அணிந்திருந்த தாவணி கழுத்தில் இறுகியதில் சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று கம்பளை அம்பகமுவ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஜெகநாதன் நந்துஜா (13 வயது) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தாவணி அணிந்தபடி இச்சிறுமி நித்திரை செய்துள்ளார். நித்திரையின் போது எதிர்பாராதவிதமாக தாவணி கழுத்தில் இறுகியதில் இரவு 10.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சிறுமி கண்டி விஹாரமாதேவி கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.