள் தலைமை தாங்கலாம் என கூறியுள்ளீர்கள். ஞானசேகரன் எப்போதும் தலைமைக்கு ஆசைப்பட்டது கிடையாது. இந்திய பிரதமரை சந்திப்பதுக்கு முன்பாக அனைத்து தமிழ் கட்சிகளைளும் ஒன்றினைத்து இந்தியப் பிரதமரை சந்திக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டியதாகவும் விடுதலைப்புலிகள் தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ்ர்விடுதலைக் கூட்டணி புளோட் ஈபிஆர்எல்எவ் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் அது சாதகமாக அமையவில்லை என்பதால் அதன் பின்பே ஈ.என்.டி.எல். எவ் தனியாக இந்தியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அறிகிறேன்.
இது தொடர்பாக இந்தியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அன்பரசு வானோலி ஒன்றில் கூறியதாக அறிகிறேன்.
இலங்கையர் எமது சகோதரர்கள். ஆனால் அங்கே பேரினவாதிகளும் இனவாதிகளும் இருக்கும் வரை இது சாத்தியமா என்பதை கூறமுடியுமா?
பல்லிக்கு.
சுதுமலைக்கு இந்திய இராணுவம் உலங்குவானூர்தியை அனுப்பி பிரபாகரனை கூட்டிவந்தது போன்று ராஜனுக்கு இந்தியா விமானத்தை அனுப்பியிருக்காது.
தெளிவான கொள்கையும் மக்கள் பற்றிய சிந்தனையும் கொண்ட ராஜன் சர்ந்தப்பம் கிடைக்கும் போதெல்லாம் இலங்கை அரசின் அராஜக நடவடிக்கைகளை இந்திய அரசுக்கு எடுத்து விளக்கியுள்ளதாகவே தோன்றுகின்றது.
1986ம் ஆண்டு இந்திய விமானம் உணவுப் பொட்டலங்களை போட்டு எம் மக்களைக் காப்பாற்றியவேளை இந்தியாவின் நட்பை ஒழுங்காக பயன்படுத்தாத விளைவுதான் இன்றைய தமிழ் மக்களின் நிலை.
இந்தியா தமிழ் மக்களை அரவணைத்த வேளை பெரும்பாலான தமிழ் அமைப்புகள் தங்களுடைய சுயநலத்துக்காக இலங்கை அரசுடன் இணைந்து அரசியல் செய்து கொண்டிருந்த வேளை ஈ.என்.டி.எல். எவ் இலங்கை அதிகாரவர்க்கத்தை நிராகரித்து இந்திய அரசுடன் நட்பு ரீதியாக செயற்பட்டதன் ஊடாகவே இன்று இந்திய அரசு ஈ.என்.டி.எல். எவ் ஜ அழைத்து பேசியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ராஜா
Appu Hammy
“Reply to SL” – “so called Sri Lankans” ? what do you think we are? South African? India is a first world country only in their own head. It’s quite convenient to ignore all the poverty and display just the rich maharajah lifestyles. Almost all Sri Lankans are sick and tired of India’s condescending, arrogant, and patronizing attitude towards us. When the going got tough, China supported our cause. And if this deal has mutual benefits for us both, who…. is India to suggest alternatives???…………
மாயா
// விச்சுஸ்வரன் என்பவர் பிரபாகரன் – குட்டிமணி தொடர்பாக பல தகவல்களை இலங்கை அரசுக்கு வழங்கிவிட்ட புளொட அமைப்பில் இணைந்து கொண்டாதாகவும் இது தொடர்பாக விசாரணைக்காக முகாமில் தடுத்துவைக்கபட்டிருந்த வேளை முகாம்மை விட்டு தப்பியோடிய விச்சுஸ்வரனை பண்ணையார் பாதுகாத்து வைத்திருந்ததை அறிந்த கிராமமக்கள் ராஜன்க்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து ராஜன் கேட்டு சென்ற போது விச்சுஸ்வரனை ஒப்படைத்த பண்ணையார் ராஜன் உடன் சென்றவர்களை பண்ணையார் சுட முயற்சித்தவேளையிலே அச் சம்பவம் நடைபெற்றதாகவும் கேள்விப்பட்டுள்ளேன்
– ராஜா //
இப்படியான அவதூறுகள் பொய்களை நியாயப்படுத்த புளொட் காலத்தில் நடைபெற ஒத்துழைத்தவர்களில் பரந்தன் ராஜனும் ஒருவர் என்பதை புளொட்டில் இருந்த ஆரம்ப காலத்து நண்பர்கள் அல்லது தோழர்கள் மறுக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.
புளொட்டை நம்பி வந்த தோழர்கள்தான் தஞ்சாவூர் உரத்தநாட்டு முகாமின் B முகாமில் கொல்லப்பட்டது. இவர்கள் செய்த தவறு என்ன? சந்தியாருக்கு கீழே இருந்தவர்கள் சந்தியார் போதித்தவற்றை ஏற்றுக் கொண்டு செயல் பட்டதுதான். உமாவுக்கும் சந்ததியாருக்கும் இடையே முரண்பாடு வந்த போது சந்தியாருக்கு சார்பானவர்கள் எனக் கருதப்படும் 200க்கும் அதிகமான தோழர்கள் கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். இதை உமா சென்னையில் நடந்த அனைத்துலக மாணவர் மாநாட்டில் ஒப்புக் கொண்டார். இங்கே அனைத்து இயக்கப் பிரதிநிதிகளும் இருந்தார்கள்.
இதே போல கனடா என அழைக்கப்பட்ட ஒரு தோழர் ஒரு ஜட்டிக்காக கொல்லப்பட்டார். கனடாவில் இருந்து போராட்டத்துக்காக வந்தவர் அவர். அவரது சகோதரர் அனுப்பிய ஜட்டி ( கோவணம்) யை வைத்து அவரை புலி ஊடுருவல் எனக் கொன்றார்கள். அந்த கோவணத்தை அனுப்பிய கனடாவின் சகோதரர் புலிகளின் ஆதரவாளராக இருந்த ஒரு சிறிய சம்பவமே காரணம்.
அடுத்து பண்ணையார் விடயத்தில் ராஜா எழுதிய விடயமே உங்களுக்கு விடயம் தெரியவில்லை என்பதை உணர்த்துகிறது.
“தப்பியோடிய விச்சுஸ்வரனை பண்ணையார் பாதுகாத்து வைத்திருந்ததை அறிந்த கிராமமக்கள் ராஜன்க்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து ராஜன் கேட்டு சென்ற போது விச்சுஸ்வரனை ஒப்படைத்த பண்ணையார் ராஜன் உடன் சென்றவர்களை பண்ணையார் சுட முயற்சித்தவேளையிலே அச் சம்பவம் நடைபெற்றது”
விச்சுவை பண்ணையார் ஒப்படைத்த பின்னர் பண்ணையார் ஏன் ராஜனுடன் சென்றவர்களை சுட வேண்டும்? தன்னை நம்பி அடைக்கலமான விச்சுவை பண்ணையார் ஒப்படைக்க மறுத்தார் என்பதே உண்மை. இந்திய கிராமங்களில் பண்ணையார்கள் நாட்டாமை செய்பவர்கள். அவர்களை அங்குள்ள மக்கள் தெய்வமாக அல்லது ஒரு அரசனாகவே மதிப்பவர்கள். போலீஸ் கூட அவர்களது அனுமதியின்றி அவர்களது கிராமத்துக்குள் வர முடியாது.
இந்நிலையில் பேச்சு வார்த்தைக்கும் மிரட்டலுக்கும் இடையே பண்ணையார் ராஜனிடம் விச்சுவை ஒப்படைப்பதை மறுத்தார். சரி என்று ஜீப்பை ஸ்டார்ட் செய்து நகர்த்தும் போது திண்ணையில் நின்ற பண்ணையாரை சுட்டுவிட்டு ஓடி வந்தவர்தான் பரந்தன் ராஜன். இதை நியாயப்படுத்த தயவு செய்து முனையாதீர்கள். நான் தவறுகளை ஒரு போதும் நியாயப்படுத்த மாட்டேன். அது எவராக இருந்தாலும்.
ராஜன் புளொட்டில் இருந்து பிரிந்த பின்னர் சென்னை கே.கே.நகர் முதலாவது தெருவில் இடம்பெற்ற சென்றல் கொமிட்டி மீட்டிங் மற்றும் பின்தள மாநாடுதான் புளொட்டின் பிரச்சனைகளை வெளிக் கொண்டு வந்தது. பின்தள மாநாட்டோடு முகாம்களில் இருந்த தோழர்கள் கொடிகளையும் முகாம்களையும் உடைத்தெறிந்து விட்டு வெளியேறினர். தலைவர்களுக்கு எதிராக கோஸம் போட்டனர்.
புளொட் தோழர்களை கட்டுப்படுத்த முடியாமல் ” மில்டரி ஓடரை பயன்படுத்த வேண்டி வரும்” என உமா சொன்ன போது ” மில்டரி என்றால் நாங்கள்தான். எங்களுக்கு மேல என்ன மில்டரி. அதை எங்களாலும் செய்ய ஏலும்” என்று தோழர்கள் உமாவை எதிர்த்து கத்திய போது உமா மட்டுமல்ல அனைத்து முக்கியமானவர்களும் மிரண்டே போனார்கள்.
அதுதான் புளொட்டின் சிதறுலுக்கான அல்லது உடைவுக்கான நாள். ஒரு சிலரைத் தவிர உண்மையான : தேசத்தின் மேல் நேசம் கொண்டு போராட்டத்துக்கு வந்தவர்கள் வெளியேறினார்கள். உமாவோடும் ராஜனோடும் எத்தனை பேர் போனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். 95 சதவீதமானவர்கள் இவர்களை விட்டு வெளியேறினார்கள். புலிகள் அழிப்பதற்கு முன்னமே புளொட் நீர்த்துவிட்டது.
இதற்கு முக்கிய காரணம் அனைத்து தோழர்களிடமும் இருந்த அரசியல் சித்தாந்த அறிவு. சில சுயநலம் கொண்டோர் புலிளோடு இணைந்தார்கள். இவர்கள் அன்றும் சுயநலவாதிகள்தான். உண்மையான புளொட்காரர்கள் இன்னமும் வெளியே இருக்கிறார்கள். அவர்கள் மக்களை நேசிப்பவர்கள். செய்வதறியாது புலம்பலோடு வாழ்கிறார்கள். T3S என்ற பெயரில் புளொட் பெற்றுக் கொடுத்த அரசியல் ஞானம் பல தோழர்களை எங்கோ வாழ வைத்திருக்கிறது. இல்லாவிட்டால் அனைவரும் முள்ளிவாய்காலில் இறந்தது போல இறந்தே இருப்பார்கள்.
ENDLF இலங்கைக்கு மீண்டும் அமைதிப் படையை அனுப்ப வேண்டும் என்று கேட்டதாக பீபீசியில் சொன்னார்கள். திரும்பவுமா? இந்தியா இலங்கை பிரச்சனைக்கு உதவட்டும். பிரச்சனையே இல்லை. அமைதிப்படை எதற்கு? அங்குதான் யுத்தம் முடிந்தாயிற்றே?
ENDLF க்கு ஆட்கள் இல்லை. அவர்களது அமைதிக்கு ஒரு படை தேவை. அதற்காகவா என்று கேட்க யாருக்காவது தோன்றியதா? சற்று நெருடல்தான்? ENDLF யை பலப்படுத்த சிறீலங்கா அரசோ அல்லது வேறு எவருமோ உதவ மாட்டார்கள். எனவே இந்திய படை தேவை? நல்ல கூத்து. ஏற்கனவே எழுந்து நிக்கவும் முடியாமல் நிலத்தோடு விழுந்தவனை மிதித்து பெண்களை தம் இச்சைகளுக்கு பயன்படுத்த இன்னொடு படை வேண்டவே வேண்டாம்.
இன்றைய நிலையில் யதார்த்தமாக அரசியல் செய்வது பிள்ளையான் மட்டுமே.
அதை பலராலும் உணர முடியும். நானும் பிள்ளையானை கண்டித்தேன். ஆனால் தனது நிலையை தக்க வைக்க பலதை செய்வதை யாராலும் மறுக்க முடியாது. அரசுக்கு எதிராக அரசோடு இணைவுக்குள் போராடும் ஒருவராக பிள்ளையானை பார்க்க முடிகிறது. வீரமும் விவேகமும் இருக்க வேண்டும். அதற்கு கல்வி அறிவு மட்டும் இருந்து போதாது.
ENDLF ன் சில கோரிக்கைகளை வரவேற்கிறேன். அதை அரசியல் நடத்த பயன்படுத்துவதை விட அந்த மக்கள் வாழ ஏதாவது செய்யப் பயன்படுத்துங்கள். கோடி புண்ணியம் கிடைக்கும்.
menike PK
அதுதான் புளொட்டின் சிதறுலுக்கான அல்லது உடைவுக்கான நாள். ஒரு சிலரைத் தவிர உண்மையான : தேசத்தின் மேல் நேசம் கொண்டு போராட்டத்துக்கு வந்தவர்கள் வெளியேறினார்கள். உமாவோடும் ராஜனோடும் எத்தனை பேர் போனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். 95 சதவீதமானவர்கள் இவர்களை விட்டு வெளியேறினார்கள். புலிகள் அழிப்பதற்கு முன்னமே புளொட் நீர்த்துவிட்டது.
இதற்கு முக்கிய காரணம் அனைத்து தோழர்களிடமும் இருந்த அரசியல் சித்தாந்த அறிவு. சில சுயநலம் கொண்டோர் புலிளோடு இணைந்தார்கள். இவர்கள் அன்றும் சுயநலவாதிகள்தான். உண்மையான புளொட்காரர்கள் இன்னமும் வெளியே இருக்கிறார்கள். அவர்கள் மக்களை நேசிப்பவர்கள். செய்வதறியாது புலம்பலோடு வாழ்கிறார்கள். T3S என்ற பெயரில் புளொட் பெற்றுக் கொடுத்த அரசியல் ஞானம் பல தோழர்களை எங்கோ வாழ வைத்திருக்கிறது. இல்லாவிட்டால் அனைவரும் முள்ளிவாய்காலில் இறந்தது போல இறந்தே இருப்பார்கள்.
“THIS TRUE”
Appu Hammy
ஈ.என்.டி.எல். எவ் இந்தியாவின் ஆதரவையும் அணுசரனையையும் பெற்று தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என செயல்படுகிறது.
EVERYBODY KNOW !! WHO ARE YOU?? WHAT A JOKE . WHY DO NOT TRY INDIAN POLITICs AND RAW MONEY FOR OWN YOU LIFE. DO NOT KILL THAMILS LIFE AGAIN
raja
மாயா
நீங்கள் கூறுவது சரி எல்லா விடயங்களும் எனக்குத் தெரியும் என்று கூறவில்லை. நான் அறிந்ததை இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன்.
உமாமகேஸ்வரனுக்கும் சந்ததியாருக்கும் முரண்பாடு ஏற்பட்டபோது ராஜன் ஒருபக்கமும் சாராமல் செயற்பட்டதாக அறிந்துள்ளேன். இந்தக் காலகட்டத்தில் கொல்லபட்டவர்களின் எண்ணிக்கை 59 என அறிந்தேன். நீங்கள் கூறியது போன்று 200 என்பதில் எனக்கு உடன்ப்பாடு இல்லை. எது எவ்வாறு இருந்தபோதிலும் கொல்லபட்டவர்களின் எண்ணிக்கையை விட கொல்லபட்டவர்களின் உயிரே மேலானது.
அதேவேளை கனடா மற்றும் காக்க என்று அழைக்கப்பட்ட ரஞ்சன் ஆகியோர் ராஜனை ஆதரித்தமைக்காக கொல்லப்பட்டவர்கள் என்பதும் இவர்கள் கொல்லப்படும் போது ராஜன் லெபனான் பயிற்சியில் இருந்தார் என்பதையும் நீங்கள் நிச்சயமாக அறிந்திருப்பீர்கள்.
ENDLF இந்திய இராணுவத்தை அனுப்ப செல்லிக் கேட்பாதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை காலதாமதமின்றி அமுல்படுத்துவதற்காக என கூறியிருக்கிறார்கள்.
ஏன்னில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலிகளும் ஜக்கிய தேசிய கட்சியும் எவ்வாறு சீர் குழைத்ததோ அதேபோன்று இலங்கை இந்திய ஒப்பந்தமோ அல்லது ஏற்படுகின்ற தீர்வையோ சீர்குழைக்க மகிந்த அரசினால் உருவாக்கப்பட்டதுதான் உதயன் – நிமோ – அழகன் – லண்டன் கீரன் -கருணா போன்ற குழு. இவர்களை வைத்து நிச்சயமாக அரசு குழப்பும். ஏன்னில் இப்போது இந்தக் கூட்டம் நிமோ –லண்டன் கீரன் போன்றேர் தமிழ் மக்களுக்கு எல்லா பிரச்சனையும் முடிந்நு விட்டது, எனவே சிறிலங்கா சுதந்திர கட்சியில் சேர்ந்துவிடுவோம் என கூறதொடங்கி விட்டார்களாம். ஏன்னில் ஜனநாயகத்தில் வயிறு நிறைகின்றது. லண்டனிலுள்ள வங்கியும் நிறைகிறது.
அமைச்சர் டக்ளஸ் வைத்திருக்கும் வாகனத்தை விட நிமோ –லண்டன் கீரன் (பிரித்தானியாவில் ஒலிபரப்பான அல்லது விற்பனையான வொக்ரோன் தொலைக்காட்சி மற்றும் தொலை பேசி அட்டையின் நிறுவனத்திடமிருந்து 10 000 பவுன்ஸ்களை பெற்றுக் கொண்டு நிருபம் பத்திரிக்கையை இரண்டு மாதத்தில் மூடு விழா நடத்தியவரும் இதே கீரன்தானாம்.)இலங்கையில் வைத்திருக்கும் வாகனம் பெறுமதியானதாம். எல்லாம் வவுனியா முகாமிலிருந்து வெளியேறும் மக்களின் அன்பளிப்பாம்.
எனவே இந்தியா படைசெய்ததை நான் என்றும் மறக்கோவே அல்லது நியாயபடுத்தவில்லை. அதேவேளைENDLF க்கு அங்கத்தவரே ஆதரவாளர்களே இல்லை என்று கூறியுள்ளீர்கள் சிலவேளை இருக்கலாம் ஆனால் அண்மையில் நடைபெற்ற தேர்தலின் போது எந்த கட்சிக்கு எத்தனை அங்கத்தவர்கள் எடைபோட முடியுமா எல்லாம் அங்கு உள்ள நிலமையை பொறுத்தே என்பதை நாம் அறிவோம்
புலிகள் தாங்களுக்கு எதிரானவர்களை எப்படியெல்லாம் அழித்தார்களே அதைவிட ஒரு மடங்கு மேலே சென்று மகிந்த ராஜங்கம் செய்வதையுதம் அதற்கு ஜனநாயக வேடம்போட்டவர்கள் சங்கிதம் பாடுவதையும் காணக்கூடியாதாக உள்ளது
ராஜா
மாயா
//உமாமகேஸ்வரனுக்கும் சந்ததியாருக்கும் முரண்பாடு ஏற்பட்டபோது ராஜன் ஒருபக்கமும் சாராமல் செயற்பட்டதாக அறிந்துள்ளேன். இந்தக் காலகட்டத்தில் கொல்லபட்டவர்களின் எண்ணிக்கை 59 என அறிந்தேன்.//
இந்த பிரச்சனையில் இறந்தவர்கள் தொகை 200க்கு மேல் என பார்வையாளர் பகுதியிலிருந்து சென்னை யுனிவர்சிட்டி சேவிஸ் சென்றரில் பலர் கேள்வி எழுப்பிய போது , அதை உமா மறுக்கவில்லை. போராட்டத்தில் இப்படியானவை சகஜம் என்று அவர் சொன்னார். அவர் அப்படிச் சொன்ன போது நான் அவர் பக்கத்தில் இருந்தேன். எனவே நான் கூட சற்று அதிர்ந்து போனேன். இந்நிகழ்வில் ரத்னசபாபதி, பத்மநாபா , பாலகுமார் , லோறன்ஸ் திலகர், (புலிகளது தாக்குதலில் கொல்லப்பட்ட சிறீ சபாரத்தினத்துக்கு பதிலாக) செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் மேடையில் இருந்தனர்.
அத்தோடு T3S க்கு முகாம்களில் இருந்து சென்னை வந்திருந்த தோழர்கள் கதை கதையாக சொன்னார்கள். தவிரவும் அந் நிகழ்வில் சந்தியார் தொடர்பில் பாதிக்கப்பட்ட அன்டன் எனும் உதயன் (வாமரின் மருமகன்) என்னுடன் பல காலம் சென்னையில் இருந்தார். வாமரால் மீட்கப்பட்ட அவர் தொடந்து சென்னையில் சிகிச்சை பெற்று வந்தது மட்டுமல்ல , சிறுநீர் கழிக்கும் போது இரத்தமும் வந்து அவர் பட்ட உபாதைகளை நான் உணர்வேன்.
// கனடா மற்றும் காக்க என்று அழைக்கப்பட்ட ரஞ்சன் ஆகியோர் ராஜனை ஆதரித்தமைக்காக கொல்லப்பட்டவர்கள் என்பதும் இவர்கள் கொல்லப்படும் போது ராஜன் லெபனான் பயிற்சியில் இருந்தார் //
லெபனானில் ராஜன் பயிற்சி பெறும்போது இவர்கள் ராஜனை ஏன் ஆதரிக்கிறார்கள்? ஒரு முகாமிலிருந்து அடுத்த முகாமுக்கு போகும் போது கூட எங்கே போகிறோம் என்பது அழைத்துச் செல்பவரைத் தவிர போபவருக்கு கூட தெரியாது. எனவே ராஜன் லெபனானில் இருந்தது இவர்களுக்கும் தெரியாது. முகாமில் நடந்தது ராஜனுக்கும் தெரியாது. ராஜன் கடைசி காலத்தில்தான் பிளவுபட்டார். சென்னை வடபழனியில் வைத்து அது உச்சமானது. சிலரிடம் இருந்து கேள்விப்படுபவை சிலர் சார்ந்தவர்களை நியாயப்படுத்தவும் , சிலரை பெரிதாக மதிக்க வைக்கவும் சொல்லப்படுபவை என உணருகிறேன். ராஜனோடு இருந்த PLO ராஜா எனது ஆத்ம நண்பன். அவர் சென்னையில் சில காலத்துக்கு முன் காலமானார். எனவே எனக்கு பல உண்மைகள் தெரியும். அதை இங்கே கொட்ட விரும்பவில்லை. ஆனால் , எமது மக்களது பிரச்சனையை தீர்க்க , பிரச்சனைகளை தொடர விரும்புவோரை மீண்டும் மீண்டும் களத்துக்குள் இழுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தவிர தனிப்பட்ட ரீதியில் ராஜனோடு எனக்கு எந்தவித பிரச்சனையுமில்லை.
// அண்மையில் நடைபெற்ற தேர்தலின் போது எந்த கட்சிக்கு எத்தனை அங்கத்தவர்கள் எடைபோட முடியுமா எல்லாம் அங்கு உள்ள நிலமையை பொறுத்தே//
அடுத்து புலத்தில் இருக்கும் நாங்களே இவ்வளவு தொகை மக்களும் இறந்ததற்கு காரணமானவர்களை நினைத்து விரக்தியோடும் வெறுப்போடும் இருக்கிறோம். இறந்த அப்பாவிளை எண்ணி வருந்துகிறோம். அதைத் தவிர புலத்தில் இருந்து நாடு கடந்து தமிழீழம் பெற எழுந்த கூட்டம் படுத்திய பாட்டில் ஒரு நடுக்கமே ஏற்பட்டது. கேபீ கைதானதோடும் இனி நடக்கவிருக்கும் கைதுகளையும் நினைத்து சற்று ஆறுதல் அடைய முடிகிறது. இல்லாவிட்டால் அந்த முகாமிலிருக்கும் மக்களுக்கும் வெளியே இருக்கும் தமிழர்களுக்குமான வாழ்வு நிச்சயமற்றதாகிவிடும். யார் செத்தாலும் தமது இருப்பை மட்டும் நிலைக்க வைத்துக் கொள்ள இந்த பாழாய் போன ஈழத் தமிழனால் எப்படித்தான் முடிகிறதோ? சீ..உங்களுக்கும் ஒரு ஈழம் இனியும் தேவையா? இந்நிலையில் இந்த தேர்தல் நடந்த விதமும் சரியில்லை. நடத்திய நேரமும் சரியில்லை. அதற்கான முடிவை அவர்கள் பெற்று விட்டனர். உணர்ந்தும் கொண்டனர். அந்த மக்கள் சரியாக படி அளந்துள்ளனர்.
அனைத்து இயக்கங்களும்தானே தமிழீழத்துக்காக மக்களை திரட்டினீர்கள். இன்று அதே இயக்கங்கள் அவர்களை காட்டியும் கொடுத்தும் , கொன்றும் குவித்தீர்கள்களே. சாகடிக்கவும் வைத்தீர்களே. இன்னும் எத்தனை காலத்துக்கு இது…. எவர் மீதும் எனக்கு நம்பிக்கையில்லை. இதுவே உண்மை. இவர்கள் எல்லாமே சுயநலம் கொண்டவர்கள்.
எவராவது தமிழர் நிம்மதியாக வாழ விட்டுக் கொடுத்து , தமது அரசியல் இருப்புகளை மறந்து செயல்படுவார்களோ அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். அவன் சிங்களவனாக இருந்தாலும்…. ஏனைய அனைவரையும் புறக்கணிக்க வேண்டும். தயவு செய்து தொடர்ந்தும் தவறுகளை நியாயப்படுத்தாதீர்கள். நமக்கு பிடித்தவர்கள் செய்தவை சரி சரி என்று அப்பாவிகளை கொன்று குவித்தது போதும். சாகடித்தது போதும். தவறானவர்களை புனைப் பெயரிலாவது வந்து எழுதித் தொலைத்து அவர்களை திருந்த வையுங்கள். சிந்திக் வையுங்கள். இல்லாவிட்டால் இலங்கையில் தமிழ் இனம் என்ற ஒன்று இல்லாமலே போய்விடும். அதற்காக நாம் சிங்களவருக்கோ அல்லது இஸ்லாமியருக்கோ அல்லது எவருக்கோ எதிரானவர்களாகவும் வேண்டாம்.
மாயா
// உமாமகேஸ்வரனுக்கும் சந்ததியாருக்கும் முரண்பாடு ஏற்பட்டபோது ராஜன் ஒருபக்கமும் சாராமல் செயற்பட்டதாக அறிந்துள்ளேன்.//
இருவரும் சரியா? அல்லது இருவரும் தவறா? இல்லை , இருவரும் அடிபட்டு சாகட்டும் அந்த இடத்துக்கு தான் வரலாமென்று இருந்தாரா? ஒரு இயக்த்தின் மத்திய குழுவில் இருந்த பரந்தன் ராஜனின் அன்றைய நடத்தை அவரை நேர்மையானவராகக் காட்டவில்லையே?
Saranan
ஈஎன்டிஎல்எவ் ஒரு அரசியல்கட்சி? அல்லது போராட்ட இயக்கம்? என்ன பகிடியா விடுகிறியள் “ஜே”?
போராட்டம்> போராட்டத் தலமைகளின் தோற்றுவாய்> மக்களின் அடிப்படை ஜீவாதாரப் பிரச்சனைகளிலிருந்து மக்களை மையப்படுத்தி மக்கள் மத்தியிலிருந்து தோன்றுவது. தமிழர் மத்தியில் அப்படியொரு தலமை இதுவரை இல்லை என்ற உண்மை உண்மையாகவே இருக்க!
மிதவாத அரசியல் சாக்கடை நடத்தி தம்மை பொருளாதாரத்தால் வளர்த்துக் கொண்டவர்களுக்கு தேர்தல் வெற்றி கோள்விக் குறியான போது
து}ண்டப்பட்ட இனவாத நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சிகளே இந்த இயக்கங்கள்.
இன வாத அலைக்குள் அள்ளுண்டு வந்ததில் இந்தியாவுக்கு சங்கு கடத்தினவன்> இலங்கைக்குளளேயே மரம் கடத்தினவன்> சந்திச் சண்டியன் எல்லாம் வந்து சேர்ந்த முதல் சுணாமி அது பல தமிழரை அழித்து முடித்த பிறகும் அனுபவமும் இல்லை அறிக்கைகளுக்கு ஓய்வும் இல்லை.
பரந்தன் ராஜனது அறிக்கை ஒன்று அண்மையில் “காங்கேசன் துறை முதல் கதிர்காமம் வரை தமிழர் பிரதேசம்” என்று அற்புதமாக ஆய்வு செய்திருந்தது! சிங்களவர் பிரதேசம் எதுவோ அது அவருக்கே வெளிச்சம்.
ஜேஆர் தலமையிலான அரசு சிங்களக் குடியேற்றங்களைத் திட்டமிடடே செய்து அம்பாறை> திருகோணமலை> பதவியா போன்ற இடங்களின் பாரிய நிலப்பரப்புகள் பறியான போதும் அரசியலில் அவனையே ஆதாpத்தும் அவருடன் விருந்துண்டும் மகிழ்ந்த செல்வநாயகம் போன்ற தலைவர்களை ஆதாpத்து மேடைப் பிரச்சாரத்தில் கூட ஈடுபட்ட “ஜே” யின் குடும்பத்தாருக்கோ “ஜே” க்கோ அன்று தொpயாத வலி இன்று எப்படி?
காலத்துக்குக் காலம் யாரையாவது எதிர்ப்பதாகக் கங்கணம் கட்டுவதும் அடிப்படை அரசில் தொpயாமல் கதைப்பதும் சிலருக்குத் தொழிலாகிவிட்டது.
மக்கள் மத்தியில் நின்றும் மக்கள் அங்கீகாரமற்றுப் போனவர்கள் தம்மை மீளாய்வு செய்தால் தொpயும் நாம் இன்னும் மக்களைத் தொடவில்லை நமது தொடக்கம் மக்கள் பிரச்சனைகளில்லை என்பது. அப்படியிருக்க பரந்தன் ராஜனும் “ஜே” யும் எம்மாத்திரம்?.
எங்கள் பிரச்சனைகள் எங்கள் நாட்டு மக்களின் பூpதலிலும் ஐக்கியத்திலும் தீர்க்கப்பட வேண்டும் அதற்கான அழுத்தங்கள் தேவைப்படும் போது விடுதலையை உண்மையான மக்கள் விடுதலையை நேசிக்கும் நாடுகளிடம் கோரலாம் அல்லது தாமாக முன்வரும்.அதை விடுத்து இந்தியா வா? அமொpக்கா வா? என்று கேட்பதிலிருந்தே பரந்தன் ராஜனின் அரசியல் வங்குரோத்துத் தனம் விளங்குகிறது.
பல்லி
பரந்தன் ராசனை இந்திய அரசு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதாக தேசம் செய்தி வெளியிட்டுள்ளது; இது பலருக்கு கடுப்பை ஏற்படுத்தி உள்ளது; காரணம் இதுவரை யாரையும் இந்திய அரசு அழைத்து பேசவில்லை, எம்மவரே பலகாலம் தவம் கிடந்து சில மணிதுளிகள் சிங்குடன் பேசியதாக இதே தேசத்தில் பலமுறை படித்தோம், இதில் சங்கரி தொடக்கம் இன்று மகிந்தாவுடன் அருகில் இருந்து யார் தமிழருக்கு வாய்கரிசி போடுவதென நினைக்கும் அனைத்து தமிழர் அமைப்பும் அடங்கும்; இதுக்காக ராசனை பல்லி பாராட்டவோ அல்லது அவருக்காகவோ அல்லது அவர் சார்ந்த அமைப்புக்காக வாதாடும் வக்கிலும் அல்ல,
இன்று அரசசார்பில்லாத ஒரு தமிழ் அமைப்பு எம்மிடம் இல்லை, அப்படி ஒன்று புதிதாக அமைப்பதும் முடியாத செயல், அதுக்கு சர்வதேசம் ஆதரவு தரும் என்பதில் சந்தேகம்; அதனால் எமது பிரச்சனையை பொறுத்தமட்டில் அழிவாய் இருந்தாலும் சரி, ஆக்கமாய் இருப்பினும் சரி என்றுமே இந்தியாவின் தலையீடு இருக்கும்; இருக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழருக்கும் அவசியமே, ஆக சந்திரன் ராசா சொன்னது போல் அமைப்புஎன இல்லாமல் தமிழரின் நலன் கருதி ராசன் இந்திய தலமையுடன் பேசி இருந்தால் அதை ஆக்கபூர்வமாக தமிழர்நலன் விரும்பிகளுடன் கலந்துபேசி (தமது அமைப்புக்கு அரசியல் செய்யாமல்) தமிழரின் குறைந்த பட்ச்ச தேவைகளையாவது இந்திய தலையீட்டுடன் செயல்படுத்த முன்வரலாம்; ஈஎன்டிஎல்எவ் அமைப்புமீது மிகபகிரஙமாக விமர்சிக்க வேண்டிய தேவைகள் இருக்கு என்பதில் பல்லிக்கு கருத்து முரன்பாடு கிடையாது, ஆனால் கழகத்தைவிட்டு வந்ததாலோ அல்லது ராசன் அந்த அமைப்புக்கு தலமை தாங்குவதால் அது கேவலமான அமைப்பு என்பதில் பல்லிக்கு உடன்பாடு கிடையாது,
உமா மகேஸ்வரனே புலியில் இருந்து பிரிந்து வந்துதான் கடைபோட்டார்; அதுவும் புலிகளால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கபட்டு ;ஆனால் ராசன் கழகத்தைவிட்டு ஒதுங்கிவிட்டார் எனதான் இதுவரை கழகம் சொல்லியுள்ளது; ராசன்மீது உள்ள குற்றம் என்ன என்பதை மாயா சொல்வதுபோல் கழகம் சொல்லியதாக பல்லி கேள்விபட இல்லை; இதைவிட கழகத்தின் இரும்பு தூண்என ராசனை கழகத்தினர் 1983 தெருமுனையில் ஆள்பிடிக்கும் போது சொல்லியதை இங்கு நினைவுபடுத்துகிறேன்; 1984 என நினைக்கிறேன் கழகத்தின் ஒரு கருதரங்கு சென்னையில் நடந்தது (ஓட்டி பாண்டிக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில்) அதில் உமா பேசும்போது ஓட்டி பாண்டியும் ராசனும் தனது இருகைகள் என ஆதங்கபட்டதாய் பின்நாளில் உமா ராசன் பிரிவில் துவண்டுபோன கழக கண்மணிகள் ஏச கேட்டதுண்டு; அதேபோல் கருனா புலம்பெயர் தேசத்தில் ஒரு வீட்டில் பேசும்போது தான் ஏன் ராசனை தெரிவுசெய்து உதவிதேடி போனேன் என்றால்; ராசன் பதவிஆசை அற்றவர், மிக துணிந்தவர் பயம் என்பது அறியாதவர் என பிரபாகரன் சொல்வார் என சொல்லியுள்ளார்;
இவையாவும் மாயாவின் குற்றசாட்டுக்காக பல்லியின் பதில், ஆனால் பல்லியின் எதிர்பார்ப்பு ராசன் தனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை தனது அமைப்பை விரிவுபடுத்த பயன்படுத்தாமல் பல அமைப்புசார்பு அல்லாதவர்களை; கல்வியாளர்களை; ஊடகவியாளர்களை; எல்லாத்துக்கும் மேலாக தமிழ்மக்கள் நலன்விரும்பிகளை இந்திய அரசுடன் தொடர்புபடுத்தி மக்களுடைய அவசியதேவைகள் சிறையில் இருந்து அப்புறபடுத்தி அந்த மக்கள் நலன்பற்றி சிந்திப்பாரானால் பாராட்டலாம், அல்லது இவரது சந்திப்பு தனது அமைப்பு வளர்க்கஎனில் அதுக்கும் நாம் ஒரு தடா போட்டு கண்களை மூடவேண்டியதுதான்,
சரி இந்த பண்ணைவீட்டு சமாசாரம் எப்படி ஏன் ஆச்சு என ராசன் பக்கத்தால் இதுவரை எந்த தகவலும் இல்லை; அதுக்காக மாயா சொல்வதை சரிஎன ஏற்று கொள்ளவமுடியுமா? அப்படியாயின் இந்த விச்சு யார்? இவர் மாயா சொல்லிய காரணத்துக்காகதான் கழகத்தால் கைது செய்யபட்டாரா? அப்படியாயின் அவருக்கு பண்ணை வீட்டு பழக்கம் எப்படி வந்தது? ராசன் பண்ணை வீட்டுக்கு விச்சுவைதேடி போகும்போது அது உமாவுக்கு தெரியாதா? இத்தனைக்கும் மேலாக விச்சு ஒரு ஆரம்பகால லெபனானில் பயிற்ச்சி எடுத்தவர்என ஒரு செய்தியும் உண்டாம் அது உன்மையா? அதுவும் உமாவும் விச்சுவும்தான் முதல்முதலில் லெபனானில் ஒன்றாய் பயிற்ச்சி எடுதார்களாம்; இப்படி பல தகவல்களை சேகரித்து வைத்திருக்கும் தேச வாசகர்களிடம் மாயா வந்து கதை சொல்ல கூடாது; புலியை அழிக்க இந்தியா இலங்கை அரசுக்கு உதவும்போது இந்தியா எமது அயல்நாடு, ஆனால் இன்று தமிழர் பிரச்சனைபற்றி ஒரு தமிழனுடன் கதைத்தவுடன் இந்தியா யார் எமது விடயத்தில் தலையிட,,,,,,,?
இது பல்லி பின்னேர பாட்டில் சுபாஸ்சின் உதவியுடன் தடுமாறுவதை விட தலைகீழாக அல்லவா உள்ளது, ஆக சந்தடிசாட்டில் கழகத்தை
நியாயபடுத்துவதை விட்டு இந்த சந்திப்பு தமிழருக்கு ஏதாவது தருமா? என சிந்திப்பது அவசரம் மட்டுமல்ல எமக்கு தேவையும் கூட???