செட்டிக் குளம் மெனிக் பாம் முகாமில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை வசதி கருதி 500 கழிவறைகளை உடனடியாக அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிர்மானத்துறை மற்றும் பொறியியல் சேவைத் துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
இத்திட்டத்துக்கு 2 கோடியே 5 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று வாரங்களில் நிர்மானப் பணிகளைப் பூர்த்திசெய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Calistus Jayatilleke
Almost 100days, What Sl.Gov. doing so far??
சாந்தன்
இதுவே மகிந்த சிந்தனையின் ஆரம்பம் என்றால் உச்சக்கட்டம் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள்
மகுடி
சுகாதார கேடுகளை தடுக்க முக்கியமானது கழிவறை. முள்ளிவாய்க்காலில் புலிகள் கடற்கரையோரத்தை கழிவறையாக்கி நாறடித்தனர். அதன் கேடுகளை பல நிறுவனங்கள் சொன்ன போது Calistus மற்றும் சாந்தன் போன்றவர்கள் மூக்கை மூடிக் கொண்டுதானே இருந்தீர்கள்?
மக்கள் மீள் குடியமர்த்தபட வேண்டும். அதுவரை முகாம்களில் உள்ள மக்கள் பம்பஸ் கட்டிக் கொண்டோ அல்லது குழி தோண்டி கழித்து கொண்டோ இருக்க முடியாது? அதற்கு வேறு வழி ஏதாவது தெரியுமானால் சொன்னால் நல்லாயிருக்கும்?
சாந்தன்
கழிவறைகள் கட்ட திட்டம் தீட்ட 100 நாள் எடுத்த அரசாங்கத்துக்கு முகாமுக்குள்ள ஏ.ரி.எம் மெசின் வைச்சு காசு புடுங்க நாள் எடுக்கேல்ல. இலங்கை வங்கி ஏரிஎம் வசதிகளோட ஒன்லைன் பாங்கிங்க் தொடங்கி 500 மில்லியனை டிப்பொசிற்றா எடுத்து 21,000 பேருக்கு ஏரிஎம் காட்டும் குடுத்திட்டினம் ஆனால் கழிவறைகள் கட்டத்தான் சிக்கலாம்…திட்டமாம்…அதுக்கு 100 நாளாம்..மனித உரிமையாம்…தமிழ்ச் சகோதரங்களாம்…..
’…மக்கள் மீள் குடியமர்த்தபட வேண்டும். அதுவரை முகாம்களில் உள்ள மக்கள் பம்பஸ் கட்டிக் கொண்டோ அல்லது குழி தோண்டி கழித்து கொண்டோ இருக்க முடியாது? அதற்கு வேறு வழி ஏதாவது தெரியுமானால் சொன்னால் நல்லாயிருக்கும்…’
இதுக்கு கூட ஐடியா கேக்கிறியளே? இங்கு பிரச்சினை கழிவறை கட்டுவதல்ல. ஸ்ரீலங்கா அரசுக்கு ஏன் 100 நாள் எடுக்க வேண்டும் திட்டம் அறிவிக்க என்பது தான்?
மாயா
முகாம்கள் உள்ள பகுதிகள் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கழிவறைகள் தேவையில்லை என்பவர்கள் புலத்தில் உங்கள் கழிவறைகளை நினைத்துப் பாருங்கள். அடிப்படைத் தேவை புரியும். முட்டாள்தனத்தை விட்டொழியுங்கள்.
sothi
இலங்கை அரசுக்கு 3 மாதகாலம் போதும் நிலக் கண்ணிவெடிகளை அகற்ற ஆனால் இன்னும் அதை செய்து முடிக்கவில்லை என்பது ஒன்றே போதும்; அரசு என்ன செய்கின்றது என்பதை ஊகித்துக்கொள்ள: 30 வருடங்களாக இருந்த இயக்கத்தை திட்டமிட்டு ஒரு நாளைக்கு பல மில்லியன்கள் செலவழித்து பேராராடிய அரசு இந்த இராணுவத்தை 2 கிழமை உபயோகித்தாலே போதும் இந்த நிலக் கண்ணி வெடிகளை முழு வட மாகாணத்திலிருந்தும் அகற்றிவிடலாம். ஆனால் அப்படி செய்யவில்லை ஏன்? இங்கே தான் அரசின் பின்புல திட்டமிடலும் செயலாக்கமும் எதை நோக்கியுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.?
வன்னி மக்களுக்கு உதவி செய்வதாயின் இந்த மூன்றாம் மாதம் வன்னி அகதி முகாம்களை மூடியிருக்கலாம்; அரசு போர் செய்த அதே வேகத்தில் இந்த மக்களை மீள குடியமர்த்த இயங்கவில்லை என்பதே எமது அபிப்பிராயம். இங்கே தான் சந்தேகங்கள் வலுக்கிறது. இதைத்தான் நாம் புலிகள் வன்னியில் அடைத்து வைத்திருந்த மக்களை அரசு முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது என்று சொல்ல வருகிறோம் சிலவேளை புலிகள் பரந்த காட்டுப் பகுதிக்குள் இந்த சிறைச்சாலையையும் அரசு குறுகிய நிலப்பரப்புக்குள் சிறைச்சாலையையும் வைத்திருக்கிறதா? ஏன்று தமிழ்பேசும் மக்கள் குழம்பிக் கொண்டிருப்பதை உணரமுடியவில்லையா?
நண்பன்
சோதி , இன்றும் மக்கள் தமது பகுதிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டிருக்கிறார்கள் அல்லது அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது தொகையாக அல்ல. எனக்குத் தெரிந்த சில குடும்பங்கள் வவுனியாவிலிருந்து செல்லு முன் அழைத்து சொன்னார்கள். அதற்காக அரசை குறை கூறுவது தவறென்று சொல்லப் போவதில்லை. வேகமாக இல்லை. அதை வேகப்படுத்த அழுத்தங்கள் தேவை. முகாமில் உள்ளவர்களிடம் தொலைபேசிகள் உள்ளன. எனவே தகவல்களை அறிவது இலகு.
Appu Hammy
I wonder when their plight is going to end? The traumatised displaced citizens need all the care and attention during the monsoon season. This is is a dangerous period as the threat of waterborne diseases is likely to cause an epidemic. I hope the government clears all the mined areas, and finds the hidden weapons, explosives, and boobytraps ASAP to enable the IDP’s to resettle soon. The world is eagerly watching to pounce on us, if and when we falter. I’m sure BR(Basil) is doing his best with limited resources but the best may not be good enough to the world. All efforts must be made to expedite the resettlement process – if it can be accomplished before 180 days then that would be terrific!
மெனிக் தாசன்
http://www.groundviews.org/2009/08/15/first-images-the-flooding-in-menik-camp-and-the-increasingly-dire-situation-for-idps/