ஆப்கா னிஸ்தான் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை செப்டம்பர் மாதம் 03ம் திகதிக்குப் முன்னர் எதிர்பார்க்க முடியாதென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஹமீத் அல்கர்ஸாயியும் மற்றொரு வேட்பாளரான முன்னாள் வெளிநாட்டமைச்சர் அப்துல்லாவும் அறிவித்துள்ளதால் பெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன.
முதல் சுற்றில் தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக இவ்விருவரும் உரிமைகோரியுள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்ட தேர்தல் திணைக்களம் இரண்டாம் சுற்று எண்ணப்பட வேண்டியுள்ளதாக அறிவித்துள்ளது முதலாம் சுற்றில் இருவரும் சம அளவான வாக்குகளைப் பெற்றால் அல்லது வெற்றி தெளிவில்லாமல் இருந்தால் மாத்திரமே இரண்டாம் சுற்று எண்ணப்பட வேண்டும்.
தேர்தல் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் இவ்விரண்டில் ஒன்று நடந்திருக்க வேண்டும். இதை வைத்து வெற்றி தங்களுக்கேயென இரண்டு வேட்பாளர்களும் உரிமை கோருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்யோக பூர்வ முடிவுகள் வரும் வரை வெற்றிச் செய்திகளை பொது மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டாமென இரு வேட்பாளர்களையும் ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கமான நேச நாடுகள் கேட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் தேர்தல்கள் (ஜனாதிபதி மாகாண சபை) வன்முறைமிக்கதென்றும் மோசடியானதென்றும் தெரிவித்துள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வாக்குப் பெட்டிகளைக் கைமாறும் விடயத்திலுள்ள அதிகாரங்கள் மாற்றப்படவேண்டும். இதைச் செய்ய அரசியலமைப்பில் மாற்றங்கள் தேவையென்றும் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 2001ம் ஆண்டு தலிபான்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் இது. தலிபானிகளின் அச்சுறுத்தல் வன்முறைகளுக்கு மத்தியிலும் மக்கள் வாக்களித்துள்ளமை ஆப்கான் வரலாற்றின் முக்கிய மைல்கல் என அவதானிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவுகளால் பெரும் வன்முறைகள் எழவும் வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.