இலங்கை மின்சார சபை தனது ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தையும் ரத்து செய்திருப்பதாக இன்று அறிவித்துள்ளது.
அதேவேளை, இலங்கை மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவிருப்பதாகத் தெரிவித்துள்ளன.
ஊழியர்கள் சம்பள உயர்வு கோரியும் மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்தும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறவிருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஆர்ப்பாட்டங்கள் ஏதுமற்ற வேலை நிறுத்தமாக இது அமையுமென தொழிற்சங்க வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.