வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள 30 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்பினை வழங்கி அதன்மூலம் நிரந்தரமான வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க ஊழியர் நல்லுறவு மற்றும் மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்தகால யுத்தசுழ்நிலை காரணமாக இளைஞர், யுவதிகள் வேலை வாய்ப்பின்றி மிகவும் கஷ்டமான சுழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடனுதவிகளை வழங்கி சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுத்துவதன்மூலம் தேவையான நாளாந்த வருமானத்தைப் பெற்றுக்கொள்ள வழியேற்படுத்தவே அமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றது.
இவ்வருட இறுதிக்குள் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மகிந்த மதிகவெல அறிவித்துள்ளார