புலிகளுக்கு ஆதரவளிப்போர் மீது கடும் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை

t-n-govt-logo.jpgஇந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயற்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ் நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது. இந்திய அரசியலமைப்பின்படி 1967ஆம் ஆண்டின் சட்ட ரீதியற்ற நடவடிக்கைகளைத் தடை செய்யும் சட்டத்தின் கீழ்,  நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புக்களை ஆதரித்துப் பேசுதல்,  அத்தகைய இயக்கங்கள் மற்றும் அமைப்புக்களின் படங்கள், கொடிகள்,  இலச்சினைகள் என்பவற்றைப் பொது விளம்பரங்களில் உபயோகித்தல், அவற்றை பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் காண்பித்தல்,  பிரசுரித்தல் ஆகியன தண்டனைக்குரிய குற்றங்களாகும் என குறிபிடப்பட்டுள்ளது.

விடுதலைச் சிருத்தைகள் எனும் கட்சியின் தலைவர் தொல் திருமாவளனின் 48ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழகத்தில் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்தே தமிழக அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் திருமாவளன்,  தமிழர்களுக்கு தனியான தாய்நாடு குறித்து தொடர்ந்தும் பேசி வருவதோடு புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டமையையும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • mike
    mike

    இது தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிவிடுவது போலல்லவா இருக்கின்றது.

    Reply
  • Vinoj
    Vinoj

    புலிகள் எந்த முலையில் இருந்தாலும் தடை செய்யப்பட்டாலே இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு வரும். புலி மனோவியாதி மிகவும் ஆபத்தானது.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    திருமாவுக்கு பல முகங்கள். தம்மைக் காத்துக் கொள்ள திமுக. தமது வாக்குகளைக் காத்துக் கொள்ள புலிகள். இவர் சரியாக இருந்தால் திமுகவை விட்டு எப்போதோ வெளியேறி இருக்க வேண்டும். தமிழகத்தில் தலித்தியம் பேசுவோர் புலிகளை ஆதரிக்கின்றனர். புலிகள் தலித்துகள் என்ற கருத்து தமிழகத்தில் பரவியிருப்பதே அதற்கான காரணமாகும்.

    இதை இலங்கை தமிழர்கள் உணர்கிறார்களோ இல்லையோ, இந்திய தமிழர்கள் அதையே ஊட்டி வளர்த்துள்ளனர். சாதிகளை அழிக்க சாதி பேரால் வாழ்வது பலரது கேலிக் கூத்து. சாதியை ஒழிக்க நினைப்பவன் சாதி குறித்து பேச மாட்டான். இவர்கள் சாதி கட்சி வழி அரசியல் நடத்துவோர். இதைவிட்டால் ஒரு வாக்கு கூட கிடைக்காது.

    Reply
  • பல்லி
    பல்லி

    நண்பா இது திமாவுக்கு மட்டும்தானா? எம்மவர் அதுவும் புலம் பெயர் அறிஜீவிகள் ஏதோ எல்லாம் சொலுகினம்; இருப்பினும் நண்பன் கருத்து யதார்த்தம் மட்டுமல்ல சிந்திக்க வேண்டியதும் தான்;

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /mike on August 20, 2009 8:20 am
    இது தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிவிடுவது போலல்லவா இருக்கின்றது.

    /— இதுதான் நடக்கிறது!.அப்போ கலைஞர், “பிரபாகரன் அன் நண்பன் என்று கூறியது!?”, “சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு கடிதம் எழுதியது!?”,. …இன்னும் பல, எல்லாம் காந்தி கணக்கோ!?. கலைஞரின் “ஃபாடி கெமிஸ்ட்டிரி” என்பார்கள், அதற்கு டிருமா ஒத்துப் போகிறார்!, அவ்வளவுதான், கேடயமாக செயல்(கேணயனாக)படுகிறார்….

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் புலிகளை ஆதரிப்போரென்ற சொற்பதம் பாவிக்கப்படவில்லை. ஆனால் இங்கே அருட்செல்வன் தான் அப்படி மாற்றி தலையங்கம் அமைத்துள்ளார். தமிழக அரசு தடைசெய்யப்பட்ட அமைப்புகள் என்ற சொற்பதத்தையே பாவித்துள்ளது. மேலும் கலைஞர் தமிழ்செல்வன் இறப்பிற்காக அஞ்சலியாக கவிதை எழுதினாரேயொழிய DEMOCRACY குறிப்பிட்டது போல் தமிழ்ச்செல்வனுக்கு கடிதம் எழுதவில்லை. 1985இல் கலைஞர் பிரிந்து செயற்பட்ட அனைத்து இயக்கங்களையும் இணைக்க முற்பட்டார். ஆனால் எம்ஜியார் இயக்கங்களை பிரித்து வைத்திருப்பதிலும் புலிகளுக்கு ஆதரவு காட்டுவதிலுமே முக்கியத்துவம் கொடுத்தார். புலிகளுக்கு ஆதரவு கொடுத்தற்கு முக்கிய காரணம் எம்ஜியார் தனது அரசியல் எதிரிகள் பலரை ஒழித்துக் கட்டுவதற்கு புலிகளைப் பயன்படுத்தினார். இவையனைத்தும் அப்போது தமிழகத்திலிருந்த அனைத்து இயக்கங்களுக்கும் தெரியும்.எம்ஜியார் முழுக்க முழுக்க புலிகளுக்குத் தான் உதவிகளைச் செய்தாரேயொழிய தமிழகத்திலிருந்த அகதி மக்களுக்கு உதவ முன்வரவில்லை. ஆனால் கலைஞர் தான் தமிழகத்திலிருந்த அகதி மக்களுக்கும் பல்கலைககழக அனுமதிக்காக கோட்டா முறையில் இடஒதுக்கீடும் செய்து கொடுத்தார். இன்று தமிழகத்தில் கலைஞர் ஆட்சி நடப்பதனால்த் தான் வைகோ, நெடுமாறன், ராமதாஸ் போன்றோரால் புலிவேசம் கட்டி கதைக்க முடிகின்றது. இதுவே ஜெயலலிதா ஆட்சியாகவிருந்திருந்தால் பேசாமல் இருந்திருப்பார்கள்.

    Reply