இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்திய அரசாங்கம் 3 மில். அ.டொலர் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்காக இந்திய அரசாங்கம் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.

இவை ஐ.நா அமைப்புக்களினூடாக நிவாரணக் கிராமங்களில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இவற்றின் ஒரு தொகுதியை இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் நேற்று ஐ.நா வதிவிட பிரதிநிதி நீல் பூனேயிடம் கையளித்தார். மேற்படி அறுநூறு தொன் நிவாரணப் பொருட்கள் கடந்த எட்டாம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இந்நிவாரணப் பொருட்களுள் ஆறு இலட்சம் பக்கற்றுக்களுக்கு அதிகமான உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பாய்கள், உடுதுணிகள், வீட்டு உபகரணங்கள், சிறுவர்களுக்கான ஆடைகள், பாதணிகள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நிவாரணக் கிராமங்களிலிருக்கும் சுமார் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான பொருட்களே நேற்று யு. என். வதிவிடப் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Appu Hammy
    Appu Hammy

    அரசாங்கத்தின் மக்கள் மீதான அக்கறையோ அக்கறை. வெள்ளம் வந்து மக்கள் கஷ்டப்படுகிறார்களாம். வெள்ளம் வரமுந்தியே கஷ்டம்தானே படுறாங்கள். அவங்களை அங்கிருந்து சொந்த இடத்திற்கு அனுப்பிவைப்பதற்கு பணங்களைப் பயன்படுத்தாமல், தண்ணியை வெளியேற்றுவதற்கு பணத்தை தண்ணியாய் செலவு செய்கிறாங்கள். என்ன.. ஐடியா. ஆக, திரும்பவும் அந்த இடத்தில தான் இருக்க வைப்பீங்கள். அவங்களை சொந்த இடத்திற்கு அனுப்பவே மாட்டீங்கள். அவங்கட சொந்த இடத்தில நீங்க யாரைக் கொண்டு போய் இருத்தப் போகிறீங்கள் எண்டு எங்களுக்கு தெரியும். நன்றாக இருக்கிறது

    Reply
  • abeywickrema
    abeywickrema

    India’s crocodile tears. Now India is ruled by Italian mafia

    Reply