புலிகளின் புதிய தலைவராக நோர்வேயிலுள்ள தமிழர்? செய்தி உண்மையானால் கைது செய்து ஒப்படைக்க ஒஸ்லோவை கோருவோம் -கோஹண

lttelogoவிடுதலைப் புலிகளின் புதிய தலைவராக நோர்வேயிலுள்ள தமிழர் ஒருவரை நியமிக்கும் சாத்தியம் குறித்து ஆராயப்படுவதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கும் நிலையில், அந்தச் செய்தி உண்மையானால் அவரைக் கைதுசெய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு நோர்வேயிடம் இலங்கை கோரிக்கை விடுக்கும் என வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித கோஹண கூறியுள்ளார்.

வெஸ்ற்லான் பகுதியைச் சேர்ந்தவரான தமிழர் ஒருவர் விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக அப்ரென் போஸ்ரன்  பத்திரிகை தெரிவித்துள்ளது.

“இது மிகவும் அதிர்ச்சியானதாகும்’ என்று வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோஹண கூறியுள்ளார். கெரில்லாக் குழுவான விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நோர்வேயிலுள்ள தமிழர் ஒருவர் நியமிக்கப்படும் சாத்தியம் குறித்து அவருக்கு கூறப்பட்டபோதே அவர் இதனை தெரிவித்ததாக நோர்வே செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.

விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்திற்கான முன்னணி வேட்பாளர்களின் ஒருவராக தமிழ் வெஸ்ற்லான் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் குறிப்பிடப்பட்டிருப்பதை கேள்வியுற்று தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறுகிறார். “”விடுதலைப்புலிகள் அமைப்பு ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளில் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நோர்வேயில் தடைசெய்யப்படவில்லை. உலகின் அநேகமான ஜனநாய நாடுகளில் பயங்கரவாத அமைப்பான புலிகள் தடைசெய்யப்பட்டுள்ளன’. இந்நிலையில், நோர்வே போன்ற நாட்டில் அந்தத் தலைவர்களில் ஒருவர் சுதந்திரமாக நடமாடுகிறார் என்பதைக் கேட்பது அசாதாரணமான விடயமாகும்’ என அப்ரென் போஸ்ரனுக்கு கோஹண கூறியுள்ளார்.

இந்த விடயம் குறித்து முழுமையாக தாம் ஆராய்வார் என்றும் நோர்வே அதிகாரிகளுடன் இது தொடர்பாக தொடர்புகொள்வது இயற்கையான விடயம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானால் நிச்சயமாக அவரை இலங்கைக்கு கையளிக்குமாறு நாம் கோரிக்கை விடுப்போம் என்று கோஹண கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் எஞ்சியிருக்கும் தலைவர்களை பிடிப்பதற்கு ஏனைய நாடுகள் ஏற்கெனவே அதிகளவு ஒத்துழைப்பை வெளிப்படுத்தியுள்ளன என்று கோஹண கூறியுள்ளார்.

கடந்தவாரம் விடுதலைப்புலிகளின் தலைவர் குமரன் பத்மநாதன் அல்லது கே.பி. கைதுசெய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அவர் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதனை கோஹண உறுதிப்படுத்தி இருக்கவில்லை.

அவரும் ஏனைய தலைவர்களும் எமக்கு அதிகளவிலான தகவல்களை வழங்கியுள்ளனர் என்பதை என்னால் கூறமுடியும் என்று கோஹண தெரிவித்திருக்கிறார்.

புதிய கிரிகார்

விடுதலைப்புலிகளின் தலைவர் பற்றிய இந்த விவகாரமானது புதிய கிரிகார் வழக்கு விடயத்தைப் போன்ற முடிவை எட்டக்கூடும் என்று ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் சட்ட வல்லுநரான ஜீயர் அல்வ்ரெய்ன் கூறுகிறார். நோர்வே மண்ணில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிடும் ஆட்களை அதிகாரிகள் கண்டுபிடித்தால் அவர்கள் தொடர்பாக அவர்களின் சொந்த நாட்டிற்கு வெளிப்படுத்துவது இல்லை. அதாவது, அவர்கள் மரணதண்டனை அல்லது சித்திரவதை அபாயத்தை எதிர்நோக்குவார்களாக இருந்தால் அவர்கள் பற்றி சம்பந்தப்பட்ட நாட்டிற்கு நோர்வே தெரியப்படுத்துவதில்லை. வேறு நாடுகள் அவர்களை ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால் அங்கு அனுப்புவதும் சாத்தியமற்றதாகும். இதன் விளைவாக இந்த ஆட்கள் நோர்வேயிலேயே வசிக்க வேண்டும். இது முல்லா கிரிகாருக்கு சம்பவித்த விடயமாகும் என்று ஜீயர் அல்வ்ரெய்ன் கூறியுள்ளார். தமது நாடுகளில் உள்ள அரசியல் நிலைவரங்களில் சம்பந்தப்படுவதற்கு அரசியல் அகதிகளுக்கு அழுத்தங்களை நோர்வே அதிகாரிகள் கொடுப்பதில்லை என்றும் அல்வ்ரெய்ன் தெரிவித்திருக்கிறார். ஆனால், அகதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிடுவது முற்றிலும் வேறுபட்ட விடயம் என்றும் அல்வ்ரெய்ன் கூறியுள்ளார்.

மேற்குறிப்பிட்ட தமிழர் நோர்வேயின் மேற்குக் கரைப்பகுதியில் வசிப்பவர் எனவும் அவர் விடுதலைப்புலிகளின் இராணுவப் பிரிவின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர் தலைவராகும் சாத்தியம் இருப்பதாக பல வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. நோர்வேயானது இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதான நடவடிக்கைகளின் போது மத்தியஸ்தராக பங்காற்றி வந்தது. கடந்த மேயில் இலங்கைக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தது.

யுத்தத்திற்கு பின்னர் தமிழ்த் தலைமைத்துவம் வெளிநாடுகளில் சிதறுண்டு காணப்படுகிறது. 1976 இல் பிறந்தவரான இந்தத்தமிழர் நோர்வேயிலுள்ள தமிழர் அமைப்பின் இராணுவப் பிரிவைச் சேர்ந்தவரென கூறப்படுகிறது. இவர் நோர்வேயிலுள்ள தமிழர்களுக்கு பெயர் குறிப்பிடாத தலைவர் எனவும் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாக செயல்பட்டவர் எனவும் இப்போது அமைப்புக்கு தலைமைதாங்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாகவும் அப்ரென் போஸ்ரன் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. பிரபாகரனின் மரணத்தின் பின்னர் புலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் கைதானதன் பின்னர் இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக கூறப்படுகிறது. நோர்வேத் தமிழரான இந்த மனிதர் 2005 தொடக்கம் நோர்வேயிலிருந்து இயங்கி வருவதாகவும் கே.பி.யின் வன்முறையற்ற பாதைக்கு எதிரான அணியை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.

இவர் மிகவும் ஆபத்தான மனிதர் என்று இந்தியாவின் புகழ்பெற்ற பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் கே போன்ஸ்லே கூறியுள்ளார்.

நோர்வேயில் சுதந்திரமாக வெளிநாட்டு அமைப்பொன்றின் தலைவர் இயங்கினால் அது நோர்வேக்கு துரதிர்ஷ்டமான விடயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சொல்ஹெய்ம் உறுதிப்படுத்துகிறார்

இதேவேளை, நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் முன்னர் சமாதான அனுசரணையாளராக செயற்பட்டவருமான எரிக் சொல்ஹெய்ம் கூறுகையில்;

நாங்கள் அறிக்கைகளை பதிவு செய்துள்ளோம். எது உண்மை, எது பொய் என்பது பற்றி எமக்கு சிறிதளவே தெரியும் என்று அவர் கூறியதாக அப்ரென் போஸ்ரன் பத்திரிகை தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டால் சர்வதேச ரீதியாக அது தொடர்பாக சகிப்புத்தன்மை ஏற்படாது என்று சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

அவர் மிதவாத கொள்கையுடையவர். அஹிம் சாவழியில் செல்பவர். விடுதலைப்புலிகள் எந்தப் பாதையை இப்போது தேர்ந்தெடுக்கப்போகின்றனர் என்பது பற்றி இப்போது எமக்கு தெரியாது என்று நோர்வே அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்ததாக அப்ரென் போஸ்ரன் கூறியுள்ளது.

தரக்குறைவான பிரசாரம்

இது இவ்வாறிருக்க, விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுபவரின் மனைவி தனது கணவருக்கு விடுதலைப்புலிகளின் நடவடிக்கையுடன் தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார். 2005 இல் திருமணம் செய்த அவர்களுக்கு பிள்ளையொன்று உள்ளது. 2004 இல் விடுதலைப்புலிகளின் தூதுக்குழு நோர்வேக்கு வருகைதந்தபோது அவரும் (கணவரும்) வந்ததாக அப்பெண் கூறியுள்ளார். ஆனால், புதிய தலைவராக அவர் நியமிக்கப்படும் சாத்தியத்தை வதந்திகள் என்று அவர் நிராகரித்திருக்கிறார்.

“”தரக்குறைவான பிரசாரத்தினால் எமக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பலர் ஏன் அவருடைய பெயரை குறிப்பிடுகிறார்கள் என்று எனக்கு தெரியாது. எனது கணவர் அரசியல் ரீதியாக செயல்படுபவர் அல்ல’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். தனது கணவர் புலிகளின் தலைவர் என கூறுபவர்கள் பற்றி பொலிஸார் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பொலிஸ் பாதுகாப்புத்துறை இது தொடர்பாக அப்ரென் போஸ்ரனுக்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக அப்பத்திரிகை கூறியுள்ளது.

நன்றி ; தினக்குரல்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • Norway
    Norway

    ஜெயதேவனை கடத்தியவர் இவர்தானே ஏன் ஜெயதேவன் அமைதியாக உள்ளார். பயந்துவிட்டார் போலும். ஜெயதேவனுக்கு எதிராக லண்டனில் பல நடவடிக்கைகளை எடுக்க தூண்டியவரும் இவர்தானே ஏன் ஜெயதேவனுக்கு எதிராக நெருப்பு ஓர்க் இணையத்தை பதிந்து நடாத்திவிட்டு வேறு ஒருவரின் தலையில் பளி போட்டதும் இவர்தானே ஏன் ஜெயதேவன் அமைதி.

    Reply
  • மகுடி
    மகுடி

    நோர்வே நன்றாக நாடகமாடுகிறது.

    //உண்மையானால் அவரைக் கைதுசெய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு நோர்வேயிடம் இலங்கை கோரிக்கை விடுக்கும் என வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித கோஹண கூறியுள்ளார்.//

    அப்படிப் போடு அரிவாளை.

    Reply
  • Calistus Jayatilleke
    Calistus Jayatilleke

    1. There is definitely something more than the Tamil welfare behind these moves. EU and US are instrumental to all these developments. We have to study the bigger picture.

    2. No Way : this should be nipped in the bud. It is well known how Norway supported the Tiger movement. Maybe this new man is trying to establish the trans-national government in Norway.

    3. It is much easier to kill or abduct a person in Norway (compared to Malaysia) irrespective of whether the host country support or not. The new terror leader better buy a metallic locker with a bed inside

    4. I am not sure whether the Tamils struggle for their Eelam can be continued under the LTTE banner anymore. It is possible that there will be a new organisation comprising more number of moderate tamils across the world. Already they are in pieces now.

    5. One goes another one comes, simple as that. Norway will never do anything against the LTTE. Mahinda goes another one comes. What’s the difference.

    6.who ever emerges in the name of Ltte must be aradicated & this name should not exist in tha face of this earth. May God Bless our mitherland!!!

    7. India trained the LTTE in the eighties in order to chalenge the West.Now the Time has come for the Western countries to train the LTTE to chalenge China. We can reject Visa for Westerners but we can’t do anything about missiles coming and falling in our cities with dirty nuclear warheads. Guys, this is a serious stuff. Let us stop boasting that we are the only intelligent guys and the rest of the world are ruled by dummies. India, China and the West are competing for our land and we have just become puppets. It is Indias and Westerns interest to keep LTTE alive and ticking so that they can all continue to play their games. We desperately need a leadership that would reject all the foreign interventions.

    8. LTTE will have lot of advisers in Norway.Brother ERICK S may be in the front line to advice the new leader who may eventualy end up in SL like KP.

    9. No point in hunting people.If a political solution acceptable to all minority communities can be delivered there will be no LTTE.

    10. GIVE THE TAMILS A POLITICAL SOLUTION AS SOON AS POSSIBLE SO THAT THE CHANGING OF LTTE LEADERS(MUSICAL CHAIRS ) WILL NOT HAVE ANY BEARING ON THEM

    11. Oh Norway will keep pampering all LTTE terrorists! Sri Lanka should halt all sorts of ties with Norway!

    12. OVER 90 persent of the TAMILS living in NORWAY, holding Norwegian PASSPRORT. They are well educated and contribute to the NORWEIGN SOCITY.

    13. Whoever you are, hope you renounce violence and look for a peaceful solution. You may be aware that the violence and the ethnic conflicts were started by Sinhalese who murdered so many Tamils. LTTE tried with vengence of violence and failed. But Mandela peacefully won. So look to Mandela’s role in Sri Lanka.

    14. The fact of the matter is that LTTE will have a new leader its a matter of time. Now if the new leader is clean of any terrorisem and reside in EU well SL has no hope of getting him. Stop this worldwide hunting and put your house in order i.e help the tamils in NE asap without keeping them in camps.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    புலிகளின் தலைமைப்பீடம் விட்ட பிழைக்களுக்காக முற்றுமுழுதாக நாம் புலிகளை மறுதலிப்பது எமது பல்லைக்குத்தி எதிரிக்கு மணக்கக் கொடுக்கிற மாதிரியான செயலாகும். இங்கே பின்நோட்டம் எழுதுபவர்களும் சரி முன்நோட்டும் எழுதுபவர்களும் சரி ஒரு விடயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். என்னவெனின் நாம் எழுதும் ஒவ்வொரு எழுத்துக்களும் மிக உன்னிப்பாக அரசால் அவதானிக்கப்படுகிறது. சேர: சோழ: பாண்டியர்களுக்குப் பின்னால் உலகிலுள்ள தமிழர்கள் பெயர் சொல்லுமாறு ஒரு படையை வைத்திருந்தது பிரபாகரன் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் பிரபாகளை வேவலமாக நடத்தியபோதும் வாழாதிருந்து எம்சமூகம் எதிரிக்கு தடியெடுத்துக் கொடுகிறது. பிரபாரன் தனிமனிதனானலும் ஈழத்தமிழன் என்று குறியிடாக்கப்பட்டவர். அன்று செத்துக்கிடந்தது பிரபாகரன் அல்ல. ஏகோபித்த தமிழ்மக்களின் மானம். இந்த மானம் காக்க புலன்பெயர் சமூகம் புலிகள் உள்ளீடாக என்ன செய்தார்கள்? எந்த எதிர்ப்பைக் காட்டினார்கள். எதிர்ப்புகள் எதுவும் இல்லாது போனது சிங்கள அரசுக்கு என்னத்தைக் காட்டுகிறது. ஆம் தமிழர்களை நாம் என்னவும் செய்யலாம். மேய்பன் போனபின்பும் மேய்பனுக்காகக் குரல் கொடுக்காத இந்த அடிமைச் சமூகம் நெடியவனுக்கா குரல் கொடுக்கப்போகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் நெடியவனுக்கு எதிராகவும் புலிகளின் மேலுள்ள வன்மத்தைத் தீர்க்கும் ஒரு முயற்சியாகத்தான் எண்ணுகிறீர்களே தவிர இதன் பின்விளைவுகளையும் புலத்துத் தமிழர்களின் பேடித்தனத்தை அரசு எப்படிப் புரிந்து கொள்ளும் என்பதையும் மறந்து விடுகிறீர்கள். புலிகள் பலமாக இருந்த போது அவர்களை தனிமனிதனாக நின்று விமர்சித்தவன். தயவு செய்து தூரநோக்கோடு அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பாருங்கள். புலிகளுக்கு என்று ஒரு தலைமை நிச்சயம் வேண்டும் இல்லையெனில் துப்பாக்கி உடைய ஒவ்வொருவனும் தனித்தனி இயக்கங்களைத் தொடக்கி ஒரு வாழைப்பழத்துக்காக கொலை செய்யும் ஒரு புதிய சோமாலியா உருவாகும். புலிகளின் புதுத்தலைமை நிச்சயம் பிரபாகரன் மாதிரித்தான் இயங்க அல்லது இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

    Reply
  • lio
    lio

    குசும்போ
    சேர, சோழ, பாண்டியர்களுக்குப் பின்னால் உலகிலுள்ள தமிழர்கள் பெயர் சொல்லுமாறு ஒரு படையை வைத்திருந்த பிரபாகரன் கொலையைத்தவிர வேறென்ன தமிழ்மக்களுக்காகச் செய்தவரெண்டு நீங்கள்- அதாவது தனியனாக நின்று விமர்சித்த நீங்கள்- லிஸ்ட்அவுட் பண்ணி முன்வைப்பீர்களா?? எதிரிகளுடன் சேர்ந்துதான் பிரபா தமிழீழப் போராட்டம் நடத்தி அதாவது அவங்கட பல்லைக்குத்தி தமிழருக்கு மணக்கத் தந்தவர்.

    அடுத்த தலைமையைப்பற்றி அங்கலாய்ககிறதைப் பார்க்கத் தெரிகிறது குசும்போ நீங்கள் நிச்சயமாகப் புலிதான். அதோட உங்களுக்குக் கேபியை பிடிக்காது என்று உங்கட பழைய பின்னோட்டங்கள் சொல்லுது.

    இவ்வளவு காலமும் பிரபா ஆட்சியில் சோமாலியாவுக்குக் குறையாமல் எல்லாம் நடந்தது. கம்பிக்குள் அகப்பட்ட சனங்களை போய்ப் பாருங்கோ. சோமாலியா தான். /புலிகளின் புதுத்தலைமை நிச்சயம் பிரபாகரன் மாதிரித்தான் இயங்க அல்லது இருக்க வேண்டிய அவசியம் கிடையாது/ ஆம் சந்தர்ப்பங்கள் 50க்கு 50 தான் . ஆனால் பழைய பெயரிலேயே இயக்கம் நடத்த யோசிக்கிறவர்கள் பழைய தலைமையின் தவறுகளுக்கு என்ன சொல்ல உத்தேசித்துள்ளார்கள் என குசும்போ நினைக்கிறீங்கள்.

    Reply
  • Ranjan
    Ranjan

    Kusumbo சேர சோழ பாண்டியர்கள் எவரும் தமிழரின் முதுகில் சுடவில்லை. ரயர் போட்டு றோட்டு றோட்டாகக் கொழுத்தவில்லை. தமிழரிடம் கப்பம் கேட்டு நசுக்கவில்லை. தன்வினை தன்னைச் சுட்டதற்கு புலம்பெயர்ந்த மக்களை நோவானேன்; புலிகளை விமர்சித்தது நீங்கள் மட்டும்தான் என்று சொல்வதைப் பார்த்தால் நீங்கள் இவ்வளவு காலமும் கண்ணை மூடிக் கொண்டு பால் குடித்திருக்கிறீர்கள் என்பது தெளிவு.

    Reply
  • Mr Sivathasan
    Mr Sivathasan

    குசும்பு உமது கருத்துக்கள் மூலம் துரோகிக்கு வக்காளத்து வாங்கி விட்டீர் என்பதை மறக்க வேண்டாம். காரணம் பிரபாகரனும் புலி இயக்கமும் தமிழர்களை காட்டீக்கொடுத்தது மட்டுமல்லாமல் இனிமேல் பல வருடங்களுக்கு தலைஎடுக்காமல் வைத்துவிட்டதை மறந்து எழுதியுள்ளீர் அல்லது நீர் போன்ற சிலர் புலிகளை மீண்டும் கொண்டுவர முயற்ச்சிப்பவர்களில் ஒருவராக இருக்கலாம்.

    எக்காரணம் கொண்டும் புலிகள் இனிமேல் தமிழர்கள் அரசியலில் வர அனுமதிக்க முடியாது. எம்மவர்களை எல்லாம் டயர் போட்டு தெருக்களில் கொழுத்திய புலியும் புலிகளின் அமைப்பினரும் இனிமேல் அரசியல் அமைப்பாகக் கூட வர அனுமதிக்க முடியாது. எத்தனை தமிழர்களை வீட்டுக்கு வெளியாலே இழுத்து வந்து கொலை செய்தபாவிகள். வன்னியில் செய்த கொடுமைகள் இனிமேல்த்தான் வெளிவர உள்ளது தமிழர்களை புற முதுகில் கொலை செய்த கோழைகள் வரலாறு எழுதியது புலிகளே அன்றி சேர சோழ பாண்டியர்கள் அல்ல. 30 வருடமாக மக்களை அடக்கி வைத்து தனது பட்டாளங்கள் மூலம் தனது சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்த பிரபாகரனும் அவரது பட்டாளங்களும் தமிழரின் துரோகிகளே.

    சேர சோழர் தமிழ் படைகளை வைத்திருந்து புறமுதுகுகாட்டி ஓடவில்லை. பிரபாகரனும் படைகளும் தாம் சயனைட்டு கொடுத்து சாக அனுப்பிய பிள்ளைகளை மறந்து தானும் தனது சகாக்களும் தமது பிள்ளைகள் மனைவியருடன் சரணடைந்தது, தமிழர்கள் உரிமைகளைப் பெற அல்ல, தமது உயிர்ப்பிச்சை கேட்டு. இவரது பேக்காட்டி ஜில்மால் விட்ட கதைகளில் பாடம் படித்த அரசு இவரக்கு பாடம் படிப்பித்தது – சேர சோழனுக்கு கோடாலி கொத்து விழுந்ததா. அவர்களது எதிரிகளே அவர்களுக்கு மரியாதை செலுத்தினர் ஆனால் பிரபாகரனுக்கு கோவணத்துடன் சேறு பூசினர் என்பதை மறக்க வேண்டாம். இந்த புலிகள் அமைப்பே தவறானது புலிகள் அமைப்பை ஊருவாக்கிய பிரபாகரன் தவறானவன். அந்த அமைப்பில் இருந்தவர்களும் முழுப்பேருமே தவறானவர்கள். இனிமேல் புலிகள் அமைப்பின் மணமே தமிழர்களுக்கு பிடிக்காது அது நெடியவன் என்றால் என்ன? கே பி என்றால் என்ன? வேறு யாராக இருந்தால் என்ன? அவர்கள் இலங்கை அரசிடம் கையளிக்கப்பட வேண்டியவர்கள்.

    தமிழ் மக்கள் தமது துரோக வரலாற்றிலிருந்து பாடம் கற்றுள்ளனர். தாம் தமது தலைமைகளை மீண்டும் தெரிவு செய்வர். அது கூட்டணி போல் அல்லாது பயங்கரவாத புலிகள் போல் அல்லாது இலங்கை அரசிடம் மண்டியிட்டு கிடக்கும் குழுக்கள் போல் அல்லாது சரியான தலைவர்களை அடையாளம் கண்டு கொள்வர்.

    வெளிநாட்டில் வாழுபவர்கள் தங்கள் வெளிநாட்டு வாழ்க்கையை பார்த்துக்கொண்டு, அவர்களுக்கு தொந்தரவு செய்யாமல், உதவி செய்தால் உத்தமம்.

    Reply
  • BC
    BC

    கொடுமை மிக்க வாழ்வையும் படுகொலைகளையும் பொருளிழப்பையுமே மக்களுக்கு தந்த புலிகள் எக்காரணம் கொண்டும் தமிழர்கள் அரசியலில் வர அனுமதிக்க கூடாது.

    Reply
  • மாயா
    மாயா

    // அன்று செத்துக்கிடந்தது பிரபாகரன் அல்ல. ஏகோபித்த தமிழ்மக்களின் மானம். இந்த மானம் காக்க புலன்பெயர் சமூகம் புலிகள் உள்ளீடாக என்ன செய்தார்கள்? – Kusumbo //

    அன்றும் இன்றும் செய்ததைத்தான் நாளையும் செய்வார்கள். எனவே பிரபாகரன் வருவார் எனும் நம்பிக்கையோடு கார்த்திகை வரை காத்திருப்பவர்கள், அன்றும் எல்லாம் தலைவருக்குத் தெரியும் என பின்னால் ஜால்ரா அடித்ததே தவிர , வேறு எதையும் சிந்திக்கவே இல்லை. இனியும் சிந்திக்கப் போவதில்லை. கையில் இருந்ததை வாயில் போட்டு மெல்லத் தெரியாமல் , நந்திக் கடற்கரையில் மண்ணானது போல புலிகளினால் ஒரு போதும் மண் மீட்க முடியாது. தொடர்ந்தும் மண்ணுக்கு மக்களை இரையாக்கத்தான் முடியும். எனவே அந்த மக்களை இனியாவது வாழ விடுங்கள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலம்பெயர் தமிழர்கள் இருக்கும் வரை புலிகள் ஏதோ ஒரு ரூபத்தில் வந்தே தீருவார்கள். அவர்களும் தொழில் பொழுதுபோக்குகள் வருமானத்திற்கு ஒருவழியை தேடிக் கொள்ளவேண்டும். அரசியல் வேண்டுமென்று கேட்கிறர்களா? அதெல்லாம் இருக்குதையா? யாழ்பாணதில்லிருந்து மலையகத்திற்கு போய் கண்டி பண்டாரவளை நுவரெலியா நகரங்கள் கிராமங்களுக்கு போய் கடை வைச்சு பிழைக்கலையா? புலியில்லாவிட்டால் பூனை.

    Reply
  • thurai
    thurai

    தமிழரென்றால் புலிகள், புலிகள் என்றால் தமிழர் என் பிரச்சாரம் செய்து ஈழ்த் தமிழர்களை அடிமையாக்கியவர்கள் புலத்துப் புலிகளின் ஆதரவாளர்கள். இவர்கள் இன்னமும் திருந்தியாகத் தெரியவில்லை.

    இலஙகை அரசாங்கம் தமிழர்களிற்கும் புலிகளிற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டிக் கொள்ளவே விரும்புகின்றது. இதனால் பலனடைபவர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களேயாகும். உலக அரசுகளின் அனுதாபத்தை தமிழர்களிற்கு கிடைக்க இலங்கை அரசே உதவி செய்கின்றது.

    புலிகள் தமிழரிடையே களையெடுப்பதாக் கூறிப் பயிரையே மேய்ந்தவர்கள். இப்போ தமிழரிடமுள்ள களைகளை அரசாங்கமே அகற்றுவது வரவேற்க வேண்டியதேயாகும்.

    துரை

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /புலம்பெயர் தமிழர்கள் இருக்கும் வரை புலிகள் ஏதோ ஒரு ரூபத்தில் வந்தே தீருவார்கள். அவர்களும் தொழில் பொழுதுபோக்குகள் வருமானத்திற்கு ஒருவழியை தேடிக் கொள்ளவேண்டும். அரசியல் வேண்டுமென்று கேட்கிறர்களா? அதெல்லாம் இருக்குதையா? யாழ்பாணதில்லிருந்து மலையகத்திற்கு போய் கண்டி பண்டாரவளை நுவரெலியா நகரங்கள் கிராமங்களுக்கு போய் கடை வைச்சு பிழைக்கலையா? புலியில்லாவிட்டால் பூனை./–
    – சரியாக சொன்னீர்கள் சந்திரன் ராஜா!!

    /Calistus Jayatilleke on August 15, 2009 5:05 pm
    1. There is definitely something more than the Tamil welfare behind these moves. EU and US are instrumental to all these developments. We have to study the bigger picture…../– இப்படி பின்னோட்டம் விட்டிருக்கும் இவரும் இந்த ரகத்தை சார்ந்தவர்தான்!.

    திமிங்கிலங்களின் (இந்தியா ,அமெரிக்கா, நார்வே, சைனா) “வாயில்” அமர்ந்து கொண்டு “குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்” இவர்களின் அசட்டு தைரியத்தை? (கைகால் அகப்படாதவரையில், அது தைரியம்தானே, “அகப்பட்டவன் வன்னி மக்கள் அல்லவா?!!”) என்னவென்று சொல்லுவது!!.

    Reply
  • abeywickrema
    abeywickrema

    The White House and the US State Department remain mum over the Sri Lankan government’s recent allegations against U.S establishment links with a pro LTTE front organization called “Tamils for Obama”.
    Media Minister Lakshman Yapa Abeywardena speaking at the weekly press conference last Wednesday disclosed that the LTTE had supported Barack Obama’s Presidential campaign using the “Tamils for Obama” front organisation.
    Minister Abeywardena also said that the pro LTTE front organisation had maintained cordial relations with the US State Department after the elections, according to disclosures made by K.P. alias Kumar Pathmanathan during the course of interrogation. Meanwhile, despite allegations levelled by the Sri Lankan government, the US State Department organised a Tamil Diaspora meeting last Tuesday in Washington D.C.

    Assistant Secretary of State for South and Central Asian Affairs, Robert Blake and U.S. Charge d’Affaires in Sri Lanka James Moore chaired the meeting with sixteen representatives of Tamil Diaspora groups based in the United States, It is reported that top State Department officials discussed the current humanitarian situation, and current political developments in Sri Lanka with the Tamil Diaspora at the State Department.

    Reply