நாட்டின் பல பகுதிகளில் கனத்த மழை பெய்துவருவதனால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரத்தினபுரி, காலி, மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வெள்ளம் அதிகரித்துவருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. களுகங்கையின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6:00 மணிக்கு 3 அடிகள் அதிகரித்த நீர் மட்டம் இரவு 11:00 மணிக்கு 18 அடிகள் அதிகரித்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குகுலே கங்கை தேக்கத்தின் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
காலி மாவட்டத்தில் தாழ்ந்த நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளதாகவும் இப்பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்தால் மண்சரிவு ஏற்படும் அபாயம் எதிர்நோக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.