புத்தளம் பாலாவியில் 1 கோடி 38 லட்சம் ஷரூபா செலவில்; நிர்மாணிக்கப்பட்ட புதிய தபாலகத்தை வெளிநாட்டு ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் பதில் தபால், தொலைத் தொடர்புகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று திறந்து வைத்தார்.
இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தபாலகத்தைத் திறந்து வைத்து உரை நிகழ்த்திய அமைச்சா பீரிஸ் நாட்டில் பயங்கரவாதம் நிலவிய போது, எவ்வித அபிவிருத்திகளையும் செய்ய முடியாத நிலை காணப்பட்டது. இன்று அவற்றை அழித்து அபிவிருத்திகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார் எனக்கூறினாh.;
புத்தளம் மிகவும் முக்கியமான பிரதேசமாகும். மன்னார், மற்றும் ஏனைய முக்கிய வடமாகாண பகுதிகளுக்குப் பயணம் செய்யக் கூடிய பாதைகள்; இங்கிருந்து செல்கின்றன. புலிகளின் சர்வதேச தலைவர் பத்மநாதனும் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமைத்துவமற்ற அமைப்பாக இன்று புலிகளின் அமைப்பு மாறிவிட்டது. இனி அவர்களுக்கு விமோசனம் இல்லை. புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.மு.தசநாயக்கவை கொன்றதும் புலிகளே. இம்மாவட்ட மக்களுக்குப் பெரும் பணியாற்றிய நல்லதொரு தலைவர் த.மு.தசநாயக்க” என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.
இருபது குடும்பங்களுக்கான காணி உறுதிகளையும் அமைச்சர் இந்நிகழ்வில் வழங்கினார். கால்நடை வளத்துறை பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் அழைப்பின் பேரில் அமைச்சர் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இதில் கடற்தொழில் பிரதி அமைச்சர் நியோமல் பெரேராவும் கலந்து கொண்டார்.