ஸ்ரீ ரெலோ எனப்படும் ஸ்ரீ தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் பெயரை விரைவில் கூடவுள்ள தமது தேசிய மாநாட்டில் “புதிய தாயகம்” என்று மாற்றவுள்ளதாக கட்சியின் செயலாளர் ப உதயராசா தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் நிலை உட்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னரே இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ள அவர் புதிய தேர்தல் சட்டமூலத்திற்கு ஏற்க தனி இனத்தையோ மதத்தையோ பிரிவினை சொற்களையோ தாங்கிய கட்சிகள் தடை செய்யப்படும் என்ற அரசாங்கத்தின் யோசனையை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.