நடந்து முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்க உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்ஹ தெரிவித்தார்.
விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் 23 மாவட்டங்களில் 25 மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இப்ணியில் சுமார் 10.000 ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். கூடிய விரைவில் பரீட்சை பெறுபேற்றினை வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்