மாலபே மற்றும் அங்குலாணப் பகுதில் அன்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்;படும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக பாதுகாப்பு படையினரையும் பொலிஸாரையும் மக்கள் பாராட்டியுள்ளனர். ஆனால் மாலபே மற்றும் அங்குலாணப் பகுதில் அன்மையில் இடம்பெற்ற சம்பவங்களையடுத்து பொலிஸார் தமது கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களில் விரைவில் மீளக்குடியமர்த்தப்படுவர் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.