வவுனியா விலுள்ள நிவாரணக் கிராமங்க ளிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கி யுள்ள குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கு மென இன்று 20ம் திகதியும், நாளை 21ம் திகதியும் விசேட போஷாக்குத் திட்டம் செயற்படுத்தப்படவிருக்கின்றது.
சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய குடும்ப சுகாதாரப் பணியகம் இத்திட்டத்தை செயற்படுத்தவிருக்கின்றது.
வன்னியிலிருந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலைய ங்களும் 2500 கர்ப்பிணி பெண்களும், 40 ஆயிரம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தங்கியுள்ளனர்.
இவர்களின் போஷாக்கு நிலமையை மேம்படுத்தவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும்,. நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள குழந்தைகளுக்கு சின்ன முத்து, போலியோ நிர்பீடன மருந்துகளும், வயிற்றுப்புளுக்கான தடுப்பு மருந்துகளும் எற்கனவே பெற்றுக் கொடுக்கப்பட்டன.
இவற்றை பெற்றுக் கொடுப்பதில் குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த ஆர்வம் காட்டினர். இதனைக் கருத்தில் கொண்டுதான் இந்த விசேட போஷாக்குத் திட்டத்தை செயற்படுத்த அமைச்சர் நடவடிக்கை எடுத்தாகவும் அவ்வதிகாரி கூறினார்.