அரசபடைகளின் Extra Judicial Killings – சட்டத்திற்குப் பிறம்பான கொலைகள் : த ஜெயபாலன்

ExtraJudicialKillingsஓகஸ்ட் 25ல் இலங்கை அரசுக்கு எதிரான மற்றுமொரு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சர்வதேசதளத்தில் விவாதத்திற்கு வந்தள்ளது. ஓகஸ்ட் 25ல் பிரித்தானியாவைச் சேர்ந்த செனல் – 4 தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பிய வீடியோப் பதிவு ( http://link.brightcove.com/services/player/bcpid1529573111 ) இலங்கை அரசுக்கு புதிய அழுத்தங்களைக் கொடுத்தள்ளது. சிஙகளம் பேசுகின்ற சீருடையில் உள்ளவர்கள் பத்துப் பேர் வரை அவர்களின் கண்களைக் கட்டி நிர்வாணமாக்கி சுட்டுக் கொள்வது இந்த வீடியோகிளிப்பில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் ஜனவரியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வீடியோப் பதிவு Journalists for Democracy in Sri Lanka என்ற ஊடக அமைப்பினரால் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டு இருந்தது. அப்பதிவு நம்பகமானது என்றும் அதில் சீருடையில் வந்தவர்கள் இலங்கை அரச படையினர் என்றும் இலங்கையைச் சேர்ந்த சிங்கள மனித உரிமைவாதி ஒருவர் உறுதிப்படுத்தியும் உள்ளதாக சனல் 4 தெரிவித்த உள்ளது.

ஆனால் இலங்கைப் படைவீரர்கள் தொடர்பான இந்த வீடியோக் காட்சி உண்மைக்குப் புறம்பானதென்றும் போலியாகத் தயாரிக்கப்பட்டது என்றும் ஜனாதிபதிச் செயலகம் அறிவித்துள்ளது. ‘சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சியை இலங்கை அரசு வன்மையாகக் கண்டிக்கின்றது’ என்றும் ஜனாதிபதிச் செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”வன்னியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றபோது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல உண்மைக்குப் புறம்பான ஒளிநாடாக்களை தயார்செய்து ஒளிபரப்பிய பிரித்தானியாவை தலைமையாகக்கொண்ட செனல் – 4 என்னும் தொலைக்காட்சியாளர்கள் இலங்கையைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டபோதும் இலங்கை அரசுக்கு எதிரான பொய்யான பல தகவல்களையும், செய்திகளையும் அவர்கள் தொடர்ந்தும் வெளியிடுவதனை நிறுத்தவில்லை. இதன் ஒரு அங்கமாகவே உண்மைக்குப் புறம்பான வீடியோவொன்றை செனல்-4 வெளியிட்டுள்ளது.”  என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை அரச படைகள் சட்டத்திற்குப் பிறம்பான திட்டமிட்ட படுகொலைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது இது முதற்தடவையல்ல. திருகோணமலையில் இடம்பெற்ற மாணவர்களின் படுகொலை, மூதூரில் இடம்பெற்ற பிரான்ஸ் உதவி நிறுவனப் பணியாளர்களின் படுகொலை என்பவை அண்மைய சில வருடங்களுக்குள் இடம்பெற்ற படுகொலைகள். இப்படுகொலைகள் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டது என்பது பெரும்பாலும் மனித உரிமை நிறுவனங்களால் நம்பப்பட்ட சம்பவங்கள்.

1970ற்குப் பின் இரு தடவை சிங்கள இளைஞர்களின் (ஜேவிபி) கிளர்ச்சிகள், மூன்று தசாப்தங்கள் தொடர்ந்த தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் என்பன இடம்பெற்றது. இவற்றில் 200 000ற்கும் அதிகமான தமிழ் சிங்கள இளைஞர்கள் யுவதிகள் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவ்வளவு பெரும் உயிரிழப்பிற்கு இலங்கை அரச படைகளும் முக்கிய காரணமாக இருந்தனர் என்பது சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். ஆனால் 200 000 பேர்வரை கொல்லப்பட்டிருந்த போதும் அக்கொலைகளில் தொடர்புபட்டிருந்த அரச படையைச் சேர்ந்த எவரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை. மாறாக அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் உயர்நிலையைப் பெற்றனர்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த காலப்பகுதியில் 1991ல் சரணடைந்த 600க்கும் மேற்பட்ட சிங்கள பொலிஸாரை படுகொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தற்போது இலங்கை அரசில் அமைச்சராக உள்ளார். பத்திரிகையாளர் லசந்த விக்கிரமசிங்கவை படுகொலை செய்யப்படதை நியாயப்படுத்தும் இன்னுமொருவர் மேர்வின் சில்வா துப்பாக்கியுடன் ஊடகங்களுக்குள் புகுந்து ரவுடித்தனம் செய்பவர் இன்னமும் அமைச்சராக உள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஈபிடிபி சட்டத்தை தங்கள் கையில் எடுத்து படுகொலைகளில் ஈடுபட்டதை சர்வதேச உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டி உள்ளன. ரீஆர்ஓ படுகொலைகளுடன் தொர்புபட்டவர் கிழக்கின் முதலமைச்சராக உள்ளார். இவர்களையே சட்டத்தை உருவாக்க அந்த நாட்டின் அரசியல் தலைமை தேர்தெடுக்கிறது. ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்குபவர்களின் தகமை இப்படி இருக்கும் போது இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி அமையும்?

சர்வதேச நாடுகள் என்று வர்ணிக்கின்ற அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளும் இரட்டைத் தன்மையான சட்ட நடைமுறையையே கைக்கொள்கின்றன. பிரித்தானியாவில் ஜேன் சார்ள்ஸ் டி மென்ஸிஸ் யூலை 22 2005ல் தவறுதலாகச் சுட்டுக்கொல்லப்பட்ட போது அதற்கான நடவடிக்கைகளை எடுக்க பிரித்தானிய அரசு நிர்ப்பந்திக்கப்பட்டது. மெனஸிஸின் கொலையை மூடிமறைக்க முயற்சித்த மெற்றோபொலிடன் பொலிஸ் தலைமை அதிகாரி சேர் இயன் பிளேயர் பின்னாளில் தனது பதவியை ராஜினாமாச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால் ஆப்கானிலும் ஈராக்கிலும் பல ஆயிரம் கொலைகளுக்கும் பல நூறு சித்திரவதைகளுக்கும் பொறுப்பாக இருந்த எத்தனை இராணுவ வீரர்கள் அதிகாரிகள் தண்டனை பெற்றனர் என்பது கேள்விக்குறியே. அரச படைகள் அல்லாத தனியார் படைகள் கூட கொலைகளிலும் சித்திரவதைகளிலும் ஈடுபட்டு இருந்தனர்.

மூன்றாம் உலக நாட்டு மக்களின் உயிர்கள் உணர்வுகள் உரிமைகள் அந்த நாடுகளின் ஆளும் அரசுகளால் மட்டுமல்ல சர்வதேசம் என்று சொல்லப்படும் அரசுகளின் ஆளும் அரசுகளாலும் இரண்டாம் தரமாகவே பார்க்கப்படுகின்றது.

இவை எல்லாவற்றையும் கடந்து இந்த அரசுகளை அம்பலப்படுத்துகின்ற சாட்சியங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவருவது மக்களுக்கு யதார்தத்தை உணர்த்த வழிகோலும். இன்று முடியாவிட்டாலும் குற்றவாளிகள் என்றாவது ஒருநாள் தண்டனைக்கு உள்ளாக வேண்டும். அது காலம் கடந்தது என்றாலும் அது பலருக்கும் படிப்பினையாக அமையும். சிலி நாட்டின் முன்னாள் அதிபர் பீனசே தனது குற்றங்களுக்கான தண்டனையை கால்நூற்றாண்டுக்குப் பின்னர் பெற்றார். இலங்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கும் இது பொருந்தும் என யூலை 28 2009ல் கொன்வே ஹோலில் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தெற்காசியப் பொறுப்பாளார் பிரட் அடம்ஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேற்படி வீடியோப் பதிவின் நம்பகத் தன்மை பற்றிய கேள்விகள் எழுப்பப்படலாம். ஆனால் நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் மனித உரிமைகள் இரு தரப்பினராலும் மிக மோசமாக மீறப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் சர்வதேச நாடுகளிடம் உண்டு. அதற்கான சற்லைட் புகைப்பட ஆதாரப் பதிவுகள் இரகசியமாக்கப்பட்டு உள்ளது. அவற்றை வெளியிட்டு குற்றவாளிகளைத் தண்டனைக்கு உட்படுத்த வேண்டிய தேவையிலையென சர்வதேசம் எனக் கருதும் நாடுகள் நினைக்கின்றன என்பதே யதார்த்தம்.

பொய்களை உண்மையாக்குவதம் உண்மைகளைப் பொய்யாக்குவதும் அவர்களுடைய அரசியல் தேவைகளைப் பொறுத்தது. இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இலங்கை அரசுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றப்பட்டது அதனாலேயே.

ஆகவே அப்பாவி மக்களின் பக்கம் நின்று ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று உண்மைகளை அணுகுவதே பொருத்தமானதாக இருக்கும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

64 Comments

 • சாந்தன்
  சாந்தன்

  ‘…இலங்கை அரசு இராணுவ, அரசியல் ரீதியாக மாறி விட்டது. …’

  ஆம் நிச்சயமாக…மிக மிக மாறித்தான் விட்டது. வீடியோவைப் பாருங்கள்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  சாந்தன் தாங்கள் இணைத்த ஒளிப்பதிவில் வந்த காட்சிகள் சனல் 4ஆல் எடுக்கப்பட்டவையல்ல. இவற்றில் பல ஏற்கனவே GTV யில் ஒளிபரப்பானவை. அவையனைத்தும் ஏனையவர்களால் சனல் 4க்கு அனுப்பி அவர்களால் ஒளிபரப்பப்பட்டவை. புலிகள் பல காட்சிகளை எப்படி எடுத்தார்கள் என்பதை முன்பே ஆதாரத்தோடு வெளி வந்திருந்தன.உதாரணமாக குண்டு வீச்சின் போது சனங்கள் ஓடுவது, பின்பு பதுங்குழியில் பதுங்குவது உட்பட சக போராளிப் பெண்களின் உயிரற்ற உடலையே நிர்வாணமாக்கி இலங்கை இராணுவம் அப்படிச் செய்ததாக பரப்புரையை மேற்கொண்டது வரை. ஆனால் நிர்வாண உடல்களைச் சுற்றி நின்ற புலிகளின் சாதாரண களிசானும் பாட்டா சிலிப்பரும் அவர்கள் யார் என்று காட்டிக் கொடுத்து அவர்களை அம்பலப்படுத்தியதை தாங்கள் அறியவில்லைப் போலும். இலங்கை இராணுவம் ஏதோ உத்தமர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் தமது பரப்புரைகளுக்காக தமது சக பெண் போராளிகளையே நிர்வாணப்படுத்தியவர்களை எவரோடு ஒப்பிடுவது???

  புலிகளின் அடாவடித்தனங்கள் பற்றிய புலிகளால் பாதிக்கப்பட்ட முன்னாள் பல்கலைக்கழக மாணவரொருவரின் நேரடி வாக்குமூலம், பல்கலைக்கழகத்திலேயே அன்று கொடுக்கப்பட்டது.
  http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3847:rayakaran11&catid=193:speech-srilanka&Itemid=111

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  ‘….சாந்தன் தாங்கள் இணைத்த ஒளிப்பதிவில் வந்த காட்சிகள் சனல் 4ஆல் எடுக்கப்பட்டவையல்ல. இவற்றில் பல ஏற்கனவே GTV யில் ஒளிபரப்பானவை….’
  இதை எடுத்தது சனல்4 என யாரும் இங்கே சொல்லவில்லையே. இந்த வீடியோவில் வரும் செய்தி விமர்சகர்கூட அப்படி சொல்லவில்லை. இது யாரால் எடுக்கப்பட்டிருக்கலாம் என செய்தியாளர் சொல்வதனை அவதானியுங்கள். இவை ஏலவே GTV இல் வந்ததா? எப்போது என சொல்ல முடியுமா? சனல்4 செய்தியாளர் தமக்கு யார் இதை கொடுத்ததென்றும் தன்னுடன் யார் உட்கார்ந்து பார்த்ததென்றும் அவர் இந்த வீடியோவைப்பற்றி என்ன சொன்னர் என்பதையும் தெரிவிக்கிறார்.

  Reply
 • மாயா
  மாயா

  இது போன்ற கொலைகளை புலிகளும் செய்துள்ளார்கள். இருந்த போதிலும் இவற்றை நாம் அங்கீகரிக்கலாகாது. கைதான அல்லது சரணடைந்த கைதிகளை அல்லது போராளிகளை இப்படிக் கொலை செய்யும் அதிகாரம் இராணுவத்துக்கு இல்லை. கைதானவர்கள் சட்டத்திற்கு முன் கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதை விடுத்து இப்படி படுகொலை செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். இவை தடுக்கப்பட வேண்டும்

  Reply
 • மகுடி
  மகுடி

  கடந்த ஜனவரி மாதம் இந்த காட்சி கையடக்கத் தொலைபேசி கமரா மூலம் ஒளிப்பதிவு செய்ததாக குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், இலங்கை அரசாங்கப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக மட்டுமே யுத்தம் புரிந்ததாக பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

  விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மட்டுமே படையினர் முன்னெடுத்ததாக உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. அநேகமான ஊடகங்கள் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளையும், வீடியோக் காட்சிகளையும் அரசாங்கத்திற்கு எதிராக வெளியிட்டு வருவதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

  Reply
 • Devan
  Devan

  எந்தக் கொலைகளும் கண்டிக்கப்பட வேண்டியவையே. பேசமுடியாத புலிகளின் காலத்திலேயே நாம் கொலைகளை மௌனமாக கண்டித்திருக்கிறோம். ஆனால் புலிகளுக்கோ, புலி பினமிகளுக்கோ, புலி ஊடகங்களுகோ கொலைகளை கண்டிக்க எந்த அருகதையும் இல்லை.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  உங்களைப்போலவே போலவே நாமும் ‘மெளனமாக கண்டித்திருக்கிறோம்’ அதுதான் வெளியே கேட்கவில்லை !//தேவன்

  கொலைகளைக் கண்டிக்க ஒரு குறிப்பிட்டோருக்கு எந்த அருகதையும் இல்லை எனச் சொல்ல உங்களுக்கு முழு உரிமையுமுள்ளது. இது அமெரிக்கா ஜோஜ் புஷ் காலத்தில் ஈராக்கில் செய்த கொலைகளை ஈராகியர் கண்டித்த போது டிக் சேனியும் அவரின் ஊது குழல்களும் சொன்னதுக்கு ஒப்பானது. அதாவது சதாம் செய்த கொலைகளைக் கண்டிக்காத ஈராக்கியர், ஒசாமா 9/11 தாக்குதல்களை கண்டிக்காத ஆப்கானிஸ்தானியர்கள் அமெரிக்காவைக் கண்டிக்க அருகதையற்றவர்கள் என சொன்னார்கள்! .

  Reply
 • Constantine
  Constantine

  Regardless of the genuineness of this footage we must agree that this incident has happened in our land to a fellow human. My heart bleeds … We must make sure this culture stops here and people who have survived been well looked after and the perpetrators punished. Obviously these are 3 seperate tasks needs different expertise and commitment hence needs to he handled separately.

  Constantine

  Reply
 • பல்லி
  பல்லி

  தயவு செய்து நண்பர்களே இந்த விடயத்தில் புலியின் மீதுஉள்ள கோபத்தால் அல்லது அவர்களின் கண்மூடிதனத்தால் எம்மினம் அரச படையிடம் படும், பட்ட துன்பங்களை நியாயபடுத்த வேண்டாம், நாம் எழுதி இலங்கை அரசு கேக்கபோவதில்லை என்பது பல்லிக்கு தெரியும், அதே நிலை சில காலத்துக்கு முன்பு புலியின் விடயத்தில் இருந்ததை கவனத்தில் எடுக்கவும், உன்மையில் எம்மினம் அரசின் ராணுவத்திடம் கேவலபடுத்துவதை நாம் கண்டிப்பதோடு இருக்காமல் முடிந்த மட்டுக்கும் சர்வதேசத்துக்கு புரிய வைப்போம், இறப்பதும் இன்னல்படுவதும் எம்மினம், அதை பார்த்து இழிப்பது இல்லை என்பதும் எம்மினமே, பேனாவால் முடியாதது எதுவுமே இல்லை என்பார்கள்; ஆகவே அழிந்த புலியைவிட அழிக்கும் அரசை அம்பலபடுத்துவோம்; இது பல்லியின் தாழ்மையான வேண்டுகோள், தமிழர் மீது இத்தனை கொடுமைகளையும் செய்யும் அரசை சட்டத்தின் கூண்டில் ஏற்ற ஒரு மனதுடன் செயல்படுவோம்,

  நட்புடன் பல்லி;

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //இவை ஏலவே GTV இல் வந்ததா? எப்போது என சொல்ல முடியுமா? – சாந்தன்//

  முதலில் நீங்கள் ஒழுங்காக தமிழைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள். நான் நீங்கள் இணைத்த ஒளிப்பதிவில் பல GTV இல் வந்தது என்று தான் குறிப்பிட்டுள்ளேனே தவிர முழுவதும் வந்ததாக குறிப்பிடவில்லை. ஏற்கனவே சில மாதங்களின் முனபும் வவுனியாவில் ஒரு இராணுவத்தளபதியின் வீட்டிற்பகுச் சென்ற பாதிரியார் கண்ட காட்சிகள் என்று சில அறுக்கப்பட்ட உடல்களின் படங்களையும் போட்டு பரபரப்பான செய்தியாக்கினார்கள் சில புலிப்பினாமிகள். ஆனால் அவையனைத்தும் இந்தியாவில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்ட சில உடல்கள் என்பதை அந்த படங்கள் வந்த இந்திய இணையத்தளமொன்றின் இணைப்பையும் இணைத்து புலிப்பினாமிகளின் மோசடிகளை பின்பு சிலர் அம்பலப்படுத்தினார்கள்.

  தொடர்ந்து புலிகளும் புலிப்பினாமிகளும் தமது பரப்புரைகளுக்காக மோசடியாக செய்த பல அம்பலமானாதால், இந்த ஒளிப்பதிவையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்க வேண்டியுள்ளது. கொலைகளை யார் செய்தாலும் அது மோசமானது தான். குறிப்பிட்ட இந்தப் பாதகச் செயலை இலங்கை இராணுவம் தான் செய்தது என்று உறுதிப்படுத்த முடிந்தால், நிச்சயம் குற்றவாளிகளைக் கூண்டிலேற்ற உறுதியுடன் நடவடிக்கை எடுக்க உதவுவோம்.

  Reply
 • Kirupa
  Kirupa

  பல்லி சொல்லிய வரிகள் பாராட்டப்பட வேண்டியவை.
  என்று தணியும் இந்த தமிழர் புலி வேட்டை,
  அன்று வரை தமிழர் அழிவும் அழிப்பும் உலகில் யாருமே காணும் அல்லது குரல் தரும் வாய்ப்பு இல்லை.

  Reply
 • மாயா
  மாயா

  “புலி வருகுது புலி வருகுது என்று பொய் சொல்லி கடைசியில் புலி வந்த போது யாரும் நம்பவில்லை” என்பது போல புலிகள் பொய்யான கதைகளை சோடித்து படம் காட்டியதால் உண்மைகளும் பொய்யாகி விடுகின்றன. அதையே பார்த்தீபனும் சொல்கிறார். அது அவருக்கு மட்டுமல்ல , எமக்கும் சந்தேகத்தை உருவாக்கியது. உருவாக்குகிறது.

  இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது , வன்னி பாடசாலை மாணவி ஒருவர் , இந்திய இராணுவ படை வீரர் ஒருவரோடு காதல் வசப்பட்டிருந்தார் என குற்றம் சாட்டப்பட்டு , பாடசாலை மைதானத்தில் அனைத்து மாணவ – மாணவிகள் முன்னிலையில் தண்டைனையாக துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இது போன்று யாராவது நடந்து கொண்டால் இதுதான் தண்டனை என புலிகள் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனராம். அம் மாணவி அப் பாடசாலை ஆசிரியர் ஒருவரின் மகள். அந்த ஆசிரியர் மன்னித்து விடும்படி கோரிய போதும் அடுத்து இந்த தறுதலையை பெத்த உனக்கும் இதுதான் தண்டனை என எச்சரித்தார்களாம். இதை என்னிடம் சொன்னவர் கொல்லப்பட்ட மாணவியின் வகுப்பு தோழி ஒருவர். அவரையும் புலிகள் எச்சரித்தனராம். அதன் பின்னர் புலி ஆதரவாளர்களாக இருந்த போதும் இவரை , இதைச் சொன்ன பெண்ணின் பெற்றோர் கொழும்புக்கு கல்வி கற்க அனுப்பினராம். இதை நியாயப்படுத்தியே என்னிடம் சொன்னார். அவரிடம் ஒரு தனி மனித விருப்பு – வெறுப்பை பற்றி லெச்சர் எடுக்க வேண்டியிருந்தது. அந்த அளவு புலிகள் மக்களை மாற்றியுள்ளனர்.

  ஒரு தமிழரை , ஒரு தமிழருக்காக போராடும் இயக்கம் தண்டித்த விதம் அது. அந்த வகையில் சிறீலங்கா இராணுவத்தின் செயல்பாடில் மனிதத்தை நாம் பார்க்கவே முடியாது. ஒரு சிலர் நல்லவர்களாக இருந்தாலும் , பலர் மிருகங்களாகவே வளர்க்கப்பட்டு விட்டனர். மேலே உள்ள காட்சிகள் இராணுவம் கொலை செய்யும் காட்சிகளாகவே தெரிகிறது. பாலித கோகண ” ஜனவரியில் நாம் வன்னிக்குள் இல்லை” என்கிறார். உதய நாணயக்கார ” இது பொய்யானது” என்கிறார்.

  முள்ளி வாய்காலில் சரணடைந்த புலிகளை கொல்ல முடியாது என , ஒரு படைத் தரப்பு சொன்ன போது , நீங்கள் அவர்களை எம்மிடம் ஒப்படைத்து விட்டு செல்லலாம் என பின்னர் வந்த படைத் தரப்பு கட்டளை இட்டு , சரணடைந்தவர்களை கொலை செய்தாக இராணுவத்தில் பலர் சொல்கின்றனர். இதன் நம்பகத் தன்மை எந்தளவு என்பது தெரியவில்லை?

  என்னதான் சொன்னாலும் , இப்படியான தகவல்கள் எதிர் காலத்தில் இராணுவ படையினரிடமிருந்து கசியும் என நாம் எதிர்பார்க்கலாம். இராணுவம் செய்யும் பல விடயங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை அப்படித்தான் தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டன. அடுத்து தனிப்பட படை வீரர்கள் கைத் தொலைபேசிகளில் ஒளிப்பதிவும் செய்துள்ளார்கள். இவை அனைத்துக்கும் மேலாக சரத் பொண்சேகா , மகிந்தவோடு முரண்பட்டுள்ள நிலையில் , மகிந்தவுக்கும் , மகிந்த அரசுக்கும் ஆப்பு வைக்க இது போன்றவை வெளி வரலாம். காரணம் சரத் பொண்சேகாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த படையினரே வன்னி போரில் ஈடுபட்டனர். வன்னியில் இருந்தோர் , சரத்தோடுதான் நேரடி தொடர்புகளைப் பேணினர். இப்போது அவர்களில் முக்கியமானவர்கள் பதவி உயர்த்தப்பட்டு அல்லது தூதுவர்களாக இராணுவத்தை விட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். காரணம் இவர்களது தலைமைத்துவம் இராணுவத்தை அரசால் கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலையை உருவாக்கும் என மகிந்த தரப்பு கருதியது. எனவே இவர்களை இராணுவத்திலிருந்து விடுவிக்க வேண்டியிருந்தது. இவை பல விடயங்களை உலகத்துக்கு கசிய வைக்க வழி செய்யும்.

  அது காலம் தாழ்ந்தாலும் மனித உரிமை அமைப்புகள் வழி இலங்கை அரசை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இவை பயன்படுவதோடு, இலங்கை அரச படைகளின் காட்டு தர்பாரை அடக்க இவை பயன்படும். இன்று சிறீலங்கா போலீசாரே பாதாள உலகம் போல செயல்படுகிறது. சிங்கள இளைஞர்களும் , சரணடைந்த பாதாள உலகத்தினரும் கூட போலீசாரால் கொல்லப்படுகின்றனர். புலிகள் மேல் உள்ள கோபத்தில் எவரும் அப்பாவிகளது சாவுகளுக்கு நாம் அங்கீகாரம் அழிக்கக் கூடாது. இவற்றை எதிர்த்து , தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்.

  இதோ CNN செய்தியில்:
  http://edition.cnn.com/2009/WORLD/asiapcf/08/26/sri.lanka.killings/index.html#cnnSTCVideo

  http://edition.cnn.com/2009/WORLD/asiapcf/08/26/sri.lanka.killings/index.html?iref=topnews

  Reply
 • Shri
  Shri

  Please watch again, the 2nd Man is none other than PLOTE’s Senior Leader Faruk Annai!
  So this Massacre is not by SLA but by LTTE.

  Dear Readers, kindly recall that in Jan 09 when LTTE started to vacate their torture camps in Vanni they massacred a lot of Tamil youths who were in their custody.

  Reply
 • Devan
  Devan

  சாந்தன் அவர்களே
  நான் என்ன சொல்ல வருகிறேன் என்றல், புலிகள் கொலைகளிலும், பொய் பிரச்சரங்களிலும் அரசை விட ஒரு படி மேலானவர்கள். அதனால் புலிகளுடைய எந்தக் கருத்துகளும் ஒரு பக்கம் சார்ந்ததாகவே இருக்குமே ஒழிய தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் அளிக்கப் போவதுஇல்லை.

  Reply
 • rohan
  rohan

  பார்த்திபன் சம்பந்தமில்லாத விடயங்களை முடிச்சுப் போடப் பார்க்கிறார். போராளிப் பெண்களை ஆடை களைந்து மகிழும் இராணுவ வீரர்களில் எங்கு சிலிப்பர் போட்ட புலிகள் நிற்கிறார்கள்? இப்படி ஒரு பாட்டா சிலிப்பர் கதையை நானும் இன்னொரு இடத்தில் படித்தேன். ஆனால்,நிர்வாணப் படுத்திய படங்களுக்கும் சிலிப்பர் படங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது எனது நினைவு. பார்த்திபன் குழப்புகிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

  Reply
 • jalpani
  jalpani

  இவை பற்றி சர்வதேசங்களிடம் முறையிடுவதை விட உள்நாட்டு மக்களிடம் முறையிடுவதே பயனளிக்கும். வன்னியில் தான் சர்வதேசங்களின் சுயரூபங்களைப் பார்த்தோமே!

  Reply
 • பல்லி
  பல்லி

  பின்னோட்டங்கள் கற்பழிப்பை விட கேவலமாக வருகிறது, தயவுசெய்து அழிவது எம்மினம் என்பதை யாவரும் கருத்தில் கொள்ளவும், புலியின் புறநானூறு நாம் அனைவரும் அறிந்ததுதான், அதுக்காக எம்மினம் அழிவதையும் சீரழிவதையும் வேடிக்கை பார்க்க வேண்டுமா? அரசு செய்யும் கொடூரத்துக்கு உன்மையான காரணமே புலியின் பேர் உள்ள அன்பால் யார் என்ன சொன்னாலும் சர்வதேசம் தமிழர் விடயத்தில் அரசு சொல்வதைதான் என்னும் நம்பிக்கையில் ,தான், அதுக்கு உரம் போடுவது போல் எம் அறிக்கைகள் தேவைதானா?

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //பார்த்திபன் சம்பந்தமில்லாத விடயங்களை முடிச்சுப் போடப் பார்க்கிறார்.- rohan //

  எவரையும் குளப்ப வேண்டிய அவசியம் எனக்கில்லை. தமிழ் அரங்கம் இணையத்தளத்தில் அப்போது ஆதாரத்தோடு அடையாளமிடப்பட்டு புலிகளின் குட்டுகளை அம்பலப்படுத்தினார்கள். நிர்வாணப்படுத்தப்பட்ட போராளிப் பெண்களை ஒரேயிடத்தில் போட்டு சுற்றி புலிகள் நின்ற படங்கள் பல அப்போது வந்திருந்தன. அதில் பலவற்றில் சுற்றி நின்றவர்களின் சாதாரண காச்சட்டையும் பாட்டாச் சிலிப்பரும் தெளிவாகத் தெரிந்தன படத்தில். அதுபோல் இவை வேறு இணையத்தளங்களிலும் வந்திருந்தன. ஆக மொத்தத்தில் தாங்களும் இச்செய்தியைப் படித்துள்ளீர்கள். ஆனால் அதை நான் சொல்லும் போது மட்டும் தான் குளப்புகின்றேன். நல்ல நகைச்சுவை………..

  Reply
 • Appu Hammy
  Appu Hammy

  தமிழர் உரிமைகளுக்கான போராட்டம், காலப்போக்கில் தனித்தமிழீழப் போராட்டமாக மாறியது ஏன் என்பது பற்றி தமிழர்கள் உலகிற்குத் திரும்பத் திரும்ப விளங்கப்படுத்த வேண்டிய தேவை இனி இல்லை. ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் ஆயுத வடிவிற்கு மாறவேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது என்பதற்கு இந்தச் சிறிய வீடியோக் காட்சியே போதும் என்று நினைக்கிறேன்!

  இது ஏதோ தப்பித்தவறி ஒரு சிங்களச்சிப்பாய் தனது தொலைபேசிக் கமெறாவில் ஒளிப்பதிவு செய்ததால் கிடைத்த காட்சிப்பதிவு! பதிவு செய்யப்படாத பல்லாயிரம் தமிழர் படுகொலைகளுக்கும் ஒவ்வொருவரின் மனமும் ஆழ்ந்த சிந்தனையும் தான் சாட்சிகள்..!
  இலங்கை அரசிற்கு ஆயுதங்களை வழங்கி தமிழ் மக்கள் மீதான் படுகொலைகளுக்கு மறைமுகக் காரணிகளாக இருக்கும் உலக நாடுகள் இவற்றிற்கு இனியாவது பதில் சொல்லுமா???

  விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட சிங்களச் சிப்பாய்கள் எவ்வாறு மனிதாபமான முறையில் கவனிக்கப்பட்டு அவரவர் இடங்களுக்குப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்பதை இப்போ நினைவு கூர வேண்டியிருக்கிறது!

  Reply
 • abeya .Pannda
  abeya .Pannda

  video-clip was taken during the period of the war, when international and independent local media were prevented by the Sri Lankan government from covering the conflict zone. This videoclip shows the reality of the behaviour of the government forces during the war which the government called a ‘humanitarian operation’ to rescue the Tamils. All reports, like that of the BBC above, indicate that there is no reason to believe that there is a change in the behaviour of the armed forces.

  புலிகள் இதே மாதிரி சித்திரவதைகளையோ, கொலைகளையோ செய்திருப்பதால் மகிந்தவின் சிங்கள இராணுவம் செய்த போர்க் குற்றங்களையும் கொலைகளையும் எதிர்த்துக் கேட்கக் கூடாதென்ற மனப்பாங்கு முட்டாள்தனமானது மட்டுமல்ல மனிதத் தன்மையற்றதும்தான். மேலும், ஜனநாயகத்தின் பெயரால் ஆட்சியிலிருக்கும் மகிந்த அரசுக்கான கடமைகளை முழுமையாக மீறியிருப்பதற்கான இன்னொரு அத்தாட்சிதான் இந்த விடியோ. இதையும் பொய்யென்று சொல்லிவிட்டு அடுத்த வேலைக்கு போயாச்சு இலங்கை அரசாங்கம்! மனிதம் வெட்கப்படும் இன்னொரு செயல்! Shame on Humanity!

  Reply
 • menike PK
  menike PK

  WHAT A JOKE!!!
  Sri Lanka’s Mass Media and Information Minister Anura Priyadarshana Yapa denies an allegation against the Sri Lankan Army which had been carried by a TV station in the United Kingdom.

  Sri Lanka’s Cabinet Spokesman Minister Priyadarshana Yapa said that the Sri Lankan Army is a much disciplined Army in the world and the allegation is baseless.

  Reply
 • thurai
  thurai

  எரியும் நெருப்பில் குளிர் காய்பவர்களே புலிகள். அரசு விடும் தவறுகளை காட்டி புலிகள் மீண்டும் தம்மை வளர்க்கப் பார்க்கின்றார்கள். இதுவே தமிழரிடம் மீண்டும் மீண்டும் பின்னடைவுகளைக் கொண்டு வருகின்றது.

  துரை

  Reply
 • நண்பன்
  நண்பன்

  எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

  பிரித்தானிய டெலிவிசன் காட்டிய கொடிய கொலை நிகழ்ச்சிப் படத்தின் உண்மை என்ன?

  அருந்தா- 27.08.09

  25ம் திகதி மாலை பிரித்தானியாவின் சனல் 4 தயாரிப்பாளர்கள் இலங்கைத் தமிழர்களை இலங்கை இராணுவம் எப்படி ஈவிரக்கமின்றிக்கொலை செய்கிறார்கள் எனற செய்தியைக் காட்டியது. தமிழர்கள் மட்டுமன்றி அந்தச் செய்தியைப்படித்த அத்தனைபேரும் கண்ணீர் விட்டார்கள். அந்தப் படத்தை இலங்கையைச் சேர்ந்த ஊடகவாதிகள்(சிங்களவர்கள்) தங்களுக்கு அனுப்பியதாக அந்த நிகழ்ச்சிக்குப் பொறுப்பானவர் கூறினார். அத்துடன் இந்தப்படத்தை ஒரு சிங்கள புத்தி ஜீவியிடம் காட்டி, இதுபற்றிய உண்மைத்தன்மையைக் கேட்டபோது அந்தப் படத்தில் பேசப்படும் சிங்களம் சிங்களவர் பேசும் சுத்தமான சிங்களம் என்றும் அதனால் அந்தப் படத்தில் துப்பாக்கியுடன் நின்று கொலை செய்பவர்கள் இலங்கைப் படையினர் என்று அவர் கூறியதாகவும் சொல்லப் பட்டது.

  அந்தச் செய்திப்படத்தைப் பார்த்த பலர் திடுக்கிட்டார்கள் இந்தக் கொடுமையைச் செய்த இலங்கை அரசுக்கு உடனடியாப் பாடம் படிப்பிக்கத் துடித்தார்கள். அந்தப் படம் உலகின் பல பாகங்களிலும காட்டப்பட்டது. மனித நேயவாதிகள் இலங்கை அரசுக்குத் தங்கள் ஆத்திரத்தைக்காட்டத் துடித்தார்கள்.

  உடனடியாகப் பல மனித உரிமை ஸ்தாபனங்களுடன் தொடர்பு கொண்டு இலங்கையை மனித உரிமை மீறல் சட்டத்துக்குள் நீதி மன்றத்தில் நிறுத்தவேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். பிரித்தானியச் செய்திச் சனல் 4ல் காட்டப்பட்ட விடயம் உண்மையில்லை என்ற இலங்கை தூதுவரகம் உடனடியாக மறுப்புத் தெரிவித்தது.

  போர்நடந்து இவ்வளவு காலத்திற்பின் இதை ஏன் புலிகள் காட்டுகிறார்கள் என்று சிலர் சிந்தித்தார்கள். அரசாங்கத்துக்கு எதிராக எத்தனையோதரம் பல மோசடிப் படங்களைப் பல தடவைகளில் காட்டிய புலிகள், போர் முடிந்து மூன்று மாதத்தின்பின் இதை வெளியிடுவதால் என்ன பிரயோசனம் என்று பலர் கேள்விகளைத் தங்களுககுகள் எழுப்பிக்கொண்டார்கள்.

  கடந்த இரு நாட்களாகப் பல மட்டங்களிலிருந்தும் இந்த செய்தி பற்றிய உண்மையறியும் ஊடகவாதிகள் பல தொடர்புகளை ஏற்படுத்தி விடயங்ளை அலசினார்கள். இந்தப் படத்தில் கொலை செய்யப்படுவது தமிழர்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. செய்பவர்கள் யார் என்பது இக் கட்டுரையைப் படித்தால் புரியும். ஐனவரிதமாதம் நடுப்பகுதியில் புலிகள் தங்கள் இடங்களை இலங்கைப் படையினரிடம் பறிகொடுத்துக் கொண்டு பின்வாங்கும்போது, புலிகளால் சிறை படிக்கப் பட்டிருந்த பல தமிழர்கள் அவர்கள் சித்திரைவதை முகாம்களில் சொல்லாவொண்ணாத் துயரை அனுபவித்தார்கள்.

  தோல்வி கண்டு பின்வாங்கிக் கொண்டு ஒடிய புலிகள் தங்களால் சிறை படிக்கப் பட்டிருந்தவர்களைக் கோரக் கொலைகள் செய்து தொலைத்தார்கள் அவர்களில் பலர்தான் பிரித்தானியச் செய்தியில் காட்டப்பட்டவர்கள் என்றும் கொலை செயபவர்கள் இராணுவ உடைபோட்ட புலிகள் என்றும் விடயமறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்தப் படத்தில் கொலை செய்யப்படும் ஒரு தமிழர் தாடியுடன் இருக்கிறார். புலிகள் தாடி வைப்பதில்லை என்பது புலிகள் பற்றி நன்கு தெரிந்த குழந்தைகளுக்கும் தெரியும்.

  அத்துடன் அந்தத் தாடி வைத்த மனிதர் ‘புளொட் இயக்க்ததைச்சேர்ந்த ‘பாருக்’; என்ற பேர்வழியாகவிருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. தங்களின் எதிரிகளை எப்படியெல்லாமோ கொலை செய்த புலிகள் இப்போது தாங்கள் கொலை செய்த அப்பாவித் தமிழர்களைப் ‘புலிகள்’என்று பிரசாரம் செய்து பணம் பறிக்கிறார்கள. இதைப் பல தமிழர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.

  ‘தாங்கள் செய்த கொலையைச் சிங்கள மொழியை ‘டப்’ பண்ணிப்போட்டு உலகை ஏமாற்றலாம் ஆனால் எங்களை ஏமாற்ற முடியாது’ என்று பல தமிழர்கள் குமுறுகிறார்கள். இந்தப் படத்துக்குச் சிங்கள மொழி பேசி டப்பிங் செய்த பேர்வழி கெதியில் அகப்படுவார் என்று எதிர்பாhர்க்கப்படுகிறது.

  இன்று, எப்படியும் இலங்கை அரசாங்கத்தை வீழ்த்தப் பல சக்திகள் ஒன்று திரண்டிருக்கின்றன. இவ்வளவு காலமும் போர் நடந்தால் அந்த அழிவில் கோடி சேர்த்த புலிபாதகர்கள், இன்று தங்கள் கடன் அடைக்கப் பல வழிகள் மூலம் உழைக்கப் பார்க்கிறார்கள். பிரித்தானியச் செய்தி நூற்றுக்கணக்கில் கொப்பி பண்ணப்பட்டு விற்பனையாகிறது என்றம் சொல்லப் படுகிறது. இனி இப்படி எத்தனையோ படங்கள் வரும், அதிலும் மாற்று இயக்கத்துப் பெண்களுக்குப் புலிகள் செய்த கொடுமைகளை, இலங்கை இராணுவம் அகதி முகாமிலிருக்கும் தமிழ்ப் பெண்களுக்குச் செய்வதாகச் சொல்லிப் பல செய்திகள் விரைவில் வரும் என்றும் இலங்கையில் பேசிக்கொள்கிறார்கள்.

  புலிகள் எப்படியும் தமிழரை ஏமாற்றிப்பிழைக்கலாம் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது இன்னும் பல தமிழருக்கு விளங்காமலிருப்பது பரிதாபமான விடயமாகும்.

  நன்றி: thenee.com

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  இங்கே எவரும் புலிகளும் தவறு செய்தவர்கள் தான் அதனால் இராணுவத்தின் தவறுகளை கணக்கிலெடுக்கத் தேவையில்லை என்று கூறவில்லை. இங்கே விவாதிக்கப்படுவது சம்மந்தப்பட்ட காணொளியின் நம்பகத் தன்மையே. இந்தப் பாதகச்செயலை இலங்கை இராணுவம் செய்ததை உறுதிப்படுத்த முடிந்தால் நிச்சயம் அவர்களின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டேயாக வேண்டும். அதில் மாறுபட்ட கருத்துகளுக்கு இடமில்லை. இராணுவம் இப்படிச் சுட்டுக் கொன்றவர்கள் புலிகளாயினும், இப்படிக் கொல்வதற்கு அரசுட்பட எவருக்கும் அந்த உரிமையில்லை. அதேவேளை கடந்த காலங்களில் புலிகள் இராணுவ உடை தரித்துச் சென்று செய்த கொலைகளும் அம்பலமானதை எவரும் மறுக்க முடியாது.

  இங்கு இன்னொருவர் புலிகள் தமது கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்தியதாக வக்காலத்தும் வாங்கியிருந்தார். புலிகள் வெளிநாடுகளை ஏமாற்ற வேண்டுமானால் சிங்களக் கைதிகளை நன்கு பராமரித்திருப்பார்கள். தமிழ்க் கைதிகளை புலிகள் பராமரித்த விதம் பலதடவை பல இணையத்தளங்களிலும் வந்துமிருந்தன. அத்தோடு இலங்கை இராணுவம் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றிய போது புலிகளின் சிறைக்கூடங்களின் படங்களும் இணையத்தளங்களின் வந்திருந்தன. நாய்க் கூடுகள் போலிருந்த அந்தச் சிறைக்கூடங்களில் மனிதர்களை எப்படி மனிதாபிமானத்தோடு அடைத்து வைத்திருந்திருப்பார்கள் என்பதை நன்றாகவே உணர முடிந்தது.

  சில நாட்களுக்கு முன் யாழ் இணையத்தில் பிரித்தானியாவிலுள்ள ஒரு பெண்ணைப் பற்றி மிகவும் கேவலமான தரக்குறைவான கருத்துகளை யாழ் இணையத்தின் ஆசியுடன் பதிந்திருந்தார்கள். காரணம் குறிப்பிட்ட அந்தப் பெண் பிரித்தானியாவில் இலங்கை அரசிற்கு எதிராக நடத்தப்பட்ட அத்தனை ஆர்ப்பாட்டங்களிலும் முன்னின்றவராம். பின்பு இலங்கையில் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் டக்லஸ் தேவானந்தாவுடன் இணைந்து பிரசாரங்களில் ஈடுபட்டதாக படங்களையும் இணைத்திருந்தார்கள். பின்பு டக்லஸ் தேவானந்தாவின் அருகில் நிற்கம் பெண்ணின் கழுத்தில் தாலிக் கொடியிருப்பதாகவும், குறிப்பிட்ட அந்த பிரித்தானியப் பெண் திருமணமாகாதவர் என்றும் ஒருவர் பல பக்கங்களை கடந்த அசிங்கமான விமர்சனங்களின் பின் சுட்டிக் காட்டினார். அதன் பின் ஒருவர் வந்து டக்லஸ் தேவானந்தாவுடன் நிற்கும் பெண் தற்போது யாழ் மேயராக தெரிவுசெய்யப்பட்ட பெண்மணியென்றும், குறிப்பிட்ட பிரித்தானியப் பெண்ணும் தற்போதைய யாழ் மேயரும் தோற்றத்தில் ஒத்திருப்பதாகவும் சுட்டிக் காட்டினார். அதன் பின்பு கூட ஒருவரும் தாம் எடுத்த வாந்திக்காக மனம் வருந்தவுமில்லை. யாழ் இணையமும் அதனை நீக்கவுமில்லை.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  நடந்து முடிந்தது யுத்தம். பலப் பரீச்சை. நீயா? நானா??. தமிழர் சார்பாக புலிகள் நீண்டகால குத்தகைக்கு போராட்டத்தை எடுத்திருந்தார்கள். பலாத்காரமாக. புலம்பெயர் தமிழரும் ஒட்டுமொத்த தமிழ்மக்களின் பெயரில் குத்தகைக்கு கொடுத்திருந்தார்கள். அதுவும் பலாத்காரமாகத்தான். யுத்தம் உண்மை மட்டுமல்ல மனிதநேயமும் முற்றுமுழுதாக சாகடிக்கப்படும். அவனைக் கொல்லாவிட்டால் இவன் என்னைக் கொல்லுவான் என்ற நிலையே. இதில் சிலசமயம் பெண்கள் குழந்தைகளுக்கு கூட கார்ரூணியம் காட்ட மாட்டார்கள்.

  நாசிக்காலப் பகுதிக்கு போகாவிட்டாலும் சமீபத்திய யூகோசுலவக்கிய ஈராக் ஆப்கானிஸ்தான் போன்றவைகளே போதுமான சான்றுகள் இருக்கின்றன. ஆகவே தான் எப்பவும் யுத்தத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறோம். இலங்கையரசு இன்றும் இறைமையுள்ள அரசு. புலிகள் அப்படியல்ல சொந்த மக்களையே கொளுத்தி வேடிக்கை பார்த்தவர்கள். இலங்கையை கடந்து சர்வதேசிய ரீதியில் பயங்கரவாதப் பட்டம்”எடுத்தவர்கள். வன்னிக் காடுகளுக்குள் இராணுவத்தை வரவழைத்தவர்கள். மன்னார் கிளிநொச்சியுடன் தமது தோல்வியை நாட்டைவிட்டு ஓடியிருக்கலாம். அதற்கும் அரசு வசதிசெய்து தருவதாகவே கூறியது. தம்பிதானே! யாருக்கும் நோர்வேக்கு கூட அடங்காதச்சே!! எந்தஅரசாகயிருந்தாலும் யுத்தகாலத்தில் என்னசெய்யும் என்பதை புலிசார்பாக புலியில் நியாயம் தேடி பின்னோட்டம் விடுபவர்கள் 1971 ஏப்பிரல் மாதம் நான்காம் திகதிக்கு பிறகு பல்லாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு கதிர்காமஅழகுராணிக்கு என்னநடந்தது என்பதை அறியவேண்டும். அன்றை பத்திரிக்கைகளும் களனிஆறும் கதைகதையாச் சொல்லும்.

  ஜனதவிமுக்திபெரமுன அந்தநேரத்தில் மக்களுக்கு எந்த தீங்கும் செய்யாதவர்கள்.ஆயிரம்மாயிரம் இளஞர்யுவதிகளும் சுகந்திரமாகத்தான் இணைந்தார்கள். போராடிய முறையும் சித்தாந்தமும் தவறாக இருந்தது. ஆனால் புலிகள்?. மனிதன் ஒரு அரசியல்பிராணி. மனித வரலாறே போராட்டம் தான். அது தீயாலும் இரத்தத்தாலும் எழுதப்பட்டிருக்கிறது என்றார் வரலாற்று வித்தகன் கால்மாக்ஸ். தேவைகள் இருக்கும்வரை போராட்டமும் இருந்தே தீரும். மக்களின் தேவைகள் ஒட்டி போராட்டம் எழும்பொழுது ஆயுதங்கள் இராது. அங்கே மக்களே ஆயுதங்களாக மாறியிருப்பார்கள். அந்த இடத்தில் அரசே பயங்கரவாத இடத்தில் அமர்ந்திருக்கும். இவற்றைக் கிரகித்துக்கொண்டே வருங்காலப் போராட்டத்தை வழிவகைப்படுத்த வேண்டும்.

  Reply
 • பல்லி
  பல்லி

  சில நேரங்களில் எமது பேனாக்கள் கூட புலியின் ஆயுதத்தை விட எம்மினத்தை பதம் பார்க்கிறது, நாம் அனைவரும் புலியிடம் இருந்து மக்களும் நாமும் விடுபட வேண்டும் என ஏங்கினோமே தவிர, இந்த போரால் அரசால் அழிக்கபடும் மக்களை சிறிதும் சிந்திக்க தவறி விட்டோம், இன்றுவரை, இதனால்தான் மக்கள் மாற்று கருத்தென்றாலே ஒதுங்கி கொள்கின்றனர்; தயவு செய்து வவுனியாவில் இருக்கும் மாற்று அமைப்பினரை தொடர்பு கொள்ள கூடியவர்கள் அவர்களிடம் அங்கு நடக்கும் சித்திரவதை என்ன என்பதை; தூக்குதண்டனை கைதிகூட தப்ப வாய்ப்பு உள்ளது; ஆனால் வன்னி முகாமில் துடிப்பான ஆண்கள் பெண்கள் தப்பமுடியாது; நாளொன்றுக்கு இத்தனை பேர் என்னும் வகையில் கொண்டுபோய் அழிக்கின்றனர்; வேலைக்கு கூட்டி செல்வது போல் பெண்களை தமது தேவைக்கு கூட்டி செல்கின்றனர்;

  கொடுமை என்னவெனில் இதில் சிக தமிழ் குரங்குகளும் அடக்கமாம்; நாம் இப்படி அரசுக்கு அப்பம் சுட்டு விற்றுகொண்டு இருப்போமேயானால்
  மீண்டும் ஒரு மனிதாபமில்லாத புலி வளருவதை மகிந்தா குடும்பத்தால் மட்டுமல்ல சர்வதேசத்தால் கூட தடுக்க முடியாது; இதுவரை புலிகளை
  மக்கள் ஆதரித்தது அவர்களது ஆயுதத்துக்கு பயந்து; ஆனால் எனி புலியையோ அல்லது எலியையோ மக்கள் ஆதரிப்பதானால் அதுக்கு காரணம் எமது பேனாக்கள்தான் பேனாக்கள் தான் பேனாக்கள் தான்

  இந்த செயலை,
  புலி செய்யாது என சொன்னால் முட்டாள்தனம்;;
  அரசு செய்திருக்காது என சொன்னால் அதிமுட்டாள்தனம்;;;

  Reply
 • பல்லி
  பல்லி

  தேனி அரசின் விளம்பர பலகை;
  அதில் வருவது எல்லாம் எம்மவர்க்கு ஒரு உதாரணமா???

  Reply
 • Shri
  Shri

  12.12.2005 அன்று சின்னத்தம்பி கணேசலிங்கம் (பாருக்) வவுனியாவிலிருந்து புலிகளால் கடத்திச்செல்லப்பட்டார். பாருக் மக்களுடன் பழகிய முறையாலும், மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து அந்த மக்களுக்காக உண்மையாக சேவையாற்றியவர் என்பதாலும் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வவுனியா திருநாவற்குளம் பகுதி மக்கள் ஊர்வலமாக வைரவபுளியங்குளத்தில் உள்ள யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழு அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடம் பாருக்கை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரும் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //தேனி அரசின் விளம்பர பலகை – பல்லி//

  புலிகளின் அடாவடித்தனங்களை பலவகையிலும் தோலுரித்துக் காட்டியதில் பெரும் பங்கு வகித்தது தேனீ. இதனால்த் தான் பல புலிப்பினாமிகள் தேனீயைத் தூற்றினார்கள். ஆனால் இங்கே பல்லியின் தூற்றல் எந்தவகை என்பது எனக்குப் புரியவில்லை?? அத்துடன் நண்பன் இணைத்துள்ள அருந்தா என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை தேனீயில் மட்டுமல்ல வேறு இணையத்தளங்களிலும் வந்துள்ளது.

  Reply
 • மாயா
  மாயா

  //பல்லி on August 28, 2009 12:47 pm தேனி அரசின் விளம்பர பலகை;
  அதில் வருவது எல்லாம் எம்மவர்க்கு ஒரு உதாரணமா???//

  பல்லிக்கு தேனி கொட்டியிருக்க வேணும். இல்லையென்றால் தேன் கசந்திருக்க வேணும். ஒற்றுமை பற்றி பேச்சளவில் பேசும் பலர் , எழுத்தாணி வழி கூட ஒற்றுமையில்லையெனில் , ஆயுத வழியாக எப்படி ஒற்றுமைப்பட முடியும்? எல்லோருக்குள்ளும் இருப்பது சுயநலப் பேய். விளம்பரத்திலும் நல்லது நடக்கலாம். கெட்டதை புறந் தள்ளுவோம். சிந்திக்க ஏதாவது தூண்டினால் ஏற்றுக் கொள்ள பழகுவோம். வெள்ளைக்காரனிடம் இருந்து உதாரணங்கள் எதற்கு என்றிருந்தால் , நாமெல்லாம் மாடு மேய்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்?

  Reply
 • நண்பன்
  நண்பன்

  அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிரதேசத்தில் கடந்த 25ம் திகதி இரவு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும், விடுதலைப் புலிகளின் இரண்டு உறுப்பினர்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் வவுனியாவிலுள்ள முகாமொன்றில் அகதிகளாக இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

  இவர்கள் கடந்த 17ம் திகதி பாதுகாப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்பட்ட பின்னரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்களை விசாரணை செய்வதற்காக கொண்டுசெல்வதாக பாதுகாப்புத் தரப்பினர் உறவினர்களிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னர், அவர்களின் உறவினர்கள் தமது இரண்டு உறவினர்கள் பாதுகாப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாக முகாம்களில் நிவாரண சேவைகளை வழங்கி வரும் செடெக் என்ற அரசசார்ப்பற்ற நிறுவனத்தின் ஊழியர்களிடம் முறையிட்டுள்ளனர்.

  இதுகுறித்து அந்த அமைப்பினர் தமது உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதும் அதில் பலன் எதுவும் ஏற்படவில்லை. செடெக் நிறுவனத்தில் உள்ள இலங்கைப் பிரதானியான டேமியன் பெரேரா என்ற கத்தோலிக்க மதகுரு மாலை வேளைகளில் ஜனாதிபதியின் நண்பர் சமுகத்துடன் விருந்துகளில் கலந்துகொள்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

  எவ்வாறாயினும், இந்த இருவரும் விடுதலைப் புலிகள் என அடையாளம் காணப்பட்ட பின்னர் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட விசாரணைகளில் மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பயிற்சி கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.ஜாமால்டீன் கொலையுடன் இவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளமை குறித்து கண்டறிந்துள்ளனர்.

  காவல்துறை அத்தியட்சகர் கடந்த ஏப்ரல் 5ம் திகதி கல்முனை மருதமுனைப் பகுதியில் பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இந்த நிலையில், அதிரடிப்படையினரால் கந்தபோடி மற்றும் சீலன் ஆகிய இரண்டு விடுதலைப் புலிகள் உறுப்பினர்களே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

  கந்தபோடியின் மனைவி ஒரு சிங்களப் பெண் எனவும் அவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையிலேயே கந்தபோடி வவுனியா முகாமொன்றில் மறைந்திருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

  காவல்துறை அதிகாரி ஜமால்டீன் கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் முஸ்லிம் பிரஜையொருவரும், மேலும் இரண்டு விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

  globaltamilnews.net

  Reply
 • sethu
  sethu

  United Nations must address in the investigation of possible war crimes in Sri Lanka – Erik Solheim

  International Development Erik Solheim requires that the UN investigating charges of war crimes in Sri Lanka. This is something I will discuss with Ban Ki-moon when he comes to Norway, “he told to Aftenposten.no. There are dozens of people have been killed or have disappeared in Sri Lanka in recent years, without that there has been some form of judicial process or verdict. And there is overwhelming evidence of structures within the state apparatus is behind many of these killings, It’s something I definitely want to do, even if the purpose of his trip is about climate and environment, “said Solheim.

  Reply
 • Jeyabalan
  Jeyabalan

  தமிழ் இளைஞர்களைப் போன்று சிங்களவர்களும் கொல்லப்படுகின்றனர் – ரணில் விக்கிரமசிங்க

  வீரகேசரி நாளேடு 8/26/2009 9:12:04 – அன்று தமிழ் இளைஞர்கள் கொழும்பில் கொல்லப்பட்ட போது அவர்கள் புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் என கூறிய அரசாங்கம்இ இன்று பொலிஸாரின் உதவியுடன் சிங்கள இளைஞர்களையும் கொலை செய்து வருகின்றது.
  இது பற்றி ஜனாதிபதியும் அரசாங்கத் தரப்பினரும் என்ன சொல்லப் போகின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.

  அநுராதபுரம் இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்ற “சுதந்திரத்துக்கான அரங்கு’ கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவர் மேற்கண்டவாறு வினா எழுப்பினார்.

  சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, இன்று மக்களுக்கு சுதந்திரமாகக் கருத்துகளைக் கூட கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊடக அடக்குமுறை முன்னர் ஒரு பொழுதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.

  அன்று ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் ஊடக அடக்குமுறை நடைபெறுவதாக குரலெழுப்பி வந்த மஹிந்த ராஜபக்ஷ இன்று அவர் ஜனாதிபதியானதும் இவ்வாறு நடந்து கொள்வது வேடிக்கையாகவுள்ளது.

  Reply
 • damilan
  damilan

  மேற்படி கிளிப் கைத்தொலை பேசியில் கொலை செய்து கொண்டிருக்கும் போது அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களால் பிடிக்கப்பட்டது. குறித்த படம் கைவழியாக மாறி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே இந்த காட்சி இங்கு வெளியாகிவிட்டது. கைத்தொலைபேசியில் 3ஜி போமட்டில் எம்.ஒ.வி.00006 என்ற இலக்கத்தில் இந்த விடியோக்கிளிப் பதிவாகி இருக்கின்றது. இதில் கலப்படமோ பொய்யோ இல்லை. அப்பட்டமான கொலையேதான். இதில் வேதனை என்னவென்றால் சிரித்துச் சிரித்து கொலை செய்கிறார்கள். குறித்த கைதி தலையைத் திருப்பும் போது சிரிப்புடன் ஏதே தெரிந்தவன் போல திரும்பிப் பார்கிறான் என்பதாக கிண்டல் செய்யப்படுகிறது. மற்றவரைப் போடுவமா என்று கேட்கும் போது ஒம் போடுவம் அது அரச வேலை என சிங்களத்தால் சொல்லப்படுகிறது.

  எம்.ஒ.வி.0007 என்ற கிளிப்பில் சுடுபவரின் முகம் தெரிகிறது. சட்டையில் 1 வி அடையாளம் (கோப்ரல்) உள்ளது. அவர் சுட்டு திரும்பும் போது மற்றுமெருவரால் அதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து தயவு செய்து மற்ற எல்லாரும் இந்த இடத்தை விட்டுச் செல்லுங்கள் என்று சிங்களத்தில் கூறப்படுகின்றது.

  Reply
 • மாயா
  மாயா

  மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தல் காலத்தில் இறங்கி ஆதரவளித்து அட்காசம் செய்த 3 பாதாள தாதாக்கள் நேற்றுக் போலீசாரால் கொல்லப்பட்டனர். ஆயுதக் கலாச்சாரத்தை மகிந்த அரசு முடிவுக்கு கொண்டு வர ஒரு புறம் முயல்கிறது. அதையும் ஆயுதத்தால் செய்ய வேண்டியுள்ளது.

  அதே சமயம் , சுயநலங்களுக்காக காட்டு தர்பார் நடத்தும் போலீசாரும் கைதாகின்றனர் அல்லது தண்டிக்கப்படுகின்றனர். இது கால வரையும் பயங்கரவாத அழிப்பில் ஈடுபட்ட அரசு , ஏதோ ஒரு வகையில் சட்டத்தை அமுல்படுத்த திணறுகிறது என்பது மட்டும் தெரிகிறது. விரைவில் நீதியாக அரசாட்சி செய்தால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.

  Reply
 • பல்லி
  பல்லி

  நாம் அனைவரும் சரியான பாதைக்கு வந்துவிட்டோம் என நினைக்கிறேன்; மிகுதியாக ஒருசிலரே அரசை ஆதரித்தும் நடக்கும் பிரச்சனையெல்லாம் கற்பனையே என கற்பனை கதைசொல்லி எம்மையும் கடுப்பேத்துகின்றனர், பல்லி ஒரு தகவலை மட்டும் சொல்லி இந்த வாதத்துக்கு முடிவுக்கு வருகிறேன், எம் அனைவருக்கும் தெரிந்த ஊடகவியாளர்கள், சிவகுமார், குருபரன், இவர்களிடம் அரசின் அன்பான உபசரிப்பை விசாரித்து பாருங்கள், அப்போதாவது நாம் சொல்வது புரியும்,

  Reply
 • பல்லி
  பல்லி

  மாயா பார்த்திபன் தமிழ் மக்களுக்காக எதையும் விட்டு கொடுத்து செயல்பட பல்லி தயார், உதாரணத்துக்கு ரகுமான்மீது பல்லிக்கு மிகபெரிய விமர்சனம் உண்டு (மாயாவுக்கும்தான்) ஆனால் எம்மினத்துக்காக எந்த விட்டுகொடுப்புக்கும் பல்லி தயார் என்பதைதான் ரகுமானின் கட்டுரைக்கு பல்லி முதல் பின்னோட்டம் இட்டேன், சரி தேனி ஜெமினி பல்லியின் நண்பர்தான் ஆனால் அவர் புலி மீது உள்ள கோபத்தால் அவரது நடவெடிக்கை மிக மோசமாக உள்ளது, இவர் ஒரு காலத்தில் ரிபிசி யின் ஆய்வாளர், அதில் இருந்து ஒதுங்கியதுக்கான காரணம் என்ன என்பதை பார்த்திபனும் மாயாவும் தேடுங்கள் அப்போது பல பொட்டுகேடுகள் வெளிவரும், இதுவரை தேனியில் அரசு செய்யும் கொடுமையை தேனி கண்டித்திருந்தால் அதை பல்லிக்கு அறிய தரவும், தேனியை விமர்சிக்கும் நோக்கம் பல்லிக்கு இப்போது இல்லை, ஆனால் அது நடக்கும் போது தேனி ஒரு சிவப்பு தளம் என்பதை ஆதாரத்துடன் எழுதுவேன்,

  தேசம் ஒழிக்கபட வேண்டும் என்பதில் பலருக்கு ஒரு கனவு, அந்த நேரத்தில் தான் பல்லி தேசத்தில் மட்டுமல்ல எழுத்துக்கும் அறிமுகம், காரணம் பலரது கனவு பல்லிக்கு அத்துபடி, புலியை எப்படி சிலர் கும்பிட்டு ஏமாந்தார்களோ; அதைவிட கேவலமான பல அரசு ஊதுகுளல்கள் உண்டு என்பதை பார்த்திபன் அறிய வேண்டும்; பல்லியை அறிமுகம் செய்தது தேசம், ஆனல் மக்களுக்கு எதிராக தேசம் தனது சேவையை தொடங்குமானாலோ அல்லது அதில் சிலர் எழுதினாலோ பல்லியின் பின்னோட்டம் தான் அவர்களை விமர்சித்து முதலாவதாக வரும்,

  பல்லியை தேனி கொட்டியிருக்க வேண்டும் இது மாயாவின் ஆதங்கம்; பல்லியை புலி குட்டியதை விடவா தேனி கொட்ட முடியும்; வடகிழக்கு பிரிவில் தேனி தடுமாறியது, காலபோக்கில் சலுகைக்காக அதை தொடர்கிறது; இருப்பினும் மக்களுக்காக எந்த இடத்திலும் உங்களுடன் பல்லி பணிபுரிய ஆசைபடுகிறேன் என்பதை மாயா ;பார்த்திபன், நண்பன், குசும்பு; நக்கீரன், BC, செந்தில் ஜயபாலன்; சோதி, இன்னும் பலர் தேசநண்பர்கட்கு, சொல்கிறேன்

  நண்பர்களே விமர்சனம் என்பது எமது நிலைபாடு;;
  செயல்பாடு என்பது அந்த அப்பாவிமக்களின் இன்றய தேவை;,
  ஆகவே தேவைக்காக விட்டு கொடுப்போம்;
  நிலைபாட்டில் பொறுமையாய் விவாதிப்போம்;
  நட்புடன் பல்லி,

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  பல்லி
  நீங்கள் சொல்வது போல் தேனீ ஜெமினி ஒருபோதும் ரிபிசியில் ஆய்வாளராக இருந்தவரில்லை. ஒரு நேயராக மட்டுமேயிருந்து, அப்பப்போ தனது அரசியல் கருத்துகளை கூறி வந்தவர். ஆரம்பத்திலிருந்து விசுவலிங்கம் சிவலிங்கமும் பின்பு ஜேர்மனி ஜெகநாதனும் இணைந்து அரசியல் ஆய்வுகளை வழங்கினார்கள். ஜெமினியின் சகலனொருவர் தான் ஒரு நிகழ்ச்சியை ரிபிசி வானொலியில் நடத்தினார். அவரும் தற்போது ஒதுங்கி விட்டார். ரிபிசியில் முன்னணி நேயர்களாகவிருந்த பலர் தற்போது ஒதுங்கியுள்ளார்கள். அதற்காக அவர்களெல்லாம் அரசிற்கு விலை போனவர்கள் என்று அர்த்தமா?? ஐரோப்பிய வானொலிகள் பலவறறுடன் நெருங்கிப் பழகியவன் என்ற ரீதியில் பல வானொலிகளின் உள்விடயங்கள் எனக்கு அத்துப்படி. அதனால் பல்லியின் எழுந்தமானமான சில கருத்துகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்காக நான் பல்லியுடன் முரண்படவில்லை. அதற்கான எனது கருத்தை மட்டுமே முன்வைக்கின்றேன். மற்றும்படி எம்மக்களின் விடிவொன்றே பல்லி போல் எனது உளமார்ந்த நோக்கமும்.

  Reply
 • Appu hammy
  Appu hammy

  இந்த செயலை,
  புலி செய்யாது என சொன்னால் முட்டாள்தனம்;;
  அரசு செய்திருக்காது என சொன்னால் அதிமுட்டாள்தனம்;;;//

  ஒற்றுமை பற்றி பேச்சளவில் பேசும் பலர் , எழுத்தாணி வழி கூட ஒற்றுமையில்லையெனில் , ஆயுத வழியாக எப்படி ஒற்றுமைப்பட முடியும்? எல்லோருக்குள்ளும் இருப்பது சுயநலப் பேய். விளம்பரத்திலும் நல்லது நடக்கலாம். கெட்டதை புறந் தள்ளுவோம். சிந்திக்க ஏதாவது தூண்டினால் ஏற்றுக் கொள்ள பழகுவோம். வெள்ளைக்காரனிடம் இருந்து உதாரணங்கள் எதற்கு என்றிருந்தால் , நாமெல்லாம் மாடு மேய்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்?//

  This is good thinking commentors. Good!!! Good!!! Keep it up

  Reply
 • abeya .Pannda
  abeya .Pannda

  தமிழ்மக்களை எப்படி, எந்த நிலையில் பேரினவாதம் சிறை வைத்துள்ளது என்பதை, தம்மைத் தவிர யாரும் அறியக் கூடாது என்பதுதான் இலங்கையில் “ஜனநாயகம்”. அப்பாவி மக்களை எப்படிப்பட்ட ஒரு நாசிய முகாமில் வைத்து வதைக்கின்றனர் என்பதை, வெளியில் உள்ளவர்களுக்கு வெளிப்படுத்த முடியாது. மீறி வெளிப்படுத்தினால், அவர்கள் இலங்கையில் உயிர் வாழவே முடியாது.

  அப்படிப்பட்ட படங்கள் தான் இவை. இந்த பேரினவாத அரசு எதை புலியிடம் இருந்து மீட்பாக அந்த மக்களுக்கு காட்டியதோ, எதை அந்த மக்களுக்கு ஜனநாயகம் என்கின்றதோ, அதை அவர்களை மீறி படம் எடுத்தால் அங்கு மரணம் நிச்சயம். அந்த அளவுக்கு இலங்கையில் “ஜனநாயகம்” உள்ளது “ஜனநாயகத்தின்” பெயரில், புலி “மீட்பின்” பெயரில் மக்களை எப்படி அடைத்து வைத்துள்ளதோ, அந்த உண்மையை வெளிப்படுத்தும் படங்கள் இவை.

  தங்கள் உயிர் ஆபத்தையும் மீறி, சமூக அக்கறையுடன் இதை உலகின் முன் அம்பலப்படுத்த முனைகின்றனர். அப்படி கிடைத்த படங்கள் தான் இவை.

  இந்த படங்களைக் கண்டே அஞ்சுகின்றது பாசிசம். இவை வெளிவராமல் தடுக்க முனைகின்றது. இதை மீறி வெளிவரும் போது, வெளியிட்டவர்களைக் தேடிக் கொல்லுகின்றது. இந்தப் பாசிச அரசுக்கு தெரிகின்றது, தாம் செய்வது சர்வதேச குற்றம் என்று. அதனால் நாட்டில் சாதாரணமான ஜனநாயகத்தை எல்லாம், குழிதோண்டிப் புதைக்கின்றது.

  Reply
 • கெளதமன்
  கெளதமன்

  //போர்நடந்து இவ்வளவு காலத்திற்பின் இதை ஏன் புலிகள் காட்டுகிறார்கள் என்று சிலர் சிந்தித்தார்கள்//
  காட்டியது பிரித்தானியா சனல் -4 . வீடியோப் பதிவு இராணுவத்திடம் இருந்து தமிழரல்லாத இலங்கைப் பத்திரிகையாளர் ஒருவரால் இலங்கையில் இருந்து வெளிக்கொண்டு வரப்பட்டதாகச் செய்தியில் பார்த்த நினைவு.

  Reply
 • பல்லி
  பல்லி

  //நீங்கள் சொல்வது போல் தேனீ ஜெமினி ஒருபோதும் ரிபிசியில் ஆய்வாளராக இருந்தவரில்லை.//

  இதுக்கான பதிலை ரிபிசி சார்ந்த பிரமுகர்களோ அல்லது தேசன் நபர்கள்தான் சொல்லவேண்டும், ஒருமுறை சுவிஸ் சிவா என்பவர் அரசியல் அரங்கத்தில் வந்து(ரிபிசி) ராமராஜ் இடம் நீங்கள் சிலருக்கு அதிகநேரம் பேச கொடுக்கிறியள் இது ஒருபக்க சார்பான நிலைதானே என ஒரு கேள்வி கேட்டார், அதுக்கு ராமராஜ் ஒரு சிலரது பெயரை சொல்லி இவர்கள் ரிபிசி யின் அந்த நாட்டு ஆய்வாளர்கள் என அதே நிகழ்ச்சியில் சொன்னார், அதே ராமராஜ் பின்பு சில காலத்துக்கு பின் ஜெமினி பற்றி கூறும்போது சிலதகவலை ரிபிசி யின் அரசியல் அரங்கத்தில் சொன்னார், பல்லியும் மாற்று கருத்தாளரின் திருவிளையாடல் பலதை விடுப்பு பார்த்த வண்ணமே இருக்கிறோம்; ஆக பல்லியின் தகவல் சரியானதுதான் அதில் பல்லிக்கு எந்த சந்தேகமும் இல்லை,

  //ரிபிசியில் முன்னணி நேயர்களாகவிருந்த பலர் தற்போது ஒதுங்கியுள்ளார்கள். அதற்காக அவர்களெல்லாம் அரசிற்கு விலை போனவர்கள் என்று அர்த்தமா?? :://

  பார்த்திபன் இதுக்கான விடைகான போனோமேயானால் நாம் வந்த விடயத்தை விட்டு வேறு திசைநோக்கி போய் விடுவோம்; ஆனாலும் இவர்களுக்குள்(ரி பி சி ராமராஜ் உட்பட) யார் மகிந்தாவின் நண்பர்கள் என்பதேதான் பிரச்சனை யாருக்கும் மக்கள் பற்றியல்ல; இதுபற்றி மக்கள் பற்றிய முடிவுகள் வரட்டும், அதன்பின் தனி தனியாக விபரிப்போம், அரசு தமிழ் ஊடகம் சிலதை பணம் கொடுத்தோ அல்லது சில சலுகைகள் செய்தோ வாங்கி விட்டது; அதில் தேனி, டன் முக்கிய இடத்தில் இருக்கிறது; தமிழ் மக்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் பல்லி விமர்சிக்க தயங்க மாட்டேன், மாயா சொன்னது போல் தவறு என கண்டுவிட்டால் நட்ப்பை கூட விமர்சிப்பேன், விமர்சிப்பேன்,

  Reply
 • BC
  BC

  தாம் செய்வது சர்வதேச குற்றம் என்று. அதனால் நாட்டில் சாதாரணமான ஜனநாயகத்தை எல்லாம் குழிதோண்டிப் புதைக்கின்றது./

  இதுவரை புலிகள் செய்த மாதிரி இவர்களும செய்கிறார்கள் என்கிறீர்களா abeya .Pannda அவர்களே!

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  ‘…யார் மகிந்தாவின் நண்பர்கள் என்பதேதான் பிரச்சனை யாருக்கும் மக்கள் பற்றியல்ல; இதுபற்றி மக்கள் பற்றிய முடிவுகள் வரட்டும், ….’

  ஏற்கனவே வந்துவிட்டதே …யாழ், வவுனியா தேர்தல் வழியாக!

  Reply
 • பல்லி
  பல்லி

  சாந்தன், பாலும் தயிரும் நிறம் வெள்ளைதான்: ஒரே இனத்தை சார்ந்ததுதான், ஆனால் இரண்டின் செயல்பாடும் ஒன்றா என்ன? தேர்தல் என்பதே யார் மக்களை ஆழபோகிறார் என்பதுக்குதானே என்பது மட்டுமே நிஜம் என்பதைதானே காலாகாலமாய் நாம் அனுபவிக்கிறோம்; ஆகவே பணம் உள்ளவனேல்லாம் பணக்காரனுமல்ல, வன்னி மக்கள் யாரும் பிச்சைகாரனுமல்ல; காலமே இதுக்கான விடைகாணும்; அதுக்கான பங்களிப்பை நாம் நட்புடன் செய்வோம்;

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  பல்லி
  தேனீ ஜெமினி எப்போதாவது ரிபிசியில் அரசியல் ஆய்வு செய்து நீங்கள் கேட்டீர்களா?? ஒரு வானொலியின் அரசியல் ஆய்வாளர் தனது ஆய்வை வானொலியில் நடத்தாமல் எப்படி அரசியல் ஆய்வாளராக இருக்க முடியும்? ஜேர்மனி ஜெகநாதன் அப்போ எந்த நாட்டிற்கான ஆய்வாளர்?? ராமராஜ் சுவிஸிலிருந்து சிவா எனும் பெயரில் வருபவரின் விதாண்டாவாதங்களுக்காக அப்படி ஒரு பதிலைச சொல்லியிருக்கலாம். அதை வைத்து மட்டும் உங்கள் வாதம் தவறானது.

  மேலும் டண்ணும் அரசிற்கு விலை போனது போல் குறிப்பிட்டுள்ளீர்கள். டண் அரசு சார்பாக தற்போது நடக்கின்றதென்ற தங்கள் குற்றச்சாட்டு உண்மையென்றால், அதற்கு யார் காரணம்?? டண் தொலைக்காட்சியையும் வானொலியையும் அபகரித்தவர்கள் யார்??

  தாயகத்தில் கூட மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலர் அரசை ஆதரிக்க வேண்டியேற்பட்டதே, புலிகளின் அச்சுறுத்தலிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவே. இப்படியான பல நிலைகளை ஏற்படுத்தி வைத்ததே புலிகள் தான்.

  Reply
 • பல்லி
  பல்லி

  பார்த்திபன், தங்களோடு வாதம்செய்ய பல்லி இப்போது தயாராக இல்லை, ஆனால் இதுபற்றி கட்டுரை வரும்போது ஜெமினி, குகனாதன் பற்றி பலன் சொல்ல தவறமாட்டேன்; திரும்பவும் சொல்கிறேன் இவர்கள் இருவரும் அரசின் அடிமைகள்; இத்துடன் இதுக்கு பல்லி முற்று புள்ளி வைக்கிறேன்:

  Reply
 • மாயா
  மாயா

  பல்லி, நான் புலம் பெயர் ஊடகங்களில் பங்களிப்பு செய்யத் தொடங்கியதிலிருந்து ஒன்றை மட்டும் என்னால் உணர முடிந்துள்ளது. இலங்கை தமிழரது ஊடகங்கள் நடு நிலை என்று தம்மை விளம்பரப்படுத்திக் கொண்டாலும் , உண்மையில் அவர்களுக்குள் உள்ள அரசியலை சரி செய்து கொள்ள ஏதோ மக்களை கவர முயல்கிறார்கள் என்பதே நிஜம். யாரும் நியாயம் , நீதி மற்றும் உண்மை குறித்த கரிசனை இல்லை. எழுதுவோரும் அதையே செய்கிறார்கள். உண்மைகளை விட தம் அடி மன நியாயங்களை உண்மையாக்கவே முயல்கிறார்கள். இதில் நம்மிடம் மாற்றம் தேவை. அல்லது நமது மக்கள் வாழ்வு சிறக்காது.

  ஈழநாடு குகநாதன் , ஒரு வகையில் சுயநலவாதியாக இருந்தாலும் , அவரால் புலத்தில் பத்திரகை – வானோலி – தொலைக் காட்சி என்பவற்றை கொண்டு வந்தவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அடிக்க அடிக்க எழுபவர் வரிசையில் குகநாதனை தேர்வு செய்யலாம். குகநாதன், அடிப்படையில் புலி எதிர்ப்பாளர். இருந்தாலும் புலி சார்பு வானோலி – தொலைக் காட்சியை நடத்தினார். TRT யை , புலத்து தமிழர்கள் புலி ஆதரவு வானோலி – தொலைக் காட்சி என நம்பினாலும் அதன் உண்மைகளை நெருங்கியவர்கள் அறிவார்கள். அதே குகநாதன் புலத்தில் சிங்கள தொலைக் காட்சி உருவாகவும் காரணமானார்.

  இன்று புலத்து ஊடகங்கள் ஏதோ ஒரு அரசியல் அல்லது இயக்கத்தின் பின்னணி என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். TBC , IBC , TRT எல்லாமே , மக்கள் கருத்தை விட தமது கருத்துகளை சார்ந்தவர்களை பேச விடுகின்றனர். அதைவிட அவர்களுக்கு அதை திணிக்கின்றனர். மற்றவர்களை பேச விடுவதை விட , அடுத்தவர்களை தமக்கு சார்பாக பேச வைக்கின்றனர். சில சமயங்களில் அங்கே நடப்பவை ஒத்திகையான திணிப்பு நாடகம். செட்டப் கேம்.

  தீபம் தொலைக் காட்சியில் வரும் அப்துல் ஜபாரின் நிகழ்சியொன்று மிக நகைப்புக்குரியது. ஒருவரை பேட்டி காணப் போவதாக சொல்லும் ஜபார் , அடுத்தவரை பேசவே விடாது , ஜபாரே தலைப்பில் பேசிக் கொண்டிருப்பார். பேட்டி கொடுக்கப் போனவர் தலையாட்டுவதையும் , ஆம் அல்லது இல்லை என்பதைத் தவிர வேறு எதையுமே சொல்ல வாய்ப்பே இருக்காது. வில்லுப்பாட்டுக்கு ஆமா போடுவதற்கு சமமானது அந்த நிகழ்ச்சி. கொடுமை. இதையே ராமதாஸும் செய்கிறார் , தர்ஷனும் செய்கிறார். ஜெகனும் செய்கிறார். ஊடகங்கள்தான் வெவ்வேறே தவிர ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இவர்களை மேதாவிகள் என நம்பும் நேயர்கள் பாவிகள். சில நல்ல விடயங்களை அறிய முடிகிறதே தவிர , வாசகர்களும் , நேயர்களும் அவதானமாக இவற்றை நம்ப வேண்டும். இதில் பட்டி மன்றங்கள் என்பவை தம்பட்டங்கள் என்றால் மிகையாகாது.

  இணைய தளங்களிலும் பல கருத்துகள் தேசம் உட்பட நீக்கப்படுவதுண்டு. அவை எனது எழுத்துகளுக்கே நேர்ந்ததுண்டு. ஆபாசமான வசனங்களை நீக்கலாம். கருத்துகளை நீக்குவது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்

  நாம் உண்மை பேசி நண்பர்களை உருவாக்குவதையும் , சுய விமர்சனம் செய்வதையும் முன்னெடுப்பதை விடுத்து இன்னமும் எம் எதிரிகளை கண்டு கொள்ள அதிக சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளோம். அது பொது எதிரிக்காக தேவைதான் என்றால், பொது எதிரியை எதிர்த்து நிற்பவனிடம் கூட ஒற்றுமை இல்லாமல் இருப்பது நகைப்புக்குரியது. இதுவே அன்று தொட்டு தமிழனை கவிழ்த்ததற்கு மிக முக்கிய காரணம்.

  Reply
 • Kirupa
  Kirupa

  இனியென்ன. இன்னும் பல கொலைப்பதிவுகள நமக்கு வந்து சேரும்.
  இந்த முறை, தமிழ் வாலிபர்கள் சுடுவார்கள்.
  அவர்கள் தமிழிலெயெ பேசுவார்கள்.
  அது புலிகள் / தமிழரை கொல்கிறார்கள்.. என்பதாய் அரச நாக்குகள் கூசாமல் சொல்லும்.
  6 மாததிற்கு முன் வன்னியில நடந்தது என்பார்கள்…
  நாங்கள் பார்ப்போம்..
  விவாதம் சிந்துவோம். இன்னும் வரும். தொடர்ந்து இதையெ வீராப்பு செய்வோம்.
  தனிநபர்களையும் குழுக்களையும் சாட்டியே 40% தமிழரின் வாழ்க்கைக்கு சங்கு ஊதி விட்டோம்.

  Reply
 • abeya singee
  abeya singee

  It’s war crimes stupid!
  The Island Editorial

  The British media has done it again! Channel 4, which is blatantly hostile to Sri Lanka and partial to the LTTE, has found ‘evidence of war crimes’ in Sri Lanka––a video footage of a naked civilian being shot dead by a person who looks like a Sri Lankan soldier.

  This footage said to be a handout from a collective of ‘journalists’ from Sri Lanka is being bandied about as solid evidence of war crimes, which Britain, the US and the EU failed to charge Sri Lanka with at a recent UNHRC special session.

  It is intriguing that Channel 4 did not care to check the video clip’s authenticity before beaming it across the globe and tarnishing Sri Lanka’s image. One is reminded of a widely circulated picture that the LTTE released in the aftermath of Prabhakaran’s death. It showed a smiling Prabhakaran watching his own corpse on TV, while holding a newspaper. The message the LTTE sent out with that picture was that its leader was alive and kicking and the government’s claim that he had been killed was a lie. This newspaper debunked the LTTE’s claim by publishing the original picture––of Prabhakaran with Anton Balasingham––which LTTE propagandists had doctored by deleting Balasingham and inserting a TV set and some furniture. A week later none other than KP admitted that Prabhakaran was dead!

  So, the Channel 4 video clip could be doctored. The man in it may be an LTTE cadre in an army uniform massacring dissidents or even an LTTE actor playing the role of a soldier. There are thousands of such cock-and-bull videos doing the rounds on the Net and only the naïve take them seriously. The most pertinent question to be raised in this regard is whether any filming would have been allowed, if war crimes had been perpetrated in the Vanni.

  Technology is so advanced today that we could even produce a short film where ‘Miliband’ or ‘Kouchner’ shoots naked men in the back of their heads against the backdrop of streets strewn with dead bodies.

  The British government, it may be recalled, stands accused of having ’sexed up’ dossiers on Iraq and WMDs by way of a casus belli. So, it is not surprising that the British media has suddenly got hold of a video footage said to have been done in January this year to back the Brown government’s anti-Sri Lankan campaign. What on earth took them so long to find that ‘evidence’?

  A British newspaper once published some pictures of the war zone taken by one of its photographers from a Sri Lanka Air Force chopper days after the final offensive, claiming they were irrefutable evidence of war crimes by the Sri Lanka Army. Would the SLAF have ever flown a group of journalists over the scene of the final battle, if the Sri Lanka military had had anything to hide there? Strangely, the British media has conveniently dropped the issue.

  Now that Channel 4 has gone to town on ‘evidence of war crimes committed in Sri Lanka’, the onus is on it to prove that the video footage in question is authentic and the perpetrator in it is a real Sri Lankan soldier and the victim a Tamil civilian.

  Why the British media has suddenly woken up to Sri Lanka’s ‘war crimes’ again is not difficult to see. The EU is scheduled to decide on the renewal of Sri Lanka’s GSP Plus concession soon and attempts being made in some quarters to have that facility scrapped are doomed to fail as cases against Sri Lanka presented by some NGOs are seriously flawed. The anti-Sri Lanka forces are looking for fresh evidence to bolster their campaign. The video footage at issue is their latest weapon against Sri Lanka. Unfortunately for them, their war crime project has a foundation of sand!

  Reply
 • palli
  palli

  நன்றி மாயா கவனத்தில் எடுக்கிறேன் உங்கள் கருத்தை; தங்களுக்காக அல்ல அந்த மக்களுக்காக,

  Reply
 • thalaphathy
  thalaphathy

  “பார்த்திபன், தங்களோடு வாதம்செய்ய பல்லி இப்போது தயாராக இல்லை, ஆனால் இதுபற்றி கட்டுரை வரும்போது ஜெமினி, குகனாதன் பற்றி பலன் சொல்ல தவறமாட்டேன்; திரும்பவும் சொல்கிறேன் இவர்கள் இருவரும் அரசின் அடிமைகள்; இத்துடன் இதுக்கு பல்லி முற்று புள்ளி வைக்கிறேன்:”

  I think Mr. Palli knows the truth.

  Reply
 • மாயா
  மாயா

  ஜெமியினியை எனக்குத் தெரியாது. ஆனால் குகநாதன் , அரசின் அடிமையல்ல. குகநாதன் தற்போது ஆதரிக்கும் அரசு கவிழ்ந்தால் , அடுத்தவர் தோள் மீது ஏறி தப்பக் கூடியவர். அந்த அளவு சுயநலவாதி. அவரை நன்கு தெரிந்தவர்களுக்கு இது புரியும்.

  Reply
 • palli
  palli

  தளபதி தங்கள் எழுத்து எனக்கு புரியவில்லை,
  மாயா நிதர்சன உன்மை;

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //ஜெமினியை எனக்குத் தெரியாது. ஆனால் குகநாதன் சுயநலவாதி. அவரை நன்கு தெரிந்தவர்களுக்கு இது புரியும்.- மாயா//

  மாயா
  எனக்கு இருவரையும் நன்கு தெரியும். இன்று சுயநலமல்லாமல் பொதுநலம் செய்யும் ஒருவரையேனும் தங்களால் அடையாளம் காட்ட முடியுமா?அரசியல்வாதிகளிலிருந்து ஊடகவியலாளர்கள் வரை எல்லோரும் தமது பிழைப்பை முக்கியமாகக் கொண்டே இயங்குகின்றார்கள். மலையக அரசியல்க் கட்சிகள் எந்த ஆட்சி இலங்கையில் வந்தாலும் மந்திரிகளாகிவிடுவார்கள். இதில் குகநாதனை மட்டும் விதிவிலக்காக எப்படிப் பார்க்க முடியும்? தற்போது GTV மக்களிடத்தில் பிச்சை எடுக்க எத்தனை விசவிதைகளை விதைக்கின்றது. நேயர் ஒருவர் GTV யிடம் இந்தக் தொலைக்காட்சி யாருடையது? அவர் வந்து மக்களிடம் தனது நிலையை எடுத்துச் சொல்லாது அதில் வேலை செய்யும் நீங்கள் மட்டும் கதைக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டதற்கு நிகழ்ச்சியை நடாத்திக் கொண்டிருந்த தினேஷ், பிறேம் இருவரும் சொன்ன பதில் “உரிமையாளர் மக்கள் முன் தோன்ற விரும்ப மாட்டாராம். அத்துடன் அவர் யார் என்று சொல்ல வேண்டிய அவசியமும் இல்லையாம்”.என்ன தினாவெட்டான பதில். இவர்கள் தேசியவாதிகள். குகநாதன் அரசிற்கு விலை போனவர். கேட்கவே எனக்கு கண்ணைக் கட்டுது.

  Reply
 • palli
  palli

  குகநாதனை நல்லாய் தெரிந்த பார்த்திபனுக்கு குகநாதன் ஆரம்ப காலத்தில் புலிக்கு புலம்பெயர் தேசத்தில் முட்டுகொடுத்தவர் என்பது கூடவா தெரியாது, அதையும் விட ரி ஆர் ரி என்னும் தொலைக்காட்ச்சி புலிகளின் கையில் போக யார் காரணம் என ஜந்து பங்குதாரர்களில் குகனாதன் தவிர்ந்த நால்வரையும் கேட்டு பார்க்கலாமே, அல்லது குகநாதனை இந்த நிலைக்கு கொண்டுவந்த அறிவிப்பாளர்கள்(………………..)
  அனைவரையும் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம்; அத்துடன் அதில் பலர் இன்று புலிகளின் அறிவிப்பாளர்கள் ஆகியதுக்கு யார் காரணம்? நாம் சிலரை சிலருடன் ஒப்பிட்டு பேசவில்லை; அவர்களை அவர்களுடந்தான் ஒப்பிட்டு பார்க்கிறோம்:

  Reply
 • santhanam
  santhanam

  குகநாதனை இந்தநிலைக்கு கொண்டு சென்றவர்கள் புலத்துபுலி என்று தம்மை தம்பட்டம் அடித்து திரிந்த சருகு குழுக்கள் இவர்களிற்கு நாட்டில் எவ்வளவு இரத்தம் ஒடுகிறதோ அவ்வளவுக்கு இங்கு மேடையில் கும்மாளம் அந்த நால்வரையும் யார்தங்களிற்கு சாதகமாக பயன்படுத்தினர் ஊரவன்காசில் மிதந்த கள்வர்கள். புண்ணாக்கு அறிவுப்பாளர்கள்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //அதையும் விட ரி ஆர் ரி என்னும் தொலைக்காட்ச்சி புலிகளின் கையில் போக யார் காரணம் என ஜந்து பங்குதாரர்களில் குகனாதன் தவிர்ந்த நால்வரையும் கேட்டு பார்க்கலாமே – பல்லி //

  முதலில் 5 பங்குத்தாரர்கள் என்பதே தவறான தகவல். இந்த பங்குத்தாரர்களில் பிரான்சில் மளிகைக்கடை வைத்திருக்கும் ஒருவரும் முக்கிய பங்குத்தாரர். அவரை பிரான்சிலுள்ள புலிப்பினாமிகள் மிரட்டி தங்களிடம் வானொலி, தொலைக்காட்சிப் பங்குகளை அல்லது மளிகைக்கடையை ஒப்படைக்குமாறு மிரட்ட, அவரும் வானொலி, தொலைக்காட்சிப் பங்குகளை ஒப்படைத்து மளிகைக் கடையைக் காப்பாற்றினார். அதை வைத்தே ஏனைய பங்குத்தாரர்களையும் வளைத்துப் போட்டனர் புலத்துப் புலிகள். இதனை அன்று மறைமுகமாக புலம்பி அழுது சொன்னவர் முக்கிய 2 எழுத்து அறிப்பாளர். அவர் இன்று தனது சுருட்டல்களை மறைக்க மற்ற வானொலிக்கு மாறி தன்னை ஏதோ புலியாதரவாளராக காட்டி நாடகமாடுகின்றார். இந்த அறிவிப்பாளர் வந்ததிலிருந்தே பிரான்சில் அகதிப் பணத்திலேயே வாழுகின்றார். ஆனால் சொந்தமாக ஒரு வீடும் வாங்கி வைத்திருக்கின்றார். இதை நம்பாது விட்டால் பல்லிக்கு பிரான்சில் யாராவது நண்பர்கள் இருந்தால் விசாரித்துப் பார்க்கலாம்.

  அதே போல் குகநாதனின் ஊடகங்களில் தர்ஷன் வேலை செய்த போது புலத்துப்புலிகள் தர்ஷனைத் துரோகியென்று அறிவித்து தேடத் தொடங்க, தர்ஷன் சுவிசில் வந்து பதுங்கியிருந்தது பல்லிக்குத் தெரியுமா? இன்று அதே தர்ஷன் இவற்றையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என நம்பி தான் ஒரு புலியாதரவாளர் போல் நாடகமாடுவதாவது பல்லிக்குத் தெரியுமா?

  இவையெல்லாவற்றிக்கும் மேலாக ஐரோப்பாவின் முதல் வானொலியாகத் தொடங்கிய TRT தமிழ் ஒலி வானொலி அவசர அவசரமாக தொடங்கப்பட்ட காரணமென்ன என்பதாவது பல்லிக்குத் தெரியுமா? உண்மையில் IBC தான் ஐரோப்பாவின் முதல் வானொலியாக வரவிருந்தது. அதில் தர்ஷனும் இணைந்து தொடங்கத் தான் முடிவாகியிருந்தது. ஆனால் பிரான்சிலிருந்து தற்போதும் IBC யில் கடமையாற்றும் இன்னொரு மூன்றெழுத்து அறிவிப்பாளர் தர்ஷனுக்கெதிராக சதி செய்து தர்ஷனைக் காய் வெட்ட, அதனால் ஆத்திரமுற்ற தர்ஷன் அன்று குகநாதனின் காலில் விழுந்து தாம் ஐரோப்பாவின் முதல் வானொலியைக் கொண்டு வர உதவுமாறு கெஞ்சினார். அதன் மூலம் அவசர அவசரமாகத் தொடங்கப்பட்டது தான் TRT தமிழ் ஒலி வானொலி. அன்று தர்ஷனுக்கு குகநாதன் தெய்வம். இன்று சந்தர்ப்பவாதத்திற்காக அதே தர்ஷனுக்கு குகநாதன் துரோகி.

  இங்கே குகநாதன் ஏதோ பெரிய உத்தமன் என்று நான் வக்காலத்து வாங்கவில்லை. குகநாதனை துரோகியென்று குற்றம் சாட்டும் இவர்கள் குகநாதனை விட அயோக்கியர்கள் என்பதே எனது வாதம்.

  Reply
 • மகுடி
  மகுடி

  மேலே உள்ள வீடியோ பொய்யானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  //The Channel 4, a British TV channel apparently engaged in a deliberate propaganda campaign against Sri Lankan citizens, has come up with its latest canard about the island nation. A video footage of very poor quality showing two persons clad in combat uniforms shooting down two others has been given a huge publicity by the Channel 4 TV claiming it to be of Sri Lankan soldiers “summarily executing Tamils”. //
  http://www.defence.lk/new.asp?fname=20090903_04

  Reply
 • palli
  palli

  பார்த்திபன், இதுபற்றி ஏதும் பல்லிக்கு தெரியாது; ஆனால் குகனாதன், உதயகுமார், பிலிப்தேவா, சபாலிங்கத்தின் சகலை ராசா, இப்படி பலரை நான் நண்பர்களாக கொண்டேன் என சொன்னால் பார்த்திபன் நம்பவா போகிறியள், ஆனாலும் பார்த்திபன் இன்றுவரை இவர்களுடன் நட்ப்பாகவும் அடிக்கடி தொடர்பு படுத்திய வண்ணமுமே பல்லி இருக்கிறேன்,
  பிரான்ஸில் எனது நண்பர்கள் பலர் அவர்களையும் சிலகாலத்துக்கு முன்பு விமர்சித்ததால் புலிக்கு பயந்து இலங்கயை மறந்தது போல் பிரான்ஸையும் தற்காலிகமாக மறந்துள்ளேன், ஆக தாங்கள் சொல்லிய விடயம் யாவும் பல்லியின் நண்பர்கள் சம்பந்தபட்டதால் ஓர் அளவுக்கேனும் பல்லியின் எழுத்து சரியாக இருக்கும்என நினைக்கிறேன் அப்படிதானே தளபதி;

  //முதலில் 5 பங்குத்தாரர்கள் என்பதே தவறான தகவல்//

  (1) குமார்சோப் ஸ்தாபன உரிமையாளர் சந்திரன்;
  (2) விமல் சொக்கநாதன் அனுபவ அறிவிப்பாளர்;
  (3) ஈழநாடு (புலி)தமிழாலயம் உரிமையாளர் பாலசந்திரன்;
  (4)அன்றய ஈழநாடு பொறுப்பாசிரியர் குகநாதன்;
  (5) இவரது பெயர் அவசரத்துக்கு வரவில்லை; (தெரிந்தவர்கள் சொல்லவும்)

  இவையாவும் சந்திரனுக்கும் குகனாதனுக்கும் அறிவுபோர் தொடங்கியபோது குகனாதனே நேரடி அலையில் (தொலைக்காட்ச்சியில்) வந்து எப்படி ரிஆர்ரி தொடங்கபட்டது யார் யார் எல்லாம் உதவினார்கள் எதுக்காக தொடங்க்கபட்டது என்னும் விபரம் யாவும் இன்று கேபி மகிந்தா குடும்பத்துக்கு புலி சரித்திரத்தை சொல்லுவது போல் குகனாதனின் வாக்குமூலமே தவிர பல்லியின் பலனல்ல:

  Reply
 • மாயா
  மாயா

  பல்லிக்குத் தெரியாத பணம் போட்டு ஏமாந்த சுவிஸ் தமிழர்களில் இவர்களும் அடக்கம் என பலருக்கு தெரியுமோ தெரியாது?

  பாசல் மூர்த்தி மாஸ்ட்டர் , கட்டையர் பேரின்பம் (கடை), SKT நாதன் (கடை) இன்னும் பலரிடம் சில ஆயிரம். மேலே தொகை லட்சங்களில்….. நாதன் 1 லட்சத்துக்கு குறைவு. ஏனைய இருவரும் லட்சத்துக்கு மேலே . எல்லாம் சுவிஸ் பிராங்குகளில். TRT புலிகளுக்கு கைமாறிய பின்னர் பங்குதாரர் என்ற பெயரும் இல்லாமல் போனது. குகநாதன் மழை பெய்யும் இடத்தில் நனைபவர்.

  Reply
 • santhanam
  santhanam

  காதல் கேட்பதும் அடுத்தவன்சொல்லை வைத்து எழுதுவதும் கற்பனையில் புனைவதும் யாதர்த்தம் அல்ல புலிகளால் எதைசொந்தமாக உருவாக்கமுடிந்தது எல்லாம் அடுத்தவன் கஷ்ரபட்டு உருவாக்க அதை அபகரித்து போட்டு உடைத்ததுதான் மிச்சம் ஆயுதபோரட்டத்திலிருந்து…ரி.ஆ.ரி..கோவில்கள் கள்ளுக்கடைவரை கடத்தல் வாரிசுளால் அபகரிக்கபட்டவை இதை யாரலும் மறுக்கமுடியுமா.

  Reply
 • மாத்தையா
  மாத்தையா

  //குகநாதனின் ஊடகங்களில் தர்ஷன் வேலை செய்த போது புலத்துப்புலிகள் தர்ஷனைத் துரோகியென்று அறிவித்து தேடத் தொடங்க, தர்ஷன் சுவிசில் வந்து பதுங்கியிருந்தது பல்லிக்குத் தெரியுமா? இன்று அதே தர்ஷன் இவற்றையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என நம்பி தான் ஒரு புலியாதரவாளர் போல் நாடகமாடுவதாவது பல்லிக்குத் தெரியுமா?//

  இது உண்மை. இந்த வானோலியைக் கொண்டு வர தர்ஷன் குகநாதனுக்கு ஒரு ஐடியா கொடுத்து ஈழ நாட்டை கொழுத்தி அதில் வந்த காப்புறுதி பணத்தில் வானோலியை துவக்கினார். ஆரம்ப காலத்தில் தர்ஷன் போடர் கடத்தலில் ஈடுபட்டு வந்தார். இந்த போடர் கடத்தலின் போதே மொரீஸியஸ் பெண்ணான தர்ஷனின் மனைவி கிடைத்தார். அப் பெண்ணின் அண்ணன் பாரீஸ் மொரீஸியஸ் தூதரகத்தில் இருந்தார்.போடர் கடத்தல் மூலம் வந்த பணத்தில் ஆரம்ப பிரான்ஸ் புலிகள் வாழ்நதார்கள். அப்போது புலிகளது பிரான்ஸ் ஒலிபரப்பொன்றை தர்ஷன் நடத்தி வந்தார். அதிலிருந்து பின்னர் தர்ஷன் நீக்கப்பட்டார்.

  இதற்கு பழி வாங்க ஒரு சந்தர்ப்பம் தர்ஷனுக்கு கிடைத்தது. அதாவது பாரீஸில் நடந்த ஒரு விளையாட்டு போட்டி முடிவில் சிலர் புலிக் கொடியின் கீழ் சிலர் பியரோடு ஆடினார்கள். அதை உதயன் என்பவரைக் கொண்டு ஒளிப்பதிவு செய்து TRT தமிழ்ஒளியில் செய்திக்குள் காட்டிய தர்ஷன் , அடுத்து இடம் பெற்ற சுவிஸ் நேரம் எனும் இரவு வானோலி நிகழ்சியில் பாரீஸ் புலிகளை தோலுரித்தார். அவரது விசிறிகள் அவருக்கு ஜால்ரா போட்டனர்.

  தர்ஷனின் உண்மையான பெயர் ரங்கன். தர்ஷன் அவரது சகோதரர். இவர் பிரபாவோடு இருந்தவர். இருந்தாலும் பிரச்சனையின் போது தர்ஷன் பாரிஸை விட்டு மறைந்து விட்டார். அவர் சுவிஸில் ஒருவர் வீட்டில் சில காலம் இருந்த தகவலை பார்த்திபன் சொல்வது சரியாக இருக்கிறது. இவரது பிரச்சனையை தீர்த்தவர் வெரித்தாஸ் வானோலியில் அப்போது இருந்த பாதர் கஸ்பார்தான். அவர் வன்னியோடு பேசி பிரச்சனைகளை தீர்த்தார். இருந்தாலும் TRTக்கு எதிரான சதி வலை புலிகளுக்குள் ஆரம்பமே அப்போதுதான் தொடங்கியது.

  இதன் பின்னணியில் புலத்து புலிகள் TRT மேல் கண் வைத்தனர். இது போல சுவிஸ் கடைகளையும் புலிகள் தம் வசப்படுத்தும் ஒரு செயல்பாட்டில் இறங்கினர். இருந்தாலும் அது சரி வரவில்லை. சுவிஸ் போலீஸால் புலிகளுக்கு பிரச்சனை வரும் என்றே புலிகள் அதை தள்ளிப் போட்டனர். அல்லாமல் இருந்திருந்தால் இன்று மக்கள் கடைக்கு நடந்த அதே கதி நடந்திருக்கும்?

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  பல்லி,
  தங்களின் நண்பர்கள் பற்றி எனக்கொன்றும் சந்தேகமில்லை. ஆனால் நடந்த சம்பவங்கள் பற்றிய சரியான தகவல்களே முக்கியம். தங்களுக்கு நண்பர்கள் இருப்பது போல்,எனக்கும் பல ஊடகங்களிலும் நண்பர்கள் இருக்கின்றார்கள். பல விடயங்களை நேரடியாகவும், இந்நண்பர்கள் மூலமும் அறிந்தவன் நான். தாங்கள் வேண்டுமானால் மேலே நான் சொன்ன தகவல்கள் சரரியானவையா என்பதை உங்கள் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். சில தகவல்களை குகநாதன் தொலைக்காட்சியில் சொன்னதாக சொல்லியுள்ளீர்கள். ஆனால் எல்லாத் தகவல்களையும் ஊடகங்களில் பகிரங்கமாகச் சொல்ல முடியாதென்பதும் தாங்கள் அறியாதது இல்லை. அந்த வகையில் குகநாதன் தொலைக்காட்சியில் சொல்லாத தகவல்களும் நிறைய உண்டு.

  நீங்கள் குறிப்பிடும் பிலிப்தேவா கூட குகநாதனின் வானொலியை விட்டு வெளியேற விரும்பாத போதும், அவர் மோகனின் மீன் கடையில் வேலை செய்வதால் மோகனைப் பகைக்க விரும்பாததாலேயே அங்கிருந்து வெளியேறி இவர்களுடன் இணையும் நிலை ஏற்பட்டது.

  மாயா மேலே குறிப்பிட்ட நபர்களும் குகநாதனின் ஊடகங்களுக்கு பணம் கொடுத்தது உண்மை. அதே போல் அவர்கள் தங்களது விளம்பரங்கள் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒலி, ஒளி பரப்பியதற்கும் இறுதிவரை பணம் கொடுக்காததும் உண்மை.

  மற்றும் சந்தானம் மாத்தையா ஆகியோரின் கருத்துகளுக்கும் நன்றிகள்.

  Reply