இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவியுள்ளதால் இலங்கையர்கள் மும்பாய் மற்றும் புனெய் பிரதேசங்களுக்குச் செல்லவேண்டாமென இலங்கை சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தியா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் பன்றிக் காய்சல் தொற்று பரவாமல் தடுத்துக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அமைச்சு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் தொற்றியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 87 சதவீதத்தினர் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் வந்தவர்களாவர். ஏனையோர் நோயாளிகளுடன் நெருக்கமாகப் பழகியவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்தப் பன்றிக் காய்ச்சல் பற்றிய விபரங்கள் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் 011 2695112, 011 2681548, 011 4740490-1 என்ற தொலைபேசி இலங்கங்களின் மூலம் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.
இது தவிர 011 2411284 என்ற இலக்கத்துடன் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரி அதிகாரிகளை 24 மணி நேரத்திலும் தொடர்பு கொண்டு இந்நோய் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கௌ;ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.