தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது சில வகை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை அரசாங்கம் கோரிய போதிலும், பிரித்தானியா கோரிக்கையை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக 30மி.மி துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகளைக் கூட வழங்க பிரித்தானியா மறுத்துள்ளது. ஆரம்பத்தில் 30மிமி துப்பாக்கிகளையும், அதற்கான ரவைகளையும் பிரித்தானியா வழங்கியதாகவும், பின்னர் ஆயுத விநியோகத்தை நிறுத்திக் கொண்டதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது