க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பமான தினம் முதல் இன்று வரை நிவாரணக் கிராமங்களிலுள்ள பரீட்சார்த்திகள் மிகவும் ஆர்வமுடன் பரீட்சைக்குத் தோற்றுவதாகவும் 100 வீதம் மாணவர்களின் பங்களிப்பு உள்ளது என்றும் வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார். சரணடைந்தவர்களுள் 27 மாணவிகள் காமினி வித்தியாலயத்திலும் 138 மாணவர்கள் பம்பைமடு வளாக முகாமிலும் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
இவர்களுடன் நிவாரணக் கிராமங்களில் 1190 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். கலைத்துறையில் 771 மாணவர்களும், வர்த்தக துறையில் 230 மாணவர்களும், கணித துறையில் 64 மாணவர்களும், உயிரியல் விஞ்ஞானத்தில் 125 மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்