நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த தேர்த் திருவிழா இன்று காலை 7 மணிக்கு கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த ரதோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகளிலிருந்தும், தென் இலங்கையில் இருந்தும் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொள்ளவிருப்பதால் இரத்மலானைக்கும் – பலாலிக்குமிடையே நடைபெற்று வருகின்ற உள்ளூர் விமானச் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வருட உற்சவ காலங்களில் நேர்த்திக் கடன்களை நிறைவு செய்வதற்காக பெருந்தொகையான பறவைக் காவடிகள், தூக்குக் காவடிகள், பாற்காவடிகள் என பல்வேறுபட்ட பெயருடைய காவடிகள் இடம்பெறவுள்ளன.
பக்தர்களினது வசதியினைக் கருத்தில் கொண்டு யாழ். மாநகர சபையின் நிர்வாகத்தினர் அதிகமான கழிவறைகள், குடி தண்ணீர் தாங்கிகள் என்பவற்றினை ஆலய வீதிகளிலும் முக்கியமான இடங்களிலும் வைத்துள்ளனர். ஆலயத்திற்கு வருகை தரவிருக்கும் பக்தர்கள் அதிக அளவிலான தங்க நகைகளையோ, பணங்களையோ, கையடக்க தொலைபேசிகளையோ, ஒலிப்பதிவு கருவி மற்றும் கமரா போன்ற பொருட்களை கொண்டு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அங்கு கடமையில் அமர்த்தப்பட்ட பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனமும் நேரடி அஞ்சல் செய்யவுள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபை யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் ஆகிய இடங்களில் உள்ள பஸ் டிப்போக்கள் மேலதிக பஸ் சேவைகளை நடாத்தி வருவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றன.
இதேபோன்று, குடாநாட்டில் உள்ள தனியார் சிற்றூர்தி சேவை சங்கத்தினரும் பக்தர்களினதும் போக்குவரத்து வசதிகளைக் கருதி அதிக அளவிலான பஸ்களை சேவையில் அமர்த்துவதற்கு முன்வந்துள்ளனர்.
ஆலயத்திற்கு வந்து செல்கின்ற பக்தர்கள் தங்கி இருந்து செல்வதற்கும் தாக சாந்தி அருந்திச் செல்வதற்கும் பல வீதி சந்திகளில் பந்தல்கள் அமைக்கப்பட்டு குருகு மணல்கள் பரப்பில் போடப்பட்டிருக்கின்றன. இரவில் தாக சாந்தி பந்தல்களில் கோப்பி, தேனீர் என்பன வழங்கப்பட்டும் வருகின்றன.
nedya
by preyer him the probelems cannot solve its proved
பல்லி
அரோகரா, உடையுங்கடா தேங்காயை
நயாக்கரா நீர் வீழ்ச்சியிலும், சரிந்து நிற்க்கும் கோபிரத்துக்கு கீழும்;