சர்வதேச அளவில் பன்றிக்காய்ச்சல் நோயினால் பலியானோர் தொகை 2110க்கு மேல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கின்றது.
வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் மட்டும் 1,876 பேர் பலியாகி உள்ளனர். அடுத்த படியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 139 பேர் இந்நோயினால் இறந்துள்ளனர். உலகில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.