ஒற்றைப் பரிமாண ஏக தலைமைத்துவ அரசியல் இயக்கம் மே 18ல் தனது வரலாற்று முடிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து பன்மைத்துவ அரசியல் செயற்பாடுகள் தீவிரமாகி உள்ளது. உறங்கு நிலையில் தங்கள் அரசியல் அபிலாசைகளை தக்க வைத்துக் கொண்டவர்கள் பலரும் தற்போதுள்ள சூழலை சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் மிகக் கவனமாக உள்ளனர்.
புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் புலிகளும் புலிகள் அல்லாத பிரிவினரும் ஈடுபட்ட உள்ளனர். இவர்களை பெரும்பாலும் மூன்று வகைக்குள் கொண்டுவரமுடியும்.
அ) புலி ஆதரவாளர்கள் – தேசியத் தலைவர் வே பிரபாகரனின் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து அவர் கொள்கை வழி செல்ல வேண்டுமென்பவர்கள்.
ஆ) அரச ஆதரவு சக்திகள் – இலங்கை அரசுடன் அனுசரித்து நடந்தே தீர்வை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றனர்.
இ) அரசுடனும் புலிகளுடனும் தங்களை அடையாளப்படுத்தாத அணி சேரா அணி.
இம் மூன்று அரசியல் பிரிவுகளைச் சார்ந்தவர்களும் வெவ்வேறு வகையான தீர்வுகளை நோக்கி செயற்படுகின்றனர்.
அ) தமிழீழ் – புலிகள் தங்களுக்குள் முரண்பட்டாலும் கொள்கையளவில் தமிழீழத்தைக் கைவிடவில்லை. அவ்வாறு கைவிடும் பட்சத்தில் அவர்கள் புலிகள் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்க முடியாது. அதே சமயம் புலிகளுடனும் அரசுடனும் அணி சேரா அணியில் உள்ள சிறு பிரிவினரும் கொள்கையளவில் தமிழிழத்தை தொடர்ந்தும் வைத்துள்ளனர்.
ஆ) ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தீர்வு – புலிகளுடனும் அரசுடனும் அணி சேரா அணியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இம்முடிவிலேயே ஏற்கனவே இருந்தனர். இன்று இவர்கள் தீவிரமாக இதனை வலியுறுத்துகின்றனர். அதேசமயம் புலிகளின் தோல்வியால் ஏற்பட்ட விரக்தி தமிழீழம் சாத்தியப்படாது என்ற முடிவுக்கு இன்னும் சிலரை நிர்ப்பந்தித்து உள்ளது.
இ) இலங்கை அரசு தருவதை பெற்றுக் கொண்டு நகர்வது – இயலாமையின் மொத்தத் தீர்வாக இது உள்ளது. பெரும்பாலும் தீவிர புலி எதிர்பாளர்களும் அரச ஆதரவு அணியினரும் இந்நிலையில் உள்ளனர்.
இம்முரண்பட்ட அரசியல் பிரிவினர் முரண்பட்ட அரசியல் முடிவுகளுடன் உள்ளனர். இவ்வாறான தமிழ் அரசியல் சக்திகளிடையே குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான குறைந்தபட்ச வரையறையை நிர்ணயம் செய்வது இன்று காலத்தின் அவசியமாக உள்ளது. இதன் மூலம் பல்வேறு முரண்பட்ட அரசியல் சக்திகள் தற்போதுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முற்பட்டாலும் அவர்கள் குறைந்தபட்ச வரையறைக்குக் கீழ் செல்வதை தமிழ் அரசியல் சமூகம் தடுத்து நிறுத்த முடியும்.
இதையொட்டிய இரு சந்திப்புக்களை தேசம்நெற் ஒழுங்கு செய்திருந்தது. முதலாவது சந்திப்பு யூன் 21இலும் இரண்டாவது சந்திப்பு ஓகஸ்ட் 2 இலும் இடம்பெற்றது. இவ்விரு நிகழ்வுகளுக்கும் பேரின்பநாதன் தலைமை வகித்தார்.
._._._._._.
யூன் 21ல் இடம்பெற்ற முதற் சந்திப்பு அடுத்த கட்ட நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் என்ற தலைப்பில் இடம்பெற்றது. பல்வேறு அரசியல் தளங்களில் இருந்தும் 40க்கும் மேற்பட்டவர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். இக்கலந்துரையாடலில் பின்வரும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
அ)
வசந்தன் : கடந்த காலப் போராட்டம் பௌத்த பிக்குக்களையும் இஸ்லாமியரையும் மற்றும் பலரையும் துரோகிகள் ஆக்கிவிட்டது. எங்களுடைய அரசியல் முன்னெடுப்பிற்கு தமிழீழம் என்பதே முட்டுக்கட்டையாக அமைந்தது.
பாண்டியன் : ஒரு சமூகம் தான் தன்னை எவ்வாறு அடையாளப்படுத்த வேண்டும் என்பதனைத் தீர்மானிக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு தமிழீழம் வேண்டுமா இல்லையா என்பதை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அரசாங்கத்தக்கு வேண்டாம் என்பதற்காக எங்களுக்கும் வேண்டாம் என்ற முடிவுக்கு நாங்கள் வர வேண்டியதில்லை. குறிப்பாக பின்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். 1) உண்மையறியும் குழுவொன்று அவசியம். 2) ஆயுதப் போராட்டம் தேவையா? இல்லையா? 3) அதிகாரப் பரவலாக்கம் தமிழ் மக்களுக்கு மட்டுமா? அல்லது அனைவருக்குமா? 4) 13வது திருத்தச் சட்டம் ஏற்கனவே உள்ளது. 5) குடியேற்றம்
ரவி சுந்தரலிங்கம் : தமிழ் மக்கள் தேசிய இனமா என்பதில் எனக்கு கேள்விகள் உண்டு. இலங்கை மக்களுக்கு பொதுவான பிரச்சினைகள் பல உண்டு. அவர்கள் தங்களை பொதுவாகவும் அடையாளம் காண்கிறார்கள். ஒரு பொதுத் தேசியம் ஒன்றை உருவாக்குவது பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.
நிஸ்தார் மொகமட்: ரிஎன்ஏ தங்கள் பதவிகளைத் துறந்து மறு தேர்தலுக்கு தயாராக வேண்டும். ரெடிமேட் தீர்வுகள் எதுவும் சரிவராது. அனைவரையும் உள்வாங்கிய ஒரு தீர்வுக்கு தயாராக வேண்டும்.
சார்ள்ஸ் : இலங்கையில் தமிழர்கள் தமிழன் என்ற காரணத்தினாலேயே ஒடுக்கப்படுகிறார்கள். புலிகளுடைய தோல்வி செப்ரம்பர் 11க்குப் பின்னர் விடுதலை அமைப்புகளுக்கு ஏற்பட்ட தோல்வியின் தொடர்ச்சியே. தமிழர்களுடைய போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை.
பாலசுகுமார் : ஊரில் உள்ளவர்கள் கோபத்துடன் உள்ளார்கள். அவர்களது கோபம் நியாயமானது. இதுவெல்லம் ஏன் நடந்தது எனக் கேட்கிறார்கள். ஊரில் உள்ளவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது மிக முக்கியம்.
கணநாதன்: தமிழர்களுடைய போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டம் சரியானதா இல்லையா என்பதை எப்படி தீர்மானிப்பது? மக்கள் இன்னமும் மிகுந்த ஒடுக்கு முறைக்குள் தள்ளப்பட்டு உள்ளார்கள். இலங்கை அரசு தற்போது தனது ஒடுக்குமுறையை மேலும் தூண்டியுள்ளது. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கான எந்தத் தீர்வையும் இலங்கை அரசு முன்வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இடம்பெயர்ந்து முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளவர்களின் தேவைகள் உடனடியானது. அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சேனன் : இன்று நாங்கள் எந்தக் கட்டத்திற்கு வந்திருக்கின்றோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பல்வேறு அடையாளங்களாகப் பிளவுபடத்தப்பட்டு அவை கூர்மைப்படுத்தப்பட்டும் உள்ளது. பொதுத் தேசியத்தை அமைப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் சிங்கள அரசுடன் – இலங்கை அரசுடன் சேர்ந்து செயற்படுவது ஆபத்தானது.
நித்தி : அரசாங்கம் ஏதோ ஒரு தீர்வை முன்வைக்க முயற்சிக்கிறது. அதில் நாம் கூடிய தீர்வைப் பெறுவதற்கு ரிஎன்ஏயைப் பலப்படுத்த வேண்டும்.
ராஜேஸ் பாலா: முதலில் இந்த தமிழீழம், ஈழம் என்ற கதைகளை நாங்கள் விட வேணும். அங்குள்ள இடம்பெயர்ந்த முகாம்களில் உள்ள மக்களின் நலன்கள் தான் இப்பொழுது முக்கியம். நாங்கள் முரண்டு பிடித்து அரசியல் செய்து எதையும் சாதிக்கவில்லை. இனிமேல் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே தமிழ் மக்களுக்கு எதையாவது செய்ய முடியும்.
சிறி : தமிழ் மக்களுடைய அரசியல் அரங்கு பலவீனமாக உள்ளது. மேலும் பல்வேறு மூலதனங்கள் நாட்டினுள் நுழைந்து இலங்கை மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. இவற்றுக்கான ஒன்றுபட்ட போராட்டங்கள் பற்றி சிந்திக்க வேண்டும்.
நடாமோகன் : நான் மனைவி பிள்ளை என்று வாழ்கிறேன். என்னைப் போன்று என் மொழி பேசுபவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
ஆ)
ஆர் ஜெயதேவன்: நாங்கள் எவ்வளவுதான் கூட்டம் போட்டு பேசினாலும் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானது. இப்போது நடந்து முடிந்த அவலம் எதிர்பார்க்கப்பட்டது தான். பிரபாவும் – பொட்டரும் செய்த அரசியலின் விளைவு இது. புலம்பெயர்ந்தவர்களின் குரல்கள் டெல்லியை நோக்கிச் செல்ல வேண்டும். இது தொடர்பாக நான் இந்திய அதிகாரிகளிடமும் பேசி உள்ளளேன்.
ரவி சுந்தரலிங்கம் : இந்தியாவின் பாத்திரம் முக்கியமானது. பிந்திரன் வாலேயை உருவாக்கி சீக்கிய தேசியத்தை அதன் உச்சத்திற்குக் கொண்டு சென்று வேரறுத்தது இந்தியா. அதுவே முள்ளிவாய்க்காலிலும் நடந்தது. சிங்கள தேசியத்தின் உச்சத்திற்குச் செல்லும் மகிந்த ராஜபக்சவிற்கும் இது நடக்காது என்றில்லை. புலம்பெயர்ந்தவர்கள் இந்தியாவின் பாத்திரத்தை அசட்டை செய்ய முடியாது.
சையட் பசீர் : தமிழர்கள் என்று மட்டுமல்ல முஸ்லீம்கள் என்றும் சேர்த்துப் பேசப்பட வேண்டும். இப்போது முகாம்களில் உள்ள மக்களின் அவலம் வேதனையானது. அவர்கள் மீளவும்குடியமர்த்தப்பட வேண்டும். அதேசமயம் பலவருடங்களுக்கு முன் யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் இன்னமும் புத்தளம் முகாம்களில் தான் வாழ்கிறார்கள். அதற்காக எந்தக் கூட்டமும் கலந்துரையாடலும் நடாத்தப்படாதது மனவருத்தமானது.
போல் சத்தியநேசன்: புத்தளம் முகாமில் உள்ளவர்களின் விடயங்கள் பேசப்படாதது வேதனையானதே. அனால் இன்றுள்ள ஊடகத் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அன்றிருக்கவில்லை. இன்றைய அவலம் உடனுக்குடன் வந்தடைவதால் அதற்கான பிரதிபலிப்புகளும் உடனடியானவையாக உள்ளது. ஆனால் இங்குள்ள எல்லோருமே புத்தளம் முகாம்களில் உள்ளவர்கள் மீது அனுதாபமுடையவர்களே. அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களுமே.
எஸ் வசந்தி : இலங்கையின் நிலை அதன் பிராந்திய நிலைகளாலும் தான் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் இலங்கையின் அரசியல் சூழலில் இந்தியாவின் தாக்கம் முக்கியமானது.
எஸ் அரவிந்தன் : நாங்கள் எந்த அடிப்படையில் வேலை செய்ய முற்படுகிறோம் என்பதை நிர்ணயித்த பின்னரே பிராந்திய அடிப்படையில் எவ்வாறு செயற்படப் போகின்றோம் என்ற முடிவுக்கு வர முடியும்.
கணநாதன் : இந்தியா தொடர்பாக தலைமுறையாக எங்களுக்குள் பிளவு உள்ளது. சிவசங்கர் மேனனைக் கொண்டு இந்தியாவைக் கையாள முடியாது என்றே நினைக்கிறேன். இலங்கை இந்தியாவின் விளையாட்டு மைதானம். ராஜபக்சவுக்கு ஒரு அதிஸ்டம் அடித்தள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவை வைத்து அரசியல் நகர்த்துவது தவறானது என்றே நான் கருதுகிறேன்.
பாலா : இந்தியாவில் தமிழ் நாட்டிலும் ஏராளமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இந்தியாவில் தங்கி நிற்கும் வணங்கா மண் கப்பலில் உள்ள பொருட்களை அங்குள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கே கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
சையட் பசீர் : நாங்கள் இலங்கையர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தியா போன்ற நாடுகளை வைத்துக் கொண்டு இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இலங்கைப் பிரச்சினைக்கான உள்ளுர்த் தீர்வு, சுய தீர்வு ஒன்றே பொருத்தமானது.
இ)
போல் சத்தியநேசன் : இடைக்கால அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலமே தற்போதுள்ள நிலையில் இருந்து மீட்சி பெறமுடியும். நாங்கள் முன்நோக்கி நகர்வது பற்றி சிந்திக்க வேண்டும்.
ரவி சுந்தரலிங்கம் : தாயகத்தில் உள்ளவர்கள் சமூக மாற்றம் ஒன்றிற்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுடைய வர்க்க நிலையும் மாற்றமடைந்துள்ளது. இவற்றை கவனத்திற் கொள்ள வேண்டும்.
ஆர் ஜெயதேவன் : இலங்கையில் உள்ள அமைப்புகள் மிகுந்த கஸ்டத்தை எதிர்நோக்குகின்றன. அரசாங்கம் மோசமான அழுத்தங்களை வழங்குகிறது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு இனக்கலப்பான சமூகம் ஒன்றை உருவாக்கவும் அரசு முயல்கிறது.
வாசுதேவன் : பொது வேலைத் திட்டம் ஒன்றின் கீழ் நாங்கள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். இதுவரை இருந்த ஏகபிரதிநிதித்துவம் ஜனநாயக மறுப்பு என்பவற்றைக் கடந்து பொது வேலைத்திட்டத்திக் கீழ் செயற்பட வேண்டிய காலம் இது.
ஆர் யூட் : இதுவரை காலமும் நடந்த செயற்பாடுகள் எங்களை இரகசிய சமூகமாக மாற்றி விட்டது. ஒருவரை ஒருவர் நம்ப முடியாத புலனாய்வுச் சமூகமாக நாம் இருந்துவிட்டோம். மனம் திறந்து பேசுவதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
பாலசுகுமார் : பொது வேலைத்திட்டத்தின் கீழேயே நாங்கள் அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்ல முடியும்.
சார்ள்ஸ் : சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பொது வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கிச் செயற்பட வேண்டும்.
சுகுண சபேசன் : புலம்பெயர்ந்தவர்களுக்கு கடமையொன்று உள்ளது. அவர்கள் ஜனநாயகச் செயன்முறையை ஊக்குவிக்க வேண்டும்.
தயா : இப்போது இங்குள்ள இணைவும் இணக்கப்பாடும் இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
சேனன் : ஜனநாயக நடைமுறையை ஜனநாயகச் செயன்முறையூடாகவே ஏற்படுத்த முடியும். மக்களை ஜனநாயகச் செயன்முறையில் எப்படி ஈடுபடுத்துவது என்பது பற்றி நாங்கள் கவனமெடுக்க வேண்டும்.
எம் பாலன் : பொது அடிப்படையில் ஒரு உடன்பாடு எட்டப்படுவது அவசியம்.
பாலமுரளி: தமிழ் அரசியல் அமைப்புகளிடையே குறைந்தபட்ச உடன்பாடு ஒன்று எட்டப்பட வேண்டும்.
பாண்டியன் : தாயகத்தில் உள்ள மக்களைப் பலப்படுத்துவதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்று அவசியம். காலப் போக்கில் அவர்களுக்கு என்ன தேவையோ அதை அவர்களே பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளைச் செய்வார்கள்.
ரவி சுந்தரலிங்கம் : எங்களுக்கு கலாச்சாரப் புரட்சி ஒன்று அவசியமாகத் தேவைப்படுகிறது. அதன் மூலமாக ஒரு சமூக மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இக்கலந்துரையாடலில் தமிழ் மக்களுடைய அரசியல் அவர்களுடைய எதிர்காலம் பற்றி பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டது. ஆயினும் பொது இணக்கப்பாடும் பொது வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் பலரும் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி இருந்தனர். அதன் அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அரசியல் சக்திகளுக்கு இடையே புரிந்தணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை அனைவரும் வலியுறுத்தினர். அதற்கு குறைந்த பட்ச புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் தொடர்ச்சியாக குறைந்தபட்ச புரிந்துணர்வு எட்டப்பட வேண்டிய விடயங்கள் அதன் வரையறைகள் பற்றி கலந்தரையாடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அம்முடிவின் அடிப்படையில் ஓகஸ்ட் 2ல் ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பில் இரண்டாவது சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் 70 பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்தக்களைப் பகிர்ந்து கொண்டனர். இச்சந்திப்பிற்கும் பேரின்பநாதன் தலைமை தாங்கினார்.
._._._._._.
ஓகஸ்ட் 2ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பிலான சந்திப்பில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால உறுப்பினரும் பின்னர் தீப்பொறிக் குழுவாகச் செயற்பட்டவரும் தீப்பொறியின் வெளியீடாக அமைந்த உயிர்ப்பு சஞ்சிகையின் ஆசிரியருமான ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ரர்) ஆரம்ப உரையை வழங்கினார்.
”இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அரசுடன் இணைந்து செயற்படுவது முதல் தனியாகப் பிரிந்து சென்று தனியரசு அமைப்பது வரை பல்வேறு சாத்தியக்கூறுகள் உண்டு. கிராம சபை மாவட்ட சபை, 13வது திருத்தச் சட்டம், அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கம், சமஸ்டி என்று இவற்றை விரித்துச் செல்லலாம்” என்று குறிப்பிட்ட ரகுமான் ஜான் ”நாங்கள் குறைந்தபட்சம் எதற்குச் செல்லலாம்” என்பது பற்றி முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ”பொதுப் புத்தியில் உள்ள விடயங்கள் ஆதிக்க சித்தாந்தத்தினாலேயே நிர்ணயம் செய்யப்படுகின்றது. கருத்துத்தளத்தில் பேரினவாதம் கட்டமைத்த சொல்லாடல்களே மேலாண்மை செலுத்துகின்றது.” என்றும் தெரிவித்தார். ”குறைந்தபட்ச வரையறையைச் செய்யும் போது பேரினவாதம் கட்டமைக்கின்ற கருத்தியல் மேலாண்மையை தகர்க்கின்ற கருத்தியல் மேலாண்மையை நாங்கள் ஏற்படுத்த வேண்டும்” என அவர் தனது உரையின் இறுதியில் குறிப்பிட்டார். அவருடைய உரை முழுமையாக வெளியிடப்பட உள்ளதால் அதற்குள் செல்வது இங்கு தவிர்க்கப்பட்டு உள்ளது.
ரகுமான் ஜானுடைய உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றது.
எஸ் தவராஜா: தமிழ் சூழலில் தற்போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் 1) அகதிகள் 2) சமூகத்தை – குழுக்களை ஒன்றிணைப்பது 3) உரிமைகள். தமிழ் சமூகத்தில் உள்ள அடிப்படைத் தவறு வேறுபாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு வாழ்வது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாமை. 1977க்குப் பின்னர் மாறிய சூழலில் மக்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்கப்படவில்லை. அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே பொருத்தமான தீர்வாக அமையும். எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எம் ஜெயக்குமார் : புலிகளுடைய அழிவு அவர்கள் தேடிக்கொண்டது. எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகள் அடைய முடியாதவை என்றாகிவிடாது. அவற்றை அடையலாம் என்பதில் இன்றும் எனக்கு நம்பிக்கையுண்டு. எதிர்காலத்தில் போராட்டங்கள் சிங்கள பெரும்பான்மை மக்களையும் இணைத்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
பாண்டியன் : சிறுபான்மை இன மக்களுக்கு இனிரீதியான ஒடுக்குமுறையுள்ளது. அன்று புலிகள் இருக்கும் போது பயன்படுத்திய கொத்தை நாங்கள் தொடர்ந்தும் பயன்படுத்த முடியாது. நியாயமான கொத்தை பயன்படுத்த வேண்டும்.
சஞ்ஜீவ் ராஜ்: புலம்பெயர்ந்து வாழ்ந்ததால் புலத்தில் உள்ளவர்களுக்கு தாயகத்தில் உள்ள மக்கள் பற்றி பேச உரிமையில்லை என்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இலங்கையில் நடைபெறும் தேர்தல் தொடர்பாக லண்டனிலும் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனச் சொல்லும்படி பிரச்சாரம் செய்யப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களே அங்குள்ளவர்களுக்கு குரல்கொடுக்க முடியும்.
தனபாலன் : 98 வீதமான மக்களுக்கு அரசியல் அறிவு இல்லை. நாங்கள் நகர்சார்ந்த மனோ நிலையில் இருந்து சிந்திக்கிறோம். ஆனால் கிராமங்களில் வாழும் மக்களின் மனோநிலை வேறு.
வாசுதேவன்: கடந்த கால எங்கள் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றிப் பார்க்க வேண்டும். எங்கள் பலத்தையும் பலவீனத்தையும் ஆராய வேண்டும். பொருளாதார பலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
ப்பாமி மொகமட்: MOU வரை நிறைய திட்டங்கள் தமிழ் மக்கள் மத்தியில் வந்தள்ளது. நீலன் திருச்செல்வம் அவர்கள் வரைந்த தீர்வுப் பொதி மிகச் சிறந்தது. ஆனால் அவரும் கொல்லப்பட்டார். வரதராஜப் பெருமாள் மாகாண சபையை நடத்துவதில் இருந்து தடுக்கப்பட்டார். இந்த நிலையில் இருந்து தமிழ் சமூகம் மாற வேண்டும்.
கணநாதன்: தமிழர்களுடைய உரிமைப் போராட்டம் பின்னடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. சர்வதேசச் சூழல் எமக்கு எதிராகவும் ராஜபக்ச அரசுக்கு சாதகமாகவும் அமைந்துவிட்டது. இந்நிலை இப்படியே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச அரங்கிற்கு அழுத்தங்களைக் கொடுத்து இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
டேவிட் ஜெயம் : தமிழ் கடற்தொழிலாளர்கள் பாரம்பரியமாக கடற்தொழில் செய்த இடங்களில் தற்போது சிங்கள மீனவர்கள் தொழில் செய்கின்றனர். இதனால் இன முரண்பாடுகள் இன்னமும் கூர்மையாகின்றது. மேலும் பல ஆண்டுகளாக நீடித்த மீன் பிடித்தடை நீக்கப்பட்ட போதும் தமிழ் மீனவர்களுடைய பொருளாதாரத்தில் அது முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை.
சண்முகரட்ணம் : இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் ஆவணங்களை முற்றாக இழந்துள்ளனர். மேலும் விடுதலைப் புலிகளால் மக்களுக்கு கையளிக்கப்பட்ட காணிகளில் அரச காணிகளும் அடங்குகிறது. இவையெல்லாம் வன்னி முகாம்களில் உள்ள மக்களின் பிரச்சினையாக உள்ளது. இவை பற்றி கவனிக்கப்பட வேண்டும். இலங்கை அரசின் தன்மை தவறான வழியில் இறுக்கமடைந்துள்ளது. இலங்கை அரசின் பிரச்சினை ஒற்றையாட்சி அல்ல. அரசைப் பற்றிய அறிவு, சீர் திருத்தம், இராணுவ மயமாக்கல் போக்கு பற்றிய விடயங்களில் கவனமெடுக்க வேண்டும்.
சையட் பசீர் : திம்புப் பேச்சுவார்த்தை, ஒஸ்லோ உடன்படிக்கை எதிலுமே முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. பாலஸ்தீனப் பிரச்சினையை நீங்கள் விளங்கிக் கொண்ட விதத்தில் இஸ்ரேலை ஒத்த அரசக் கட்டமைப்பையே தமிழர்கள் உதாரணத்திற்கு எடுக்கின்றார்கள். உதாரணத்திற்குக் கூட பாலஸ்தீனியர்களின் வாழ்நிலை கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. இந்தச் சிந்தனைமுறையே தவறானது.
வி சிவலிங்கம் : சிங்கள மக்களுடனும் ஏனைய சிறுபான்மையின மக்களுடனும் இணைந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கை அரசில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் போராட்ட தந்திரோபாயங்களை வகுக்க வேண்டும்.
வரதகுமார்: குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்தவதற்கான வரையறையை நிர்ணயிப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமானது. ஆனால் அதுவொரு பாரிய வேலை. அதனைச் செய்வதன் மூலமே தமிழ் அரசியல் தளத்தைப் பலப்படத்த முடியும். இன்றைய நிலையில் இலங்கை இனப் பிரச்சினைக்கு குறைந்தபட்ச தீர்வு காணப்பட வேண்டுமானாலும் இன்றுள்ள இலங்கை அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
._._._._._.
ஓகஸ்ட் 2ல் ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பிலான ஐந்து மணி நேரம் வரை நீடித்த இக்கலந்தரையாடலில் பின்வரும் எட்டு விடயங்களில் குறைந்தபட்ச புரிந்தணர்வு ஏற்பட வேண்டும் என உடன்பாடு காணப்பட்டது.
1. முகாம்களில் உள்ள மக்களது மீள்குடியேற்றம்
2. இராணுவ மயமாக்கலை அகற்றுவது
3. மனித உரிமைகளை மேம்படுத்துவது
4. தமிழ் மக்களின் அரசியலை ஜனநாயகப்படுத்துவது
5. வடக்கு – கிழக்கு முஸ்லீம் மக்கள்
6. குடியேற்றம் – வளங்கலும் குடிபரம்பலும்
7. மனிதவள விருத்தி – அபிவிருத்தி
8. அரசியல் தீர்வு
இவ்விடயங்கள் தொடர்பான வரையறைகளை வகுப்பதற்கு செயற்குழு உருவாக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு விடயத்தையும் தனித் தனியாக ஆராய்ந்து அறிக்கையைத் தயாரிப்பார்கள். அதில் குறைந்த பட்ச வரையறையையும் நிர்ணயிப்பார்கள்.
செயற்குழுவில் உள்ள அங்கத்தவர்கள் வருமாறு:
என் சண்முகரட்ணம்
வி சிவலிங்கம்
நிஸ்தார் மொகமட்
ரவி சுந்தரலிங்கம்
ஏ கனநாதன்
வரதகுமார்
ஜோசப் ஜெயம்
எஸ் தவராஜா
பேரின்பநாதன்
அரோ தீபன்
எஸ் வசந்தி
மாசில் பாலன்
ப்பாமி மொகமட்
ரி சோதிலிங்கம்
ஜெயக்குமார் மகாதேவா
த ஜெயபாலன் (ஒருங்கிணைப்பாளர்)
கலந்துரையாடலின் முடிவில் செயற்குழு ஒரு குறுகிய சந்திப்பொன்றை மேற்கொண்டது. அவர்கள் குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டவேண்டிய விடயங்கள் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்கான தலைப்புகளை ஏற்றுக் கொண்டனர்.
mallikai
very good attempt.keep it up.
abeywickrema
ஒரு சமூகம் தான் தன்னை எவ்வாறு அடையாளப்படுத்த வேண்டும் என்பதனைத் தீர்மானிக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு தமிழீழம் வேண்டுமா இல்லையா என்பதை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அரசாங்கத்தக்கு வேண்டாம் என்பதற்காக எங்களுக்கும் வேண்டாம் என்ற முடிவுக்கு நாங்கள் வர வேண்டியதில்லை. குறிப்பாக பின்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். 1) உண்மையறியும் குழுவொன்று அவசியம். 2) ஆயுதப் போராட்டம் தேவையா? இல்லையா? 3) அதிகாரப் பரவலாக்கம் தமிழ் மக்களுக்கு மட்டுமா? அல்லது அனைவருக்குமா? 4) 13வது திருத்தச் சட்டம் ஏற்கனவே உள்ளது. 5) குடியேற்றம்
100% right it’s accept
புலம்பெயர்ந்து வாழ்ந்ததால் புலத்தில் உள்ளவர்களுக்கு தாயகத்தில் உள்ள மக்கள் பற்றி பேச உரிமையில்லை என்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இலங்கையில் நடைபெறும் தேர்தல் தொடர்பாக லண்டனிலும் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனச் சொல்லும்படி பிரச்சாரம் செய்யப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களே அங்குள்ளவர்களுக்கு குரல்கொடுக்க முடியும்.
80% right it’s accept
புத்தளம் முகாமில் உள்ளவர்களின் விடயங்கள் பேசப்படாதது வேதனையானதே. அனால் இன்றுள்ள ஊடகத் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அன்றிருக்கவில்லை. இன்றைய அவலம் உடனுக்குடன் வந்தடைவதால் அதற்கான பிரதிபலிப்புகளும் உடனடியானவையாக உள்ளது. ஆனால் இங்குள்ள எல்லோருமே புத்தளம் முகாம்களில் உள்ளவர்கள் மீது அனுதாபமுடையவர்களே. அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களுமே.
80% right it’s accept
முதலில் இந்த தமிழீழம், ஈழம் என்ற கதைகளை நாங்கள் விட வேணும். அங்குள்ள இடம்பெயர்ந்த முகாம்களில் உள்ள மக்களின் நலன்கள் தான் இப்பொழுது முக்கியம். நாங்கள் முரண்டு பிடித்து அரசியல் செய்து எதையும் சாதிக்கவில்லை. இனிமேல் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே தமிழ் மக்களுக்கு எதையாவது செய்ய முடியும்
35% right it’s accept
இலங்கையில் தமிழர்கள் தமிழன் என்ற காரணத்தினாலேயே ஒடுக்கப்படுகிறார்கள். புலிகளுடைய தோல்வி செப்ரம்பர் 11க்குப் பின்னர் விடுதலை அமைப்புகளுக்கு ஏற்பட்ட தோல்வியின் தொடர்ச்சியே. தமிழர்களுடைய போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை
95% right it’s accept
தமிழ் சூழலில் தற்போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் 1) அகதிகள் 2) சமூகத்தை – குழுக்களை ஒன்றிணைப்பது 3) உரிமைகள். தமிழ் சமூகத்தில் உள்ள அடிப்படைத் தவறு வேறுபாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு வாழ்வது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாமை. 1977க்குப் பின்னர் மாறிய சூழலில் மக்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்கப்படவில்லை. அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே பொருத்தமான தீர்வாக அமையும். எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
81% right it’s accept
கடந்த கால எங்கள் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றிப் பார்க்க வேண்டும். எங்கள் பலத்தையும் பலவீனத்தையும் ஆராய வேண்டும். பொருளாதார பலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்
87% right it’s accept
தமிழர்களுடைய போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டம் சரியானதா இல்லையா என்பதை எப்படி தீர்மானிப்பது? மக்கள் இன்னமும் மிகுந்த ஒடுக்கு முறைக்குள் தள்ளப்பட்டு உள்ளார்கள். இலங்கை அரசு தற்போது தனது ஒடுக்குமுறையை மேலும் தூண்டியுள்ளது. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கான எந்தத் தீர்வையும் இலங்கை அரசு முன்வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இடம்பெயர்ந்து முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளவர்களின் தேவைகள் உடனடியானது. அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
99% right it’s accept
இந்தியாவின் பாத்திரம் முக்கியமானது. பிந்திரன் வாலேயை உருவாக்கி சீக்கிய தேசியத்தை அதன் உச்சத்திற்குக் கொண்டு சென்று வேரறுத்தது இந்தியா. அதுவே முள்ளிவாய்க்காலிலும் நடந்தது. சிங்கள தேசியத்தின் உச்சத்திற்குச் செல்லும் மகிந்த ராஜபக்சவிற்கும் இது நடக்காது என்றில்லை. புலம்பெயர்ந்தவர்கள் இந்தியாவின் பாத்திரத்தை அசட்டை செய்ய முடியாது.
89% right it’s accept
Will cont. later
Overroll can accept 67% because WE will wait for action AASP.
Thanks
மாயா
நல்ல விடயங்கள் தொடரட்டும். வாழ்த்துகள். புலத்திலாவது ஒற்றுமையாக செயல்பட்டு கலந்து நல்ல முடிவை எடுத்து மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்யுங்கள்.
தனிநாடு என்பதை விட நாம் அனைவரும் இலங்கையர். அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் இருத்தல் வேண்டும். இரண்டாம் தரம் என்பது எவருக்குமே எண்ணத்தில் கூட வரக் கூடாது என்பதை வலியுறுத்துங்கள்.
இந்தியாவை முற்று முழுதாக ஒதுக்க முடியாது. அதற்காக அவர்களோடு மட்டும் நின்று விடாது மேலைத் தேச நாடுகளூடாகவும் இவற்றை வலியுறுத்த ஆவன செய்ய வேண்டும்.
கடந்த காலங்களை பாடமாகக் கொண்டு , எதிர்காலத்தை சுபீட்சமாக்க முனைய வேண்டும்.
senthil
ஒருங்கிணைப்பாளர் அவர்களே, இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் பேசியவர்கள், செயற்குழுவில் உள்ளவர்கள் தொடர்பான ஒரு சிறு குறிப்பை அல்லது அவர்களின் கடந்தகால அரசியல் பின்னணி பற்றி குறிப்பிடுவது அவசியம்.வெறுமனே தேசம் வாசிக்கும் வாசகர்களுக்கு தெரிந்த முகமல்லாத பலர் இதில் இடம்பெற்றுள்ளனர் போல் உள்ளது. எனவே பொது வேலைத்திட்டத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் மக்களும் அறிந்திருக்கவேண்டிய அவசியம் கட்டாயம் தேவை எனக்கருதுகிறேன். முடிந்தால் அவர்களின் புகைப்படங்களுடன் அவர்களை அறிமுகப்படுத்தவும். ஏனெனில் இவர்களை தெரியாத புதிய சமூக கூட்டம் புலத்திலும்நாட்டிலும் உள்ளனர்.நீண்டகாலத்தின் பின்னர் இலைமறை காய்க்களாக இருந்த பலர் மீண்டும் மிடுக்குடன் தமிழரின் அரசியலை பொது வேலைத்திட்டமென்று சொல்லி யாரிடமும் அடகுவைத்துவிடக் கூடாது!
மாயா
senthil
பேப்பர் போட்டவனும், கிறிமினல்களும் ,புலிகளுக்கு தலைமத்துவம் பெற்ற போது நீங்கள் கேள்வி கேட்டீர்களா?
புலத்தில் புலிகளின் பாடசாலைகளை நடத்தும் எத்தனை பேருக்கு எழுத படிக்கத் தெரியும்?
புலத்து கோயில்களை நடத்தும் புலி பினாமிகளில் எவருக்காவது சயம அறிவு உண்டா?
பிரபாகரனுக்கு என்ன அரசியல் தெரிந்திருந்தது?
கொலைகாரர்களையும் கொள்ளைக்காரர்களையும் மாபியாக்களையும் தேசிய தலைவர்கள் ஆக்கியோர் என்ன விளையாடுகிறீர்கள்? முந்தியவர்கள் கிழித்ததுதான் இன்று தெரிகிறதே.
‘இதுவரை என்ன செய்தாய் என்பதை விட , இனி என்ன செய்வாய் என்பதே இப்போதைய தேவை. நீ யார் என்பதை விட , நீ என்ன செய்ய நினைக்கிறாய் என்பதே இன்றைய எதிர்பார்ப்பு.
நீ எவனாவும் இரு. மனிதனாக ஒரு மனிதனுக்கு உதவு. அது போதும். விழுந்தவனை தூக்க பலம் தேவையில்லை. மனம் இருந்தால் அதுவே போதும்’.
vanthiyadevan
‘நீ மனிதனாக இரு. ஒரு மனிதனுக்கு உதவு. அது போதும். விழுந்தவனை தூக்க பலம் தேவையில்லை. மனம் இருந்தால் அதுவே போதும்’.
கடந்த காலங்களை பாடமாகக் கொண்டு , எதிர்காலத்தை சுபீட்சமாக்க முனைய வேண்டும் எனவே பொது வேலைத்திட்டத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் மக்களும் அறிந்திருக்கவேண்டிய அவசியம் கட்டாயம் தேவை.
தனிநாடு என்பதை விட நாம் அனைவரும் இலங்கையர். அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் இருத்தல் வேண்டும். இரண்டாம் தரம் என்பது எவருக்குமே எண்ணத்தில் கூட வரக் கூடாது.
தமிழர்களுடைய போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை. இலங்கையில் தமிழர்கள் தமிழன் என்ற காரணத்தினாலேயே ஒடுக்கப்படுகிறார்கள். தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கான எந்தத் தீர்வையும் இலங்கை அரசு முன்வைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.
இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்
நண்பன்
vanthiyadevan
போராடுவதை விட சில அணுகுமுறைகளினூடாக நாம் பல வெற்றிகளை சாதிக்கலாம். இதுவரை போராடி எதையாவது பெற்றுள்ளோமா என்றால் , வசதியானவர்கள் அல்லது முடிந்தவர்கள் புலம் பெயர் தேசங்களுக்கு வந்து பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள். ஆனால் அப்பாவிகள் அல்லது வறியவர்கள் உங்கள் போராட்ட கோஸத்துக்காக பலியாக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். அதை தொடர வேணுமா? பொது வேலைத் திட்டத்தில் ஈடுபட்டவர்களை தேடுவது என்றால் நாம் நல்ல நடிகர்களையே மீண்டும் தலைவர்களாக்க வேண்டி வரும். உதாரணத்துக்கு கூட்டமைப்பில் உள்ளவர்களை கருத்தில் கொள்ளலாம். அவர்கள் வாழ, மக்கள் வாழா வெட்டியாகியுள்ளனர். அவர்கள் மரம் விட்டு மரம் தாவ, நாம் மட்டும் அதே மரக் கிளையில் தொங்கி சாகிறோம்.
பராக் ஒபாமாவின் பின்னணியை அமெரிக்க மக்கள் தேடத் தொடங்கி வாக்களிக்காமல் இருந்திருந்தால், புஸ் போன்ற ஒருவர் தனது ஆயுத வியாபாரத்துக்காக எங்காவது ஒரு யுத்தத்தை ஆரம்பித்திருப்பார். புலத்தில் இருந்த இளைஞர்களையும் கெடுத்த பாவமும் புலிகளுக்கே சேரும். புலிகளோ அல்லது புலி சார்ந்தவர்களோ மாற பல காலம் எடுக்கும். இன்னும் 50 வருடங்களுக்கு பின்னரே தமிழன் நிம்மதியாக வாழ்வான்.
எனவே, உண்மையிலேயே மக்கள் மேல் நேசம் கொண்ட பலர் சீனுக்கள் வராமல் முடக்கி வைக்கப்பட்டு விட்டார்கள். சுயநலவாதிகள் பலர் தமிழர் நலன் குறித்து பேசி வருகிறார்கள். உண்மையானவர்கள் வெளியே வர முடியவில்லை. அவர்களால் பலதை செய்ய முடியும். அப்படியானவர்கள் வரும் போது இலங்கை தமிழர்கள் வெளிநாடுகளுக்கு சென்று புலிகளின் கனவுப்பட்டறையில் நாடு கடந்த தமிழீழத்தை ஆட்களே இல்லாமல் நடத்திக் கொண்டிருப்பார்கள். இது உலகம் அழியப் போகிறது என சொல்லும் யெகோவா செக்ட் அமைப்பினர் போல இருக்கும்?
நம் தமிழன் ஒன்று சேர்வதா? ஆளை விடுங்க சாமி. முடிஞ்சா சாதி பெயரிலாவது கட்சி அமைத்து வறுகிறவர்கள் வறுகுங்கள். அதற்காக ஒரு வானொலியும் – தொலைக் காட்சியும் – இணைய தளமும் போதும்.
சாந்தன்
‘….பேப்பர் போட்டவனும், கிறிமினல்களும் ,புலிகளுக்கு தலைமத்துவம் பெற்ற போது நீங்கள் கேள்வி கேட்டீர்களா?….
இவ்வகையான பிழைகள் நடக்காமல் இருக்க கேள்வி கேட்கவேணும் என்பது தானே இங்கு பலர் சொல்லும் மாற்றுக்கருத்து? இல்லையா? இல்லையென்றால் கேள்விக்கப்பாற்பட்ட புலிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு? அதிகாரத்தை நோக்கி கேள்விகள் கேட்போம்.. எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்துவோம் என சொன்னார்களே!
’…பராக் ஒபாமாவின் பின்னணியை அமெரிக்க மக்கள் தேடத் தொடங்கி வாக்களிக்காமல் இருந்திருந்தால், …
என்ன சொல்லுறீங்கள்? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கோ! ஒபாமாவின் பின்னணியை அமெரிக்க மக்கள் தேடவில்லையோ? நீங்கள் கடந்த அமெரிக்க தேர்தலை கவனைக்கவில்லை போலும். அமெரிக்காவில் தேர்தல் திருவிழா ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தொடங்கிவிடும். ஏறத்தாழ 10 சனல்களில் ஒவ்வொரு நாளும் அரசியல் பிழிந்தெடுப்பார்கள். இந்தப் பிழியல் தேர்தல் முடிந்தவுடன் முடியாது தொடரும். ஒபாமா குழந்தையாய் இருந்த போது என்ன செய்தார் என்பதில் இருந்து என்னென்ன சட்டதிட்டங்களை இயற்றினார் அத்துடன் எவற்றுக்கு ஆதரவாக வாக்களித்தார் எதிராக வாக்களித்தார்……….சொல்லிக்கொண்டே போகலாம். …
Anonymous
புலிகளின் வாழ்விலும், அரசின் தயவிலும் வாழ்ந்து கொண்ட கூட்டம் எப்படி ஒரு குறைந்தபட்ச புரிந்தணர்வில் சேர்ந்து போவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
மாயா
சாந்தன் , அமெரிக்காவுக்கும் , இலங்கை தமிழருக்கும் முடிச்சு போட வேண்டாம். உணர்ச்சிகளை கொட்டினால் மட்டுமே தமிழன் வாக்களிப்பான். நல்ல திட்டங்களை அல்ல? இல்லாவிட்டால் நல்ல திட்டங்கள் கொண்டவர்கள் இல்லாமல் போகவும் , உணர்ச்சிகரமான கட்சிகளும் , புலிகளும் ஆளவும் மக்கள் ஆதரவு கொடுத்திருப்பார்களா?
நடக்கிறதை சொல்லுங்கள், தமிழன் ஏற்க மாட்டான். நடக்காததை சொல்லுங்கள் சாகக் கூட முன்னால் நிற்பான். அவ்வளவு பெரிய முட்டாள் கூட்டம் தமிழன். படித்த அறிவாளிகள் பலரும் இதில் அடக்கம். இன்னும் 50 வருடங்களுக்கு பின் கடவுள் மனம் இரங்கினால் தமிழனுக்கு விடிவு கிடைக்கும்.
பார்த்திபன்
மாயா சொன்னதை புரிந்து கொள்ள முடியவில்லையோ சாந்தனுக்கு. அமெரிக்காவில் ஒபாமா பற்றிய ஆராய்ச்சிகளை நடத்தியது சில அரசியல்வாதிகளும், சில ஊடகங்களுமே. ஆனால் மக்கள் அதனை சட்டை செய்யவில்லையென்பதையே மாயா எழுதியுள்ளார். இது புரியாமல் ஏதோவெல்லாம் எழுதுகின்றீர்கள்.
T Sothilingam
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இலங்கை அரசை நோக்கி செயற்ப்படும் அத்தனை அமைப்பினரும் ஒரு குறைந்த பட்ச உடன்பாட்டுக்குள் வர இந்தக் குழுவும் இந்தக் குழுவை உருவாக்கியவர்களும் தொடரந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது.
lamba
இந்த கூட்டத்திற்கு நானும் வந்திருந்தேன் இக்கூட்டததிற்கு வருகைநந்திருந்த பசீர் பல தடவைகள் முஸ்லீம் பிரச்சினைகள் பற்றி, முஸ்லீம்கள் ஒரு தனி இனம் அவர்களை தமிழ் பேசும் மக்கள் என்று அழைக்க கூடாது என்றெல்லாம் பேசுவது வழக்கமாகி விட்டது. பசீரிடம் ஒரு கேள்வி முஸ்லீம்கள் தனி இனம் என்றால் நீங்களும் தனியாக தமிழர்கள் போல் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தை ஏன் ஆரம்பிக்கவில்லை அலலத இனிமேல் ஆரம்பிக் உள்ளீர்களா? அப்படியாயின் தமிழர்கள் கூட்டத்தில் வந்து இப்படியான பேச்க்களை முன்வைக்கிறீர்கள் நீங்கள் ஒரு இனமாக கூட்டத்தை கூடி கட்சியை கூடி அங்கு தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்று பேச முடியமா? தமிழர்கள் கூட்டத்தில் முஸ்லீம்களுக்கு தனியான உரிமை உள்ளது என்று பேசுவது போன்று எங்காவது முஸ்லீம்கள் தமது தனியான முஸ்லீம் இனக் கூட்டத்தில் பேசிய வரலாறு உண்டா?
இவை எதை எடுத்துக்காட்டுகிறது என்றால் தமிழ்பேசும் இனம் அதில் முஸ்லீம்கள் பிரத்தியேக உரிமைகள் உள்ளவர்கள் என்றே கருதுகிறேன். இதேபோன்ற கருத்து ஒற்றுமையுடன் பல முஸ்லீம் நண்பர்கள் தோழர்கள் உள்ளனர்.
கூட்டத்தில் கருத்து வைத்த நிஸ்தார் மற்றும் மொகமட் போன்றோருடன் நான் சரியாகவே உடன்படுகிறேன் சோனகர் என்ற நிலைப்பாட்டுடன் அவர்களது அந்த நிலைப்பாடே எமது தென்னிந்திய நிலைப்பாட்டுக்கு சரியானது.
அஜீவன்
//தமிழர்கள் கூட்டத்தில் முஸ்லீம்களுக்கு தனியான உரிமை உள்ளது என்று பேசுவது போன்று எங்காவது முஸ்லீம்கள் தமது தனியான முஸ்லீம் இனக் கூட்டத்தில் பேசிய வரலாறு உண்டா?//
இலங்கை – இந்திய இஸ்லாமியர் குறித்த கருத்துகள் கொண்ட ஒரு சம்பாஷனையில் பஷீருடன் இந்திய தமிழர் ஆரூர் புதியவன் விவாதம். பஷீர் தமிழ் தமக்கு மொழி ஊடகம் என்கிறார். ஆரூர் புதியவன் (ஹாஜா கனி) தமிழ்தான் தனது தாய் மொழி என்று விவாதத்தை தொடர்கிறார்….
கேட்க:
http://www.zshare.net/audio/61079830de7fae8d/
http://www.radio.ajeevan.com/
meerabharathy
நட்புடன் ஜான் மாஸ்டர் அவர்களுக்கு…
தங்களை பொதுநிகழ்வில் மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி….
நீங்கள் கூறியது போல்….
”நாங்கள் குறைந்தபட்சம் எதற்குச் செல்லலாம்”
”பொதுப் புத்தியில் உள்ள விடயங்கள் ஆதிக்க சித்தாந்தத்தினாலேயே நிர்ணயம் செய்யப்படுகின்றது. கருத்துத்தளத்தில் பேரினவாதம் கட்டமைத்த சொல்லாடல்களே மேலாண்மை செலுத்துகின்றது.”
”குறைந்தபட்ச வரையறையைச் செய்யும் போது பேரினவாதம் கட்டமைக்கின்ற கருத்தியல் மேலாண்மையை தகர்க்கின்ற கருத்தியல் மேலாண்மையை நாங்கள் ஏற்படுத்த வேண்டும்”
நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் இனிவரும் காலங்களில் முன்னெடுக்க வேண்டிய மிக அவசியமே… இது பிரக்ஞை பூர்வமான தர்க்கீகத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்… ஆனால் எனது கேள்வி என்னவென்றால்…
பிரக்ஞை பூர்வமான தர்க்கீகத்திற்கு….
நாம் முதலில் பிரக்ஞையாக இருக்கவேண்டும் ஆகக் குறைந்தது அதற்கான முயற்சியல் சமாந்தரமாவது செல்லவேண்டும்… ஏனனில் வெறும் தர்க்கித்தின் அடிப்படையில் முன்வைக்கப்படும் விடயங்கள் நம் ஆழ் மனதிலிருந்தே வெளிவருகின்றன… இவை சமூக ஆணாதிக்க மற்றும் ஆதிக்க சக்திகளில் கருத்துக்களையே கொண்டுள்ளன… ஆகவே ஒரு புறம் இவ் ஆதிக்க கருத்துக்களிலிருந்து எவ்வாறு பிரக்ஞைபூர்வமாக வெளிவருவது என்பது தொடர்பாக உரையாடுவதும் அது தொடர்பான செயற்படுவதும்…
மறுபுறம் நீங்கள் கூறும் முயற்சிகளில் ஈடுபடுவது…
முதலாவதை நாம் செய்யாது விடுவோமாயின்… நாம் மீள மீள ஒரு இடத்தில் சூழன்று கொண்டிருப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்…
இரசிய…சீன…கீயுப…நிக்கிரகுவா…புரட்சிகள் நமக்கு ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும்…
எவ்வாறு அந்த மக்கள் மத ஆதிக்கத்திலிருந்தும் நம்பிக்கைகளிலிருந்தும் விடுபட்ட கம்யுனிச ஆதிக்கத்திற்கும் நம்கிக்கைக்கும் மாறி மீணடும் இன்று பழமைக்கு வெகு இலகுவாக செல்கின்றனர்… இதற்கு என்ன காரணம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்… எனது புரிதலில் இது நம் ஆழ் மனதில் வேருன்றியிருக்கம் விடயங்கள்…. இந்த வேரை அடியோடு பிடுங்கி எறியாதவைரை இந்த சூழற்வி வாழ்க்கை முறை தொடர்வது தவிர்க்க முடியாதது…
தங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகின்றேன்…
தங்களுக்கும் விருப்பமாயின் தொடர்பு கொள்ளுங்கள்…
meerabharathy@hotmail.com
தொடர்ந்து உரையாடுவோம்…
தங்கள் பதிலை எதிர்பார்த்து…
மீராபாரதி
Jeyabalan T
//இக்கூட்டததிற்கு வருகைநந்திருந்த பசீர் பல தடவைகள் முஸ்லீம் பிரச்சினைகள் பற்றி முஸ்லீம்கள் ஒரு தனி இனம் அவர்களை தமிழ் பேசும் மக்கள் என்று அழைக்க கூடாது என்றெல்லாம் பேசுவது வழக்கமாகி விட்டது.// லம்பா
அப்படிப் பேசுவதில் என்ன தவறு உள்ளது. அது அவருடைய கருத்து. அக்கருத்து பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் உள்ளது. தமிழ் பேசும் மக்கள் என்ற பதத்தின் கீழ் முஸ்லீம்களையும் அடக்கி அவர்களது தனித்துவத்தை சிதைத்துவிட முடியாது. தமிழ் பேசுவதால் தமிழ் பேசும் மக்கள் என்று அழைக்கின்றோம். ஆனால் அவர்களுடைய அடையாளம் என்று வரும்போது சோனகர் என்றோ முஸ்லீம்கள் என்றோ அடையாளப்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும்.
//பசீரிடம் ஒரு கேள்வி முஸ்லீம்கள் தனி இனம் என்றால் நீங்களும் தனியாக தமிழர்கள் போல் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தை ஏன் ஆரம்பிக்கவில்லை அலலத இனிமேல் ஆரம்பிக் உள்ளீர்களா? // லம்பா
இந்தக் கேள்வியின் அர்த்தம் என்ன என எனக்கு விளங்கவில்லை. தமிழர்கள் போல் இலங்கை அரசாங்கத்துடன் போராடி முள்ளிவாய்க்காலில் 20000 பேரை பணயம் வைத்தால் தான் தனியான இனம் என்று சான்றிதழ் கொடுக்கின்ற உரிமையை லம்பா எங்கிருந்து பெற்றீர்கள்?
//அப்படியாயின் தமிழர்கள் கூட்டத்தில் வந்து இப்படியான பேச்க்களை முன்வைக்கிறீர்கள் // லம்பா
ஜனநாயகச் சூழலில் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டவர் அக்கூட்டத்தில் வந்து தனது கருத்தை சுதந்திரமாகச் சொல்வதில் என்ன தவறு. தமிழர் கூட்டத்தில் வந்து அல்லது தேசத்தின் கூட்டத்தில் வந்து இந்த வரையறைக்குள் தான் கருத்துச் சொல்ல வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லையே. அப்படி வரையறையை நிர்ணயிப்பது எவ்வாறு ஜனநாயகப் பண்பாகும்.
பசீருடைய சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. அதனை நான் எப்போதும் நேரடியாக வெளிப்படுத்தி இருக்கிறேன். அதற்காக பசீர் தன்னுடைய கருத்துக்களை வெளியிடுவதை தடுக்கின்ற உரிமை யாருக்கும் இல்லை.
முடிந்தால் பசீரை கருத்து ரீதியில் சந்தியுங்கள். உங்களுடைய கருத்தை வையுங்கள்.
த ஜெயபாலன்.
பல்லி
//முடிந்தால் பசீரை கருத்து ரீதியில் சந்தியுங்கள். உங்களுடைய கருத்தை வையுங்கள்.//
லம்பாவின் கருத்து தவறானதுதான்; பஸீருக்கு கருத்து சுகந்திரம் இருக்கு அதுவும் உன்மைதான்; ஆனால் பஸீர் ஒரு வக்கிலாகதான் அனைத்து கூட்டத்துக்கும் அவரது கருத்தை மிக அளகாக நியாயபடுத்துவார்; ஆனால் அவரது கருத்துக்கள் செயல்பாடுகள் அனைத்தும் அரசுக்கு ஆதரவாகவும் புலிக்கு எதிரென தமிழருக்கே எதிராக சொல்லுவதும் வழமைதான்; அன்று ரிபிசி ஆய்வாளர்; பின்பு கருனாவின் ஆலோசகர் சிலகாலம் சின்ன வாத்தியின் ஆலோசகர் இப்படி தனக்கு எது வசதியோ அதை இலகுவாக நியாயபடுத்த கூடிய சிலரில் பஸீரும் ஒருவர் என்பது மறுக்க முடியாது; சந்தர்ப்பம் வரும்போது அதை பேசுவோம்;
ஜெயபாலன் தாங்கள் கூடிய செயற்குழு உறுப்பினர்களில் வன்னியில் இருந்தோ அல்லது இலங்கையில் இருந்தோ யாரும் உண்டோ? அவர்கள் விபரம் தரவும், அத்துடன் மேலே குறிப்பிட்டவர்கள் எந்த நாட்டில் இருப்பவர்கள் என்னும் தகவலையும் தந்தால் நாம் அவர்களுடன் பேச வாய்ப்பாக இருக்கும்; பாதுகாப்பு கருதி சொல்ல முடியாவிட்டால் பரவாயில்லை, இந்த குழுவில் ரகுமான் ஏன் இல்லை? அவரை முதன்மை படுத்திதானே இந்த அமைப்பு தொடங்கினீர்கள்; அப்படியாயின் அவர் இல்லாமல் எப்படி? பல்லிக்கு தீப்பொறி மீது கடுமையான விமர்சனம் உண்டு, இன்னும் பலருக்கும் இருக்கலாம்; ஆனாலும் கடந்தகால விடயத்தை விமர்சிப்பதால் தங்களுடைய செயல் திட்டங்கள் தடங்கல் ஆககூடது என்பதால் மக்களின் அடிப்படை
தேவைகளை அரசிடம் இருந்து பெற்று கொடுக்கவோ அல்லது எம்மால் எதாவது செய்யவோ தங்களுடன் பணியாற்ற பல்லிக்கும் விருப்பம்தான்
ஆனால் போடும் திட்டங்கள் செயல்படுத்த கூடியவையாக இருக்க வேண்டும்; அதேபோல் அரசிடமோ அல்லது தற்ப்போது கடை போட்டிருக்கும் அமைப்புகளிடம் விலை போகாமல் பார்ப்பதும் அவசியம்; மகிந்தாவின் அபிமானிகளும் உங்கள் குழுவில் இருப்பதால் அதில் கவனம் செலுத்துவது அவசியம்.
மாயா
பசீர் சொல்லும் இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்லது நெறியே தவிர அது ஒரு இனமல்ல. பசீருக்கு தனிக் கருத்துகள் உண்டு. அவரது வேதனை ஏன் என்பது அனைவருக்கும் புரியும். இவை தமிழ் அரசியல்வாதிகளாலும் , புலிகளாலும் ஏற்பட்டவை.
இஸ்லாம் ஒரு தனி இனம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இலங்கையில் பிறந்த கிறிஸ்தவர்கள் சிங்களவர்களாகவும் இருக்கிறார்கள். தமிழர்களாகவும் இருக்கிறார்கள். இனம் என்று வரும் போது அவர்கள் தம்மை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை.
இஸ்லாத்துக்குள்ளேயே பல பிரிவுகள் உண்டு. அவை வெவ்வேறு ஒழுங்குகளை கடைப்பிடிக்கின்றன. உலகம் முழுவதும் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவோர் இருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் தாங்கள் அனைவரும் ஒரு இனம் என்று சொல்லிக் கொண்டதில்லை.
ஜெயபாலன் சொல்லும் சோனகர் அல்லது இஸ்லாமியர் என்பதாக அடையாளப்படுத்தச் சொல்லுவதை ஏற்றால், நாம் சொல்லப் போகும் இலங்கையர் என்பதையே கேள்விக் குறியாக்கி விடும்?
இலங்கை வாழ் மக்கள் இலங்கையர். அவர்களுக்குள் மொழி ரீதியாகவும் மத ரீதியாகவும் பல்லின மக்கள் பிரிவாக வாழ்கிறார்களே ஒழிய இனம் என்ற நோக்கில் இஸ்லாம் அல்லது முஸ்லீம் இடம் பெற முடியாது.
இஸ்லாமியர் , தமிழர்களா? சிங்களவர்களா? அல்லது மலாயரா?
BC
//இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்லது நெறியே தவிர அது ஒரு இனமல்ல. //
மாயாவின் கருத்தோடு நான் உடன் படுகிறேன்.எனக்கு தெரிந்த பாக்கிஸ்தான் மற்றும் வங்களாதேஷ் நண்பர்கள் தங்களை இஸ்லாம் இனம் என்று சொன்னதில்லை.
//இஸ்லாமியர் தமிழர்களா? சிங்களவர்களா? அல்லது மலாயரா?//
அவர்கள் மலாயரானால் ஏன் மலாய் பேசுவதில்லை?
பார்த்திபன்
இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்லது மார்க்கம் எனலாமே தவிர, அதனை ஒரு இனமாக அடையாளப்படுத்த முடியாது. ஆபிரிக்கா இனத்தவர்களில் கூட இஸ்லாம் மதத்தைப் பின் பற்றுபவர்கள் நிறைய உள்ளார்கள். ஆனாலும் அவர்கள் தம்மை ஆபிரிக்கர்கள் என்று தானே கூறுகின்றார்களே தவிர இஸ்லாமியர் என்று அல்ல. உப்படிப் பார்த்தால் நாளை கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவோரும் தாமும் ஒரு வேறு இனமென்று கூறலாம். அதுபோல் ஏனைய மதங்களைப் பின்பற்றுவோரும் மத அடிப்படையில் தம்மை புறிம்பாக அடையாளப்படுத்த முயன்றால், தேசியம் என்பதே கேள்விக் குறியாகிவிடும். இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இலங்கையில் பிரைச்சினைகள் இல்லையென்று எவரும் இங்கு சுட்டிக்காட்ட முற்படவில்லை. அதற்காக தம்மை மதரீதியாக வேறுபடுத்தி, அதனை ஒரு இனமாகக் காட்ட முயல்வது இன்னும் சமுதாயத்தில் அவர்களின் பிரைச்சினைகளை கூட்டுமேயொழிய தீர்க்க உதவாது……
chandran.raja
இலங்கை தமிழன் முப்பது வருடங்களுக்கு பிறகு இந்த மூன்றுமாதங்கள் தான் மெல்லமெல்ல மூச்சு விட ஆரம்பித்திருக்கிறான். தமிழ்மக்களுக்கு உடனடியாக ஏதாவது பிரச்சனை இருக்க முடியுமென்றால் அது இடைத்தங்கல் முகாமில் அடைபட்டிருக்கிற இரண்டுலட்சத்தி என்பதியாயிரம் மக்களைப் பற்றியதாகவே இருக்க முடியும். அவர்களை மீளகுடியேற்றுவதில் கண்ணிவெடி சிக்கலாக இருப்பதாக அரசாங்கம் கதை சொல்லிக் கொண்டிருக்கிறது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பது அறியமுடியாமல் இருக்கிறது. இதைப்பற்றி அலசிஆராய்வதே இன்றைய உடனடி போராட்டமாக இருக்க முடியும்.
தமிழ்முஸ்லீம்கள் ஒட்டுமொத்தமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் குறைகளையும் தேவைகளையும் பூர்த்திசெய்யப்படும் போது மட்டுமே தமிழன் தமக்குஉரிய அடையாளங்களை தெளிவு படுத்தமுடியும். மேற்கொண்டு எமது உரிமைகளுக்காக போராடமுடியும். உரியகாலத்தில் உரியபோராட்டத்தை எடுப்பதில் எப்பவும் தமிழ்மக்கள் பின்தங்கியே உள்ளார்கள். இன்று தேவையானது இப்படியான ஆய்வுகள் அல்ல.
மாயா
//இஸ்லாமியர் தமிழர்களா? சிங்களவர்களா? அல்லது மலாயரா?//
//அவர்கள் மலாயரானால் ஏன் மலாய் பேசுவதில்லை? -BC//
இலங்கை வாழ் ஜா என அழைக்கப்படும் இஸ்லாமியர்கள் ஜா (மலே) மொழியை பேசுகிறார்கள். இவர்கள் பேசுவது ஜா என்றே சொல்வார்கள். ஆனால் இவர்கள் இந்தோனேசியா மற்றும் ஜாவா பகுதிகளில் இருந்து வந்து இலங்கையில் குடியேறியவர்கள். இந்தோனிசியா, ஜாவா மற்றும் மலேசியாவில் பெரும்பாலானோர் பேசும் மொழி மலாய் மொழியாகும். ஜா பேசும் சிலாங்கில் ( ஒயில்) சற்று வித்தியாசமாக இருக்குமே தவிர பேசுவது என்னவோ மலாய்தான். கொழும்பு , கொம்பனித் தெரு பகுதியில் இவர்களை இலகுவாக காணலாம்.
பசீர் கூட ஜா எனும் இனத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என நினைக்கத் தோன்றுகிறது? இவர்கள் தமது தாய் மொழியை தமிழ் என்றோ , சிங்களம் என்றோ சொல்வதில்லை. ஜா என்றே தம்மை அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.
நண்பன்
இலங்கையின் பிரபல்யமான ஒரு பாடகர் டோனி ஹசன் என்பவர் ஹிந்தி பாடல்கள் பாடுவதில் பிரபல்யமானவர். இவரும் ஜா இனத்தைச் சேர்ந்த இஸ்லாமியர். இவர்களது இலங்கை பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மலே என்றே குறிப்பிடுவார்கள்.
பல்லி
ஜெயபாலன் உன்மையில் சந்திர ராசா மாயா போன்றோர் எந்த பிரச்சனையையும் அதாட்ச்சியுடன் எழுத கூடியவர்கள்; ஆனால் சந்திர ராசா எதையும் யாருடனும் விவாதிக்க கூடியவர்; பல்லியை கூட பதம் பார்த்தவர்; ஆனால் அவரது கருத்து இன்றய நிலை பற்றியே உள்ளது; உன்மைதான் நாம் ஆய்வு செய்யும் நேரம் இதுவல்ல; மக்களை காப்பாற்ற வேண்டும், அதுக்கான கட்டுரைகள் பின்னோட்டத்தில் கவனம் எடுப்போம்; எதுக்குமே புள்ளி வைப்பது பல்லியாக இருப்பதால் எனி சில விடயங்களில் பல்லி கவனம் எடுக்கிறேன்; மற்றபடி பஸீருக்கு எனது கருத்தை சொல்ல முடியாது தடுமாறிய போது (பல்லியின் பார்வையில்) சரியான தகவலை சொல்லிய மாயா பி சி போன்ற தேச நண்பர்களுக்கு எனது நன்றிகள்; இதேபோல் பஸீருக்கு தவறான கருத்து வரும்போதும் நாம் முன்வந்து விவாதிப்போம்; அதுவே தேச நண்பர்களின் பலம் பலவீனம் வெற்றி;
thankam
தேசத்தில் கோடைகாலத்தில் நடைபெற்ற இரு சந்திப்புக்கள் தொடர்பான தொகுப்புரையும் செயற்குழு அங்கத்தவர்கள் விபரங்களும் காணப்படுகின்றன.
நிகழ்ந்து முடிந்த ஆயுதப்போராட்டத்தில்
தற்கொலை குண்டுதாரியாக,
உளவாளியாக,
படைப்பிரிவுத்தளபதிகளாக,
களத்தில் ஆயுதப்போராளிகளாக
தோளோடு தோள் கொடுத்தவர்கள் பெண்கள்.
தற்போது நிகழும் இந்த கலந்துரையாடல்களில் அவர்களது காத்திரமான பங்களிப்பும் அவசியமல்லவா,அழைப்புகள் விடுக்கப்பட்டதா ? செயற்குழுவில் பெண்கள்?
மாயா
பல்லியின் மாற்றம் வரவேற்றகத் தக்கது. இஸ்லாமியர்கள் எமது நாட்டில் வாழும் மக்கள்தான். எமக்கு என்ன உரிமை தேவை என்கிறோமோ , அதே போன்று அவர்களது உரிமைக்காகவும் நாமும் குரல் கொடுக்க வேண்டும். இவர்களுக்காக மட்டுமல்ல மலையக – பறங்கி – ஜா மற்றும் ஏனைய இனங்களுக்கும் நீதி கிடைக்க நாம் பேச வேண்டும்.
வன்னி மக்கள் யுத்த கோரத்திலிருந்து வந்த போது , பழையவற்றை மறந்து வந்தவர்களுக்கு தம்மால் முடிந்ததை செய்தார்கள். சுனாமி காலத்தில் மட்டுமல்ல இன்றும் தமிழரை விட தமிழ் பிரச்சனைக்காக நேர்மையாகவும் யதார்த்தமாகவும் குரல் கொடுப்போர் சிங்களவரே தவிர தமிழரல்ல. பெரும்பாலான தமிழர்கள் ஜால்ராக்கள். தமது சுயநலத்துக்காக செயல்படுவோர்.
இல்லாவிட்டால் , புலிகள் முஸ்லீம்களை துரத்திய போது எவரும் முஸ்லீம்கள் அளவு அல்லது சிங்களவர் அளவு துணிவோடு உதவிக் கரம் கொடுக்கவில்லை. இன்றும் மனச் சாட்சியே இல்லாமல் உண்மை தெரிந்தும் தன்னை துரோகியாக்கி விடுவார்கள் என்று உண்மை பேசாது வாழும் பெரும்பான்மையினர் தமிழராகத்தான் இருக்கும். இப்படி ஒரு இனத்தை உலகத்தில் எங்குமே பார்க்க முடியாது.
Jeyabalan T
ஒரு சமூகம் எவ்வாறு தன்னை அடையாளப்படுத்த விரும்புகின்றது என்பது அந்த சமூகத்தினுடைய முடிவு. இது இதுவெல்லாம் இருந்தால் தான் அந்த சமூகத்தை ஒரு இனமாகக் கொள்ள முடியும் என்று வரையறுக்க முடியும் எனக் கருதவில்லை. தேசம் தேசியம் பற்றிய விரிவான ஒரு விவாதம் அவசியம்.
செயற்குழு பற்றிய விரிவான விளக்கமும் அறிமுகமும் அதன் உறுப்பினர்களுடன் உரையாடிய பின்னர் அடுத்தவாரம் வெளியிடப்படும். அதில் உங்கள் கேள்விகளுக்கு பதிலிருக்கும் என நினைக்கிறேன்.
த ஜெயபாலன்.
BC
// ஜெயபாலன் – ஒரு சமூகம் எவ்வாறு தன்னை அடையாளப்படுத்த விரும்புகின்றது என்பது அந்த சமூகத்தினுடைய முடிவு.//
மிகவும் குழப்பமாக இருக்கிறது!!! ஜெயபாலன்
பல்லி
மாயா உன்மைதான் பல்லி மாறிதான் உள்ளது; எனது விமர்சனத்தால் மக்களுக்கு உதவவோ அல்லது செயல்படவோ நினைப்பவர்களுக்கு ஏதும் தடங்கல் வந்துவிடுமோ என பல்லியின் நண்பர்கள் பல்லியை மிரட்டுவதால் பல்லியின் ஏக்கமே மக்கள் பற்றியதால் எந்த விட்டு கொடுப்பையும் மக்களுக்காக பல்லி முழுமனதுடன் மகிழ்ச்சியுடன் ஏற்றுகொள்ளும்; ஆனால் எல்லாமே தற்காலிகமானதுதான்,
BC குழப்பம் உங்களுக்கு மட்டுமல்ல பலருக்குதான்; தேசம் எதோ ஒரு திசை நோக்கி பயணம் செய்கிறது ;அது சரியா,? அல்லது தவறா? எனிவரும் காலம் தான் பதில் சொல்லும்; முஸ்லீம் மக்கள் அல்லது அந்த இனம்பற்றி கேள்வி கேக்கவோ அல்லது அவர்கள் பற்றி பேசவோ பல பலம் பொருந்திய நாடுகள் இருக்கின்றன; ஆனால் எமது தமிழினம் பற்றி அவர்கள்படும் இன்னல்கள் பற்றி கேக்க யாருமே கிடையாது, ஆனால் முஸ்லீம் மக்கள் பற்றி தாங்கள் எடுத்து கொள்ளும் அக்கறையில் தேசம் வாசகர் என்பதில் மகிழ்ச்சி அடையும் அதே சமயம் எமது இனமான தமிழ் மக்கள் பற்றியும் யதார்த்தமாக சற்று சிந்திக்க வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறேன்; நாம் அனைவரும் முஸ்லீம் மக்களின் நண்பர்கள்தான் அதில் கருத்து முரன்பாடே கிடையாது, ஆனால் தமிழ் மக்களின் பாதுகாவலராக கட்டாயத்தின் நிமிர்த்தம் நியமிக்க பட்டுள்ளோம் என்பது பல்லி சொல்லி தேசம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
chandran.raja
பல்லியின் சுயவிமர்சனம் மகிழ்ச்சி அளிக்கிறது.பாராட்டப்பட வேண்டியது. எமக்கு “குத்திவிட்டமெடல்” கழன்று விடாதிருக்க பிரயத்தனப் படுவோம். நான் ரெடி. மாயா ரெடியா?
துரோகிகள் என்று எவருமே இல்லை. புலிகள் தான் எல்லோரையும் துரோகிகள் பட்டம் கொடுத்தார்கள். சுயநலவாதிகள் அதனுடன் கூட்டு சேர்ந்தார்கள். இதில் ஐயரும் ஆண்டியும் ஆசியர்கள் அரசியல்வாதிகள் யாருமே தப்ப முடியவில்லை. நாளையும் சூரியன் உதயமாகும். இந்த நம்பிக்கையும்- கனவும்தான் மிஞ்சிப் போய்யுள்ளது. ஒருவரை பலிஎடுக்காத ஒருவரை பலிகொடுக்காத அரசியலைத் தேடிப்போவோம். வெறிபிடித்த கூட்டத்தை விடுவிக்க லண்டனிலும் கணடாவிலும் லட்சக்கணக்கில் கூடினார்கள். இடைத்தங்கல் முகாமில் இருந்து அவதியுறுபவர்களையும் சிறையில்லிருந்து வாழ்வை கருக்கிகொள்பவர்களையும் மீட்க.. ஒவ்வொருபடியாக ஏறிஇறங்க ஒருசில 100 பேர்ராவது இந்த புலத்தில் கிடைகாமலா போவார்கள்?.
பல்லி
// ஒருவரை பலிஎடுக்காத ஒருவரை பலிகொடுக்காத அரசியலைத் தேடிப்போவோம்// இதை மட்டும் அரசியல் செய்ய செய்கின்ற அனைவரும் புரிந்து விட்டாலோ அல்லது விரும்பி விட்டாலோ விமர்சிக்க பட முடியாத அரசியல் தலமைகள் எமக்கு மட்டுமல்ல உலகத்துக்கே கிடைத்து விடும்; கொல்பவன் எவனும் கொல்ல படுவான் என்பது விதியோ தெரியாது, ஆனால் அது நிஜம் என்பதை எமது அனுபவத்தில்
எம்நாட்டில் கண்டோம் ; ஆகவே அவை இரண்டையும் தவிர்ப்பது அமைதியான வாழ்வுக்கு உகந்தது தானே;
மாயா
//chandran.raja on August 23, 2009 7:22 am பல்லியின் சுயவிமர்சனம் மகிழ்ச்சி அளிக்கிறது.பாராட்டப்பட வேண்டியது. எமக்கு “குத்திவிட்டமெடல்” கழன்று விடாதிருக்க பிரயத்தனப் படுவோம். நான் ரெடி. மாயா ரெடியா?//
உண்மைக்கும் நேர்மைக்கும் மாயா எப்போதும் றெடி. பொய்யானவர்கள் சுத்துமாத்துகள் நண்பர்களாக இருந்தாலும் மாயா தூக்கி எறிவான்.
Constantine
Most of the people who are commenting here are hiding behind a false name. Therefore 3rd person cannot compare the statement made by Bazeer and the counter argument put by the ghost person on the same basis. Both are in different levels. Why people are still so shy to put forward their argument with their real name. ??? That itself a weak argument….
Constantine
Mann Eliza
First of all that all IDPs must be allowed to go home. 80 % of the Vanni is not mined.
Secondly war crime must be investigated as between Jan 2009 and now, there are almost 80,000 Tamil civilians are unaccounted for.
We need UN run administration for the Tamils to ensure basic rights and freedoms.Then a referendum for all Tamil speaking populations to decide whether they want to live under Sinhala government or go separate similar set up as in the EU.then we must talk about living in harmony with the rest of the islanders.
Anything else will not bring peace to the island as we have been trying for the last 61 years.
If the current SL govt and the President could not accept the Mercy Mission ship full of food and medicines to the Tamil IDPs then he is not capable of giving anything to the Tamil people politically or economically to live with dignity in the Island.He sabotaged this Aid for 8 months and earned nearly over two million in Custom duty and other charges despite of their CID had checked the cargo for any unintended items.
Regards MM