கிளிநொச்சி மற்றம் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள் குடியேற்றம் இடம்பெறமுன்னர் அவ்விரு மாவட்டங்களிலும் நீதிமன்றங்கள் அமைக்கடவுள்ளதாக நீதியமைச்சு அறிவித்துள்ளது. கிளிநொச்சியில் உயர் நீதி மன்றமொன்றும் ஒரு மாஜிஸ்திரேட் நீதி மன்றமும் அமைக்கப்படும் அதேவேளை முல்லைத்தீவில் ஒரு மாஜிஸ்திரேட் நீதி மன்றம் அமைக்கப்படும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.
இப்போது இப்பிரதேசத்தில் எழும் பிணக்குகள் வவுனியாவிலுள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்ளிக்கப்பட்டு வருகின்றன. இப்பிரதேசங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்துபோது பொது மக்கள் புலிகளின் நீதி மன்றங்களை நாடிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.