ஆப்கானிஸ் தான் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக வந்துள்ள புகார்கள் அதிபர் தேர்தலின் முடிவுகளை பாதிக்கலாம் என தேர்தல் புகார் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்த ஆணையத்தின் தலைவர் கிராண்ட் கிப்பன் கூறும்போது, தங்களுக்கு 225 புகார்கள் வந்துள்ளதாகவும், இவற்றில் 35 முக்கியமானவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை என முத்திரையிடப்பட்டிருப்பதாக கூறினார்.
அதிபர் தேர்தலின் முதற்கட்ட முடிவுகள் அடுத்த ஒரு சில நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.