மடுமாதா திருவிழாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்களின் வான் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. சிலாபம்புத்தளம் வீதியில் பத்துலுஓயா பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்து சிலாபம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முந்தல் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். சாரதி கண் அயர்ந்ததே இந்த விபத்துக்கு காரணமெனவும் தெரிவிக்கப்படுகிறது.