ஆசிய நாடுகளில் அதிகளவிலான மக்கள் தமது வாழ்வை திருப்திகரமாக வாழுமிடங்களில் இலங்கை முதலிடத்திலுள்ளது. நுகர்வோர் நடவடிக்கை தொடர்பாக ஆசிய பசுபிக் கிறே குழு விளம்பரக் கூட்டு வியாபார சங்கத்தினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையிலேயே இலங்கை முன்னிலையில் உள்ளது. 16 நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வின்படி தாய்வான் 28 சதவீதத்தை மட்டுமே பெற்று இறுதி நிலையிலுள்ளது.
இச்சங்கத்தின் 4 ஆவது வருடத்தில் ஆசிய பசுபிக் நாடுகளிலுள்ள 18 – 65 வயதுக்கிடைப்பட்டவர்கள் 8000 பேரிடம் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மின்னஞ்சல்கள், நேர்காணல்கள் மூலம் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதேவேளை, சீனா மற்றும் இலங்கை ஆகியன 94 சதவீதத்தால் அதிகளவில் நம்பிக்கையுடைய மக்கள் வாழும் நாடுகளாக உள்ளன.
mike
இந்த ஆய்வினை செய்தவரை உடனடியாக வவுனியா அகதிமுகாமில் ஒரு மாதமாவது தங்க அனுமதித்தால் இவரது அறிக்கை வேறுவிதமாக இருக்கும்.
நண்பன்
//மின்னஞ்சல்கள், நேர்காணல்கள் மூலம் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. //
உலக பணக்காரர்கள் வரிசையில் முதலாம் இடத்தில் இருப்பவர்கள் இலங்கை தமிழர் எனவும் எழுதுவார்கள். ஆய்வு மின் அஞ்சலில்தானே? கொடுமை.
வவுனியாவில் ஏன்? இவர்களை போலீஸ் பதிவில்லாமல் கொழும்பில் விட்டாலும் போதும். திருப்தியாக பின்னி எடுத்து மசாஜ் செய்து அனுப்புவார்கள்.
பல்லி
அப்படியானால் சோமாலியா உலகத்தில் திருப்தியாக வாழும் மக்கள் என்னும் வரிசையில் முதலிடமோ????
uma maheswaran
of course,we not been complaing,its very true. we all wantted to hear this. as anyone who has seen here people knees go wobbly after they leave from pubs i didnt never exprinced before. i am not saying life is better there but we dont complain much. we have no difficult to make choices because there only one choice to make, apparently our moto was one always one.