இலங்கைத் தமிழர்களது எதிர்காலம்: ரவி சுந்தரலிங்கம்

பாகம் 4
எங்கிருந்து, யாரைப்பற்றி, எக்காலத்தில்.

முன்குறிப்பு: இக் கட்டுரையின் பிரதான நோக்கம், புத்தி ஜீவிகள் பற்றி எமது சமுதயங்கள் கொண்டுள்ள நிலைப்பாடுகள் பற்றிய எடை போடலாகும். இதனை, (1) புத்தி ஜீவிகள், ஜீவனில்லா புத்திமதிகள் (2) கல்விப் பண்டம் (3) சமூகவியல், விஞ்ஞானவியற்துவ மாதிகள் (4) நியூற்றனின் பௌதீகமாதிரி (5) அவற்றிடையேயான ஒப்பீடு, எனும் உப-தலைப்புகளுடன் தர விளைகிறோம்.

புத்தி ஜீவிகள், ஜீவனில்லா புத்திமதிகள்
எமது சமுதாயங்களில் இடையிடையே புத்திஜீவிகளுக்கு எதிரான செயற்கையான போக்கு ஒன்றினை அவதானிக்கலாம். இது மக்களிடையே உள்ள உண்மையான வெளிப்பாடா? அல்லது அரசியற்-சந்தர்ப்பவாதிகளது கூச்சலா, வன்முறை நோன்பாளர்களது முரட்டுவாதமா? அல்லது எமது சமுதாயங்களிடையே உள்ள ஏற்றத்-தாழ்வுகளை தவறாகப் புரிந்து கொண்டமையின் விளைவா? அல்லது தனிப்பட்ட மனோவியல் தாழ்வு உணர்வுகளால் பட்டப் படிப்பு பெற்றவர்முன் குனிந்து பக்குவமாக நிற்க வேண்டும் என ஒடுக்கு முறையாகிவிட்ட நிலைமையின் மனச்சுமையினால் அடிமனதில் திரண்டு எழும் வெறுப்பா?

ஏனெனில், கல்விப் பட்டம் பெற்றவர்கள், பாடசாலைப் படிப்பே இல்லாதவர்கள், வாழ்க்கையினூடாக போராட்டத்தினூடாக அனுபவம் பெற்றவர்கள், இன்று யாராவது கலாச்சார அரசியல் சமூக துறைகளில் கருத்துச் சொல்பவர்கள் யாவரும், தாம் கொண்ட அறிவையும் (knowledge) புத்தியையும் (intelligence) பாவனம் செய்யாது எப்படி இக்காரியங்களில் ஈடுபட முடியும்?

அல்லது, “ஐயோ புத்திஜீவிகளே வேண்டாம் ஐயா” என, தம்மை ஏதோ தங்கவேலு என்ற கற்பனையில், சாமத்தில் ‘இனிமையான வேலையற்று’ குந்தி இருந்து கணணித் – தளங்களுக்கு தமது ‘opinion’ சொல்லுவது ‘புத்தி-ஜீவித’ நடத்தையின்றி வேறென்ன?

புத்தி-அறிவு என்ற இணைப்பின் பிரகாரம் இயங்காவிடில் நாம் வெறும் இயல்புகளில் இயங்கும் மிருகங்களா? அல்லது யாராவது programm பண்ணிவிட்ட இயந்திரங்களா என்ன? புத்தி-ஜிவிகள் எனும்போது என்ன விளக்கங்களை இவர்கள் கொண்டுள்ளார்கள்?

இவர்கள், கருத்தை விளங்கிக் கொள்ளவோ நிராகரிப்பதற்கு வக்கோ அற்றவர்கள் ஆயின், பொது-முத்திரை குத்துவதுவதும், வெற்று விமர்சனங்கள் செய்வதும், மிஞ்சினால் வன்முறையால் முகம்கொடுக்க முனைவதையும் நாம் அன்றாடம் காண்கிறோம். ஆனால், இவர்கள் பொதுவாக குழு மனோநிலை கொண்டவர்களாக, விசுவாசம் என்ற கண்மூடித் தனமான வாதங்களுள் தாண்டு கிடப்பவர்களாக இருப்பின், இவர்களது போக்கு வகைப்படுத்தக் கூடியவை, எனவே விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆனால், பொதுப்-புத்தி சொல்லும் மனிதர்கள், எதிலும் இல்லாதவர்கள் எங்கும் இருப்பவர்கள். இவர்கள் தாம் புத்திஜீவிகளுக்கு எதிரானவர்கள் எனக்கூறி தம்மை அம்பலப்படுத்துவது ஏன்?

“எனக்கு இவருடைய கருத்துப் பிடிக்காது அவருடையது நல்லாகப் பிடிக்கும்”, அல்லது “எனக்கு உந்த மனிசனைப் பிடிக்காது, ஆகையால் அவர் சொல்வது பிடிக்காது” என்று கூறுவதைக் கூட ஏதோ நியாயமாக ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால், “உவை ஒருத்தரையுமே எமக்குப் பிடிக்காது” என்றவாறு பொதுப்-புத்தியை சொல்லும்போது இவர்கள் ஏன் இப்படி ஆனார்கள் என்ற கேள்வியிலும், எங்கிருந்து பேசுகிறார்கள் என்ற கேள்வி மேலோங்குவது தவறா?

எமது சமுதாயங்களிடையே உள்ள நிலமை என்ன:
1. ஆங்கிலேயர் ஆட்சி இலங்கை வந்ததில் இருந்து ஏட்டுப் படிப்பை தமது முதல் -அபிலாசையாக வளர்த்துக் கொண்டுள்ளவர்கள் தமிழர்கள்.

2. யாழ் குடாநாட்டில் தொடங்கிய இச் சமுதாய-ஓட்டத்திற்கு சமுதாய, நிலச் -சுவாத்திய உந்தல்களாலான பொருளாதார நியதிகள் பல காரணிகளாக அமைய, கிறிஸ்தவ மத நிறுவனங்கள் (missionaries) கட்டிய பாடசாலைகளும் ஊக்கு சக்தியாக இருந்தன.

3. இன்று வடகிழக்கில் பாடசாலைக் கல்வி என்பது கைக்கு எட்டாதவர்கள்கூட கல்வியால் தமது நிலையை உயர்த்திடலாம் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

4. தற்போது இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் தமது பிள்ளைகள் க.பொ.த பரீட்சைகளை எடுப்பதற்கான வசதிகளைச் செய்து தரவேண்டும் என்ற கோருவதையும் நாம் அறிவோம்.

5. புலம் பெயர்ந்தவர்கள் கல்வியே எல்லாம் என தமது வாழ்கையையே அதற்கான வகையில் மாற்றிக் கொள்வதையும் தமது பிள்ளைகளை கல்வித் துறையில் நெருக்குவதையும் நாம் நன்றாக அறிவோம்.

எனவே, கல்வி என்பது தமது சமூக – பொருளாதார முன்னேற்றத்திக்கான அடிப்படையான வழி என்பதை நிராகரிக்கும் தமிழ் பேசும் சமுதாயங்கள் எதுவுமில்லை. இந்நியதிக்கு புத்தி ஜீவிகளுக்கு எதிராகக் கூக்குரல் போடுபவர்களும் விதிவிலக்கல்ல என்பதும் திண்ணம்.

கல்விப் பண்டம்:
கல்வி எமது சமுதாயங்களது அபிலாசைகளுள் பிரதானமாக இருக்கும்போது, புத்திஜீவிகளுக்கு எதிரான கீச்சுக் குரல்கள் ஏன் பிறக்கின்றன?

இலங்கைத் தமிழர்களிடையே கல்வி என்பது எங்ஙனம் அமைகிறது? பொதுவாக அது தனிமனிதனது, அதனால் அவனது உற்றாரது, பொருளாதார முன்னேற்றத்தையும், அவை பேரில் அவரது சமுதாய – முன்நகர்வையுமே குறித்து நிற்கிறது.
அதாவது, வேலை வாய்ப்பாக, பணக் குகை – வாயிலாக, சமுதாயத் தட்டுகள் இடையேயான ஏணியாகவுமே கல்வி கருதப்படுகிறது.

இவற்றிக்கு அப்பால் கல்வி என்பதை அறிவை-வளர்க்கும் துறையாக, ஆய்வுகளை அடிகோலும் வகையாக, ஆய்வு-தேடல் என்ற ரீதியில் அமையும் புத்திஜீவிதத் தளமோ கலாச்சாரமோ (intellectual base / tradition) என்றும் இருக்கவில்லை, அவ் வளர்ச்சிக்கான அறிகுறிகள் இன்றும் இல்லை. புலிப்-போர்காலத்தின் முன்னர், கல்விமான்கள் நிறைந்த இடம் யாழ்ப்பாணம் என்ற சுயவிளம்பரப் பிம்ப-நிலை (self-image) படர்ந்திருந்த போதிலும், சர்வதேசிய எதிர்பாரப்புகளுக்கு இணைவான தரத்தில் ஆய்வுகள் கண்டுபிடிப்புகள் எம்மிடம் இருக்கவில்லை.

மேலும், யாராவது உருவாக்கி உற்பத்தி செய்யும் பொருள் பண்டத்தை வாங்கி மற்றவரிடம் விற்பனை செய்து தமது உழைப்பில்லா-முயற்சியில் இலாபப்-பணம் சேகரிக்கும் வெற்றுத் தரகு-வியாபாரிகளது வர்த்தகத் துறை போலவே, கல்வியும் எமது சமுதாயத்தில் ஒரு பண்டமாகத் திகழ்கிறது. மேலும், மக்களது பொது அறிவை, சொத்தை, வளர்க்க மாட்டாத ஜீவனில்லாப்- புத்தியாக, அன்றாடம் விற்றுக் காசாக்கும் விபச்சாரமுமாகவே உள்ளது என்று கூறுவது ஒரு விமர்சனமல்ல, அது சமுதாயத்தின் நிழல்-படமாகும்.

எனவே, புத்திஜீவிகள் என்ற பதம் பற்றிய விளக்கமும், அறிவும் பெறுமதியும், கணிப்பும், இக் குதர்க்கங்களின் வழி அமைந்ததாகவே உள்ளமை வியப்பதற்கில்லை. மற்ற இனத்தின் புத்திஜீவிகளது கல்விகளை படித்து ஒப்பிப்பதால், அவர்களது புத்திஜீவிதப் படைப்புகளை பண்டமாற்றம்-செய்து பிழைப்பதால், தமது உருவாக்கங்கள் படைப்புகளை ஒட்டிய முதலீடு செய்யும் அநுபவம் (enterpraising) இல்லாதமையால், எம்மிடையே புத்திஜீவிகள் என்றதும் உடற்-சொறி உருவாகுவது எதிர்பார்க்கக் கூடியதே.

கல்வி என்றால் பொறியியல், மருத்துவம், சட்டத்தரணி, கணக்காளன் என்ற நான்கு துறைகளுக்கான ஏட்டுப்படிப்பு என்ற குறுகிய நோக்கில் இயங்கும் எமது சமுதாயத்தில், அறிவு என்பதற்கும் புத்தி-ஜீவிதம் என்பதற்கும் உள்ள தொடர்பை யார்தான் உயர்த்திட முடியும்? “தம்பி பௌதீகம் படிச்சிட்டு என்ன வாத்தியாராயே வேலை செய்யப் போறாய், எஞ்சினியறிங் படியடா!” என்ற பொதுப்-புத்திமதி சொல்லும் கல்விமான்களைக் கொண்டது எமது சமுதாயம். பௌதீகமே பொறியியற் துறையின் என்லைகளைக் கட்டுவதும் விஸ்தரிப்பதும் என்பது பின்தங்கிய நாடுகளில் பேரறிவென விளங்க, வளர்ந்த நாடுகளில் அது பொது-அறிவாக இருப்பது புதுமையா என்ன?

அப்படியாகின், ஏதாவது கருத்தை தர்க்க ரீதியில் காரணங்கள் ஆதாரங்களுடன் நிராகரிக்க முடியாது, தனிமனிதனாயின் ஏதாவது பட்டப் பெயர் சூடி அல்லது புத்தி-ஜீவிகள் என ஒட்டுமொத்தாக எடுத்தெறியும் போக்கை எவ்வாறு சீர்செய்திட முடியும்?

புத்திஜீவிகளுக்கு எதிரான பிரச்சாரம் நயவஞ்சகத் தன்மையானது என்பது துலக்கமான விடயம். ஆனால், இப்பிரச்சாரங்களை தன் இயல்பிலேயே செய்பவர்கள் மற்ற இனத்தவரது புத்தி-ஜீவிகளது படைப்புகளில் வாழுகிறார்கள், அவர்களது சிந்தனைகளை மேற்கோள் காட்டியே தமது சமுதாயத்தையும் வழி நடத்த எத்தனிக்கிறார்கள், என்ற காரணங்கள் ஒரு புறமாயினும், இவர்களது சாடல்கள் உண்மைகளுக்கு பிறம்பானவை என்பதே முக்கியமானது.

புத்தி ஜீவிகளுக்கு எதிராக ஒரு போரையே புலிகள் நடத்தினார்கள், கொலைகளாலும் தாம் உருவாக்கிய பீதியினாலும் கல்வி பெற்றவர்களை உலகின் நான்கு கோடிகளுக்கும் ஓட்டினார்கள்? “எமக்கு யாரும் ஒன்றும் சொல்ல வேண்டாம், தலைவருக்கு எல்லாம் தெரியும்” என்பதன் அடிப்படையில்தானே தமிழர் சமுதாயங்கள் எல்லாம் தமது பங்களிப்புகளைச் செய்யுமாறு நிரப்பந்திக்கப்பட்டன? இன்று எமது மக்களது அவல நிலைக்கு புலிகளா அல்லது அவர்களது வாக்காலத்து-வாங்கிகளா காரணம்? எதிலும் இடம்பெறாத புத்தி-ஜீவிகள் இங்கு இந்நிலைக்கு எப்படித்தான் காரணமாகினர்?

“தளத்தில்தான் எல்லாம் வெளியில் இருந்து ஒன்றும் செய்ய முடியாது, வெறும் கதைகளால் பிரயோசனம் இல்லை” என்றெல்லாம் மாற்றுக் கருத்துக் கொண்டவரை வாய் மூடச் செய்தனரே? அவர்கள் புத்தி ஜீவிகளா செய்கை வீரர்களா?
இறுதியில், போராட்டத்தைக் காப்பாற்ற புகலிகள் சமுதாயங்களாலேயே முடியும் என்று அறை கூவியதும் ஜீவனற்ற-புத்திமதி சொன்னவர்களா அல்லது புத்தி-ஜீவிகளா?

தமது விருப்பு-வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, புலிகளது போரின் முடிவில் வெற்றி சாத்தியமா என்ற தமது முன்னைய கணிப்புகளையும் தவிர்த்து, சமகால சச்சரவுகள் நிலைப்பாடுகளில் இருந்து விலகி நின்று பார்ப்பவர்கள், இலட்சியச்-சரித்திரம் சொல்லும் தகமை பெற்றவர்கள். இவர்கள் சரித்திரத்தில், 20 – 21 நூற்றாண்டுகளின் தமிழ் போரின் சிறந்த தளபதியாக என்றென்றும் குறிப்பிடப்போவது பிரபாகரனை அன்றி வேறு யாரையுமல்ல. அந்த இறப்பின் காரணிகளில் ஒன்றாக, புத்தி ஜீவிகளையா அல்லது ஜீவனற்ற-புத்தி சொல்லும் நச்சுப்-பூசாரிகளையா அவர்கள் அடையாளம் சொல்வர்?

இன்றும் யாராவது “புத்தி ஜீவிகள் வேண்டாம் நாயைப் பிடி?” என்று கூறும்போது, அவர்கள் இனிமேல், “எந்தப் புலிப் போக்கைச் சார்ந்தவர்கள்” என்ற கேள்வி மட்டுமே மக்களிடம் எஞ்சுவது நியாயமானதா? புலிப் போக்கை புலிகளது அமைப்பைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி அதற்கு எதிரானவர்களும் தான் கொண்டவர்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

மக்களை, மற்றவனை தன்நிலையின் கீழ் என்றென்றுமே வைத்திட முனைபவர்களது சூழ்ச்சியே புத்தி ஜீவிகளுக்கு எதிரான போக்கும் அதனைத் தூண்டும் பிரச்சாரமும் என்று கூறுவது தவறா?

புத்தி ஜீவிகள் இல்லாத சமுதாயங்கள், இலங்கைத் தமிழர்களது போல தேக்கமானதாக, முன்னேற்றகரமே இல்லாதபடி அமைந்துவிடும் என்பது இவர்களுக்குத் தெரியாததா என்ன? “எப்படியான புத்தி ஜீவிகள் சமுதாயங்களது முன்னேற்றத்தை குறித்து நிற்கிறார்கள்?” என்பது சரியான கேள்வியே. ஆனால், புத்தி ஜீவகளே வேண்டாம் என்பது குறைந்தபட்சம் மகா மூடத்தனம், அல்லது உழைத்து வாழும் மக்களுக்கு எதிரான சூழ்சியின் அங்கமாகவே இருக்க முடியும்.

“விடயங்கள் யாவும் கெட்டியான அசைக்க முடியாத பொருள் என்ற கருத்துக் கொண்ட யாவும் (absolutes) ஒரு-சார்புநிலைச் சிந்தனையாகும். இது மனிதனுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் பேசும் அஃ-பௌதீக (metaphysical) அணுகுமுறையாகும். எதனையும் சரி-பிழை கறுப்பு-வெள்ளை என இருவகைப் படுத்துவதும், எமது கருத்துக்களை, செயல்களை, அவற்றின் நல்லவற்றையே அவதானித்து புகழ்வதும், விமர்சனங்கள் இல்லாது அவற்றை முற்றாக ஏற்றுக் கொள்வதும், இந்நிலைக்கு ஒப்பானதாகும். எமது காரியங்களை எல்லா வகைகளிலும் நல்லவை அல்லது சரியானவை எனக் கூறுவது உண்மைகளுக்குப் பிறம்பானவை….” (மாவோ, சீனப் பொதுவுடமைக் கட்சியின் தேசிய மாநாடு, 12 பங்குனி 57)2

நாம் எந்த இஸ்ட்டுகளாகவும் இல்லாது போகினும், மாவோவை அகிலம் கண்ட சிந்தனைவாதி அல்லது சீன-மாமனிதன் என்ற கணிப்பை பூரணமாக ஏற்றுக் கொள்பவர்கள். அதற்கான முக்கியமானதொரு காரணம், தானும் மானிட விஞ்ஞான மாதிரிகளுக்கு (model) உட்பட்டவனே என்ற அவரது கடைப்பிடிப்பாகும். மேற்படி கூற்று தன்னையும் கட்சியையும் குறித்தானது என்பதிலும் பார்க்க, புரட்சிகர மனிதன் எவ்வாறு தனது அறிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மாவோவின் மேற்படி உரை பெற்ற பத்து வருட காலத்தின் பின்னர், ஹவானாவில் உரையாற்றிய காஷ்ரோவோ இன்னும் ஒருபடி ஏறி, புரட்சி வேண்டின் புதிய சிந்தனைவாதிகள் வேண்டும் என்று அறை கூவுகின்றார். காலம், மக்கள், தொழில்-நுட்பம், உலக-ஒழுங்கு, சந்தைகள் என பல மாற்றங்களை அவதானித்து, உண்மையான சமுதாய மாற்றங்களை வேண்டி நிற்பவர்கள், இவரது கூற்றிக்கான அவசியங்களை தாமாகவே ஊகித்துக் கொள்வர்.

“…. பிழையாகப் புரிந்து கொள்ளாதீர்கள், என்னதான் தவறான நடைமுறையில் சென்றிருந்தாலும், சமுதாய மாற்றத்தினை உண்மையாக வேண்டி நிற்பவனுடன் எமக்கு அடிப்படை முரண்பாடுகள் இல்லை. ஆனால், புரட்சிவாதச் சிந்தனைக்கு, பழையதிலேயே ஈடுபட்டும், பிரிவினை வாதங்களுடன், புரட்சிகரச் சிந்தனைக்கும் செயற் திட்டங்களுக்கும் தாமே பொக்கிஸம் அல்லது அதிபதி என்றும், இருக்கும் இன்றைய நிலைகள் தாண்டி புதியதொரு மார்க்கம் வேண்டும் என்கிறோம். … ஆழ்ந்த சிந்தனைகளிலும் திறனான ஆய்வுகளிலும் எம்மை ஈடுபடுத்த வேண்டும் என்று கடந்த காலங்கள் கற்பித்துள்ளன. நாம் இனிமேலும் ‘தாமாகவே உணர்த்தும் உண்மைகளை’ ஏற்கத் தயாராக இல்லை. அவை முதலாளித்துவ சிந்தனை வாதங்களுக்கு சொந்தமானவை. ….. மாக்சிஸ, புரட்சிவாத அரசியல் இலக்கியங்கள் கூட புதுமைப்படுத்த வேண்டி உள்ளன. ஏனெனில், மாக்சிஸ வசனங்களை, கச்சிதமான கூற்றுகளை, இலக்கணப் பதங்களை மீண்டும் மீண்டும் கூறுவதால் நாம் யாரையும் வென்றெடுக்கப் போவதில்லை, யாரையும் தோற்கடிக்கப்போவதில்லை.” (பிடல் காஷ்ரோ, லத்தின் அமரிக்க சோஸலிச அமைப்பின் முதலாவது மாநாடு, 10 ஆவணி, 67; மாவீர வியற்னாமின் வருடம்)3

ஆகவே, உண்மையான புரட்சிகரச் சிந்தனைவாதிகளது சர்ச்சைகள், எல்லாப் புத்தி ஜீவிகளுடனும் அல்ல. புரட்சிகளுக்கு எதிரானவர்களுக்கும், புரட்சி பேசியே அதற்குத் தடையாக இருப்பவர்களுடனும்தான் அவர்களது வேட்கை என்பது புரிகிறது.

ஆகவேதான், “தமது பிள்ளைகளுக்கு படிப்பும் அதற்கான சகல சந்தர்ப்பங்களும் வேண்டும். ஆனால், வறுமையுள் ஆழ்ந்தவர்கள் வெறும் போராளிகளை பெற்றுத் தரும் மந்தைகள்” என்ற தமது உள்-உள்ளத்தை அறியாது அல்லது மறைத்திட மாற்றாகத் தரும் பிரச்சாரமே பொதுப்-புத்தி சொல்லும் அல்லது பொதுப்-புத்தியால் மூழ்கடிக்கப் பட்டவர்கள் என்பது புரியும். இதனை சமூகத்தின் கீழ் தளங்களில் இருந்து முன்வர முற்படுபவர்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல், அவர்கள் இதுவரை காலத்திலும் இடம்பெற்ற சூழ்சியின் தொடரிலேயே அகப்பட்டுப் போகும் பேதைகளாகிடுவர்.

எம்மைப் பொறுத்தவரை,

1.நாம் யாவரும்தான், எவரையும் நம்பவோ அல்லது வெறும் விருப்பு-வெறுப்புகள் கொண்டு நிராகரிக்கவோ வேண்டியதில்லை என்ற அறிவை உணர்ந்து, நிமிர்ந்து நிற்கும் தன்நம்பிகையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறோம்.2. லெனின், மாவோ, ஏன் மாக்ஸ் என யாரயாரோ தந்த சிந்தனைகளை, வெறும் ஏட்டுச் சுரைக்காய் மசியலாக, அரை-குறையான தமிழாக்கத்தை வாசித்தபின் விடும் ஏப்பமாக, மதம் கொண்ட வேத வாக்குகளாக, ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்களில் இருந்து எம்மை முதலில் விடுதலை செய்து கொள்ள வேண்டும் என்கிறோம்.

3. இன்றைய விஞ்ஞான உலகத்தில் மனிதக்-கடவுள்களுக்கு (demigods) இடம் இல்லை என்பதை அவதானிக்கிறோம். மனிதனது ஒவ்வொரு சமுதாயத்திலும் ஏற்படும் பாரிய மாற்றங்களுக்கு அடித்தளமாக, இலட்சியச்-சரித்திரத்தின் சூழல்மட்டுமின்றி, அதனை பூரணமாக அறிந்து புரிந்து கொண்ட புத்தி ஜீவிகளும், அவர்கள் கடைந்தெடுத்த சிந்தனைகளும் அவசியம் என்கிறோம்.

இந் நிலைக்கு தன் அறிவின் சமத்துவத்தை, மனோவியல் மனப்பாங்கை உயர்த்திக் கொள்ள முயல்பவனுக்கு ஏது தடங்கல்?

போயும் போயும் இந்தக் கட்டுரையாளன் ஏது நிகர்?
அவன்போலன்றி வேறு யார்தான் நிஜமான புத்தி-ஜீவி?

“புத்திஜீவி என்பவன் ஒரு முன்னோடி, தான் சார்ந்த சமூகங்களின் நாடி, தன் சமுதாயத்தின் விழிப்பாட்டி, கல்வி-அறிவு-அநுபவம் என்பவற்றினை தனதிலும் தான் சார்ந்த சமூகளிலும் இருந்து நிரப்பிட வேண்டும் என்ற புத்தியைக் கொண்ட ஜீவன்களின் துதிபாடி, தன் மாணவன் தன்னிலும் வளர்ந்தவன் என்ற அநுபவத்தின் நுகர்வைநாடும் மனுத்தேடி.”

மாக்ஸ், கடவுள், மவோ என இயலுமானவரை யாரையும் மேற்கோள் காட்டுவதை மிகவும் கரிசனத்துடனே தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எமது முடிவு. “மனிதன் எவனுமே பிழையான முடிவுகளுக்கு வந்திருக்க முடியும்” என்ற எமது விஞ்ஞானத்தின்பால் எழும் நம்பிக்கையிலும் பார்க்க, சமூக-நடத்தைகளின் விதிகளைக் கூறுவது விஞ்ஞான-மாதிரிகளுக்குள் இலகுவில் அடங்காத முயற்சி என்ற அநுபவ தத்துவார்த்த அறிவே அதற்கான முதற் காரணமாகும்.

புத்தி ஜீவித முன்னோடிகளது தத்துவங்களும் சிந்தனைகளும் ‘எங்கிருந்து யாரைப்பற்றி எக்காலத்தில்’ தரப்பட்டவை என்பதை அறிந்து படித்து எடைபோட்டு கிரகித்து தன்னுணர்வாக்கி, தன் மொழியில் மட்டுமின்றி தான் சார்ந்த சமூங்களுக்கு உகந்த அறிவாக மாற்றியபின் தரப்பட வேண்டியவை.

தன்னறிவான பின், தன்சமூகங்கள் கொண்ட கணிப்புகளை தானே செய்யும் இயல்புகள் (skills) கொண்டபின், அறிவாளிகளை மேற்கோள்கள் காட்டுவது “புத்தி-ஜீவித திருட்டுச் செய்திடக் கூடாது” (plagiarism) என்ற காரணத்தின் பிரகராமே என்று உணர்ந்தவர்களாக நாம் யாவரும் இருக்க வேண்டும் என்பது இரண்டாவது காரணம்.

நாமும் ஏதாவது ‘-இஸ்டுகள்’ என்றவாறு எமது மூளையை அடகு வைத்திடக் கூடாது, புத்திதரும் இயல்புகளை இழந்துவிடக் கூடாது, (dogmatic) என்பதுடன், எம்மை மற்றவர்க்கு நிரூபிக்க வேண்டும் என்ற இஸ்டங்களிலிருந்து எப்போதோ விலகிக் கொண்டோம். வார்த்தைகளில் மட்டுமில்லாது எமது சிந்தனைப் போக்குகளுக்கு ஏற்றவாறு வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முடியுமா என்ற நிபந்தனையை எமக்கு நாமே விதிக்க வேண்டும் என்றும் ஏற்றுக் கொண்டோம்.

இருந்தும், ஏதாவது-இஸ்டுகளது எழுத்துப்-பயங்கரவாதம் வற்புறுத்தும்போது, அறிவாளிகளது சரித்திர மனிதர்களது சில துணுக்குகளை முன்வைப்பது, கேடயம் போன்ற தேவை ஆகிவிடுகிறது.

மாக்ஸ் ஒரு மாக்ஸ்;-இஸ்டா?
இதற்கு தனது பதிலை எங்காவது எழுதிவைத்தற்கு அத்தாட்சிகளை நாம் அறிந்ததில்லை, ஆனால் நாம் பெரும் அறிவுக் களஞ்சியமல்ல. ஆனால், கௌத்தமர் கடவுள் இல்லை என்று கூறி இருந்தும், அவரே புத்த-மதத்தின் கடவுளானபின், மாக்ஸ் என்ன கூறி இருந்தும் என்ன பிரயோசனம் என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை.

சுவிஸில் சர்வதேச-சந்தைமயப் படுத்தல் பற்றிய கலந்துரையாடலின் போது எமது மாக்ஸிசவாதி ஒருவர் “மாக்ஸ் அப்படிச் சொல்லி இருக்க மாட்டார்..” என்றாரே பாரக்கலாம். தனது கருத்துகளுக்கு நேர்மாறான கருத்துக்களை மாக்ஸ் கூறியுள்ளார் என்ற விடயம் பற்றிய அறிவோ அதில் நாட்டமோ இல்லாத அவருக்கு தனது கூற்றுப்பற்றிய வருத்தம் ஏதுவுமில்லை என்பது எதிர்பார்க்கக் கூடியதே. மேலும், மாக்ஸ் ஏதோ சிறுவயதிலிருந்தே தன் யாழ்பாணத்து ஊரில் வளர்ந்த நண்பனாக, அவரது சிந்தனைப் போக்கை முற்றாக அறிந்தவர் போன்ற அவர்-நிலை கண்டபின், வேடிக்கையாக இருப்பினும், கண்மூடிகளாகிவிட்ட இத்தொகுதிக்கு உண்மையான கருத்துக்களோ, சுதந்திரமான சிந்தனையோ, முக்கியமானவை இல்லை என்பது தெளிவு. “Cut-and-paste” கலாச்சாரத்தின் மேதைகளுக்கு, ‘தம் பின்னாலே பேதைகள் பல இருக்கும்’ என்ற உத்தரவாதமே பேரறிவாகும்.

ஏங்கல்ஸ், மாக்ஸிசம்-சொல்லும் தனது சமகால ஆய்வாளனை பிறிது படுத்துவதற்காக தனது நண்பனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில்; “எனக்குத் தெரிந்தவரை நான் ஒரு மாக்சிஸ்ட் இல்லை” என்று மாக்ஸ் கூறியாதாக குறிப்பிட்டுகிறார்.1
அதனை, 19ம் நூற்றாண்டின் பிரெஞ்சு-மாக்சிஸ்ட்களை மனதில் கொண்டே மாக்ஸ் கூறினார் என்பதையும் கடிதத்தில் கூறி உள்ளார்.

எமது அறிவுரைகள், சிந்தனைகள், தத்துவங்கள் அவை எவ்வகைப்பட்டவை ஆகினும், அவை சமகாலத்தைச் சேர்ந்தவை என்பது சிற்றிவு கொண்ட எமக்கு தெளிவாக இருக்க வேண்டும். ஞானிகள் என நாமும் சமுதாயங்களும் கணிப்பவர்கள் சமகாலங்களைத் தாண்டும் சிந்தனைகளின் உரிமையாளர்கள் என்பதும் பொது அறிவு.

இவை எவையாகினும், அவை அனைத்தும் அடித்தளமாக ஏதாவது மாதிரிகளை (model) கொண்டவை என்பதை மறந்துவிடலாகாது. மனிதனது நடத்தைகளை மாதிரி வடிவங்களுள் அடக்கிவிடும் போதே நவீனகாலத்தில் விளக்கங்கள் விஞ்ஞான வழியாகக் கருதப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூகவியல்,
விஞ்ஞானவியற்துவங்கள்

எமக்கென்ற அவசியத் தேவைகளுக்கான ஓய்வில்லா முயற்சிக்கும், குடும்ப சமுதாயங்களிடையே உள்ள ஓய்வில்லா போட்டிகளால் உருவாக்கிக் கொள்ளும் தேவைகளுக்கான மாரடிப்புக்கும், உள்ள வேறுபாடுகளை நாம் யாவரும்தான் உணர்ந்து கொள்வோம். கொள்வனவுச்- சமுதயத்தின் (consumer society) மாயைதனை முன்னேற்றம் என்று ஏற்றுக் கொள்வதால் உள்ளாகும் தனிமனிதச் செலவும், மனிதாபத்தின் சிதைவும் கூடவே பூகோளத்தின் அழிவும் எண்கணக்கில் சொல்ல முடியாதவை.

பணவசதி படைத்த எமது உறவினர்களது போல நாமும் இருக்க வேண்டும் என்ற மன உளைவால், எமது பொருளாதார ஆற்றல்களை மிஞ்சிய ஆசைகளுடன், 4-அறை வீடுவாங்கி ஏதாவது ஜேர்மானிய மோட்டார் வண்டியும் கடனில் பெற்று, தாயும் தந்தையும் ஒருவரை-ஒருவர் சந்திக்காமல் அல்லும் பகலும் உழைத்து தம் வாழ்வையே கடனுக்காக (mortgage) பணையம் வைப்பதை நாம் காண்கிறோம். அதனாலாகும் குடும்பச் சீரழிவுகளை, கணவன்-மனைவி பிள்ளைகள்-பெற்றோர் என்ற உறவுகளின் பின்னடைவுகள், குறிப்பாக பிள்ளைகளிடையே உருவாகும் மனோவியற் குழப்பங்கள் என பல அநாவசியமான சர்ச்சைகளை நாம் விலைக்கு வாங்கிக் கொள்கிறோம் என்பதை கவனிக்க முடியாதவர்கள் ஆகிவிடுகிறோம்.

தென்னாசிய மக்களிடையே அதிகளவில் மாரடைப்பைத் தரும் உயிரியல்-மரபு (genes) உள்ளது எனத் தெரிந்தும், அம் வருத்ததின் வதைகளுக்கு உள்ளாகி இருந்தாலும், எமது பிள்ளைகளது உடல்-ஆரோக்கியம் பற்றி கரிசனம் கொள்வதில்லை, அவர்கள் தமது உருவத்தில் பருத்துக் கொண்டு போவதைக்கூட கண்டும் அவதானிப்பதில்லை.

இதனை ஏதாவது ‘வட்டத்துள்’ அல்லது ‘சித்தாந்த மனநிலையுள்’ இருந்து பார்ப்போமாயின் இந்நிலையை இழிவாக்கி இவர்களெல்லாம் பேராசை கொண்ட, மனக் கட்டுப்பாடற்ற மூடர்கள், அதனை உணர்ந்த புத்திசாலிகள் நாம் என, எமது முதுகை நாமே தடவிக் கொள்ளலாம். ஆனால், பிறர் வருத்தத்திலும் துன்பத்திலும் எம்மைக் காண முடியாது, அவற்றில் கூட பகட்டுப் பெருமை காணும் ஜீவனில்லாப்- புத்திமதி நிபுணர்களாக நாமும் ஆகிவிடலாமா?

மனிதம் என்பது ஒன்று, அதன் பார்வையும் ஒன்று, என்றோ ஒருகாலத்தில் அதன் நுகர்ச்சிகளின் தன்மைகளும் ஒன்று, என்ற நம்பிக்கை இருப்பின், மனிதத்தின் அவஸ்த்தை, அதன் தேடல் (அதுதான் human condition), என அதன் அடியொட்டிய பிரச்சனைகளில் ஈடுபட்டு விட்டால், தனிமனிதனின் அவன்-சமுதாயத்தின் அதன்-சமூகத்தின் வருத்தங்கள் (pain) அவற்றிலான ஆதங்கங்கள் யாவும் ஒன்றென உணர்ந்திருப்பான். அது மட்டுமல்ல, அவ் உணர்ச்சிகளிலும் (experience) இணைந்து கொள்வான்.

3ம் உலகநாட்டு அவஸ்த்தைகளை, வசதி படைத்த நாடுகளில் மக்களின் கவனித்தில் கொண்டுவரும் நோக்கில் “வறுமையை ஒழித்திடலாம்” என ஆகாயத்தைத் தொட விளம்பர-மட்டைகளில் (bill-boards) எழுதுகிறார்கள். அவாறான முயற்சிகள் எமது பின்தங்கிய நாடுகளிலும் எம்முள் வசதி கொண்டவரது கரிசனத்தை நோக்கி எப்போ வந்து சேரும்?

அவ்வாறான கால கட்டத்தில், முதலாம் நாடுகளில் “அதி-உடற்பருமையை (obesity) ஒழித்திடலாம்” என்ற கோஸங்கள் அதே மட்டைகளை மாற்று-நிரப்புதல் செய்துவிட்டால் வியப்படைவோமா, என்ன?

மேற்கத்திய சமூகங்களில் உடலில் பருத்தவர்கள் பேராசை கொண்ட வசதி படைத்தவர்களா, அல்லது அதிக அளவில் கீழ்-மட்டத்தவரா? அதிஉடற்பருமை இச் சமூகங்களுள் உள்ள சுரண்டலின் குறிகாட்டியா, அல்லது சமுதாயச் சீரழிவின் குறிகாட்டியா? இல்லை, மேல்நாடுகளில் சமூகங்களின் அடித்தட்டுகள்கூட பாரிய ‘முன்னேற்றம்” கண்டுவிட்டனவா? அப்படியானால் மேல்நாடுகள் உள்ளவர்கள் சகலரும் முதலாளித்துவ நிலைக்கு வந்துவிட்டார்களா? தொழிலாள வர்க்கங்களுக்கு எதிரானவர்களா?

ஓவியங்களிலும் எழுத்துக்களிலும் உடற்பருமையை, முதலாளிகளுக்கும் சுரண்டலுக்கும் உள்ள தொடர்பைச் சித்தரிக்கும் பொருளாகக் கொண்ட எமது மனோவியல் போக்கு இன்றும் சரியானதா?

எப்போதோ, யாரோ, போட்ட வட்டத்துள் நின்று எம்மையும் பாராது, எம்மைச் சுற்றியவரையும் சாராது “நாம் பிடித்த முயலுக்கு மூன்றேதான் கால்கள்” என்று அடம் பிடிப்பதன் பெயர்தான் சித்தாந்தமா?

“எங்கிருந்து யாரைப்பற்றி எக்காலத்தில் சிந்திக்கின்றோம்?” இம்மூன்று விடயங்களின் நிபந்தனைகளுள் அமையும் சிந்தனைகளின் வடிவங்களே, எந்த மக்களதும் நிரந்தரமான வளர்வுக்கான வழிகளை வகுத்துத் தரும்.

நாம் அறியாதே தங்கி உள்ள மாதிரிகள், எம்மை தவறுதலான முடிவுகள் அல்லது கூற்றுகளுக்கு இட்டுச் செல்லக் கூடும் என்பதை உணரலாம். இங்கேதான் விஞ்ஞான-தர்க்கவியல் (scientific-logic) என்பதற்கும் மனிதனது நடத்தைகள் சொல்லும் சமூக-தர்க்கவியல் ஆகிய இரண்டுக்குமான (scoio-logic) ஒப்பீடுகள் எம்முள்ளே செய்ய வேண்டியதன் அவசியமும் புரிகிறது.

விஞ்ஞானவியற்துவம்
விஞ்ஞானத்தின் தேடல் என்பது மாதிரி ஒன்றினை நோக்கிய ஆய்வு என்பது பௌதீகவியல், உயிரியல் (every field of study about all inanimate matter & life sciences) என்ற வேறுபாடுகள் இல்லாது, எந்த விஞ்ஞானச் சமுதாயத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும் வரைவு ஆகும்.

அதன்படி நாம் உருவாக்கும் மாதிரி, அத்துறையில் உள்ள சகல தரவுகளையும் ஏற்று உள்வாங்கி விளக்கம் தரும் என்பதுடன், பரிசோதனைகளுக்கு ஊடாக ஊர்ஜிதம் செய்து கொள்ளக் கூடிய எதிர்காலத் தரவுகளை முன்சொல்லும் வகைகளையும் (predictability) கொண்டிருக்கும்.

நியூற்றனின் பௌதீக மாதிரி:
நியூற்றனின் 2ம் விதி, F = m x a, ஒரு நியூற்றனின் பௌதீக மாதிரியுள் முக்கியமானதாக அமைகிறது. இதன்படி, விசையானது வேக-அதிகரிப்புடன் (acceleration) நேரடி விகதாசார உறவில் உள்ளது. கொடுக்கும் விசை எவ்வளவு வேக-ஏற்றத்தை தரும் அல்லது ஏற்படும் வேக-அதிகரிப்புக்கான விசையின் பெறுமதி என்ன என்பதை வாக்குவாதங்கள் குதர்க்கங்கள் இல்லாது இம்மாதிரி எமக்குச் எண்-கணக்கில் சொல்லும். இதுவே ஒரு விஞ்ஞான மாதிரியின் அடிப்படை அம்சம்.

நியூற்றனின் மாதிரியின்படி பொருளின் திணிவோ (mass) ஒருபோதும் மாற்றம் காண முடியாது. மேலும், இம் மாதிரியுள் ‘நேரம்’ (time) என்ற அம்சம் நேரடியாக உள்ளங்கவில்லை என்பதும், நேரம் அண்டத்தின் பரிணாமத்திற்கு (spacial dimensions) அப்பாற்பட்டது என்ற கோட்பாட்டை நியூற்றனின் பௌதீக- மாதிரி கொண்டுள்ளதும் கவனிக்க வேண்டியது.

ஆனால் சிந்தித்துப் பாருங்கள், விசையை ஏதாவது விதத்தில் எப்போதும் மனிதனால் அதிகரிக்க முடியுமாயின், பொருளோ எல்லையற்ற (infinity) வேகத்தை கொண்டுவிடும். இது இயற்கையில் சாத்தியமான விடயமா? இல்லை.
ஏன்தான், ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நியூற்றனின் மாதிரிக்கும் இயற்கை தரும் சான்றுக்கும் உள்ள முரண்பாடுபற்றிக் கேட்டு யாரும் மாற்று மாதிரியை முன்வைக்கவில்லை? அக்காலத்து விஞ்ஞானிகள் சிந்தனைவாதிகள் யாவருமே முட்டாள்களா?

1905 இல் ஐயின்ரையின் (Einstein) தனது அதிவேகப் பொருட்களையும் உள்ளடக்கிய மாதிரியை (special relativity)5 முன் வைக்கும்வரை, இக் கேள்விகளை உந்தும் கருத்துகள் சமுதாயத்தின் கவனத்தில் இருக்கவில்லை என்று கூற முடியாது.
அப்படியாயின், ஏன் அவரது ஆய்வுப் பதிப்பின் பின்னரே பரிசோதனைகள் செய்யப்பட்டன?

இன்று பொருட்கள் ஒளியை மிஞ்சிய வேகத்தில் பயணம் செய்ய முடியாது, விசையை அதிகரிக்கச் செலவாகும் சக்தி (energy) பொருளின் திணிவையே அதிகரிக்கும் என்ற ஐன்ரையினின் கருத்துகள் சமூகப் பொது அறிவாக உள்ளன.
ஆயினும், பிரபஞ்சத்தின் ஆரம்பத்தின் (standard cosmological models) முதல் மூன்று நிமிடங்களைப்பற்றிய ஆய்வு செய்பவர்கள் ஐயின்ரையினின் மாதிரியையும் சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார்கள் என்பது எமக்கு ஆச்சரியமாகுமா? விஞ்ஞான வளர்ச்சி என்பதே அதுதானே?

சமூகவியற்துவம் (social studies)
தனிமனிதனது, மனிதக் கூட்டங்களினது, நடத்தைகளை அவதானித்து கணிப்புகள் செய்து ஒழுங்கு படுத்துவதற்கான கல்வித்துறைகள் அனைத்தையும் சமூகவியல் என்பது பொருத்தமானது. இவற்றுள் பொருளியல், அரசியல் ஆகியவை அதிக கவனம் ஈர்ப்பவை ஆகினும் சரித்திரம், மதம், சமூகவியல், மனோவியல் ஆகியவை அவற்றின் தளம் வழங்குபவை.

மனிதனது நடத்தைகள் யாவற்றையுமே சமூகவியல்-மாதிரிகளுள் அடக்கிட விளக்கிட முடியுமா? மாதிரிகளை உருவாக்கி அவற்றின் முரண்பாடுகள் அல்லது போதாமைகளால் புதிய-மாதிரிகளைப் பெற்று வளர்வது விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பவை என்றோம். அவற்றின் ஆசான் மனிதனே ஆகினும் அவற்றின் அதிபதியும் அவன்தானா என்ற கேள்வியும்தான் அவனிடம் இன்று மேலோங்கி வருகிறது?

அப் பிரச்சனையிலும் பார்க்க, தன் உருவாக்கங்கள் வெளியாக்கங்களுக்கு ‘மாதிரிகள்’ அவசியம் எனக் கருமமாற்றும் மனிதன், எந்த மாதிரிகளினுள்ளும் அமைந்து கொள்ளாத கடவுள் மதம் என தனக்கு எட்டாதவைக்குள் அடங்கி வாழத் தயாராக உள்ளான். அதே தருணம், தான் எட்டியும் கெட்டிப் பிடிக்க முடியாத காதல் வெறுப்பு தனிதனித-நம்பிக்கை சித்தாந்தம் போன்ற உணர்ச்சிகளிலும் தங்கியவானாக உள்ளான்.

இதனை தன்னறியாத் தன்மை, படிப்பறிவில்லா மனிதனது நடத்தை, தனிமனிதனது உள்-முரண்பாடு, என்ற உயர்-மதி விளக்கங்களும் ஒரு புறத்திலும், உள்-முரண்பாடுகள் கொண்ட பிறவியே மனிதன் என்ற ஆன்மீக வாதமும் அதற்கு முற்றிலும் எதிரான மனித-தர்க்கீக விளக்கங்களும் உண்டு.

இவ்வாறு நடத்தைகளால் பல்முகப்பட்ட அல்லது பல்துறை முரண்கொண்ட மனிதனை ஒழுங்குபடுத்த முயலும் சமூகவியற் துறை திடமான மாதிரிகளைத் தருவது மிகவும் கடினமான காரியமே.

சமூகவியல் விஞ்ஞான மாதிரிகளாகுமா:
இசைநாடாவில் (audio-tape) ஒலிதரும் சோனி-நடமாட்டக்கருவி (Sony-Walkman) வியாபாரத்திற்கு வந்தபோது, அது ஏற்கனவே உள்ள சந்தையில் பங்குப் போட்டியில் ஈடுபடாது தனக்கென ஒரு புதிய சந்தையை உருவாக்கிக் கொண்டது என்பது ஒரு மாதிரி-அமைப்பின் விளக்கம். அதேசமயம், நடமாடுவோர் கொண்டு திரிவதற்காக மிகவும் சிறிய வடிவத்தில் செய்யப்பட்ட அக்கருவி, “இசைக்கருவிகள்” என்ற ஒரு பொதுச் சந்தையுள் அமைகிறது என்பது ஒருபுறமிருக்க, மனிதனது தேவை அல்லது ஆசை என்பவற்றிலும்தான் அவற்றின் பெறுமதியும் வியாபாரக்-காலமும் தங்கியுள்ளன என்பதும் முக்கியமான விடயம்.

விஞ்ஞான மாதிரிகள் மனிதனது விருப்பு-வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவையாக அமைய (objective), சமூகவியல் மாதிரிகள் அவனது விருப்பு-வெறுப்புகளைப் போன்ற மனிதத் தன்மைகள் பற்றிய சராசரிக் கணிப்பீடுகளில் தங்கி (subjective) அமைய வேண்டி உள்ளதையும் நாம் உணரலாம்.

நாம் இங்கு எவற்றைத்தான் வாசகர்கள் கவனத்திற்கு நிறுத்த முனைகிறோம்?

1.விஞ்ஞானம் எனும் பதத்தை ஈடுபடுத்தும் போது அவ்விடயம் ஒரு மாதிரி-அமைப்பினுள் உள்ளது எனவும், அது தனது பூரணமான எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் என்று மாற்றுத்-தரவுகள் கிடைக்கும் வரை எதிர் பார்க்கிறோம்.2.சமூக-மாதிரிகள், விஞ்ஞானம் என்ற பதத்தால் நியாயப்படுத்தப்பட முடியாதவை என்பதை உணர்கிறோம். ஆனைமையால், விஞ்ஞான-முறைப்படி அணுகப்படுவதையே விஞ்ஞானம்-மாதிரி எனும் பதத்தால் சித்தரிக்க முனைகிறோம். மேலும், விஞ்ஞானம் முன்னேற்றத்தைக் குறிப்பதனால் அப்பதத்துடன் தமது சிந்தனைகளை ஈடுபடுத்திக் கொள்ளும் சந்தர்ப்ப வாதத்தையும் காண்கிறோம்.

3.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வளர்ச்சி காணும் மனித-சமுதாய-அநுபவ உணர்வே விஞ்ஞானம் தரும் அறிவு என்பது எமது வரைவு.

4.மாறாக மனித, சமுதாய உணர்வுகளின் விளக்கங்களைத் தொடுக்கும், அவற்றின் தாக்கங்களின் கணிப்புகளை தரும் செயல்களையே சமூகவியற்துறை தரும் அறிவாகக் கொள்கிறோம்.

5. எதிர்காலத் தரவுகள் (predictions) பிழையானவை என பரிசோதனைகள் நிரூபிக்கும்போது அவை சார்ந்த விஞ்ஞான-மாதிரி நிகாரிக்கப்படுகிறது.

6. ஆனால் சமூக-மாதிரிகளோ சித்தாந்தங்களாகவும், தனிமனித வழிபாடுகளாலாலும் நிலைநிறுத்தப் படுகின்றன.

எனவே, சமூகவியற்துவ மாதிரிகள் தமது விஞ்ஞானத் தன்மைகளை, அணுகு முறைகளுடாகப் பெற்றிருப்பினும் அவை விஞ்ஞான மாதிரிகள் ஆகிவிடா. மனிதனது தனிப்பட்ட அல்லது கூட்டு மனப்பான்மைகளுக்கு, போக்குகள் செயற்பாடுகளுக்கு ஓட்டுமொத்தமான கணிப்பீடுகளுடாக (statistical), மாதிரி வடிவங்களுள் விளக்கம் கண்டிட முடியுமாகினும் அவை நிரந்தரமற்றவை என்பது இம்மாதிரிகளை பலவீனமாக்குபவை. ஆயினும், மாற்றம் காணும் மாதிகளிடையே கூட அவற்றினைத் தொடர்பு படுத்தும் மாதிரிகளும் உள்ளன என்பது எதிர்காலத் தரவுகளைக் கொண்ட மாதிரிகளை தேர்ந்து கொள்ள உதவுகின்றன.

இவற்றை மனதில் கொண்டு எம்முன் வைக்கப்படும் சமூக-பொருளாதார மாதிரிகள் பற்றிய எடைபோடல் எமக்கும் அவசியம் என்பது மறுக்கப்பட முடியாத விடயம். அவை தேசிய, புரட்சி, தேசியப்-புரட்சி, பொருளாதாரம், கல்வி என ஒவ்வொரு விடயத்திலும் பல மாதிரிகள் செயற்படுத்தப் படுகின்றன. ஆனால், இவை பற்றிய அறிவோ அவற்றினாலான விளைவுகளை அனுபவிக்கும் மக்களிடையே அரியதாகவே உள்ளது. இந் நிலமை அதிகாரங்களை தம்மகத்தே வைத்திருக்க விரும்பும் ஆழும் வர்க்கங்களுக்கும், அவற்றின் நிர்வாகிகளாகிடும் தனிமனிதர்களுக்கும் சாதகமானவை என்பதும் அவதானிக்கப்பட வேண்டியது.

எனவேதான், அறிவு என்பது கல்விப்பண்டத்திலும் அவசியமானது. அதற்காக கல்வி வேண்டாம் என்ற உயர்-மதிப் புத்தி சொல்லவில்லை. ஆனால், கல்வி என்பதே ஒரு மாதிரியுள் அமைந்தது, அது சந்தைகளை நிர்மாணம் செய்யும் சக்திகளின் விருப்புகளுக்கும் இணைந்து போவது என்பதையும் மறந்துவிடலாகாது.

இவற்றை தரக் கூடியவர்கள் புத்தி ஜீவிகளே அன்றி, பொதுப்-புத்தி சொல்லும் வெற்று மூளைச் சோம்பேறிகளோ, ஜீவனில்லாப் புத்திமதி கூறும் உயர்-வர்க்கப் பிரதிநிதிகளோ அல்ல.

‘தாம் எங்கே போகிறோம்’ என்பதற்கான பதிலை ‘தாம் எங்கிருந்து வந்தோம்’ என்பதைத் தெரியாத சமுதாயங்களால் கூற முடியாது.

இவற்றினை சமூக-சிந்தையும் பொறுப்புணர்வும் கொண்ட புத்திஜீவிகளது ஆக்கபூர்வமான பங்குகள் இன்றி சமுதாயங்கள் பெற்றிட முடியாது.

பின்குறிப்புகள்:

1 Engles to C. Schmidt in Berlin, London August 5, 1890.

“… little Moritz is right when he quotes Barth as stating that the sole example of the dependance philoshophy, etc, on the material conditons of existence which he can find in all Marx’s works is that Descartes declares animals to the machines, then I am sorry for the man who writes such a thing. And if this man has yet not discovered that the material mode of existence is the primary agent/cause this does not preclude the idological spheres from reacting upon it in their turn, though with secondary effect, he cannot possibly have understood the subject he is writing about. However, as I said, all this is secondhand and little Moritz is a dangerous friend. The material concept of has a lot of them nowadays, to whom it serves as an excuse for not studying history. Just as Marx used to say, commenting on the French “Maxists” of the late [18]70s: “All I know is that I am not a Marxist”.

2 தமிழாக்கம்: எமது, மூலம்: ஆங்கிலம், Foreign Language Press, Peking 1976.

3 தமிழாக்கம் எமது, மூலம்: ஆங்கிலம், Fidel Castro Speaks, Edited by Martin Kenner & James Petras.

4 மனிதாபம்: மனிதாபிமானத்தின் மீதான நேயம்.

5 Special Relativity புவியீர்ப்பு என்ற விசையைத் தவிர்த்து மற்றைய விசைகள் பற்றிய கணிப்புகள் கொள்ளும் மாதிரியாகும்.

நன்றி

ரவி சுந்தரலிங்கம்
Academic Secretary- ASATiC

25 ஆவணி 2009

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

33 Comments

  • pothu
    pothu

    வழக்கம் போல தன்னை புத்தி ஜீவியாக காட்டிக் கொள்ள முயன்றிருக்கிறார். தொடர்ச்சியற்ற வார்த்தைக் கோர்வைகள் என்று சொல்வதை விட வார்த்தை குவியல்கள்(Hஎஅப்)என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
    தனது துறை சார்ந்த தெளிந்த அறிவு உள்ள ஒருவரால் அவ்விடயம் குறித்த விடயங்களை இலகு மொழி நடையில் சொல்ல முடியும். இல்லா விட்டால் இப்பிடித் தான்…

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /எனவே, புத்திஜீவிகள் என்ற பதம் பற்றிய விளக்கமும், அறிவும் பெறுமதியும், கணிப்பும், இக் குதர்க்கங்களின் வழி அமைந்ததாகவே உள்ளமை வியப்பதற்கில்லை. மற்ற இனத்தின் புத்திஜீவிகளது கல்விகளை படித்து ஒப்பிப்பதால், அவர்களது புத்திஜீவிதப் படைப்புகளை பண்டமாற்றம்-செய்து பிழைப்பதால், தமது உருவாக்கங்கள் படைப்புகளை ஒட்டிய முதலீடு செய்யும் அநுபவம் (என்டெர்ப்ரைசிங்) இல்லாதமையால், எம்மிடையே புத்திஜீவிகள் என்றதும் உடற்-சொறி உருவாகுவது எதிர்பார்க்கக் கூடியதே.

    கல்வி என்றால் பொறியியல், மருத்துவம், சட்டத்தரணி, கணக்காளன் என்ற நான்கு துறைகளுக்கான ஏட்டுப்படிப்பு என்ற குறுகிய நோக்கில் இயங்கும் எமது சமுதாயத்தில், அறிவு என்பதற்கும் புத்தி-ஜீவிதம் என்பதற்கும் உள்ள தொடர்பை யார்தான் உயர்த்திட முடியும்? “தம்பி பௌதீகம் படிச்சிட்டு என்ன வாத்தியாராயே வேலை செய்யப் போறாய், எஞ்சினியறிங் படியடா!” என்ற பொதுப்-புத்திமதி சொல்லும் கல்விமான்களைக் கொண்டது எமது சமுதாயம். பௌதீகமே பொறியியற் துறையின் என்லைகளைக் கட்டுவதும் விஸ்தரிப்பதும் என்பது பின்தங்கிய நாடுகளில் பேரறிவென விளங்க, வளர்ந்த நாடுகளில் அது பொது-அறிவாக இருப்பது புதுமையா என்ன?/–அருமை,அருமை ரவி சுந்தரலிங்கம்!.
    ஜெர்மன் அடிப்படை தத்துவமான,”இருப்பிலிருந்து இல்லாமை”(மெட்டீரியல் கன்டிஷன் ஃபார் எக்ஸிஸ்டன்ஸ்),வரலாறு படி “டாவோயிஸத்திலிருந்து(சீன)” வந்தது.”.விஞ்ஞானிகள் எதையும் உருவாக்குவதில்லை,இயற்கையில் ஏற்கனவே உள்ளதையே கண்டுப்பிடிக்கிறார்கள்.”அப்ஸலுயூட்” என்பது “ரிலேட்டிவ்” அல்ல,எதிர்மறைகளின் கூட்டுப் பொருள்,ஒன்றுக்கொன்று ரிலேட்டிவ் என்றாலும்,தன்னகத்தே அப்ஸ்லுயூட்தான்(இன்,யாங் போல).அதாம்,ஏவாள் கதையை கேள்விக்குள்ளாக்குகிறது,”டைனாஸார்” கதை.அதை போல்தான் சிதம்பர நடராஜரின் உருவமில்லாத நிலையை கேள்விக்குள்ளாக்குகிறது,காளி ஏன் தன் காலை சிவபெருமானுக்கு மேலாக உயர்த்தக் கூடாது என்ற கேள்வி.இவைகளை புரிந்துக் கொள்ளும் தன்மையில்தான் பிரச்சனையே!.அதனால்தான் பிரபாகரன் சிவபெருமான்,முருகன்,சூரியக் கடவுள்,போன்ற “டெமி- காட்” பிரச்சனைகள் எழுந்தன.”உணரும் தத்துவங்களை” முன்மாதிரி கதைகளாக விரிக்கும் போது ஏற்ப்படும் பிரச்சனைகள் இவை….

    Reply
  • ஏ.எம்.எம். நௌசாட்
    ஏ.எம்.எம். நௌசாட்

    ‘ஒரு நாட்டினை நேசிப்பதென்பது அந்நாட்டு மக்களை நேசிப்பதாகும் ஏனெனில் ஒரு மனிதன் அடுத்த மனிதனை நேசிக்கிறான். எவராவது ஒரு ஆத்மாவை அன்றி மன்னை விரும்புகிறானோ அவன் ஒரு உயிருள்ள மனிதன் அல்ல ஒருபொருள் இன்னொன்றை கவர்வது இரக்கமற்றதும் கண்மூடித்தனமானதும் என விஞ்ஞானம் ஒரு விதியைக் கூறுகிறது. சிந்தனை ரீதியிலும் மொழி இணைப்பாலும் ஒரு பெங்காலி இன்னொரு பெங்காலியின் உறவினர் ஆவான். அவனது எண்ணத்தில் மொழி இனைப்பென்பது இரத்த உறவாகும்’.

    ஒரு நாட்டின் பிரஜையாக உரிமைகளை கோரும்போது கடமையும் அதனுடன் இணைந்துள்ளதை யாரும் மறக்கக்கூடாது. நாட்டின் பிரஜைகளின் கடமைகள் தேசப்பற்று, ஜனநாயத்தைப்பேணுதல், பல்லின சமுகத்தின் பண்மைகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் தமது மதத்தையும் கலாச்சாரத்தையும் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல் என்பவற்றை உள்ளடக்கும்.

    ஒரே நாடு, இலங்கையர் என்ற ஒரே இனம் என்று இன்றையத் தேசத்தலைவர் எங்கும் பேசி வருகின்றார். அப்படியாயின் சிங்களவரோ, தமிழரோ, சோனகரோ, மலாயரோ யாவருமே இந்நாட்டின் பிரஜைகள் என்ற குடையின் கீழ் ஒன்றுபடுகின்றனர். இதன்படி ஒரு பிரஜைக்குறிய உரிமைகள் எல்லாம் பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும். இதுவே முஸ்லிம்களின் நியாயமான அபிலாஷையுமாகும்.

    இலங்கையின் இனங்களுக்கிடையே ‘சந்தேகமற்ற சூழ்நிலை’ இதனூடாக உருவாகுமேயானால் அதுவே போதுமானது. சிறுபான்மை இனங்கள் நிராகரிக்கப்படாத சூழ்நிலை உருவாக வேண்டும். அதற்கு அரசியலமைப்பு ரீதியான உறுதிப்படுத்தல் வேண்டும். இதற்காக தமிழ், சிங்கள, முஸ்லிம் சமுகங்கள் கலந்துரையாட வேண்டும்.

    இலங்கையில் சமுகங்களுக்கிடையில் சந்தேகமான சூழ்நிலை தவிர்க்கப்பட வேண்டும்

    — ஏ.எம்.எம். நௌசாட்

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    “அப்ஸலியூட்” என்ப்தற்கு உதாரணமாகக் கொள்ள வேண்டுமென்றால், “சூரியன் கிழக்கில் உதிப்பதை” கூறலாம். அதைக் கேள்விக்குள்ளாக்கி,”ரிலேட்டிவ்” என்று, மேற்கில் உதிக்க வைக்கிறேன் பேர்வழி என்று விஞ்ஞானிகள்? இறங்கினால் நிலைமை என்னாவது. ஒரு அப்ஸ்லியூட்டான சூரியனுடன் பூமிப் பந்தின் சுழற்சி திசையும், அதனுடனான காலநிலை மாற்றங்களும் ரிலேட்டிவாக உள்ளன. அதேப்போல், “சிவகாமியை காளியாக மாற்றுகிறேன்” என்று தமிழ் புத்திஜீவிகள்? இறங்கினால், அதனுடனான தமிழ் என்ற சொல்லாடல்(ரிலேட்டிவ்) சிதைவுறலாம்- அதுதான் நடைபெறுகிறது. இதற்கும் நடராஜர் கோவிலுக்கும், அது இருக்கும் ஊருக்கும், பெண்களுக்கும், சம்பந்தம் கிடையாது!. பகவத் கீதையில் வரும், “நானே காக்கிறேன், நானே அழிக்கிறேன்”, “நானே விதி செய்கிறேன், ஆனால் விதிமாறி நடக்க என்னால் இயலாது”… போன்றவையாகும். “தொடக்கமும் நானே, முடிவும் நானே” என்றால், தொடக்கமும் முடிவும் இல்லாத “சூன்யம்” என்று அர்த்தம். எண்ணில்லா அசைவுகளின் “கோய்ன்ஸிடண்ட்”, அசையா நிலையாகும். அகையால் இந்த “அப்ஸ்லியூட்டை” அசைத்துப் பார்ப்பதும், அசைத்துப் பார்க்காமல் இருப்பதும் ஒன்றுதான்!. கேள்விக் குறியதாக்குவதும், கேள்வியில்லாமல் விடுவதும் ஒன்றுதான்!. இந்த ஆண்டு,”மே” மாதத்தில், சுவிட்சர்லாந்தின், சூரிச் மாநகரத்தின் அடியில்,”அண்டத்தின் முதல் நிமிடத்தை “ஸிமுலேஷன்”(பிக் பேங்ஃ)செய்து “சார்புநிலைக் கொள்கையையே” கேள்விக் குறியதாக(சூமக்கர் என்ற ஜெர்மன் பேராசியரால்)ஆக்கும் முயற்சிக்கும் இதே பதில்தான்!.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பல விஷயங்களை தொட்டு செல்லுகிறார் ரவி சுந்தரலிங்கம். எங்கள் மரமண்டைகளுக்கு தான் புரியமறுக்கிறது. இது புத்தியீவிகளின் வழமுறையே!
    ஜெயபாலனுக்கு இதுவெல்லாம் இலகுவாக புரியும் போது எங்களுக்கு புரியவைக்காமலா போய்விடுவார்?.காத்திருக்கிறோம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    ரவியின் கட்டுரை திருக்குறள் மாதிரி நல்லாய்தான் இருக்கு, ஆனால் அதை விளங்கவைக்க சலாமன் பாப்பையா போல் சிலராலேயே முடியும், நாம் யதார்த்த வாதிகள் என்பதால் நாம் இதில் நுழைந்து பின்னோட்டம் இட்டால் அது மலிவு விலை மது கடை போல் தேவையற்றதாகி விடுமோ என பல்லிக்கு பயமாக உள்ளது;

    Reply
  • thalaphathy
    thalaphathy

    திரு. ரவி சுந்தரலிங்கம் அவர்களுடைய தமிழ்ச்சமூகம் மீதான கணிப்பு நூற்றிற்கு நூறு வீதம் உண்மையையும் யதார்த்தத்தையும் பிரதிபலிக்கின்றது. வெறும் சிறுபான்மையான தமிழர்களே புத்தியின்பாற் செயற்பட்டு பல விடயங்களை முன்கூட்டியே இச்சமூகத்திற்கு தெளிவுபடுத்தியிருந்த போதும், இவைகள் இந்த சமூகத்தில் எடுபடாமைக்கான காரணம் இந்த தமிழ்சமூகத்தின் ஒட்டுமொத்த சுயநலப்புத்தியும் தான் வாழும் சூழலைப்பற்ரிய மட்டமான அறிவுமே காரணங்களாகும்.

    இவைகளுக்கு அப்பால்

    தமிழர்கள் புத்தியை தேடிக்கொள்வது என்பது அல்லது பெற்றுக்கொள்வது என்பது வெறும் வாழ்வியல் வியாபர நோக்கங்களுக்காகவேயன்றி தனது சமூக முன்னேற்றங்களுக்காகவல்ல என்பது அவர்கள் தமது பட்டப்படிப்பை சீதனத்திற்கு பேரம் பேசுவதிலிருந்து தெளிவாகிறது. பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்கள் எல்லாம் தம்மைத்தாமே புத்திஜீவிகள் என சொல்லிக்கொள்ள முடியுமேதவிர இவர்கள் எக்காலத்திலும் புத்திசார் செயற்பாட்டு திறனுடையவர்கள் அல்லவென்பது இவர்கள் தமது புத்தியையும் செயற்திறனையும் மேலைநாட்டு மனிதவள சந்தையில் விரிக்கும்போது, இவர்களது புத்தி எடுபடாமைப் போவதையும் இவர்கள் புத்தியீவிகரல்ல என்பதுவையும் நிரூபிக்கின்றது.

    ஆகமொத்தத்தில் இலங்கைவாழ் தமிழர்கள் தமது சொந்த மொழியிலேயே திறனற்றவர்களாக இருந்துகொன்டு தமது அடிப்படை உரிமைகளுக்கப்பால் அதிகார உரிமை தேடுவது நகைப்புக்குரியதே.

    Reply
  • Anonymous
    Anonymous

    கட்டுரையை பொறுமையாக வாசித்த பின் ரவி என்னத்தை சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை. எனது தமிழறிவுப் பற்றாக்குறைதான் காரணம் என நினைக்கிறேன். ஒன்று மட்டும் புரிகிறது. ஆங்கிலக் கட்டுரையை தமிழாக்கம் செய்திருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது. இப்படித்தான் அறுபதுகளில் முற்போக்கு எழுத்தாளர்கள் லெனின், மார்க்ஸ், கோர்க்கி எழுதியவற்றை தமிழில் எழுதினார்கள். மக்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லை. இப்படியான கட்டுரைக்கும் அதே கெதிதான் ஏற்படும்.

    Reply
  • sekaran
    sekaran

    ரவி முன்னைய கட்டுரைகள் போலவே வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளவே கூடாது என்பதில் கவனமாய் இருந்திருக்கிறார். (ஒரு உ-ம்: இருப்பியலையும் இருத்தலியலையும் போட்டு ஒரு அவியல் நடத்தியிருக்கிறார் பாருங்கள். சூப்பர்!) என்னைப் பொறுத்தவரை முழுக்கட்டுரையையும் நாலு வசனத்தில் அடக்கிவிடலாம். 1) ஈழத்தமிழர்களே நீங்கள் பணம் பணம் என்று ஆலாய்ப் பறந்தபடி அதற்காகவே படிக்கிறீர்கள். 2) அதனால் உங்களுக்கும் பிரயோசனமில்லை. 3) உங்கள் சமூகத்துக்கும் பிரயோசனமில்லை.4) இனியாவது உருப்படியாக வாழப்பழகுங்கள்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    ஆதாம்,ஏவாள் கதையில் “அறிவுக் கனியான(புத்தி ஜீவி)ஆப்பிளை” சாப்பிட வேண்டாம் என்று கூறப்படுகிறது!.சிதம்பரம் நடராஜர் கதையில் நாட்டியத்தை(தொழில் நுட்பத்தை)கற்று காலை(காளியை)மேலே தூக்க வேண்டாம் என்று கூறப்படுகிறது!.இரண்டிலுமே “பெண்களுக்காகத்தான்” கூறப்படுகிறது!.இயற்கையில் எல்லாம் நடக்கிறது,ஆனால் எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை,அதுதான் இல்லாமை(மனிதத்திற்கு)-“நான் எக்ஸிஸ்டன்ஸ்”.சோதனைக் கூடத்தில் அதை “இருப்புக்கு” கொண்டுவருவதுதான் “தொழில் நுட்பம்”-மெட்டீரியல் கண்டிஷன் ஃபார் எக்ஸிஸ்டன்ஸ்.இந்த பெளதீக அறிவே எல்லா “அப்ஸலுயூட்டுகளையும்” கேள்விக் குறியதாக்குகிறது.இல்லாமையிலிருந்து,இருப்புக்கு கொண்டுவருவதே “பரம் பொருள்” என்று அறியப்படுகிறது.பொருள் இருந்தால்தான் “கன்டெம்பெலேஷனை” கொண்டு “பக்தியை” உருவாக்க முடியும்.சிவலிங்கத்தின் பால் பக்தி கொண்டவர்களுக்கு அது “அப்ஸலுயூட்”,அவர்கள் அதை சுற்றி இயங்கும்”ரிலேட்டிவ்”.உயிர்ப்பு என்பதே ஒரு “நிகழ்த்தகவு(கோயின்ஸிடன்ஸ்)”அது தொடர்ந்து நிகழ்வதற்கு ஒரு வலுவான “அப்ஸலியூட்(சூரியனைப் போல)” தேவை.அதைக் கேள்விக் குள்ளாக்கும் போது,”உயிர்ப்பின் நிகழ்த்தகவில்” மாற்றம் ஏற்படுவதே ஒரு “அப்போகலிப்ஸ்தான்”-மரபணு ஆயுதங்கள்,மனிதத்துவ சிதைவு..போன்றவை இதனை ஏற்ப்படுத்தலாம்.உயிர்ப்பு என்றாலே அங்கு “பெண்மை” வருகிறது.பிரபஞ்சத்தின் உயிர்ப்பே(பிக் பேங்ஃ)”ஆதிபராசக்தி”….

    Reply
  • kumar
    kumar

    கட்டுரையாளர் ரவி அவர்கள் முதலில் தனது கருத்துக்களை தெளிவாக எழுத வேண்டும். அடுத்து அவர் பரந்துபட்ட மக்களின் நலனுக்காக எழுதவேண்டும். அப்படி செய்வாராயின் நிச்சயம் அவர் கருத்துக்கள் பெரும்பான்மையான மக்களை பற்றிக் கொள்ளும். இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் என்று தலைப்பிட்டுவிட்டு அது பற்றி கூறுவதைவிட்டு வேறு ஏதோ எழுதிக்கொண்டிருப்பது ஏமாற்றமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

    கட்டுரையாளர் ரவி அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்ளில் எனக்கு உடன்பாடு இல்லையாயினும் இந்த பரபரப்பான உலகத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் தனது கருத்துக்களை தெரிவிக்கும் அவரது பணி உண்மையிலே பாராட்டப்பட வேண்டியதே. அதுவும் பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிந்திருந்தும்கூட தமிழீழம் போன்ற விடயங்களில் தனது கருத்துக்களை உறுதியாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்து வருகின்றார். எனவே அவரது பணியை நாம் நிச்சயம் பாராட்டுவதோடு நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள முயலவேண்டும்.

    பரஸ்பரம் கற்றுக்கொடுத்தல் கற்றுக்கொள்ளல் என்ற ரீதியில் எமது கருத்துப்பரிமாற்றம் இருக்க வேண்டும் என மாவோ கூறியுள்ளார். எனவே எப்போதும் தான் சொல்வதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதாமல் வாசகர்கள் கேட்கும் விடயங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ரவி அவர்கள் எழுதிய பல கட்டுரைகள் தொடர்பாக நான் சில விளக்கங்கள் கேட்டிருந்தேன். அதற்கு தான் ஒவ்வொன்றுக்கும் பதில் எழுதுவது வழக்கம் அல்ல என்றும் எல்லாவற்றுக்கும் சேர்த்து அத்த கட்டுரையில் பதில் கொடுப்பதாக தெரிவித்தார். அதன்படி எனது கேள்விகளுக்கு நிச்சயம் பதில் தருவார் என ஒவ்வொரு கட்டுரையையும் எதிர் பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து வருகின்றேன். அடுத்த கட்டுரையிலாவது இதனை கவனத்தில் கொண்டு பதில் தருவார் என நம்புகிறேன்.

    (1)தமிழ்மக்கள் தேசிய இனம் இல்லை என்று கூறியிருந்தீர்கள். அதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என்பதை விளக்கமுடியுமா?

    (2)தமிழ்மக்களுக்கு தமிழீழம் தோல்வி அடைந்த தீர்வு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது தோல்வி அடைந்த தீர்வு என்பதால் வேண்டாம் என்கிறீர்களா?அல்லது சிறந்த தீர்வு அல்ல என்பதால் வேண்டாம் என்கிறீர்களா?

    (3)தமிழீழம் வேண்டாம் எனில் இனப்பிரச்சனைக்கு தீர்வாக எதனை நீங்கள் முன்வைக்க விரும்புகிறீர்கள்?

    (4)இனப்பிரச்சனைக்கு தீர்வாக முன்வைக்கப்படும் அதிகாரபரவலாக்கம் தமிழ்மக்ளின் அனைத்துப்பிரச்சனைகளையும் தீர்க்குமா?உ+ம்:- சாதீயப்பிரச்சனை பெண்கள் பிரச்சனை பிரதேச வேறுபாடு மற்றும் அடிப்படை பிரச்சனைகள் போன்றன.

    (5)அவ்வாறு இல்லை எனில் அனைத்துப் பிரச்சனைக்கும் தீர்வாக எதனை முன்வைக்க விரும்புகிறீர்கள்?சில மார்க்சியவாதிகள் “இனப்பிரச்சனை என்பது பிரதான முரன்பாடாக இருப்பினும் வர்க்க முரன்பாடே அடிப்படையான முரன்பாடாக இருப்பதால் இந்த முரன்பாட்டுக்கு காரணமான வர்க்கங்களை ஒழிக்கும் புரட்சியை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறுகினறனர். நீங்கள் இதனை ஏற்றுக்கொள்கிறீர்களா? அல்லது மறுக்கிறீர்களா? மறுப்பதாயின் எதற்காக மறுக்கிறீர்கள் என்பதையும் அதற்கு மாற்றாக நீங்கள் எதனை முன்வைக்க விரும்புகிறீர்கள் என்பதையும் கூறமுடியுமா?

    (6)இலங்கைத் தமிழ்மக்களின் எதிர்காலம் தொடர்பாக நீங்கள் முன்வைக்கும் தீர்வில் தமிழ்மக்களின் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? தீர்வை அடைய முன்னெடுக்கும் பாதை யாது? இது குறித்த தங்களின் திட்டம் என்ன? அரசியல் தீர்மானம் என்ன?இவையாவும் ஏற்கனவே உள்ளனவற்றில் இருந்து எப்படி வேறுபடுகின்றது என்பது தொடர்பான தங்களின் விமர்சனம் என்ன?

    புத்திஜீவிகளின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உங்கள் கருத்துக்களை நியாயப்படுத்துவதற்காக மாவோ மாக்ஸ் சேகுவாரா போன்றவர்களின் மேற்கோள்களை முன்வைக்கும் நீங்கள் இறுதியில் மாக்ஸ்கூட மாக்சிஸ்ட்டாக இருக்கவில்லை என்று கூறி இந்த இசங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என வாதிடுகிறீர்கள். வழக்கம் போல் இந்தக் கட்டுரையிலும் இவ்வாறு பல விடயங்களில் முன்னுக்குப்பின் முரணாக எழுதுகிறீர்கள். துரதிருஸ்டவசமாக மாக்சியத்திற்கு எதிராக புரட்சிக்கு எதிராக தங்கள் கருத்துக்கள் அமைகின்றன.

    மாக்சியம் வெறும் தத்துவம் மட்டுமல்ல அது சமூகவிஞ்ஞானமாக கூறப்படுகிறது. மாக்சிசம் லெனினால் ரஸ்சியப்புரட்சியில் லெனிசமாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதுபின்னர் சீனப்புரட்சியில் மாவோ அவர்களால் மாவோசிமாக வளர்த்தெடுக்கப்பட்டது. மண்ணுக்கு ஏற்ற மார்க்சிசம் என்று சொல்லிக்கொண்டு கட்டுரையாளர் மார்க்சிசத்திற்கும் புரட்சிக்கும் எதிராக கருத்துக்களை முன்வைப்பதை என்னால் அனுமதிக்கமுடியாது. ஏனெனில் இப்படி சொல்லிக்கொண்டு எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை வகித்தவர்களை வரலாற்றில் பலரை நாம் கண்டுள்ளோம்.

    Reply
  • Ramesh
    Ramesh

    ஒரு நல்ல படைப்பாளி என்றல் அவரின் கருத்துக்கள் மக்களை போய் சேர வேண்டும். இங்கு ரவி குறிப்பிட்ட அவரின் நண்பர்களைத்தான் மக்களாகப் பார்க்கிறாரோ??

    புலிகள் ஆயுதத்தால் மக்களை சுலபமாக கவர்ந்ததும், இரோஸ் மக்களை கருத்துக்களால் அரசியல் மயப் படுத்தத் தவறியுதும் ஏன் என்பது இப்ப புரியுது.

    Reply
  • பல்லி
    பல்லி

    அட பல்லி பல்லிக்குதான் கல்வி பற்றாகுறைவு(அறிவு) ஏக்கபட்டேன், ஆனால் பலர் பல்லியின் வகுப்பில் இருப்பதால் பல்லிக்கு மகிழ்ச்சியல்ல, ரவி எமக்கும் புரியும்படி ஏதாவது செய்யுங்கோ,

    //ஒரு நல்ல படைப்பாளி என்றல் அவரின் கருத்துக்கள் மக்களை போய் சேர வேண்டும். //
    சந்திரராஜாவுக்கே புரியவில்லை என்னும் போது மக்களுக்கு(பாமர) எப்படி புரியும்; இதுகூட புலியின் வளர்ச்சிக்கு ஒரு காரனம் என பல்லி சொன்னால் யாரும் நம்பவா போகினம்;

    Reply
  • மாயா
    மாயா

    பொதுவாகவே கம்யூனிச சிந்தாந்த வாதிகள் சொல்வதை , கம்யூனிச சிந்தாந்தவாதிகளுக்கே புரிவதில்லை. இது உண்மை.

    சில காலங்களுக்கு முன், தலைவர் படிக்கும் உரை தலைவருக்கே புரியுமோ தெரியாது. அதை பாலசிங்கம் தெளிவு படுத்திய பின்தான் மக்களுக்கே புரிகிறது என்றான் என் நெருங்கிய புலி நண்பன் ஒருவன் . புலிகளுக்குள்ளேயே , அந்த அளவு விளக்கமானவர்கள் நம்மவர்கள். அதனால்தான் பலர் தள்ளயே போனார்கள்.
    அவர்களிடம் கேட்டுப் பாருங்கள் we want tamileelam , our leader prabhakaran. இதைத் தவிர வேறு ஏதாவது தெரியுமா என்று? ஊகும்?

    உண்மைதான். காந்தியை கொன்றது யார் என்றால் புலிகள் எனும் யுகத்தில் வாழுகிறோம்? எம்ஜிஆர் மக்களை கவர்ந்த அளவுக்கு சிவாஜியால் மக்களை கவர முடியவில்லை? ரஜனியால் மக்களை கவர முடிந்த அளவுக்கு கமலால் மக்களை கவர முடியவில்லை?

    புளொட்டில் , எனக்கும்தான் இந்த இஸம் எல்லாம் படிக்க வைத்தார்கள். எனக்கும் அப்போது கொட்டாவிதான் வந்தது. (புளொட்டின் சென்றல் கமிட்டியில் இருந்தவர்களில் எத்தனை பேருக்கு கால் மாக்ஸை தெரியும்? லெனினை தெரியும்? மாவோவை தெரியும்? ) வேக வீதியில் மாட்டு வண்டி ஓட்டுவது போன்றது இந்த சித்தாந்த அறிவுரைகள். இப்போதைய தேவை short and simple. ஒபாமாவை பாருங்கள் we can…தான் ஒரே கோஸம். இன்றைய நமது மக்கள் மிக கீழ் மட்டத்துக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். அவர்களுக்கு விளங்க நம்மவர்கள் எழுத வேண்டும். அது இன்றைய தேவை.

    என்னைப் பொறுத்தவரை இலங்கையில் அரசியல் செய்வதை விடுத்து , நாம் வாழும் புலத்தில் எம் நாட்டு மக்களிடையே புரிந்துணர்வை உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். அது நாடுகளை கடந்து இலங்கை கரையை தட்டலாம். அது பலருக்கு வாழ வழியமைக்கலாம்.

    அண்மையில் நான் ஒரு சந்திப்பில் தமது அரசியல் அபிலாசைகளுக்காக சிலர் எதையோ செய்ய முயல்வதை உணர்ந்தேன். நமது உள் மன , தனி மனித சுயநல அபிலாசைகளை விடுத்து, மக்கள் வாழும் அபிலாசையைக்கு வழிகாட்டுவோர் உருவாக வேண்டும். அது இல்லாத போது வண்டி வெகு தூரம் செல்லாது. மீண்டும் பழைய பல்லிவிதான். கோவிந்தாதான். மகிந்த குடும்பம் 30 வருடம் ஆட்சி செய்யும். பண்டா குடும்ப ஆட்சி. சேனாநாயக்க குடும்ப ஆட்சி. மகிந்த குடும்ப ஆட்சி. அவர்களோடு இணைந்தால் மலையக கட்சிகள் போல ஏதாவது மனமுருகி வாழ வழி கிடைக்கும்? சோகம்தான் . ஆனால் இதுவே யதார்த்தம்.

    Reply
  • kumar
    kumar

    ஆளும்வர்க்கமானது தனது அரசு இயந்திரத்தை இயக்க தேவையான ஊழியர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவே இன்றைய கல்வி நிலை இருக்கிறது.இங்கு பரீட்சையாக ஒருவரின் மனப்பாடமாக்கும் திறமைதான் பரிசோதிக்கப்படுகிறதேயொழிய சிந்திக்கும் திறமை பரிசோதிக்கப்படவில்லை.இத்தகைய பரீட்சை முறையை மாவோ எதிர்த்தார்.அதனால்தான் சீனாவில் பரீட்சையின் போது பாடப் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதிக்கப்பட்டது.தற்போது இங்கிலாந்திலும் மாணவர்களின் சிந்தனையை வளர்க்கும் கல்விமுறைபற்றி பேசப்படுகிறது.இதனை அம்பலப்படுத்துவதாகவே எமது கருத்துக்கள் இருக்கவேண்டுமேயொழிய மாணவர்களின் பெற்றோர்களை வசைபாடுவதில் எவ்வித பயனும் விளையப்போவதில்லை.

    எமக்கு தேசியப்பார்வையினுடான சர்வதேசப்பார்வையும் சர்வதேசப்பார்வையினூடாக தேசியப்பார்வையும் இருக்கவேண்டும்.அதாவது தேசியம் அற்ற சர்வதேசியமும் சர்வதேசியம் அற்ற தேசியமும் பயன் தரப்போவதில்லை என்பதை நாம் உணரவேண்டும்.

    மாக்சிசவாதி என்றால் மூலதனம் புத்தகத்தை இரண்டுமுறையாவது படித்திருக்கவேண்டும் என்றார் லெனின்.அதன் பின் மாவோ அவர்கள் மாக்சிசத்தைப்படித்தால் மட்டும் போதாது அந்த தத்துவத்திற்காக மக்கள் மத்தியில் சென்று யார் பணிபுரிகிறானோ அவனே உண்மையான மாக்சிசவாதி என்றார்.ஆனால் இன்று மாக்சிச தத்துவங்களை படிக்காமலும் அந்த தத்துவத்திற்காக மக்கள் மத்தியில் சென்று பணிபுரியாமலும் தங்களை மாக்சிசவாதி என்று சொல்லிக்கொண்டு அந்த தத்துவத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்போர் மத்தியில் நாம் வாழவேண்டியிருக்கிறது.

    வரலாறு முன்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது.அதனை தடுத்து நிறுத்தவோ அல்லது பின்னோக்கி இழுக்க முயற்சிப்பவர்களோ ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை.மாறாக அவர்கள் எப்போதும் தோல்வியையே சந்திப்பார்கள்.அதேபோல் பல்வேறு சமுதாய மாற்றத்தினூடாக மாறி வரும் இவ் வரலாறானது இன்றைய இந்த சமுதாய வடிவத்தையும் நிரந்தரமாக பேணப்போவதில்லை.மாறாக இந்த சமுதாயமும் மாறத்தான் போகிறது.இன்றைய முதலாளித்துவ சமுதாயமானது தன்னுடைய அழிவுக்கான தொழிலாளி வர்க்கத்தை தானே உற்பத்தி செய்கின்றது.தான் உற்பத்தி செய்த தொழிலாளி வர்க்கத்தால் இறுதியில் அது அழிக்கப்படுகிறது.இத்தகைய மாற்றத்தை செய்யும் நிகழ்வையே நாம் புரட்சி என்கிறோம்.எனவேதான் இந்த பரந்துபட்ட மக்களின் நன்மைக்கான புரட்சிக்காக உழைப்பவர்களே உண்மையான மகிழ்ச்சியாளர்களாக வரலாறு பதிவு செய்வதாக மாக்ஸ் குறிப்பிடுகிறார்.

    Reply
  • haran
    haran

    //இங்கு பரீட்சையாக ஒருவரின் மனப்பாடமாக்கும் திறமைதான் பரிசோதிக்கப்படுகிறதேயொழிய சிந்திக்கும் திறமை பரிசோதிக்கப்படவில்லை. இத்தகைய பரீட்சை முறையை மாவோ எதிர்த்தார். அதனால்தான் சீனாவில் பரீட்சையின் போது பாடப் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதிக்கப்பட்டது.//குமார்

    நீங்கள் சொன்ன சீனாவில் இன்று என்ன நடக்கிறது என்பதும் இந்த மாணவர்சமூகத்தில் எப்படிப்பட்ட கலாச்சாரம் மாற்றம் பெற்றுள்ளது என்பதும் நீங்கள் அறிந்திருக்கவில்லை காரணம் உங்கள் அறிவும் அந்தக்காலத்திலேயே நின்றுள்ளது தொடர்ந்து போகவில்லை காரணம் இன்றய சீனாவில் கல்வி நிலையில் ஜரோப்பிய கல்விப்பாதிப்பு ஏற்ப்படுத்தப்பட்டுள்ளதை நீங்கள் அறியவில்லைப்போலும் அல்லது நீங்கள் சொன்ன மாவோசீனக் கல்விமுறை சரியானதாக இருந்திருந்தால் என்றோ இந்த முமூ உலகமுமே தமது பிள்ளைகளுக்கான கல்வி முறையாக மாற்றம் செய்துவிடுவார்கள் அல்லது அந்த கல்வி முறை எப்படி இப்போ சீனாவில் இல்லாமல் போனது அந்த மக்களுககு அது தேவையில்லாமல் போனதேயாகும் மாவோவை விட டெங்சியாவோபிங் சரி என்பதே மக்களின் ஏற்ப்பு.

    //மாக்சிசவாதி என்றால் மூலதனம் புத்தகத்தை இரண்டு முறையாவது படித்திருக்கவேண்டும் என்றார் லெனின்.அதன் பின் மாவோ அவர்கள் மாக்சிசத்தைப்படித்தால் மட்டும் போதாது அந்த தத்துவத்திற்காக மக்கள் மத்தியில் சென்று யார் பணிபுரிகிறானோ அவனே உண்மையான மாக்சிசவாதி என்றார். ஆனால் இன்று மாக்சிச தத்துவங்களை படிக்காமலும் அந்த தத்துவத்திற்காக மக்கள் மத்தியில் சென்று பணிபுரியாமலும் தங்களை மாக்சிசவாதி என்று சொல்லிக்கொண்டு அந்த தத்துவத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்போர் மத்தியில் நாம் வாழவேண்டியிருக்கிறது//

    வாருங்கள் திரு குமார் அவர்களே இன்று பிரான்ஸ்க்கும் கனடாவுக்கும் இலங்கைத் தமிழர்கள் யார் கம்யூனிஸம் பேசுகிறார்களோ அவர்கள் எல்லோரும் ஸ்ரேட் பெனிபிட் வாழ்க்கை நடாத்துகிறார்கள் இவர்கள் உழைப்பின் அருமை தெரியாதவர்களா அல்லது சோம்பேறிகளா இதனால்த்தான் பலர் இவர்கள் வைக்கும் கூட்டங்களுக்கோ இவர்கள் சொல்லும் கம்யூனிஸ கருத்துக்களையோ மதிப்பதில்லை அது ஏன் இந்த கம்யூனிட்டுக்களக்கு மட்டும் இந்த லெனின் மாவோ சொன்னது விளங்கவில்லை?

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //பொதுவாகவே கம்யூனிச சிந்தாந்த வாதிகள் சொல்வதை , கம்யூனிச சிந்தாந்தவாதிகளுக்கே புரிவதில்லை. இது உண்மை.//
    புரியாமல் பேசுபவனே பாண்டித்தியன்.

    Reply
  • kumar
    kumar

    haran!
    பெனிபிட் வாங்கிக்கொண்டு கம்யுனிசம் பேசுவது கேவலம்தான். அதுவும் மாவோவைவிட டெங்சியாபிங் சிறந்தவர் என்று சொல்லும் உங்களிடம் வேறு எதைத்தான் எதிர்பார்க்கமுடியும? நீங்கள் எதுவும் கூறலாம்.ஆனால் நீங்கள் ஒன்றை மட்டும் மறந்துவிட்டீர்கள்.நாம் இதைவிட அதிக விமர்சனத்தை சந்தித்தே இந்த அரசியலை எதிர்கொள்கிறோம்.எனவே வேறு ஏதாவது வழியில் முயற்சித்து பார்க்கவும்.உங்களுக்கு எமது வாழ்த்துக்கள் தோழரே!

    Reply
  • sami
    sami

    கம்யுனிசம் பேசுபவர்கள் சமூகவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என்றால் அதில் அர்த்தம் உண்டு. ஆனால் கம்யுனிசம் பேசுபவர்கள் பெனிபிட் வாங்கக்கூடாது என்று ஏதாவது விதி உண்டா? மேலும் பெனிபிட் வாங்கிக்கொண்டு கம்யுனிசம் பேசினால் அரசுக்கு கோபம் வருவது நியாயம். ஆனால் கரனுக்கு ஏன் கோபம் வருகிறது என்று புரியவில்லை………………

    Reply
  • Visuvalingam Sivalingam
    Visuvalingam Sivalingam

    வி.சிவலிங்கம்

    ரவி சுந்தரலிங்கம் அவர்களின் இலங்கைத் தமிழர்களது எதிர்காலம் என்ற தலைப்பில் வரையப்பட்ட கட்டுரை பல ஆரோக்கியமான சிந்தனைகளை கிளறியிருப்பதை அக் கட்டுரை தொடர்பாக வெளிவந்துள்ள பின்னூட்டங்கள் உணர்த்துகின்றன. இப் பின்னூட்டங்களில் குமார் என்பவரின் குறிப்பில் கட்டுரையாளரை நோக்கி பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இக் கேள்விகள் இன்று பலரின் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களின் எதிரொலி என்றே கருதுகிறேன். அந்த வகையில் குமார் அவர்களின் சந்தேகங்களுக்கு ரவி அவர்களின் விவாதங்களை மேலும் சற்று உயர்நிலைக்கு எடுத்துச் செல்வது அவசியம் எனக் கருதுகிறேன். அந்த வகையில் குமார் அவர்களின் சில கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன்.

    கேள்வி:
    தமிழ் மக்களுக்கு தமிழீழம் தோல்வி அடைந்த தீர்வு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது தோல்வி அடைந்த தீர்வு என்பதால் வேண்டாம் என்கிறீர்களா? அல்லது சிறந்த தீர்வு அல்ல என்பதால் வேண்டாம் என்கிறீர்களா?

    பதில்:
    இக் கேள்வியில் இரண்டு பகுதிகள் உண்டு. தமிழீழம் தோல்வி அடைந்துள்ளதா? என்பது ஒன்று. சிறந்த தீர்வா? என்பது மற்றொன்று. தமிழீழம் தோல்வி அடைந்துள்ளதா? என வினவினால் விடுதலைப் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்ட, எடுத்துச் சொல்லப்பட்ட தமிழீழம் என்ற திட்டம் படு தோல்வி அடைந்துள்ளது என்பேன். இரண்டாவது தமிழீழம் சிறந்த தீர்வா? என்றால் தமிழீழம் என்பது எது? என்பதை வரையறுப்பதன் மூலமே அதன் தன்மையை புரிந்து கொள்ள முடியும். புலிகளால் வரையறுக்கப்பட்ட தமிழீழம் என்ற கோட்பாடு எனில் அது சிறந்த தீர்வு அல்ல என்பது புலிகளின் தோல்விகளின் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழீழம் என்ற கோட்பாடு மீள வரையறுக்கப்பட வேண்டும். இதனை வரையறை செய்யும்போது தமிழீழம் என்ற சொற்பதத்தை தொடர்ந்து பிரயோகிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் தமிழீழம் என்பது பிரிவினையை முதன்மைப்படுத்தியே இதுவரை வியாக்கியானப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான வியாக்கியானம் சிங்கள தேசிய வாதத்தை, பௌத்த மத சிங்கள மேலாதிக்க சிந்தனைகளை உசுப்பியுள்ளது. சிங்கள பேரினவாத சிந்தனைகளைப் பலப்படுத்த எவ்வாறு தமிழீழம் என்ற குறும் தேசியவாதம் உதவியதோ அதே போன்று தமிழீழம் என்ற கோட்பாட்டினைப் பலப்படுத்த பௌத்தமத மேலாதிக்க சிந்தனைகள் உதவின. அத்துடன் முஸ்லீம் மக்களின் மனதிலே பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியதற்கு இக் கோட்பாடுகள் காரணமாக அமைந்தன. மொத்தத்தில் இத் தேசியவாத சிந்தனைகள் ஒன்றில் ஒன்று தங்கி போட்டி அரசியலை நடத்தின. இதன் விளைவே நாட்டு மக்களின் அழிவு, பொருளாதாரச் சீரழிவு, ஜனநாயக மறுப்பு என்பவற்றைப் புரையோட வைத்தன. எனவே தமிழீழம் தோல்வி அடைந்துள்ளது எனில் அது புலிகளின் தாகமாக அமைந்த கற்பனாவாத தமிழீழமே தோல்வி அடைந்தது என்பேன்.

    கேள்வி:
    தமிழீழம் வேண்டாம் எனில் இனப் பிரச்சனைக்குத் தீர்வாக எதனை நீங்கள் முன்வைக்க விரும்புகிறீர்கள்?

    பதில்:
    தமிழீழம் ஏன் தேவை? என புலிகள் முன்வைத்த வாதங்கள் அதாவது தமிழ் மக்கள் எதிர் நோக்கிய பிரச்சனைகள் என்ன? என்பது பற்றி புலிகள் முன்வைத்த வாதங்களும், அதனைத் தீர்ப்பதற்காக முன் வைத்த யோசனைகளும் நோயும், அதனைத் தீர்க்க வழங்கப்படும் மருந்தையும் போன்றது. நோயைச் சரியாக இனம் காணாவிடில் அதாவது நோய்க்கான அடிப்படைக் காரணங்களை சரியாக இனம் காணாவிடில் அந் நோய்க்கு சிபார்சு செய்யப்படும் மருந்து நோயைக் குணப்படுத்தாது. பதிலாக பக்க விளைவுகளை அல்லது நோயை உக்கிரப்படுத்த உதவும். புலிகள் இனப் பிரச்சனைக்கான அடிப்படைக் காரணங்களை சரியாக இனம் காணாத காரணத்தினால் அதற்கான தவறான மருந்தாகிய தமிழீழம் என்பதை சிபார்சு செய்தார்கள். இக் குற்றச்சாட்டு தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகளுக்கே சாரும் என்ற போதிலும் தற்போது அவர்களைக் குற்றம் சாட்டுவதில் தவறேதும் இல்லை. இம் மருந்து நோயை உக்கிரப்படுத்தி நோயாளியை மேலும் படுக்கை நிலைக்குத் தள்ளியள்ளது. எனவே தமிழீழம் என்ற மருந்து சரியாக நோயின் குணங்களைப் புரிந்து கொள்ளாமல் வழங்கப்பட்ட தவறான மருந்தின் தாக்கங்களேயாகும்.

    இதில் இன்னொரு உதாரணத்தையும் தர விரும்புகிறேன். சோவியத் யூனியனில் செயற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி மாக்சிச தத்துவார்த்த அடிப்படையிலான சமூகக் கட்டுமானத்தை உருவாக்க முயற்சித்தது. ஆனால் அங்கு அது தோல்வி அடைந்தது. இத் தோல்வியை வைத்துக்கொண்டு மாக்சிசம் தோல்வி அடைந்துள்ளதாக வர்ணிப்பது தவறானது. இதே போன்ற நிலையே தமிழீழத்தின் கதியாகும். சோவியத் யூனியன் கம்யூ. கட்சியால் எதிர்பார்க்கப்பட்ட சோசலிச நிர்மாணம் தோல்வி அடைந்தது போலவே புலிகளின் தமிழீழ நிர்மாணமும் தோல்வி அடைந்தது. சோவியத் யூனியனில் காணப்பட்ட மாற்றங்களை தமிழீழக் கோரிக்கையோடு ஒப்பிடுவது பல விதங்களில் தவறாக இருப்பினும் தமிழீழம் தோல்வியா? என்பதற்கான பதிலாக மட்டும் இதனைப் பார்த்தால் புரிய முடியும். கியூபாவில், சீனாவில், வெனிசூலாவில் புதிய சமூக நிர்மாணம் கட்டப்படுகிறது. இது போன்றதே புதிய தமிழீழம் என்பதுமாகும். ஏற்கெனவே குறிப்பிட்டது போல தமிழீழம் என்ற சொல்லாடல் மாற்றப்பட வேண்டும் என்பதும் இவ் வாதத்தில் இன்னொரு அம்சமாகும். இதற்கான மாற்றத் தீர்வு என்பது தனியான வாதமாகும்.

    கேள்வி:
    இனப் பிரச்சனைக்குத் தீர்வாக முன் வைக்கப்படும் அதிகார பரவலாக்கம் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்குமா? உதாரணம்: சாதியப் பிரச்சனை, பெண்கள் பிரச்சனை, பிரதேச வேறுபாடு மற்றும் அடிப்படைப் பிரச்சனைகள் போன்றன.

    பதில்:
    மாற்றுத் தீர்வு என்பது இதுவாகவே அமைய முடியும். அதிகார பரவலாக்கம் என்பது சமஷ்டி அடிப்படையிலான ஒன்றாகும். இங்கு சமஷ்டி என்ற சொற் பிரயோகமும், தமிழீழம் என்ற வார்த்தையும் கடந்த கால அரசியலில் மிக மோசமான விளைவுகளைத் தந்துள்ளன. எனவே இத்தகைய சொற் பிரயோகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இவை கொண்டிருக்கும் உள்ளார்ந்த சமூகக் கட்டுமானங்கள் குறித்தே எமது கவனங்கள் செல்ல வேண்டும். அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்குமா? என்ற கேள்வி சற்று அதிகமானதாகும். நாம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் அடிப்படைக் கூறுகளை உருவாக்கும் போது ஏற்கெனவே அவ்வாறான திட்டத்தின் முன்னேற்றங்களை கவனத்தில் கொண்டே வரையறுக்கிறோம். அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் என்பதை விட இவ்வாறான இனங்களிடையேயான மோதலை ஏற்படுத்தும் கூர்மையான போக்குகளைத் தணிக்க முடியும். அதிகார பரவலாக்கத்தின் மூலம் சாதியப் பிரச்சனையைத் தீர்க்க முடியுமா? என்ற கேள்வி இரண்டு அம்சங்களைக் கொண்டது. ஓன்று சட்டத்தின் மூலம் தடை செய்தல். மற்றது கல்வி, பொது அறிவு என்பவற்றை வளர்த்தலினூடாக சாத்தியப்படுத்துவது. இங்கு விகிதாசார பிரதிநிதித்துவம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் தமது அதிகார பலத்தை பிரயோகிக்க முடியும். இது இன்று இலங்கைப் பாராளுமன்றத்தில் சிறிய கட்சிகளின் பலத்தின் மூலம் உணரக் கூடியதாக உள்ளது.

    அதிகார பரவலாக்கத்தினை தமிழர் தலைமை ஏற்க மறுப்பது அதன் இருப்புக்கான அச்சுறுத்தலின் விளைவாகும். இங்கு ஒற்றை ஆட்சி அமைப்பின் கீழ் அதிகார பரவலாக்கம் சாத்தியமா? என்றால் அது முழுமையான சாத்தியமில்லை. ஏனெனில் ஒற்றை ஆட்சி அதிகார குவிப்பை வற்புறுத்தும்போது பரவலாக்கம் முழுமையாக சாத்தியமில்லை. ஆனால் ஒற்றை ஆட்சி அமைப்பிற்குள் நிர்வாக கட்டமைப்புகள் அமைக்கப்படுமானால் சமஷ்டிக் கட்டுமானத்திற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ள தற்போதைய நிலையில் குறைந்த பட்சம் நிர்வாக கட்டுமான உருவாக்கத்தை ஏற்படுத்த நாம் ஏன் உதவக்கூடாது? 1987இல் உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையிலான மாகாண சபை உருவாக்கத்தை அதிகாரங்கள் போதாது என புலிகள் எதிர்த்தார்கள். அவர்களால் மாற்று நிர்வாகத்தைத் தர முடிந்ததா? எதிர்ப்பு அரசியல் இவ்வாறான இன்னொரு வாய்ப்பினையும் இல்லாமல் ஆக்கியுள்ளது. எனவே சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி நிர்வாக அமைப்பை உருவாக்க நாமும் பங்களிக்க வேண்டும்.

    குமார் அவர்களின் ஏனைய கேள்விகள் நீண்ட பதில்களைக் கொண்டவை. அது மட்டுமல்லாமல் தற்போது தரப்பட்டுள்ள கேள்விகளே இன்று விவாதத்திற்குரியதாகும். எனவே ஏனைய கேள்விகளும் முக்கியத்துவம் வாய்ந்தன என்பதை ஏற்றுக் கொண்டு பதில்களை எதிர்வரும் காலங்களில் பார்க்கலாம்.

    Reply
  • ashokbharan
    ashokbharan

    Now, the time has come to convert the military victories and political changes for a meaningful freedom.

    Reply
  • Saambanaar Sugumugam
    Saambanaar Sugumugam

    Kumaar has raised some good questions. Sivalingam adrressed the first four. I attempt the fifth.

    I beleive that that the economic exploitation and inequality, lack of freedom and democracy are fundamental problems for Sri Lanka. However,race based tensions are predominant in the political and social sphere at present (and for the last 60 years). Although, the struggle for economic equality and freedom and democracy of all peoples of Sri lanka is essential the race based tension is not allowing peoples to unite against the powers who are exploiting them. Therefore it is necessary that the race based tensions are resolved ( Tamils, Muslims, Plantation Tamils….). This is paramount. Sivalingam says this in a different way:

    அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் என்பதை விட இவ்வாறான இனங்களிடையேயான மோதலை ஏற்படுத்தும் கூர்மையான போக்குகளைத் தணிக்க முடியும்.

    Kumaar you asked if there is one fomulation for all problems. I do not beleive that one formulation such as federal solution or any other power distribution structure would resolve problems of cast and women’s inequality. Some of these issues are in the culture, ways of thinking, economic structure, social norms and so on. Therefore they have to be fought in all aspects of life where such inequalities show themselves. I think Ravi is appealing to these possibilities in our community. I think he is also saying that we have been a one-issue community. If so I agree.

    I would also emphasise that a culture of power distribution in the political sphere can engender (although not on its own and requires hard work by those who are affected and intellectuals and community leaders) a culture of power sharing in the society in terms of gender and cast and children’s equality.

    Power has a tendency to seep through the society. I beleive if we are willing to share power in the political field then, it is possible that the culture of sharing power, seeps to other spheres such as social and personal spheres.

    Reply
  • kumar
    kumar

    மதிப்புக்குரிய அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்கள் தனது கருத்துக்களை பகிர்கின்றமைக்கு என் நன்றிகள்+பாராட்டுக்கள்.நான் கட்டுரையாளர் ரவி அவர்களிடம் கேட்ட வினாக்களுக்கு சிவலிங்கம் அவர்கள் சில விளங்கங்கள் தந்துள்ளார்.இந்த விளக்கங்களை எந்தளவுக்கு ரவி அவர்கள் ஏற்றுக்கொள்வார் என்று தெரியவில்லை.எனினும் ரவியின் விவாதங்களை சற்று மேலும் உயர்நிலைக்கு எடுத்துச்செல்லும் வண்ணம் தான் தனது கருத்துக்களை பகிர்வதாக சிவலிங்கம் அவர்கள் தெரிவிப்பதால் அதனை ஏற்றுக்கொண்டு ரவி தொடர்வார் என நம்புகிறேன்.

    வழக்கமாக தான் சொல்லவரும் கருத்துக்களை தெளிவாக கூறும் சிவலிங்கம் அவர்கள் ஆனால் இங்கு அவ்வாறு தெரிவிக்காமல் ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டார்.அடுத்த கருத்துக்களில் தெளிவாக முன்வைப்பார் என நம்புகிறேன்.

    தமிழீழம் என்பது தனிநாட்டுப்பிரிவினை+கோரிக்கை.இதனை த.வி.கூட்டனியினர் முன்வைத்தனர்.இதற்காக மக்கள் மத்தியில் உணர்ச்சிகரமாக பேசி வெறியூட்டினர்.இதனால்இதன்பால் கவரப்பட்ட இளைஞர்கள் போராடப்புறப்பட்டனர்.தமிழீழத்திற்கான போராட்டங்கள் ஆரம்பத்தில் சாத்வீகமுறையில் அகிம்சை முறையில் அமைந்தன.ஆனால் இனவெறி அரசு அதற்கு மதிப்பளிக்காமல் பொலிஸ் இராணுவம் கொண்டு அடக்கி ஒடுக்க முனைந்ததால் இளைஞர்கள் வேறுவழியின்றி ஆயுதப்பாதையை தேர்தெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.இளைஞர்கள் இவ்வழியை தேர்ந்தெடுக்க ஆரம்பத்தில் த.வி.கூட்டனியினரும் காரணமாக இருந்தததோடு ஆதரவும் வழங்கினர்.அமிர்தலிங்கத்தின் மூத்தமகன் காண்டீபன் வன்முறை அரசியலில் பங்கெடுத்து பொலிஸ் தேடும்போது நாட்டை விட்டு வெளியேறினார்.அதன் பின் இரண்டாவது மகன் காண்டீபன் ஆயுத இயக்கம் ஒன்றைக்கட்டி சில காலம் இந்தியாவில் செயற்பட்டார்.அப்போது இவர்களுக்காக மங்கையர்க்கரசி அவர்கள் மலேசியாவில் பணம் திரட்டிய செய்தி யாவரும் அறிந்ததே.இதைவிட புலிகளின் அப்போதைய தலைவர் உமாமகேஸ்வரன் கையொப்பம் இட்டு வெளியிட்ட முதலாவது அறிக்கை அமிர்தலிங்கத்தின் காரியாலயத்தில் உள்ள தட்டச்சு இயந்திரத்தில்தான் தட்டச்சு செய்யப்பட்டது என்பதும் மறுக்கமுடியாத செய்திகள்.எல்லாவற்றையும் விட இயக்கங்களின் துரோகிகள் ஒழிப்புக் கலாச்சாரத்திற்கு துரையப்பா கொலை முதல் வித்திட்டு வளர்த்த பெருமை கூட்டனியினரையே சாரும்.அதையெல்லாம்விட ஆரம்பத்தில் புலிகள் இயக்கத்தில் சேர சென்ற இளைஞர்கள் மத்தியில் பிரபாகரன்”ஜந்து வருடத்தில் தமிழீழம் எடுத்து அமிர் அண்ணையின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு புலிகள் இயக்கம் கலைக்கப்படும்”என்று கூறியிருந்தார்.இது தான் உண்மை வரலாறு ஆகும்.எனவே உண்மை இப்படி இருக்க “புலிகள்தான் தமிழீழம் கேட்டார்கள்.புலிகள்தான் எல்லா அழிவுக்காரணம்.கூட்டனி ஒன்றும் அறியாத அப்பாவி ” என்ற ரீதியில் வரலாற்றை திரிக்கவேண்டாம்.

    புலிகள் கேட்ட தமிழீழம் தவறானது என்று சொல்வதன் மூலம் மற்றவர்கள் கேட்ட தமிழீழம் சரியானதோ என சிந்திக்க வைக்கிறார் சிவலிங்கம் அவர்கள்.இங்கு தமிழீழம் யார் கேட்டது என்பதல்ல பிரச்சனை.தமிழீழம் யார் கேட்டிருந்தாலும் அது சிறந்த தீர்வா என்பதே பிரச்சனை.தமிழீழம் என்ற தனிநாட்டு தீர்வு தமிழ் -சிங்கள மக்களின் ஒற்றுமைக்கு மட்டுமல்ல தமிழ்மக்களை ஒன்றுபடுத்துவதற்கும் தவறிய எதிரான தீர்வாகும்.இது உழைக்கும் மக்களின் நலனுக்கு எவ்வித பயனும் அளிக்காத ஏகாதிபத்திய ஊடுருவலுக்கு வழிசமைக்கும் தீர்வாகும்.முக்கியமாக இந்திய விஸ்தரிப்புவாதத்திற்கு துணைபோகும் தீர்வாகும்.இவையாவும் முழுக்க முழுக்க உண்மைதான் என்பதை கடந்தகால வரலாறு எமக்கு நன்கு காட்டியிருக்கும்போது ஒரு ஆரசியல் ஆய்வாளரான சிவலிங்கம் அவர்கள் இதனை வெளிப்படையாக உறுதியாக தெரிவிக்க தயங்குகின்றமை ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது.

    தமிழீழம் என்ற தனிநாட்டுத்தீர்வு சிறந்த தீர்வு அல்ல என்பதும் அது சாத்தியமான தீர்வு அல்ல என்பதும் நன்கு புரிந்துவிட்டபின்னர் அது தொடர்பாக மேலும் காலத்தை வீணாக்கிக்கொண்டிருக்காமல் இனப்பிரச்சனைக்கு தீர்வாக கம்யுனிஸ்ட் கட்சியினரால் முன்வைக்கப்பட்ட பிரதேச சுயாட்சி தொடர்பாக சிவலிங்கம் அவர்கள் தனது கருத்துக்களை முன்வைத்தால் பயன் உள்ளதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

    முதுபெரும் மாக்சியவாதியும் நீண்டகால போராட்ட வரலாற்றைக் கொண்டிருப்பவரான சிவலிங்கம் அவர்கள் புலிகளின் போராட்டத்தை ரஸ்சிய வரலாற்றுடன் ஒப்பிட்டு எழுதியது மிக்க வருத்தம் அளிப்பதுடன் இது தவறான முன்னுதாரணத்தை கொடுத்துவிடும் என்பதையும் எப்படி கவனிக்கதவறினார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை………

    Reply
  • chandran.raja
    chandran.raja

    குறை பிரசவத்தில் உயிர் இழந்து போனதுதான் பாரிஸ் கம்யூன். இதை அக்குவேறு ஆணிவேறாக ஆய்வுசெய்து தமது ஆட்சியதிகாரத்தை நிறுவிக்காட்டினார்கள் போல்சேவிக்குகள். அது ரஷ்சியருக்கு மட்டுமல்லாமல் ரஷ்சியாவைக் கடந்து இனமத மக்களை ஒன்று சேர்க்கும் தொழிலாவர்க்க அரசாக உலகத்தில் இனங்காணப்பட்டது. அதற்கு பிறகு வந்த காலங்கள் லெனின் இறப்புக்கு பிறகு புரட்சிசெய்த காலங்களை விட கொடுமையாக இருந்தது. புரட்சியை செய்தவர்களும் புரட்சியை முன்நின்று நடத்தியவர்களும் கொலை செய்ப்பட்டார்கள். மாக்ஸியத்திற்கு மறைமுகமாக வசைபாடப்பட்டது தனியொருநாட்டில் சோசஷசம் மூலமாக.

    இது பற்றி ஏற்கனவே பலர்- பலநாட்டு மாக்ஸியவாதிகள் போதியஅளவு ஆய்வு செய்துவிட்டார்கள். இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள். முடிவுதான் என்ன ?. யாரின் பின்னால் உலகத்தொழிலாளர்வர்க்கம் பின் தொடர்வது?.
    மாக்ஸியவாதிகளும் கம்யூனிஸ்டுகளும் மனிதமனமே இல்லாத கொடுரமானவர்களா? எதையும் சிந்திக்க மறுப்பவர்களா? ஆயுதத்திற்கு முன்னுரிமை கொடுப்பவர்களா? அப்படியென்றால்…..? நிச்சியம் கடந்த காலத்தை திரும்பிப்பார்போம்.

    நிக்கரகுவா புரட்சி என்னயாயிற்று? சிலிப்புரட்சி என்னயாயிற்று?கியூபா தனது மனிதநேயத்தை நாற்பதுவருடங்களுக்கு மேலாக திறந்து வைத்திருந்து பலசாதனைகளை செய்து நாளாந்தம்நெருங்கிக் கொண்டிருக்கிற உழைப்பாளி மக்களுக்களுக்கு நல்லதரிசனத்தை தந்தாலும் தன்னளவில் ஏன் வேதனைப்பட்டாக வேண்டும். விடை சுலபமானது. ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரத்தை எதிர்த்து அதனால் தனியாக போராட முடியவில்லை. பலநாடுகளின் தொழிலாளவர்கத்தின் உதவி கைகொடுப்பு தேவைப்படுகிறது. அதுவேதான் உண்மை: வேதனையில் உழன்று கொண்டிருக்கிறது. தங்களை மாக்ஸியவாதிகளாக புரட்சிவாதிகளாக தங்களை காட்டிக்கொள்பவர்கள் ஆயுதத்தைத்தான் தங்கள் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள். இது அந்தநாட்டு மக்களுக்கு எந்த பலனையும் அளிக்கப்போவதில்லை.மாறாக துன்பத்தையே விளைவிப்பவை. இவர்களால் உபரிமதிப்பையும் கூலிஉழைப்பையும் முடிவுக்கு கொண்டுவரமுடியுமா?முதாலித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தின் வாழ்நாளை நீடிக்கவே முடியும்.

    கடந்தகால வரலாறுகளில் இருந்து அதன்படியே தற்காலத்திற்கு எதையும் பிரயோகிக்க முடியாது.இதற்கு மாவோமும் ஸ்டாலினும் விதிவிலக்கல்ல. கற்றுக்கொள்ள மட்டும்தான் முடியும்.நாம் இலங்கையர்கள் எமது சரித்திரம் மற்றவரைவிட எமக்கே கூடுதலாகப்புரியும். சர்வதேசியவாதிகளும் கம்யூனிஸ்டுகட்சிகளும் எமதுநாட்டில் இறந்துபோன படியால்தான் இலங்கையரசும் குட்டிமுதலாளிவர்கமும் நர்த்தனம் ஆடிநின்றன. இதன் அர்த்தம் இறந்தவர்கள் என்றும் இறந்தவர்களாக இருக்கப்போவதில்லை. திரும்பவும் தொழிலாளர்வர்க கட்சியாக சர்வதேச தொழிலாளர்கட்சியுடன் கைகோர்பவர்களாக “தொழிலாளவர்கத்திற்கு தாய்நாடுமில்லை தந்தைநாடுமில்லை நாமோ நாடும் நாமே உலகமும்” என்ற கோஸத்துடன் முன்பிருந்ததை விட வேகமா முன்எழுந்து வருவார்கள். இது வரலாற்றின் நிகழ்வு.

    Reply
  • palli
    palli

    நான் நினைக்கிறேன் நண்பர்கள் சிவலிங்கமும் குமாரும் சமைத்து முடிந்த பின் காய்கறி வாங்க சந்தைக்கு போக முற்படுகிறார்கள் போல் உள்ளது; இருவருமே மிக சிறந்த அரசியல் ஆய்வினை செய்ய கூடியவர்கள்; ஆனாலும் இந்த கட்டுரையானாலும் சரி இருவரது கருத்தானாலும் சரி இறந்த ஒருவரை புதைப்பதா? அல்லது எரிப்பதா? என்பது போல்தான் உள்ளது, இது அவர்களை கேலி செய்யவோ அல்லது குத்தி காட்டவோ பல்லி முற்படவில்லை, அந்த தகுதியும் பல்லிக்கு இல்லை, ஆனால் எம்மினத்தின் இன்றய அவசர முதல்உதவி செய்ய கூடியவர்களே இப்படி நீண்ட நாள் திட்டங்களை வகுப்பதால், என்னை போன்ற அவசர குடுக்குகள் தாறுமாறாக ஏதாவது எழுதபோய் அதுவே எம்மினத்துக்கு கேடாக போய் விடுமோ என ஏங்குவதால், தங்களிடம் இருந்து நடைமுறைக்கு எது உகந்தது எனவே நாம் எதிர்பாக்கிறோம்; சிவலிங்கம் ஒரு இடத்தில் (ரிபிசி யில்) சொல்லுவார் எம்மினத்துக்காக எந்த பேயுடனும் சேரலாம்; ஆனால் அது தமிழரை காக்கும் என தெரிந்தால் என, அதைதான் இன்று பல்லி மட்டுமல்ல தமிழ் மக்கள் பலர் விரும்புவதை தாழ்மையுடன் அண்ணன் சிவலிங்கத்துக்கு சுட்டி காட்டுகிறேன்,

    Reply
  • kumar
    kumar

    இலக்கு இன்றி எய்யப்படும் அம்பு பயன் அற்றது.
    சேரும் இடம் இன்றி தொடங்கும் பயணம் அர்த்தம் அற்றது.
    அதுபோல் கொள்கைகள் அற்ற இயக்கம் விடிவைத்தராது.
    அழுதபிள்ளையே பால் குடிக்கும்.அதேபோல்
    போராடும் மக்களே விடுதலையைப் பெறுவார்கள்.
    இதுவே உலக வரலாறாக இருக்கின்றது.

    தமிழ்மக்களுக்கு பிரச்சனை இருக்கிறதாயின் முதலில் என்ன பிரச்சனைகள் என்பதை வரையறுக்கவேண்டும்.அடுத்து அந்த பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு சிறந்த தீர்வு என்பதை இனம் காணவேண்டும்.அதன் பின் அதற்காக போராடவேண்டும்.போராட்டத்தில் வெற்றி பெறவேண்டுமாயின் அதில் எமது எதிரி யார்? நண்பர்கள் யார்?என்பதை தெளிவாக்கவேண்டும்.(நண்பனை எதிரியாகவோ அல்லது எதிரியை நண்பனாகவோ தவறாக கணிப்போமாயின் நாம் ஒருபோதும் வெற்றிபெற முடியாது.)அடுத்து போராட்டப்பாதையை தெரிவு செய்யவேண்டும்.அதாவது பாராளுமன்ற பாதையா? ஆயுதப்போராட்டப்பாதையா? என முடிவு செய்ய வேண்டும்.

    மேற்கண்ட விடயங்கள் ஒரு போராட்ட கட்சியின் கொள்கையாக இருக்கின்றது.எனவேதான் தமிழ்மக்களுக்காக போராடுவதாயின் மேற்கண்ட விடயங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என கோருகிறேன்.

    மக்களுக்காக போராடுவதாக கூறும் முதலாளித்துவ இயக்கங்கள் கூட மேற்கண்ட விடயங்களை உள்ளடக்கிய கொள்கைகளை வெளியிடுகின்றன.அதற்கான அமைப்பு கமிட்டிகளை வெளியிடுகின்றன.குறிப்பான அரசியல் தீர்மானங்களை நிறைவேற்றி வெளியிடுகின்றன.இந் நிலையில் பரந்துபட்ட தமிழ்மக்களுக்காக போராடப்போவதாகக் கூறுவோர் இக் கொள்கைகளை உள்ளடக்கிய திட்டங்களையும் அரசியல் தீர்மானங்களையும் முன்வைக்கவேண்டியது அவசியமல்லவா!

    எனவேதான் தமிழ்மக்களுக்கு எது சிறந்த தீர்வு? அவர்களின் நண்பர் யார்? எதிரி யார்? அவர்களின் போராட்டப்பாதை யாது?என்பன குறித்து விளக்கும்படி கோருகிறோம்.தமிழ்மக்களின் எதிர்காலம் குறித்து கட்டுரை எழுதும் ரவி அவர்கள் மேற்கண்ட விடயங்கள் குறித்து தனது கருத்தை தெளிவாக வரையறுத்தது முன்வைப்பாரேயானால் அது பயன் உள்ளதாக அமையும்.

    நான் கேட்டுக்கொண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முன்வந்த சிவலிங்கம் அவர்கள் புலிகள் கேட்ட தமிழீழம் தவறானது என்கிறார்.அதன் மூலம் மற்றவர்கள் கேட்ட தமிழீழம் சரியானதோ என சிந்திக்க தூண்டுகிறார்.ஆனால் கட்டுரையாளர் ரவி அவர்கள் தமிழீழ தீர்வு சிறந்ததா? இல்லையா? என்பது பற்றி கூறாமல் அது தோல்வி அடைந்த தீர்வு .எனவே கைவிட கோருகின்றார்.இது சிவலிங்கம் அவர்களின் கருத்துக்கு முரணாக இருப்பதோடு தமிழீழம் சிறந்த தீர்வாயின் அதனை ஏன் கைவிட வேண்டும் என்பதற்குரிய பதிலை தர தவறிவிட்டார்.

    அதிகாரப்பரவலாக்கல் பற்றி பேசும் சிவலிங்கம் அவர்கள் அதனை எப்படி அடைவது என்பது குறித்து எழுதவில்லை.இது பெரிய விடயம் என்றும் அதனை பின்பு ஆறுதலாக ஆராய்வோம் என்கிறார்.தமிழ்மக்களுக்கு அதிகாரப்பரவலாக்கமே சிறந்த தீர்வாக இருக்கும் என்பதை தைரியமாக எழுதியிருக்கும் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்களுக்கு அதனை அடையும் பாதை குறித்து எழுதுவதில் என்ன தயக்கம் என்பது புரியவில்லை.ஆயுதப் போராட்டப்பாதை குறித்து உங்களுக்கு தயக்கம் இருக்குமாயின் அரசு தானாக முன்வந்து தரும் என்று கூற விரும்புகிறீர்களா?அல்லது இந்தியஅரசு வாங்கித் தரும் என தமிழ்மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட விரும்புகிறீர்களா?அல்லது பாராளுமன்ற பாதை மூலம் பெறமுடியும் என்று கூற விரும்புகிறீர்களா?எதுவாயினும் தன் கருத்தை சிவலிங்கம் அவர்கள் தயங்காமல் தேசம் வாசகர்கள் முன் வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழ்மக்களின் அனைத்துப்பிரச்சனைக்குமான தீர்வு என்ன என்பதை முன்வைக்கும்படி கட்டுரையாளர் ரவி அவர்களிடம் கேட்டிருந்தேன்.அவர் இன்னும் அதற்குரிய பதில் தரவில்லை.பெண்கள் பிரச்சனை சாதிப்பிரச்சனை பிரதேசப்பிரச்சனை போன்றன அதிகாரம் பெற்றபின் கலாச்சார மாற்றத்தின் மூலம் நிறைவேற்றலாம் என்று ஒருவர் கூறுகிறார்.இங்கு இதனை நான் வலியுறுத்துவது ஏனெனில் புலிகளிடம் இந்தப்பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு என்று கேட்டபோது அவர்கள்”எல்லாம் தலைவர் தீர்ப்பார்” என்ற ஒருவரியே எப்போதும் பதிலாக கிடைத்தது.சரி தலைவருக்கு இவை குறித்து ஏதும் தீர்வு இருக்கிறதா என்று பார்த்தால் அதற்குரிய சான்று எங்கேயும் கிடைக்கவில்லை.அவரும் கடைசிவரை இவை குறித்து எதுவும் பேசவில்லை.பேசவில்லை என்பதைவிட அவரிடம் எதுவும் இல்லை என்பதே உண்மையாகும்.எனவே இனியும் இப்படி அந்த மக்களை ஏமாற்றாது நீங்கள் அடையப்போகும் தீர்வில் இந்த மக்களின் இந்த பிரச்சனைகள் எப்படி தீர்க்கப்படும் என்பதை தெளிவாக முன்வைத்து அந்த மக்களை வென்றெடுங்கள் .

    விவாதம் ஒரு வரையறுக்குள் இருக்கவேண்டும் என்பதற்காகவும் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நான் சில கேள்விகளை முன்வைத்தேன்.எனவே அதற்கு பதில் அளிப்பதன் மூலம் ஆரோக்கியமான விவாதத்தையும் கருத்துப்பரிமாற்றத்தையும் மேற்கொளளலாம் என நம்புகிறேன்.எனவே இதனை கவனத்தில் கொண்டு அனைவரும் கருத்துப்பரிமாறிக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

    Reply
  • yoganathan
    yoganathan

    குமார் அவர்களின் எழுத்துக்களை நான் தொடர்ச்சியாக பார்ப்பதுண்டு. அதில் அவர் தொடர்ச்சியாக கேள்விகளை மட்டுமே அடுக்குகிறார். பின் அதற்கான பதில்போல சிலவற்றிற்கு எழுதி அதையும் கேள்விபோலாக்குகிறார். தான் என்னத்தை முன்னெடுப்பது நன்றாக இருக்கும் அல்லது சாத்தியமாக இருக்கும் அல்லது சரியாக இருக்கும் என எதையும் சுட்டிக் காட்டவோ தயங்குகிறார்.

    தமிழரின் இன்றைய நிலைப்பாட்டில் நாம் இப்படித்தான் போகப்போகிறோம் இதுதான் செய்வோம் இவ்வளவு காலத்துள் இன்னஇன்ன விடயம் நடக்க வேண்டும் என்று எதையும் கோடுகீறிவிட்டு நின்று செய்ய முடியாது.படிப்படியான முறையிலேயே போகலாம். அவ்வாறு போகும்போது எற்படும் நிகழ்வுகளின் அடிப்படையில் சரியானதை தெரிந்து சாத்தியமற்றதை மாற்றியமைத்து செல்ல வேண்டும்.

    Reply
  • palli
    palli

    //தமிழ்மக்களுக்கு பிரச்சனை இருக்கிறதாயின் முதலில் என்ன பிரச்சனைகள் என்பதை வரையறுக்கவேண்டும்//
    //அதேபோல் போராடும் மக்களே விடுதலையைப் பெறுவார்கள்//
    //அடுத்து போராட்டப்பாதையை தெரிவு செய்யவேண்டும்.அதாவது பாராளுமன்ற பாதையா? ஆயுதப்போராட்டப்பாதையா? என முடிவு செய்ய வேண்டும்//

    மேலே உள்ள பின்னோட்டத்தில் இப்படி பல நகைசுவைகள் உள்ளது; கட்டாய ஓய்வில் (அரசியல்) சங்கரி ஜயா மட்டுமல்ல போல்உள்ளது, தயவுசெய்து இந்த உலக நாட்டு படங்களை படித்துவிட்டு படம் காட்டாதீர்கள், எம் கண்முன்னே நடந்த சம்பவங்கள் எத்தனை போராட்டத்துக்கும் உதாரனம் சொல்ல இருக்கும்போது; அயல்நாட்டு உதாரணங்களை சொல்லி கேலி செய்யாதையுங்கோ; பசிக்குது என சொல்லும் மக்களுக்கு லெனினின் வீட்டில் அடுப்பே இல்லை என்னும் தத்துவம் தேவையில்லை, புலியின் வளர்ச்சிக்கு ஒரு காரனம் இந்த பாளாய்போன அயல்நாட்டு சிவப்பு புத்தகங்கள்தான்;

    மூன்று லட்ச்சம் மக்களின் உயிரை முதலாய் போட்டு வியாபாரம் செய்ய யாரும் முற்படதீர்கள்; நாம் அறிவுஜீவிகள் என்பதால் அழிவுக்குதான் வழிவகுக்க வேண்டுமா? ஏன் யதார்த்தமாய் சிந்திக்கவே தெரியாதா? அல்லது அந்த அறிவு என்னும் ஆதங்கம் தடுக்கிறதா, தேசநண்பர்களின் சிறு உதவி என்னும் அமைப்பைவிடவா உங்களுக்கு உலக வரலாறு சொல்லிகொடுத்துள்ளது; உணவுக்காகவும் உயிருக்காகவும் அங்கு மக்கள் அரசை மண்டாடும்போது ;உயர்ந்த கொள்கை என உக்காந்து கும்மியடிப்பதுவும் ஒரு இன அழிப்புதான்; இலங்கயில் இருக்கும்போது ஏதோ ரஸியாவும், சீனாவும், பாலஸ்தீனமும், சுகந்திர காற்றை மட்டுமே வடிகட்டி சுவாசிப்பதாய் நம்பினோம், ஆனால் இங்கு வந்த பின்புதான் தெரிகிறது இவர்களை விட நாம் (அன்று 1982) எவ்வளவோ மேல்என.

    Reply
  • kumar
    kumar

    1983ம் ஆண்டளவில் “தமிழீழம்” சிறந்த தீர்வு அல்ல என்று சிலர் கூறியபோது அவர்களை சமூகவிரோதிகள் என்றும் ஜே.ஆர் இன் கைக்கூலிகள் என்று வசைமாரி பொழிந்தார்கள். இன்னும் சிலரோ இவர்களுக்கு மரணதன்டனை வழங்கவேண்டும் என்று எழுதி ஒட்டினார்கள். ஆனால் அன்று இவ்வாறு உணர்ச்சிவசப்படாமல் கொஞ்சம் உணர்வுபூர்வமாக சம்பந்தப்பட்ட இவர்கள் சிந்தித்திருப்பார்களேயானால் இன்று இவ்வளவு இழப்புகளை தவிர்த்திருக்க முடியும். இப்போதும் கூட இதனை நாம் சுட்டிக்காட்டுவதன் நோக்கம் மீண்டும் அதே தவறுகள் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் தமிழ்மக்களுக்கு வீண் இழப்புகள் நிகழக்கூடாது என்பதற்காகவுமே.

    அண்மையில் ஒரு அரசியல் தலைவரின் அஞ்சலிக் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அதில் பேசிய அம்மையார் ஒருவர் தாங்கள் ஒருபோதும் யாரையும் எதிரியாகப் பார்க்கவில்லை என்றும் எல்லோருடனும் ஒற்றுமையாக இருக்கவே விரும்பினோம் என்றார். அத்துடன் சோனியா அம்மையார் சம உரிமை பெற்றுத்தருவார் என்றும் கூறினார். இதைக்கேட்டு நான் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தேன். ஏனெனில் அன்று “சிங்களவனின் தோலை உரித்து செருப்பு தைத்து போடவேண்டும் என்றும் இந்தியா தமிழீழம் பெற்றுத்தரும் என்றும் கூறி பல இளைஞர்களை உசுப்பேத்தி பாழாக்கிவிட்டு இன்று ஒன்றும் அறியாத அப்பாவி போல் பேசுகிறார். இங்கு என் வருத்தம் என்னவென்றால் இன்றைய இந்தப் பேச்சை இந்த அம்மையார் அன்று பேசியிருந்தால் தமிழ்மக்களின் விலைமதிக்கமுடியாத எத்தனையோ இழப்புகளை தவிர்த்திருக்கலாம் அல்லவா? எனவேதான் நண்பர்களே இங்கு தமிழீழம் குறித்தும் இலங்கை தமிழர்களின் எதிர்காலம் குறித்தும் நான் சில வினாக்களை முன்வைப்பது மீண்டும் தமிழ்மக்களுக்கு ஒரு அவல வாழ்வையும் பாரிய அழிவையும் கொடுக்கக்கூடாது என்பதற்காகவே. மாறாக நான் இவ்வாறு கேட்பது யாருடைய மனதை புண்படுத்துமாயின் அவர்கள் என்னை மன்னிப்பார்களாக!

    தமிழ்மக்களின் நலனுக்காக உண்மையில் உழைப்பவர்களுக்கு என் வினாக்கள் எந்தப்பிரச்சனையையும் கொடுக்காது. மாறாக இந்தியாவை எதிரி என கூற விருப்பமில்லாதவர்களே எதிரி யார் என்ற வினாவுக்கு பதில் எழுத தயங்குவார்கள். மேலும் சிங்கள உழைக்கும் மக்களை நண்பர் என வரையறுக்க விரும்பாதவர்களே தமிழ்மக்களின் நண்பர்கள் யார் என்ற வினாவுக்கு விடையளிக்க தயங்குவார்கள். அதுபோல் பாராளுமன்ற பாதை மூலம் பதவி சுகம் காண விரும்புவர்களே பொராட்டப்பாதை எது என்பது பற்றி கூற தயங்குவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அமைப்புக்குள் கட்டுப்பட்டு மக்களுக்காக தியாகம் செய்ய தயங்குபவர்களே கட்சி பற்றி கீழ்தரமாக விமர்சிப்பார்கள். எனவே எனது வினாக்களுக்கு பதில் அளிப்பதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் வர்க்ககுனாம்சம் வெளிபடுவதை யாவரும் அவதானிக்கமுடியும்.

    Reply
  • palli
    palli

    இப்படி பல பட்டங்கள் எமக்கு இலவசமாக கிடைத்தது, ஆனாலும் குமாரின் பட்டமும் எங்களுக்கு ஒரு படிகல்லே; ஆனாலும் இப்படி 30 வருடம் தூங்கி சில தினங்களுக்கு முன்புதான் விழிதெழுந்து வீனா தொடுக்கிறார்; உங்கள் கருதெதிலும் உடனடியாக அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா என எதுவும் இல்லை, என்னும் ஒரு 30 வருடத்துக்கு ஒரு நீண்டகால தேர் இழுப்புக்கு புறப்படுவது மட்டும் தெரிகிறது; அமைப்பில் இருந்து பலர் உதாரனத்துக்கு மாயா தங்களது இளமைகளை தொலைத்து கல்வியை தொலைத்து எத்தனையோ இடறுபாடுகளுக்கு மத்தியில் அமைப்பின் (சகல) சுயரூபம் கண்டு அதைவிட்டு ஒதுங்கி வாழ நினைத்தால் தியாகம் செய்ய குமார் புதிதாய் அழைக்கிறார், போகாவிட்டால் ஏதாவது பட்டங்கள் தந்து விடுவாராம்,

    Reply
  • மாயா
    மாயா

    என்ன சொன்னாலும் தமிழ் அரசியல் வாதிகளின் பல்லுக் குத்த நான் ஈக்கில் ஆக மாட்டேன். புரிந்தால் சரி. என்ன பட்டம் வந்தாலும் பரவாயில்லை. இதுவரை கிடைத்த பட்டங்களை விடவா பல்லி?

    Reply
  • palli
    palli

    // தமிழ் அரசியல் வாதிகளின் பல்லுக் குத்த நான் ஈக்கில் ஆக மாட்டேன். புரிந்தால் சரி//
    மாயா நான் சொன்ன உதாரனத்துக்குதான் இந்த விளக்கமாயின் மன்னிக்கவும்;
    உன்மையில் கழகத்தில் பாடசாலை போல் அரசியல், கமினிஸம், அயல்னாட்டு அரசியல் போராட்டங்கள், போராட்ட வெற்றி தோல்விக்கான காரணம், இப்படி பலதை பாடசாலை போல் பல ஆசிரியர்களால் மாதகணக்காக வகுப்பு எடுப்பார்களாம் (நண்பர் சொன்னதுதான் பொய்யாயின் பல்லி பொறுப்பல்ல)அதனால் தாங்களும் கழகம் ஆகையால் இவையாவும் தாங்களும் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்; இதில் குமார் எழுதுவதை போல் எதுவும் தெரியாத பல்லியை போன்றவர்கள் மட்டும் போராட்டங்களையோ அல்லது அமைப்பையோ வெறுக்க இல்லை; பல அனுபவசாலிகளும் அனுபவத்திம் அடிபடையில் மக்களின் தேவைபற்றிதான் சிந்திக்கிறார்கள், அப்படி பலர் உள்ளனர்; இருப்பினும் தேசத்தில் துணிவாக நான் கழகம் என தாங்கள் கூறியதால் தங்களை குமாருக்கு சுட்டி காட்டினேன்; மற்றது அமைப்பின் திருவிளையாடலுக்காக கீழே சில தகவல்; தொடரும் பல்லி,

    Reply
  • santhanam
    santhanam

    கழகத்தில் மக்களுடன் வேலைசெய்த 75 வீதமானவர்கள் தங்களது வீட்டில் தகப்பன் தாய்யிடம் சோறு சாப்பிட்டு கொண்டுதான் கழகத்த்திற்காக உழைத்து நல்ல சிந்தனைகளை விதைத்தவர்கள் ஒரு சில தனிமனிதர்களின் தவறுகளால் ஏற்பட்ட உட்கட்சி போரட்டம் அதன் சிதைவுக்கு வழிவகுத்தது நிதி வசதியின்மையும் முலகாரணம்.ஆனால் இன்றும் அதன் கொள்கைசரி என்று மாற்றுகருத்தாளர் வாதாடுகிறார்கள் அதனால் தான் கழகம் இன்றும் நிலைக்க காரணம்.

    Reply