ஆப்கா னிஸ்தானில் கடந்த வியாழன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் முழுவதும் சுமார் ஏழாயிரத்துக்கும் அதிகமான அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்திய கண்காணிப்புக் குழுவான்று, வாக்குப் பெட்டிகளை நிரப்புதல், ஒருவர் பல வாக்குகளை அளித்தல், உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் பரவலாக இடம்பெற்றமைக்கு சான்றுகள் உள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
வாக்குப் பதிவு வீதத்துக்குப் புறம்பாக, ஆப்கன் மற்றும் மேற்கத்திய அதிகாரிகள் இந்த தேர்தலை வெற்றிகரமானது என அறிவித்துள்ளனர்.ஹெல்மான்ட் போன்ற மாகாணங்களில் பதிவான 5 வீதம் போன்ற குறைந்தளவான வாக்குப் பதிவுகளால் இந்த தேர்தலின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகியுள்ளதாக காபூலில் உள்ள பி.பி.சி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.