மாலத்தீ வுகளுக்கு இந்தியா வழங்குகின்ற பாதுகாப்பு உதவிகள் இந்தியாவின் சொந்த நலன் கருதி செய்யப்படுபவை என்று வந்துள்ள ஊடக அறிக்கைகளை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ. கே. ஆண்டனி மறுத்துள்ளார்.
மாலத்தீவுகளுக்கு மூன்று நாள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள ஆண்டனி, இருநாடுகளும் பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும், மாலைதீவுகளுக்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் அண்டனிக்கும், மாலத்தீவுகளின் அதிபர் மொஹமது நஷீத் அவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின்போது பாதுகாப்புத்துறை ஒத்துழைப்புக்கள் குறித்து பல தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாலத்தீவுகளின் தேசிய பாதுகாப்புப் படைக்கு இந்தியா ஒரு ஹெலிக்கொப்டரை வழங்கவுள்ளது.இரு நாடுகளின் இராணுவமும் கடற்படையும் கூட்டு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன.