ஜெனீவா விலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தயான் ஜயதிலகவை நாட்டுக்குத் திருப்பி அழைத்தது யார் என்பதைத் தன்னால் கூற முடியாதென பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா புதன்கிழமை சபையில் கூறியதுடன், இது தொடர்பாக பதிலளிக்க மறுத்துவிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட எம்.பி.யான லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கே பிரதி அமைச்சர் பைலா இவ்வாறு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு அளப்பரிய சேவை புரிந்த தயான் ஜயதிலகவை இலங்கைக்கு திருப்பி அழைத்தது ஏனென்றும் அவரை இவ்வாறு அழைத்தது யார் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர் பைலா, “அதற்கு நான் பதிலளிக்க மாட்டேன்’ என்று கூறிவிட்டார்.
அத்துடன், தயான் ஜயதிலக இஸ்ரேல் அழுத்தத்தினாலா அல்லது வேறு ஏதேனும் அழுத்தத்தினாலா நாட்டுக்குத் திருப்பி அழைக்கப்பட்டாரென மற்றொரு ஐ.தே.க. எம்.பி. எழுப்பிய கேள்விக்கும் பிரதியமைச்சர் பதிலளிக்காமல் மௌனமாக இருந்துவிட்டார். இதேநேரம், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதால் இலங்கைக்கான அனைத்து உதவிகளும் நெதர்லாந்தினால் நிறுத்தப்படுவதாக நெதர்லாந்து அமைச்சர் ஒருவர் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் என்றும் இதன் பிரகாரம் நெதர்லாந்து உதவிகள் எதுவும் நிறுத்தப்பட்டிருக்கிறதா என லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஹுசைன் பைலா;
அவ்வாறு எதுவுமில்லையென மறுத்ததுடன் நெதர்லாந்து அரசின் 2009 ஆம் ஆண்டின் புதிய கொள்கைக்கு அமைய எதிர்காலத்தில் நிதி வழங்க வேண்டிய திட்டங்கள் குறித்து தீர்மானிக்கும் உரிமை கொழும்பிலுள்ள தூதுவராலயம் மற்றும் நெதர்லாந்து அரசுக்கு உள்ளதென அவர் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கை தொடர்பாக மனிதாபிமான உதவிகளும் மனித உரிமை விடயங்கள் தொடர்பான ஒத்துழைப்புகளும் தொடர்ந்தும் இருந்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
abeywickrema
Foreign Minister Rohitha Bogollagama has strongly condemned the coordinated bomb attacks in Baghdad on 19th August 2009, which killed more than a hundred and caused injuries to several hundred innocent civilians