தென் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பம் செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று அறிவித்தது.
தென் மாகாண சபைத் தேர்தல் பணிகளில் ஈடுபடும் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட அரசாங்க ஊழியர்கள் பொலிஸார் மற்றும் முப்படையினர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக
விண்ணப்பிப்பதற்கு 17 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மேலும் பலருக்கு விண்ணப்பிப்பதற்கு அவகாசம் வழங்குவதற்காக இந்தக் காலக்கெடுவை நீடித்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. 28 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.