யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கத்திக்குத்துக்கு உள்ளானார்!

Sivarajah_N_Drயாழ்ப் பாண பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும் உலக சுகாதார நிறுவனத்தின் வடக்கு இணைப்பாளருமான என். சிவராஜா இன்று பல்கலைக்கழகத்தில் வைத்து கத்திக்குத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பல்கலைக்கழக மாணவர் ஒருவரே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சையில் தவறிய மாணவர் ஒருவரே இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. இதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்தநிலையில் தப்பியோடிய மாணவரை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தில் கத்திக்குத்துக்கு உள்ளான விரிவுரையாளர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

டொக்டர் சிவராஜா நூலகவியலாளர் என் செல்வராஜாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    யாழ் பல்கலைக்கழகத்ததில் புலிகள் விதைத்து விட்ட பாசிச விதைகள், புலிகள் அழிவின் பின்னும் தொடருவது வேடிக்கையும் வேதனையுமானது. குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் கடுமையான தண்டனைகள் மூலமே, இதனை ஒரு முடிவிற்கு கொண்டு வரலாம்.

    Reply
  • Thirumalaivasan
    Thirumalaivasan

    யாழ்ப்பாண மண்ணில் பாசிச விதைகளையும் வன்முறைக் கலாச்சாரத்தையும் ஏதோ புலிகள் தான் விதைததுவிட்டார்கள் என்று சோடனை செய்வதை யானையைப் பார்த்த குருடனையொத்த கருத்துப் பரிவர்த்தனையாகவே காணவேண்டியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட அலுவலகத்தில் வைத்து வைத்தியகலாநிதி ந.சிவராஜா கத்திக்குத்துக்கு இலக்கானதுகூட ஏதோ புலிகளின் சதி நாசவேலை என்றும் கதை கிளப்பப்படலாம்.

    பல்கலைக்கழகத் தகவல்களின்படி மருத்துவக்கல்வியின் இரண்டாம் ஆண்டு பரீட்சையை ஐந்தாவது ஆண்டுவரை எடுத்துத் தோல்விகண்ட ஒரு மருத்துவபீட மாணவன் விரக்தி வெளிப்பாட்டில் மருத்துவபீட விரிவுரையாளர்களையும் துறைத்தலைவரையும் தேடித்தேடிவந்து கடைசியில் சமூக மருத்துவத்துறை அலுவலகத்தில் இருந்து மாணவர்களுடன் வைவா பரீட்சையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கலாநிதி சிவராஜாவிடம் என்னை ஏன் பெயிலாக்கினாய் என்று கேட்டு அவரது அடிவயிற்றில் கத்தியைப் பாய்ச்சியிருக்கிறான். அவரது கூக்குரல்கேட்டு வெளியில் இருந்த ஒருவர் பாய்ந்துசென்று அந்த மறைகழண்ட மாணவனை பிடித்திழுத்திருக்கிறார்.

    இங்கு அரசியல் நோக்கம் ஏதுமில்லை. பாசிசப் புலிகளின் விதைப்புமில்லை.30 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் அனைவரும் (புலிகள் மாத்திரமல்ல) படிப்படியாக வளர்த்துவிட்ட ஆயுதக்கலாச்சாரத்தின் அறுவடயே இதுவென்று கூறினால் அதனை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆயுதத்தினால் எதையும் சாதிக்கலாம் என்ற கருத்துருவாக்கத்தின் விளைவு எமது சமூகத்தில் புலத்திலும் சரி> புலம்பெயர்ந்த பின்னரும் சரி தொடர்ந்துகொண்டே செல்கின்றது. வேதனைப்படவேண்டிய விடயம். பார்த்திபன் குறிப்பிடுவது போல வேடிக்கையானதல்ல.

    Reply
  • Thaksan
    Thaksan

    அந்த மாணவன் ஏதேனும் பழிவாங்கலுக்கு உட்பட்டிருந்தாலும் அதற்காக ஆசான் ஒருவரை கத்தியால் குத்தியது எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. இது சமூகத்தில் வேரோடியுள்ள வன்முறை கலாசாரத்தின் வெளிப்பாடு என்பதில் ஐயமுமில்லை. நியாயங்களை மீறிய வன்முறையை விரும்பியோ விரும்பாமலோ எமது சமூகம் ஆதரித்து வந்ததன் பக்கவிளைவுகள் மெல்ல மெல்ல வெளிவருகின்றது என்றே தோன்றுகிறது.

    Reply
  • karan
    karan

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் சமூக மருத்துவத்துறை விரிவுரையாளர் வைத்திய கலாநிதி ந.சிவராஜா நேற்று பிற்பகல் 24.8.2009 மனநோயினால் பாதிப்புக்குள்ளான மருத்துவபீட மாணவன் ஒருவனால் கத்திக்குத்துக்கு இலக்காகி யாழ்ப்பாண மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளராகப் பணியாற்றும் கலாநிதி சிவராஜா மருத்துவ பீடத்தில் தொண்டடிப்படையில் விரிவுரைகளை மேற்கொண்டு வருகிறார். மருத்துவபீடத்தினை தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் இயங்க வைப்பதற்கு டாக்டர் நந்திபோன்ற பேராசிரியர்களின் வழியையொற்றி அவர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. எம்.பீ.பீ.எஸ். இரண்டாவது ஆண்டுப் பரீட்சையில் சித்தியடையாமல் சுமார் 5 ஆண்டுகள் தோல்விகண்டிருந்த இந்த மருத்துவபீட மாணவன் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அறியமுடிகின்றது. சம்பவதினம், கலாநிதி சிவராஜா சமூக மருத்துவத்துறை அலுவலகத்தில் வேறு இரண்டு மருத்துவபீட மாணவர்களுடன் பரீட்சையில் ஈடுபட்டிருந்த வேளையில் திடீரெனக் கத்தியுடன் அவரது அலுவலகத்தினுள் புகுந்த அந்த மாணவன் அவரது அடிவயிற்றில் கத்தியைப்பாய்ச்சியுள்ளார். அதிர்ஷ்டவசமாக வெளியில் நின்ற கண்ணன் என்ற ஒரு உதவியாளர் கலாநிதி சிவராஜாவின் அவலக்குரல் கேட்டு உள்ளே பாய்ந்து அந்த மாணவனை வெளியேற்றியிருக்கிறார்.

    மருத்துவபீடத்தினர் இந்த கொலை முயற்சி பற்றி உடனடியாக எதுவும் பிரஸ்தாபிக்காத நிலையில் இன்று காலை 25.08.2009 மருத்துவபீடத்தில் அவசர கூட்டமொன்றினை ஏற்பாடு செய்து நிலைமையை துணைவேந்தர் என்.சண்முகலிங்கத்திடம் அறிக்கையிட்டுளளனர். இந்நிலையில் கிழக்கிலங்கையைச் சேர்ந்த இந்த மனநோயாளியான மாணவர் சுதந்திரமாக அலைந்து திரிவதாகவும், பல்கலைக்கழக நிர்வாகம் உடனடி நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாததால் பொலிஸ் தரப்பு எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்றும் அறியமுடிகின்றது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    திருமலைவாசன்

    தாங்கள் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயல்வது போல் கருத்தெழுத முயல்கின்றீர்கள். மேலே குறிப்பிட்ட மாணவன் ஒரு பேராசிரியரை தற்செயலாக கையில் கிடைத்த கத்தியினால் குத்தவில்லை. திட்டமிட்டு கத்தியைக் கொண்டு சென்றே கொலை முயற்சியிலீடுபட்டுள்ளான். தமிழ் மாணவ சமுதாயத்தை முழுக்க முழுக்க பாசிச விதைகளை விதைத்து சீரளித்தது புலிகள் தான். தமது சுயநலங்களுக்காக சில மாணவர்களையே துரோகிகளாக்கி தண்டனை என்ற பெயரில் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினார்கள் என்பதை உலகம் அறியும்.

    புலிகளின் அடாவடித்தனங்கள் பற்றிய புலிகளால் பாதிக்கப்பட்ட முன்னாள் பல்கலைக்கழக மாணவரொருவரின் நேரடி வாக்குமூலம், பல்கலைக்கழகத்திலேயே அன்று கொடுக்கப்பட்டது.

    http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3847:rayakaran11&catid=193:speech-srilanka&Itemid=111

    Reply
  • rohan
    rohan

    இந்தக் கத்திக் குத்துக்கும் புலிக்கும் என்ன சம்பந்தம்? இப்படியே புலி வசை பாடியே எல்லாச் சீர்கேடுகளுக்கும் சமாதானம் சொல்லி விடலாம்………..

    Reply
  • Thirumalaivasan
    Thirumalaivasan

    தமிழ் மாணவ சமுதாயத்தை முழுக்க முழுக்க பாசிச விதைகளை விதைத்து சீரளித்தது புலிகள் தான். தமது சுயநலங்களுக்காக சில மாணவர்களையே துரோகிகளாக்கி தண்டனை என்ற பெயரில் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினார்கள் என்பதை உலகம் அறியும். (பார்த்திபன்)

    அப்படியாயின் பல்கலைக்கழக மாணவர்களை வேறு இயக்கத்தினர் கடத்திச்செல்லவில்லையா? கொலை செய்யவில்லையா? பல்வேறு ஜனநாயக நடவடிக்கைகளை முன்நிறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் அன்று மேற்கொண்ட பல நடவடிக்கைகளை ஒடுக்க மற்றைய இயக்கங்கள் முற்படவில்லையா? பார்த்திபன்- உங்களுக்கு பழைய வரலாறு என்பது புலிகள் புலிகள் புலிகள் தான் என்பது தான் போலும்.

    நான் முழுப்பூசனிக்காய் எதையும் மறைக்க முயலவில்லை. தேவையும் இல்லை. நான் சொன்ன கருத்து- புலிகள் மாத்திரம்தான் இன்றைய சமூக வன்முறைக்குக் காரணம் அல்ல. புலிகள் உட்பட தமிழ் மண்ணில் போராடப் புறப்பட்ட அனைத்து இயக்கங்களும்தான் இதற்கான பொறுப்பை ஏற்றாக வெண்டும். எல்லாவற்றையும் புலிகளின் தலையில் போட்டுவிட்டு மற்றைய இயக்கங்களை ஜனநாயகக் காவலர்களாகவும்> காந்தீயவாதிகளாகவும் அஹிம்சாவாதிகளாகவும் காட்ட முற்படவெண்டாம் என்பதே எனது பணிவான வேண்டுகோள்.

    இன்று யாழ்ப்பாணத்தில் நீங்கள் குறிப்பிடும் பாசிசப்புலிகளின் ஆட்சி இல்லை. இருப்பினும் அந்த மாணவன் சுதந்திரமாக இன்றுவரை நடமாடித் திரிகின்றான். அவனைக் கைதுசெய்து மனநோயாளர் விடுதிக்க அனுப்பக்கூட முயற்சிகள் எடுக்கப்பட்வில்லை என்று யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Reply
  • Uma
    Uma

    1. சிவராஜா தாக்கப்பட்ட சம்பவத்துக்கு மனம் வருந்துகிறேன். அவருடைய உடல்நிலை பற்றி செல்வராஜா தான் அறிந்ததை பதிவிடுதல் நல்லது. புத்திஜீவிகளை போராட்டம் தொடங்கியதில் இருந்து இழந்து கொண்டிருக்கும் எமது சமுதாயம் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்வது மிகவும் கவலைக்குரியது.

    2. மனநோயினால் பாதிக்கப்பட்ட மாணவன் என உடனடியாக அடையாளம் காணப்பட்டவர் எவ்வாறு பல்கலைக்கழக மாணவராக தொடர்ச்சியாக இருந்துள்ளார்?? புரியவில்லை.

    3. கரனின் பதிவில் பல்கலைக்கழக நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்காததால் பொலிஸ் தரப்பு எவ்வித நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை என்கிறது. பல்கலைக்கழகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?? அந்த மாணவன் தற்போது எங்கே?? செல்வராஜாவோ அல்லது செய்தியாளரோ அல்லது மேற்கொண்டு என்ன நடந்தது என்ற விபரம் அறிந்தவர்கள் இதுபற்றி மற்றவர்களுக்கும் அறியத்தாருங்கள்.

    4. திருமலைவாசன் பதிவில் புலி அழிந்துவிட்டது என்றால் இனிவரும் செயல்களுக்கு யார் பொறுப்பு என்ற பாணியில் கேட்பது தப்பானது. போராட்டத்தின் விளைவினை தமிழ்சமூகம் இன்னும் பலதலைமுறைக்கு எதிர்கொள்ளப் போகிறது. உடல்ரீதீயாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட சமுதாயத்தின் பரம்பரையலகில் (DNA) நிச்சயமாக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அடுத்தடுத்த பரம்பரைகளில் பிறக்கப்போகும் குழந்தைகளில் இம்மாற்றத்தை காண்பீர்கள். இரசாயனப் பொருட்களின் தாக்கமும் பரம்பரை அலகில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதை எதிர்கொள்ளப்போகும் பெற்றோர் நிலைப்பாட்டையும் யோசியுங்கள். புலிகளின் அழிவின்பின் வெளிநாட்டில் உள்ள புலி ஆதரவாளர்கள் மனஅழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதால் அவர்களுக்கு உளவியல் பயிற்சி கொடுக்கப்படுகின்றது. இதேபோல தாயகத்தில் உள்ள மக்களின் மனநிலையைப்பற்றி யார் சிந்திக்கிறார்கள்.

    5. திருமலைவாசன், கொலைக் கலாச்சாரம் என்பது புலிகளால் மட்டும் மேற்கொள்ளப்பட்டது அல்ல என்பது அனைவர்க்கும் தெரியும். யாரும் மறுத்ததுமில்லை. ஆனால் 30 வருடங்களாக ஸ்தாபன மயப்படுத்தி கொலையைச் செய்தபெருமை புலிகளையே சேரும். இது நிதர்சனமான உண்மை. உயிர் என்பது மீளப்பெறமுடியாதது. அதை யார் பறித்தது என்று நிறுத்துப் பார்த்து அதன்பின் தீர்ப்புச் சொல்லும் மனநிலையில் நிற்கும் எமது தமிழினத்தில் ஒருவனாகப் பிறந்தமைக்காக நான் வெட்கப்படுகிறேன்.

    6. லண்டனில் ஆரம்பவகுப்புகளில் ஆசிரியராக இருப்பவர் (தான் குழந்தையாக இருந்தபோது இடம்பெயர்ந்த தமிழர்) என்னிடம் உரையாடிக் கொண்டிருக்கையில் சொன்னார். எம்மவர்களின் சில பிள்ளைகள் வகுப்பில் விளையாடுகையில் கத்தி, வாள் போன்றவற்றையே உடன் தெரிவு செய்வதாகவும் அதனை சொக்ஸ்சினுள்ளும், இடுப்பிலும் செருகி மறைத்து விளையாடுவதாகவும் கூறினார். அவருக்கு காரணம் புரியவில்லை. ஏன் என என்னிடம் வினவியபோது இது அவர்கள் பார்க்கும் படங்களின் பாதிப்பாக இருக்கலாம் என்றேன். வெளிநாட்டில் வாழும் தமிழ்ப் பெற்றோர் வீட்டினுள்ளே பேணும் விடயங்கள் ககைள் செயல்கள் அப்பிள்ளைகளைத் தாக்கும் என்பது என்கருத்து.

    7. இதே சமயத்தில் லண்டனில் ஆசிரியர்கள் அதுவும் செக்கண்டரி, உயர்கல்வி பாடசாலை ஆசிரியர்களுக்கு மாணவர்களிடம் பயம். அவர்களை கண்டிக்கும் பட்சத்தில் ஆசிரியர்களின் கார்கள் அடித்துடைக்கப்படல், வீட்டைத்தாக்குதல், வீட்டிற்குச் செனறு தாக்கப்படல் மற்றும் ஆசிரியர் கத்திக்குத்து, கொலை, துவக்குச்சூடு எல்லாமே நடக்கிறது. தாம் மாணவனை கண்டிக்கும் பட்சத்தில் தான் தாக்கபடுவேன் என்பதால் ஆசிரியர்கள் மௌனிக்க அடிபிடிக் கலாச்சாரம் வேகமாக வளர்ந்து இன்று சில பாடசாலைகளில் விமான நிலையங்களில் பாவிப்பது போன்ற சோதனைகள்- மெற்ரல் டிற்டேக்ரர்- பாவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இச்சம்பங்களில் எல்லா இன மாணவர்களும்தான் ஈடுபடுகிறார்கள். தமிழ் மாணவர்களின் போக்குக்கு அங்கு நடந்த போராட்டம் ஒரு காரணம்தான் அதேநேரம் வெளிநாட்டில் நிகழும் இதர இனங்களுள் வளரும் ஆயுத கலாச்சாரத்திற்கு என்ன பதில்?? குறுகிய தீர்வை நோக்கித்தான் உலகமே பயனிக்கின்றதா???

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //அப்படியாயின் பல்கலைக்கழக மாணவர்களை வேறு இயக்கத்தினர் கடத்திச்செல்லவில்லையா? கொலை செய்யவில்லையா? பல்வேறு ஜனநாயக நடவடிக்கைகளை முன்நிறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் அன்று மேற்கொண்ட பல நடவடிக்கைகளை ஒடுக்க மற்றைய இயக்கங்கள் முற்படவில்லையா? – திருமலைவாசன் //

    ஏற்கனவே உமா அவர்கள் தங்களுக்குப் போதிய விளக்கம் தந்திருந்தாலும், எனது விளக்கத்தையும் நான் தருகின்றேன். தாங்கள் சொல்லிய ஏனைய இயக்கங்களினால் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பாசிசப் பாதைக்கு மாற்றப்பட்டதையோ அல்லது பழி வாங்கப்பட்டதையோ பட்டியிலிட்டுவிட்டு, அவர்கள் புலிகளால் இதே பாதிப்பிற்குள்ளானதைப் பட்டியலிட்டு ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போது தெரியும் எவரால் இந்த மாணவ சமுதாயம் அதிகமாகப் பாதிக்கப்பட்டதென்ற உண்மை. ஏனைய இயக்கங்களை இயங்க முடியாதவாறு தடை விதித்து, மீறியோரை சுட்டுக் கொன்றுவிட்டு தாம் தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளென்று தமக்குத் தாமே பட்டம் சூட்டி வலம் வந்தவர்கள் புலிகள். இதன் பின் நடந்த அனைத்து அவலங்களுக்கும் எப்படி மற்றைய இயக்கங்களில் பழி போட முடியும்??

    புலிகள் தாயகத்தில் மாணவர்களைச் சீரழித்ததோடு நிறுத்திக் கொள்ளவில்லை, அப்பணியை புலம்பெயர் மண்ணிலும் செய்தார்கள். சென்ற வருடம் கூட சுவிஸில் தமிழ்ப் பாடசாலை விழாக்களில் ஆயுதக் கலாச்சார நாடகங்களை புகுத்தி மாணவர்கள் நெஞ்சில் விசவிதைகளை புலிகள் விதைப்பதாக குற்றச்சாட்டுக்கள் குவிந்தன. குற்றச்சாட்டுகளை வைத்தவர்கள் சுவிஸ் பிரஜைகளும் சுவிஸ் ஊடகவியலாளர்களும் என்பது தங்களுக்குத் தெரியுமா?? ஊடகவியலாளளர் ஒருவர் புலிகளின் பாடசாலைப் பொறுப்பாளரிடம் இது பற்றி வினாவ, அவர் படுகூலாகச் சொன்னார் “எமது தெய்வங்ளே ஆயுதங்களுடன் தான் காட்சியளிக்கின்றார்கள். அதனால் இவையெல்லாம் எமக்குச் சாதாரண விடயங்களேயென்று”. அதன் பின் சுவிஸின் எத்தனை ஊடகங்கள் இந்த விடயமாக இலங்கைத் தமிழர்களை மனநோயாளர்களாக வர்ணித்து எழுதின என்பதாவது தாங்கள் அறிந்தீர்களா??

    ஏனைய இயக்கங்களும் சுவிஸில் தமது பாடசாலை விழாக்களை நடத்துகின்றார்கள் தான். ஆனால் அவர்கள் இப்படி கீழ்த்தரமாக விசவிதைகளை விதைப்பவர்களாக விமர்சிக்கப்படவில்லையே??

    Reply