ஆலய உற்சவமொன்றின் போது, குளவிகள் கொட்டியதில் 80 பேர் அப்புத்தளை மற்றும் தியத் தலாவை அரசினர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம், அப்புத்தளை தோட்டத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
குளவிகள் கொட்டியவர்களில் 20 பிள்ளைகளும், இரு பெண்களும் ஆபத்தான நிலையிலிருப்பதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆலய உற்சவத்தின் போது அடியார்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொண்டிருந்த போது, அடுப்பு புகையினாலேயே குளவிகள் கலைந்து அடியார்களைக் கொட்டியதாக தெரிய வருகின்றது.