வட மாகாண சபைக்கான தலைமையகக் கட்டடம் ஒன்றை மாங்குளத்தில் அமைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அத்துடன் யுத்தத்தால் அழிவுற்ற மற்றும் சேதமடைந்த உள்ளுராட்சி மன்றக் கட்டடங்களை புதிதாக நிர்மாணிக்க அல்லது புனரமைக்கவும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்கோன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
மாகாண சபையின் தலைமையகக் கட்டட நிர்மாணத்துக்கு 2010 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 900 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது. ஏனைய கட்டட நிர்மாணம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு 625 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.