மகஸின் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகள் இன்றுமுதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. தாம் முன்வைத்த கோரிக்கைகள் இது வரை நிறைவேற்றப்படாமையை ஆட்சேபித்தே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை சிறைச்சாலை அரசியல் கைதிகள் ஆரம்பிக்கின்றனர் எனவும் கூறப்பட்டது.
தமிழ் அரசியல் கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டும் அதற்குரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என்று சிறைக்கைதிகள் தெரிவித்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போராட்டம் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை நீதி அமைச்சர் மிலிந்த மொரகொடவிடம் அரசியல் கைதிகள் கையளிக்கவுள்ளனர் எனவும் அறியப்படுகிறது.