இலங்கையின் வடக்கே வவுனியாப் பகுதியில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் மக்களை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி செவ்வாய்கிழமை சென்று சந்தித்துள்ளார். முகாம்களில் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூட இன்னமும் தங்கியிருப்பது எதனால் என்றும், எதனால் என்று தனக்கு தெரியவில்லை என்றும் ஆனந்தசங்கரி தெரிவிக்கிறார்.
“முகாம்களில் இருக்கும் கூடாரங்களில் எலிகளே வாழ முடியும்” என்றும் அங்கு மனிதர்கள் பல மாதங்களாக வாழ்ந்து வருவதாகவும் அவர் BBC தமிழோசையிடம் தெரிவித்தார். எனினும் முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு முன்வந்துள்ளதையும் தாம் காணக் கூடியதாக இருந்தது என்றும் ஆனந்த சங்கரி கூறுகிறார்.
விடுதலைப் புலிகள் சிறார்களை பிடித்துச் சென்றார்கள் என்கிற குற்றச்சாட்டை கடுமையாக முன்வைத்த அரசு தற்போது முகாம்களில் சிறார்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதில் நியாயம் இல்லை என்று அங்குள்ளவர்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.
பல்லி
ஜயா கடுப்பு ஏத்தாதையுங்கோ; சில காலத்துக்கு முன்பு எதோ மகிந்தா குடும்பம் நல்லதை மட்டுமே செய்யும் என கதைச்சது மறந்து போச்சா? என்ன அரசியல்;
சாந்தன்
எல்லாம் இலக்சன் முடிவு செய்த வேலை. வெண்டிருந்தால் இவர் என்ன கதைச்சிருப்பார் எண்டு எங்களுக்கு தெரியாதாக்கும்!
santhanam
இது அரசியலில் சகயம் பல்லி. அண்ணரும் சொன்னவர் யதார்த்தவாதி என்று தமிழனிற்கு மறதி அதிகம். இல்லையென்றால் 30வருடம் அண்னை ஏமாற்ற முடிந்தது அதுவும் சாவில் தமிழ்ழம்……