விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கைக்கு அப்பாற்பட்ட நோக்கங்களைக் கொண்டிருந்ததாகவும் தென்னிந்தியாவில் உள்ள சில சக்திகளின் ஆதரவுடன் “தமிழ் ஈழத்தின் மன்னராக’ வருவதற்கு விரும்பி இருந்ததாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். புலிகளின் தலைவர் சேகரித்து இருந்த பெருந்தொகையான ஆயுதங்கள் தனது சொந்த தேசத்தை நிர்வகிப்பதற்கு அப்பால் அதாவது இலங்கைக்கு அப்பாற்பட்ட விருப்பத்தை அவர் கொண்டிருந்ததை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று ஜனாதிபதி கூறியுள்ளார். அவர் (பிரபாகரன்) பெரிய கனவை கொண்டிருந்தார். இலங்கை… நான் நினைக்கவில்லை. (இது இலங்கை மட்டுமென) அவர் பாரிய நோக்கத்தை கொண்டிருந்தார். அவர் தமிழ் ஈழத்தின் மன்னராக வர விரும்பியிருந்தார் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
இல்லாவிடில் எமது இலங்கை இராணுவத்துடன் சண்டையிட இவ்வளவு ஆயுதங்கள் தேவைப்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவருக்கு தென்னிந்தியாவில் சில அனுதாபிகள் இருந்தனர். அவருடைய திட்டம் இலங்கைக்கு அப்பாற்பட்டது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கே.பி.கைதானமை இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாகும். வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை நவீன ஆயுதங்கள் எவ்வாறு புலிகளுக்கு கிடைத்தன என்பது தொடர்பாக அவர் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்த தலைவர்கள் சிலர் இவற்றுக்கு பதில் கூறக் கூடும் என்று நான் நினைக்கிறேன். கே.பி.இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.
யார் ஆயுதங்களைப் பெற்றனர்?, யார் அவர்களுக்கு பணம் கொடுத்தனர்?, யார் அவர்களுடன் பேசினர்? அவரால் எமக்கு கூறமுடியும். முழு கட்டமைப்பு தொடர்பான உண்மையும் வெளிவரும் என்று நான் நினைக்கிறேன். ஆகக்குறைந்தது இந்த விபரமாவது வெளிவரும் என்று நான் கருதுகிறேன் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். இந்தியாவின் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
Kirupa
கே.பி மட்டுமே கைது எனில் இப்போதைக்கு அதிகமாக ஒன்றும் எதிர் பார்க்க முடியதாது. ஆனால் அவரது உடமைகள்/ரகசிய தாஜ்வேதுகள் கைப்பற்றப்படின் அதுவே அதி பாதகமாக அமையும். கடத்தியவர்களுக்கு அதற்குநேரம் இருந்திருக்கும் என்பதில் ஐயமே.கே.பி யின் நம்பிக்கைகள் விரைந்து நடவடிக்கைகளில் இறங்கி, ரகசியங்களை கரைத்து இருப்பார்கள்.
சித்திரவதையின் நிமித்தம் ஒரளவு செய்திகள சேகரிக்களாம். ஆனால், கே.பி உடன் தொடர்பில் உள்ள்வர்கள் கே.பி யை விடவும் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் இயங்கும் கூட்டஙளாகவே இருப்பார்கள். அதிமாக பிற நாட்டினர் / ஆயுத விற்பனை பேர்வ்ழிகள்.. சங்கேத குறிகளுடன் இயஙும் கூடடமாகவே இருக்கும். எந்த வங்கி / எந்த் கணக்கு / என்ன பெயரில் என்று எல்லாம் சொல்லக்கூடிய வகையில் கே.பி ஒரு டாட்டா வேயார் கவுசே வைத்திருப்பார். ஆனால், அந்த தகவல்களுடன் மறைந்து இருக்கும் ஒரு fபைல் அல்லது லப்டொப் இப்ப் யாரிடம் ??
எது எவ்வாறினும், சிஙகள அரசுக்கும் அதன் அபிமானிகளுக்கும் கே.பி யின் கைது அமிர்த்தம் தான்.
DEMOCRACY
/Sinna on August 10, 2009 6:55 am.
DEAR READERS I BELIVED KP MIGHT HAVE BEEN ARRESTED VERY LONG TIME AGO,AND BEEN WITH THE GOVERMENT WHILE FIGHTING WAS ON BETWEEN THE TIGERS AND GOVERMENT.EVEN HE MIGHT HAVE BEEN GIVEN INSTRUCTIONS VIA GOVERMENT AND THE TIGERS.HE IS THE ONE OF MAIN PERSON WHO MADE EVERTHING EASIER FOR GOVERMENT TO CAPTURE THE TIGERS.HE MAY WELL BE A DOUBLE AGENT FOR BOTH GOVERMENT AND THE TIGERS.
THE ARREST IS A DRAMA.WE HOPED IT WOULD BRINGS MORE NEWS TO COME./-
– கேபி அதை சொன்னார்,இதை சொன்னார் என்று இனி காது மூக்கு வைப்பார்கள்!.மேல் உள்ள சின்னாவின் கூற்றை நம்பலாம்!.
இதில் உயிருடன் இருக்கும்? பிரபாகரனும்,பொட்டம்மானும்,கருணாவும் அடங்கும்.
என்ன வேடிக்கை என்றால், இவர்கள் எதிர் நீச்சலை தவிர்த்து, உலக நடப்புடன் காலம் கடந்து ஒத்துப் போவதுதான். தமிழர்களுக்கான? பாரம்பரிய வேர்களை அறுக்க தங்கள் நலனுக்காக துணைப் போவதுதான். உலக நீரோட்டம் எங்கோ போக அதில் இவர்கள் சுழி ஓடுவதுதான்! .”சீன” கலாச்சாரப் புரட்சியால் எது அழிந்ததோ இல்லையோ!, தமிழர்கள் “கிடுக்கிப் பிடியில்” மாட்டியுள்ளனர் (இந்த சுழி ஓடும் பேர்வழிகளால்). இலங்கையின் தெற்கு, “ஹம்பாந்தோட்டையில்” பாரிய கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை “நகர்வுடன்” ஒத்துப் போவது, பிரேமதாஸா காலம்தொட்டு பழகிய செயல் என்றாலும், அதனால் “கருகி அழிந்தது” வன்னிமக்களின் “வாழ்வியல்தான்”- “தமிழர்களின் வாழ்வியலும் கூட”.
மத்தளத்திற்கு இரு பக்கம் அடி என்பார்கள், அதுபோல,தமிழர்களுக்கு.
கத்தோலிக்கர்களும் அதே “ஸ்ட்ரடிஜியைதான்” பயன் படுத்துகிறார்கள், சீனர்களும் அதே “ஸ்ட்ரடிஜியைதான்” பயன் படுத்துகிறார்கள்!. இது ஒரு, எதிர்பாராத “கோயின்ஸிடன்ட்”. மன இணக்கத்துடன் இந்தியாவுடன் பிரதிபலிப்பவர்களுக்கு கவலையில்லை!. ஆனால், போலியாக, அற்ப நலன்களுக்காக “ஒத்துப் போனவர்களுக்கு”, இதை எப்படி ஜீரணிக்கப் போகிறார்கள் என்பது, வருங்காலத்தில் பல தரப்பினரின் கையாள்கையே விடைப் பகறும்!.