கிழக்கு மாகாணத்திலுள்ள, பதினோரு உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவு செய்யப்பட்ட 149 அரசாங்க அலுவலர்களுக்கும் பதவியாளர்களுக்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி தமிழ் மொழி, சிங்கள மொழிப் பயிற்சிகளை வழங்குகின்றது.
பிராந்திய ஆட்சிக்கு ஆதரவளிக்கும் இத்திட்டத்துக்குமூன்று வருடங்களுக்குத் தேவையான நிதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களை உள்ளடக்கிய இந்நிகழ்ச்சியில் நவீன மொழிப் பயிற்சி நுட்பங்கள், அரசாங்க மொழிகள் கொள்கை, மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு என்பவை பங்குபற்றுநர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது.
இலங்கை வாழ் மக்கள் அனைவரினதும் நன்மைக்காக, 1956 ஆம் ஆண்டு முதல், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி இலங்கையில் ஏறத்தாழ இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளமை குறிப்பிட்டத்தகக்தாகும்.