ஈழத்து தமிழ் பேசும் மக்களின் அதிஉயர் அரசியல்பீடமாக – உலகத் தமிழர்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து – நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தினை திடமாகவும் விரைவாகவும் முன்னெடுப்பதற்கு முன்வருமாறு அந்தத் திட்டத்தின் உருவாக்கச் செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் உலகத் தமிழ் அமைப்புகளுக்கு வேண்கோள் விடுத்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டச் செயற்குழுவின் சார்பாக அவர் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
“உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர் அமைப்புக்கள் இந்தத் திட்டத்துக்கு தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கி வருவது இந்தத் திட்டத்துக்கு வலுச்சேர்த்து வருகிறது.
ஏற்கெனவே – பிரித்தானிய தமிழர் பேரவை, கனடியத் தமிழர் பேரவை, அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம், சுவிஸ் தமிழர் பேரவை, பிரான்ஸ் தமிழீழ மக்கள் அவை, தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம், தமிழ் நாடு திராவிடர் பேரவை உட்பட பல அமைப்புக்கள் இந்தத் திட்டத்தின் வெற்றிக்காக தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வெளிப்படுத்தியுள்ளன.
இந்த அமைப்புக்களுக்கு எமது நன்றியினைத் தெரிவிக்கும் அதேவேளை, உலகளாவிய ரீதியில் இயங்கும் ஏனைய தமிழர் அமைப்புக்கள் எல்லோரிடமும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவினை வழங்குமாறும் எம்முடன் சேர்ந்தியங்க முன்வருமாறும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையை நசுக்கி விடுவதற்கு சிறிலங்கா அரசு பகீரத முயற்சி செய்து வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தாயகத்தில் நமது தேசத்தின் மீது தான் நிலைநிறுத்தியுள்ள இராணுவ மேலாதிக்க நிலையின் மூலம் தமிழர் தேசத்தை அடிமைப்படுத்திவிடலாம் என்ற இறுமாப்புடன் செயற்பட்டுவரும் சிங்கள அரசு, தற்போது தனது இராணுவக் கொடும் கரங்களை சிறிலங்காவின் எல்லை தாண்டியும் விரித்துள்ளது. இதன் மூலம் புலத்தில் தமிழர் உரிமைப் போராட்டச் செயற்பாடுகளை நசுக்கிவிடலாம் என சிங்கள அரசு எண்ணுகிறது.
சிறிலங்கா அரசின் இராணுவ மேலாதிக்க நிலையுடனான அடக்குமுறைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் தாயகத்திலோ புலத்திலோ ஈழத்தமிழர் தேசம் அடிபணியப் போவதில்லை. தாயகத்தில் நமது மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்களாலும் இதனை வெளிப்படுத்த முனைகின்றனர். அண்மையில் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மூலமும் மக்கள் இதனைத் தம்மால் இயன்றவரை வெளிப்படுத்தியுள்ளனர்.
புலத்தில் மக்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து, ஈழத் தமிழர் தேசத்தின் அதிஉயர் அரசியல்பீடமாக அமையும் வண்ணம் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கான செயற்பாடுகளை நாம் மிகவும் திடமாகவும் விரைவாகவும் முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளோம். நாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட வகையில், தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக போராடும் நமது ஜனநாயக உரிமையில் எவரும் தலையீடு செய்ய நாம் அனுமதிக்க முடியாது.
நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டம் தொடர்பான விளக்கக் கோவை ஒன்றினை நாம் இம்மாத இறுதிக்குள் வெளியிடவுள்ளோம். இத்திட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் உரிய விளக்கங்களை இக்கோவை கொண்டிருக்கும்.
ஒவ்வாரு நாட்டிலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்படும் செயற்குழு விபரங்களையும் நாம் விரைவில் வெளிப்படுத்தவுள்ளோம். இக்குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு திரட்டி திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக உழைக்கும்.
நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தின் வெற்றிக்கு நம் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும். இத்திட்டத்துடன் இணைந்து செயற்பட ஆர்வமுள்ளவர்களை எம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறோம்.
எம்முடனான தொடர்புகளுக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருத்திரகுமாரனை நாடு கடத்தக் கோரும் இலங்கை
நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பிரபல வழக்கறிஞர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் உள்ளிட்ட மூன்று முக்கிய நபர்களை நாடு கடத்தக் கோரப் போவதாக இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் லக்பிம நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக ஜெயந்த ஞானக்கோன் செயல்பட்டு வந்துள்ளார். இவரது சகோதரரான சார்ள்ஸ் ஞானக்கோன் என்பவர் சிங்கப்பூரில் இருந்தபடி புலிகளுக்காக செயல்பட்டு வந்துள்ளார். இந்தத் தகவல்களை கைது செய்யப்பட்டுள்ள கே.பி. விசாரணையில் தெரிவித்துள்ளார். இவர்கள் தவிர விஸ்வநாதன் உருத்திரகுமாரன். இவர்கள் மூவரையும் நாடு கடத்துமாறு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கோரிக்கை விட இலங்கை அரசு தீர்மானித்துள்ளது என்றார்.
ஞானக்கோன் சகோதரர்களில் மூத்தவர் சார்ள்ஸ். இவரைத்தான் சில காலத்திற்கு முன்பு ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூரில் இரகசியமாக சந்தித்து புலிகளுடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முயன்றதாக ராஜபக்ச கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. ஜெயந்தா ஞானக்கோன் ஏர் சிலோனில் விமானியாக பணியாற்றியவர். மறைந்த ஜெயவர்த்தனவின் நண்பர் ஆவார். 1983ம் ஆண்டு இனக் கலவரம் வெடித்த பின்னர் இவர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் ஜெயந்தா.
சார்ள்ஸ் ஞானக்கோன் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர். கடந்த 2005ம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர். பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.
விடுதலைப் புலிகளுக்காக பெருமளவில் துப்பாக்கிகளை விநியோகம் செய்து வந்தவர். இவர்கள் தவிர உருத்திரகுமாரன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர். சிறந்த சட்ட நிபுணர்.
இவர்கள் மூன்று பேரையும் இலங்கைக்கு நாடு கடத்தி கொண்டு வந்து விசாரிக்க இலங்கை அரசு தற்போது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஆனால் அது எளிதாக இருக்குமா என்பது சந்தேகம் என்ற பேச்சு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.
Maveeran
சட்டத்தரணிகள் எல்லாம் அரசியல் வாதிகளாக இருக்கும் பொழுது ஏன் உருதிரக்குமாரன் தமிழ் மக்களின் தேசியத் தலைவர் ஆக இருக்கக் கூடாது.
மாயா
மாவீரன் , உங்கள் தேர்வு மிக சரியானது. பணம் கறக்கும் , மனித நேயமே இல்லாதவர்கள்தான் அரசியலுக்கு வர வேண்டும். அல்லது போராட்டத்துக்கு தலைமை தாங்க வேண்டும். அவர்களால்தான் நன்றாக பேசவும் முடியும். காற்றடித்த பக்கம் சாயவும் முடியும்.
சாதாரணமாகவே வக்கீல்கள் , ஒருவன் விடுதலையானாலும் , தூக்கு மரம் போனாலும் மனச் சாட்சியே இல்லாமல் வந்தவனிடம் காசு பறிப்பார்கள். புலிகளது தலைவராக சரியான தேர்வு இது……………..
thurai
புலத்தில் மந்தைகள்போல் வீதியினை மறிக்கும் கும்பலின் தலைவராகவே உருத்திரகுமார் தோன்றியுள்ளார்.
துரை
பல்லி
புரட்டாதி சனியுடன் ஏழரை சனியும் கூட்டணி அமைத்து உருத்திரகுமாரை அடுத்த மாதம் தாக்க திட்டம் போட்டு இருப்பது தெரியாமல் இவர் வில்லங்கத்துக்கு ஈழம் கேட்கிறார்; அதையும்விட கேபி யும் பலநல்ல விடயங்களை மகிந்தா குடும்பத்துக்கு விருந்து வைத்து விட்டார், தலவரையே போட்டு கொடுத்து அரசியலையும் சமாதானத்தையும் வெள்ளை கொடியுடன் மரணவீட்டுக்கு அனுப்பிய மகாமனிதன் மகிந்தாவிட்டில் விருந்துக்கு தங்கி இருக்கும்போது; உருத்திரா தாண்டவம் ஆடுவது பலர் இலவசமாக கொழும்பு போக உதவலாம்; எதுக்கும் வக்கில் பல்லியைவிட நல்ல ஒரு சாத்திரியை பார்த்து பேசி பக்குவமாய் நடப்பது அவருக்கு மட்டுமல்ல அவர் சார்ந்த பலருக்கு பாதுகாப்பு; கெடுகுடி சொல்கேக்காது என்பார்கள் இவரும் அப்படிதானா???
பார்த்திபன்
அட போங்கப்பா ஆளாளுக்கு உசுப்பேற்றி விடுங்கள். உருத்திரகுமாருக்கு நாளைக்கு ஒன்று நடந்தாலும் “மாமனிதர்” அல்லது “நாட்டுப்பற்றாளர்” விருது கொடுக்கவும் இப்ப தலையில்லை(தலைக்கே ஒன்றுமில்லாது போனது வேறு விடயம்). வேண்டுமானால் ஜேர்மனியில் பம்மாத்தாக “நாட்டுப்பற்றாளர்” பட்டம் கையொப்பமில்லாமல் கொடுத்தது போல் அநாமதேயமாக கொடுத்து யாராவது ஏமாற்றலாம்……
பல்லி
பார்த்திபன் ஏன் இப்படி கவலைபடுறியள்;
அதுதான் தலைவர் உயிர்ப்பார் உயிர்த்தெழுவார் என சில சிலர் கந்தசட்டி விரதம் இருப்பதாக நண்பர் எட்வேட் சொல்லியதாக முகமட் பாய் சொன்னாரே;
மாயா
அட போங்கப்பா , EPDP யின் ஒருங்கிணைப்பாளர் , புலிகளின் புலனாய்வு துறையின் முக்கியமான ஒருவராம். இவரது வேண்டுகோளின்படி EPDP ஒருங்கிணைப்பாளர் தமது பாதுகாப்புக்காக இருந்த 4 போலீசார் சகிதம் மன்னாரில் இருந்து கொழும்புக்கு வெடி பொருட்களை கொண்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளதாக விசேட குற்றப் புலனாய்வு அதிகாரி ஒருவர் சொன்னதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.lakbima.lk/articles/news4.htm
கருணவின் சவுண்டைக் காணவில்லை. டக்ளஸின் சத்தமும் இனி குறையுமோ?
எல்லாம் அந்த கேபீ பிடிபட்டதால் வந்த வினை. கேபீ , தனக்கு தெரிந்த அனைத்தையும் சொல்லி வருகிறாராம். அது போதாதென்று சும்மா இருக்கிற ஆட்களையும் உசுப்பேத்த உருத்திரகுமார் நாடு கடந்து பாய நினைக்கையில் , தமிழ் நாட்டில் கலைஞர் தடை செய்யப்பட்ட இயக்கம் பற்றி பேசக் கூடாது என்று ….ஈழம் குறித்து அடித்த நோட்டீஸ்களை உரித்து விட்டார்களாம்.
நேற்று ஒரு இளையோர் அமைப்பு தலைவரிடம் ” என்னப்பா நடக்குது?” என்று தெரியாமல் கேட்டு விட்டேன். அவர் தந்த பதில் புலத்து தமிழருக்கும் சாவு மணி அடிக்கப் போவதை சொல்லியது. என்ன அப்படிச் சொல்லி விட்டார்?
” உலகமே சேர்ந்து எங்களை அழித்து விட்டது. கார்த்திகை வரட்டும். இன்னொரு செப்படம்பர் 11 மாதிரி நடக்கும்” என்றார் அந்த இளைய தளபதி.
……… எல்லா இஸ்லாமீயரும் செப்டம்பர் 11க்கு பிறகு பயங்கரவாதிகள். அதனால் ஷாருக்கான் மாதிரி ஆட்களுக்கே பயங்கர செக்கிங். இனி தமிழருக்கும் அது மாதிரி ஏதாவது நம் இளைய தளபதிகள் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பெற்றோரே , உங்கள் குழந்தைகள் கவனம். முதலில் நீங்கள் கவனம். உங்களால்தானே , பிள்ளைகள் ரோட்டுக்கு வந்தவை.
பார்த்திபன்
//பார்த்திபன் ஏன் இப்படி கவலைபடுறியள். – பல்லி//
பல்லி நீங்க கேள்விப்பட்ட மாதிரி தலை உயிர்த்தெழுந்தாலும், கந்தசட்டி முடிய வாற சூரன் போரில் புலத்துப்புலிகளே தலையைச் சங்காரம் செய்து விடுவார்கள். காரணம் சுருட்டிய சொத்துகளை திருப்பி ஒப்படைக்க வேண்டுமே என்ற கவலையில்.
DEMOCRACY
/ஜெயந்தா ஞானக்கோன் ஏர் சிலோனில் விமானியாக பணியாற்றியவர். மறைந்த ஜெயவர்த்தனவின் நண்பர் ஆவார். 1983ம் ஆண்டு இனக் கலவரம் வெடித்த பின்னர் இவர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் ஜெயந்தா.
சார்ள்ஸ் ஞானக்கோன் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர். கடந்த 2005ம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர். பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.
விடுதலைப் புலிகளுக்காக பெருமளவில் துப்பாக்கிகளை விநியோகம் செய்து வந்தவர். இவர்கள் தவிர உருத்திரகுமாரன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர். சிறந்த சட்ட நிபுணர்./– நல்ல விஷயம்!.. “இதைதான் இந்த இணைய தளத்தில்(தேசம்), சபா நாவலன் என்பவர் கூறினார், தமிழர் தலைமைக்கும், சிங்களவர் அரசியல் தலைமைக்கும், என்றுமே பிரச்சனை இருந்ததில்லை என்று!”. பின் எப்படி இவ்வளவு உயிர்கள் பலி கொடுக்கப்பட்டன?, பதிலும் மேலேயே உள்ளது!. மகிந்தா சகோதரர்களும், இதில் “விதி விலக்காக” இருந்திருக்க மாட்டார்கள்!, ஆனால் அவர்கள் சிங்கள இராணுவம் தோன்றிய கிராமப் பகுதியிலிருந்து வந்ததால் (அடித்தளம்), சிறிது முட்டாள்களாக (பிழைக்கத் தெரியாத?)இருக்கிறார்கள் .இவர்களின் கை, கால்கள் இந்தப் பிரச்சனைகளில் அகப்படாத வரையில், யாருக்கும் “ஆயுதம் விற்பார்கள்”. அகப்பட்டவன் வன்னியன் அல்லவா….
P john
இவரும் பிராபகரனைப் போல் முட்டாளாக இருப்பார்.
இந்த வெளிநாட்டுத் தலைமைக்கு யாரும் போட்டியிட அனுமதிப்பார்களா? அல்லது போட்டியிட்டால் ஆளைவிட்டு அடிப்பார்களா?
maniam
சீனாவின் ஆயுத உதவியே புலிகளின் போராட்டத்தை முடிவுக்கு குண்டு வந்ததாக தற்போது உறுதியாகயுள்ளது. அதி நவீன ஆனால் மிகவும் மலிவான சீன தயாரிப்பான வெட்டு கோடாலியே புலிகளின் போரை முடிவுக்கு கொண்டுவர பயன்படுத்தப் பட்டுள்ளது. இதனால் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு சீன தூதுவராலயங்களுக்கு முன்னாள் பாரிய பேரணி போராட்டங்களை நடாத்த தீர்மானித்துள்ளது. புலன் பெயர்ந்த புலி ஆதரவாளர்களே தமிழ் ஈழ அபிமானிகளே உங்களால் பேரணியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் வழமை போல் உங்கள் பண உதவியை நல்குமாறு கேட்கிறோம்
chandran.raja
இப்பொழுது பணம் வசூலிப்பவர் யாரோ? விசேஷகொண்டாடங்களில் நாலுபேருக்கு மத்தியில் கதைசொல்லிக் கொண்டிருப்பவர்கள். தலையில் துண்டு போட்டமாதிரி இருள்ளோடு இருளாக மறைந்து கொண்டிருக்கிறார்கள். வருகிற அறிக்கைகளும் விலாசம் இல்லாமலே வருகிறது. இந்த நிலையில்….!
uma maheswaran
i dont relly understand why we all fuss about all this, uruththara kumaran is no body compare to rajapaksa family and i dont think any one could see him a special.all we cold do is back on goverment and support the issues for tamils.forget the video fotage and all that nonsense and do something practicaly.we couldnt able to save balakumaran or anyone in paricular isnt,we know now what could we can do about tamils in srilanka dont we? we have no power except blabering?