இந்தியா வில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயற்படுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது அவற்றின் கொடி மற்றும் சின்னங்கள், தலைவர்களின் படங்களைப் பயன்படுத்தி விளம்பரம் செய்வது போன்ற நடவடிக்கைகள் சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் நடத்துபவர்கள் இவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பிரகடன நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.