நெடியவன் பொலீஸ் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டார்

lttelogoநோர்வேயில் வதியும் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான நெடியவன் நேற்றைய தினம் நோர்வே பொலீசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவர் நோர்வே சேதுரூபன் மீதான தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டதாக தெரியப்படுகிறது எனினும் இவர் கைது செய்ப்பட்டமைக்கான காரணம் பொலீசாரினால் தெரிவிக்கப்படவில்லை.

2005ம் ஆண்டின் ஆரம்பகாலங்களில் வன்னி சென்ற ஆர் ஜெயதேனை புலிகள் கைது செய்தபோது அவரை இந்த நெடியவனே கிளிநொச்சியில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தினார். அச்சமயத்தில் நெடியவன் நீலநிற சேட்டும் மண்ணிற ரவுசரும் அணிந்திருந்தார் என ஜெயதேவன் கூறியிருந்தார். இச்சம்பவம் பற்றி லண்டன் பொலீசாரிடம் ஜெயதேவன் முறையிட்டிருந்தார்.

நோர்வேயில் நெடியவன் விசாரணையின் பின்னர் இதுபோல பலர் கைது செயய்ப்படலாம் என ‘தேசம்நெற்’ க்கு தெரியவந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • மாத்தையா
    மாத்தையா

    பிடித்து சிறீலங்காவுக்கு அனுப்ப வேண்டும். இவர்களால் புலத்திலும் பயங்கரவாதம் தொடரும்.

    Reply
  • visuvan
    visuvan

    உந்த நெடியவனும் ரெஜியும் தான் இப்ப புலி பினாமி பணத்தின் சொந்தக்கார்கள்! கேபீயை உள்ளுக்கு தள்ளியதில் இவரின் பங்கு மிக மிக அதிகமாம்! 300 மில்லியன் என்றால் சும்மாவா?

    Reply
  • Sivaram
    Sivaram

    புலியும் புலி ஆதரவாளர்களும் மிகவும் பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் அதனாலேயே புலி காலத்தில் மாற்று கருத்துடையவர்கள் எல்லோரையும் துரோகிகளாக்கப் பார்த்தார்கள். நெடியவனும் சரி யாரும் சரி புலிகளை முன்எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நோர்வே பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்றது. நெடியவனை நோர்வேக்கு அழைத்து வந்து காப்பாற்றி வைத்திருப்பதே நோர்வே தான். மற்றவர்களுக்கு சும்மா பிலிம் காட்டுவதற்காகவே நோர்வே சும்மா விசாரணை என்று ஏமாற்று நாடகம் ஆடுகின்றது. 5 தடவைக்கு மேல் நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதுவராலயம் தாக்கப்பட்டதற்கே இதுவரை எவரையும் நோர்வே பொலிசார் கைது செய்யவில்லை. இதில் கேவலம் என்னவென்றால் தாக்குதலிலீடுபட்டோரை நோர்வே பொலிசார் காப்பாற்றி பத்திரமாக வெளியேற்றிய ஒளிப்பதிவு ஏற்கனவே நெற்றிலும் வந்திருந்தது. நோர்வே இலங்கையில் சமாதான முயற்சியிலீடுபட்டிருந்த போதே, இலங்கை அரசிற்கு அமோக ஆயுத விற்பனையும் செய்து கொண்டிருந்தது. நெடியவன் போன்றோரைக் காப்பாற்றி வைத்திருந்தால்த் தான் இலங்கையில் பிரைச்சினைகளைத் தொடர்ந்து கையாண்டு ஆயுத விற்பனையிலுமீடுபடலாம் என்று இன்னும் நோர்வே எண்ணிக் கொண்டிருக்கின்றது போலும்.

    Reply
  • Sinna
    Sinna

    His name is perinbanayagam Sivaparan,……… he come to norway in 2004, with LTTE delication. and married in 2005. He got firste visa via LTTEs contect in Norwegian goverment.
    he is NOT a part of the new LTTE ledership. Ofcourse he is one of the friend og castro. but he is not qualified for the leder in LTTE, as norwegian media told yesterday. he is not arrasted yesterday. After norwegian medias story about he is the new leder of LTTEs leder, is reaseon for the tolk between him and police. he is still a Sri Lankan citizen. he has Sri lankan passport, he got in 2004 fra GoSL.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நெடியவனும் ரெஜியும் தான் மிஞ்சமென்றால் புலம்பெயர் தமிழ்மக்களின் சிந்தனைகளையில் நாளாந்தம் நச்சுதிரவகத்தை அள்ளிஊத்திக் கொண்டிருக்கிற தீபம் ஜி ரிவி ஐ.பி.சி இவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?. மக்களின் நாமத்தில் தமது சதிர்ஆட்டங்களை ஆடிய பிரபாகரன் பத்மநாதன் போன்றோர்களுக்கு எந்த வித குறைவில்லாத ஆட்டங்களை புலம்பெயர் மண்னில் ஆடியிருக்கிறார்கள்.

    எப்பவும் பொதுமக்களின் தீர்ப்புக்கு விடுவதற்கு உசிதமானது. ஆனால் இந்த தமிழ்மக்கள் அதாவது புலம்பெயர் தமிழ்மக்களின் அபிப்பிராயத்தை கேட்பது அவர்களிடம் தமிழ்மக்களின் அழிவைவிட ஒட்டுமொத்த இலங்கையுமே அழிவுக்கு தாரைவார்த்து விடுவதாகும்.

    Reply
  • மாயா
    மாயா

    சம்பந்தப்பட்ட சேதுவும் புலிதான். அடுத்தவர்களும் புலிகள்தான். இவர்களை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு நன்கே தெரியும். இவர்கள் தமது இருப்புக்காக பலதை செய்தவர்கள். சந்திரன் ராஜா சொல்வது போல புலத்தில் உள்ள ஊடகங்களும் தமது இருப்புக்காக தவறென்று தெரிந்தும் பொய்களை தொடர்ந்தும் மக்கள் மனங்களில் விசங்களாக விதைத்து வருகின்றன.

    இலங்கையில் புலிகள் மக்களை சிறை முகாம்களில் தள்ளி விட்டு செத்து போய் விட்டது. புலத்து ஊடகங்களோ புலத்திலுள்ள வீடுகளில் இங்குள்ள மக்களை மன அழுத்தங்களுக்கு ஆளாக்கி வைத்துள்ளனர்.

    இவர்கள் புலத்தில் தமிழ் வளர்க்கிறார்களோ இல்லையோ, தமிழரை படு முட்டாள்களாக்கி வருகிறார்கள்.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    நெடிலன் நோவேயில் திருமணம் செய்த பெண் நோவேயிப் பிரஜா உரிமை கொண்டவர். முகிலனும் அதே கணக்குத்தான். நெடிலன் சித்தங்கேணியைச் சேர்ந்தவர் என்பதை தேசம்வாயிலாகப் பலர் அறிந்ததே. சேதுவின் புகார் காரணமாக நெடிலன் வீசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம். கைது என்பது தவறானது என்பது என் கருந்து. நெடிலனை ஆதாரம் இன்றி கைது செய்ய இயலாது. முக்கிய செய்தி ஒன்றை நோவே தொலைபேசியினூடாக அறிந்தேன் நோர்வேயிலுள்ள தமிழகடைகள் சென்ற கிழமை அடித்து நொருக்கப்பட்டனவாம். அதைச் சிங்களக்காடையர்கள் இலங்கைத் தூதரகத்தின் உதவியுடன் செய்தார்கள் என்று அறியமுடிகிறது. இலண்டனிலும் இப்படியான அசம்பாவிதங்களைச் செய்ய அரசு தூண்டியுள்ளது என்று நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Reply
  • sivaji
    sivaji

    தமிழர் போராட்டம் சம்பந்தப்பட்ட விடயங்கள் தமிழர்களின் புலம்பெயர் வாழ்வில் மேலும் பலசிக்கல்களை தோற்றுவிக்கும் பல சிக்கல்களை இலங்கை அரசும் தோற்றுவிக்க ஆரம்பித்துள்ளது தமிழர்களும் தமிழ் ஊடகங்களும் அன்று போல் இன்றும் இபபடியான பிரச்சினைகளை மூடிமறைத்து பிரச்சினைகளை மறைத்துவிடவே செயற்ப்படுகின்றனர் இப்படியான செயற்ப்பாடுகளால் மக்களுக்கு புலிகளின் காலத்து ஊடகவிலின் தாக்கத்தை மீண்டும் புலம்பெயர் ஊடகங்கள் உருவாக்குகின்றன.

    Reply
  • julian
    julian

    குசும்பு, பிற நாட்டுப் பாஸ்போட்காரர்கள் என்றால் எதுவும் செய்யலாம் என சொல்கிறீர்களா?நோர்வே ‘கவர்’ கொடுக்கும் என்று சொல்கிறீர்களா? புரியவில்லை.

    நெடியவன் விடயத்திற்கும் தமிழ்கடைகள் உடைப்புக்கும் என்ன சம்பந்தம்??

    தமிழ்கடைகள் உடைத்த சிங்களக்காடையர்கள் பற்றி நீங்கள் அறிந்துகொண்டதை நோர்வே அரசாங்கம் அறியவில்லையா?? அல்லது அவர்களுக்கும் நோர்வே ‘கவர்’ கொடுக்கிறதா?? புரியவில்லை.

    Reply
  • Thillai
    Thillai

    Norwegian coming forward as the new LTTE leader?

    A Tamil resident of Norway is being discussed as a possible new leader of the LTTE, the Norwegian newspaper Aftenposten reported. The government has said that if the news is true they will request Norway to arrest him and hand him over.

    The man being tipped to be the new LTTE leader, according to Aftenposten, is a resident of the Tamil Vestlan area. The LTTE is listed as a terrorist organization in the EU, USA , India and several other countries, but not in Norway .

    http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=58079

    Reply
  • wacko
    wacko

    Sri Lankan Intelligence may consider finishing off all the LTTE leftovers( Including Sethu- …… in Istrael’s Mossad style or Russian KGB style. Have U guys seen the film MUNICH by Stephen Speilberg. Mossad actually assasinated a wrong guy in Norway and that Mossad agent served his term for that in a Norway Jail. In this day and age nothing can be ruled out

    Reply