வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக மலேசிய அரசாங்கம் ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் ரொஸ்லி இஸ்மாயில் இந்த உதவியை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிடம் இன்று கையளித்தார்.
இது தொடர்பாக வைபவம் வெளிவிவகார அமைச்சில் இன்று காலை இடம்பெற்றது. இலங்கையின் சார்பில் இந்த உதவியைப் பெற்றுக்கொண்ட வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மலேசிய அரசுக்கு நன்றி தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை நடத்திய யுத்தத்திலும் மலேசிய அரசு வழங்கிய உதவிகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.
வடக்கு கிழக்கை மீளக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு மலேசியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்