புதுக் குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து படகு இயந்திரங்கள், அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
9.9 குதிரை வலுக்கொண்ட படகுகளுக்கு பொருத்தப்படும் வெளி இயந்திர எஞ்சின்கள், 2.5 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள்-4, 81 மி.மீ. மோட்டார் குண்டுகள்-05, 60 மி.மீ ரக மோட்டார் குண்டுகள்-20, ரி-56 ரக துப்பாக்கிகள் 50 மற்றும் பல வகையான குண்டுகள் மீட்டெடுத்துள்ளனர்.